அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 62 எத்தகைய அச்சமும் அகல

தங்கச் சிலைகொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங்கட் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச் செங் கைக் கரும்பும், மலரும் எப்போதும்என் சிந்தையதே. அசுரர்களின் திரிபுரத்தை மேரு மலையாகிய வில்லை கொண்டு அழித்து மதங்கொண்ட யானையின் தோலை உடுத்த சிவபெருமானின் மேனி முழுவதும் இரு தனங்களை கொண்டு அடையாளத்தை வைத்த அம்பிகையின் தாமரை போன்ற சிவந்த கையில் உள்ள கரும்பு வில்லும் மலரம்புகளும் எப்போதும் என் சிந்தையில் இருக்கும்.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 61 மாயையை வெல்ல

நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து, நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம் பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன் தாயே, மலைமகளே, செங்கண்மால் திருத் தங்கச்சியே. உலகத்து உயிர்களுக்கெல்லாம் தாயே பார்வதி தேவியே சிவந்த கண்களை உடைய திருமாலின் தங்கையே நாயாக உள்ள எனையும் ஒரு பொருளாக மதித்து உன்னை உள்ளபடி உன்னை அறியும் அறிவு தந்தாய் இதற்கு நான் என்ன புண்ணியம் செய்து இந்த அருளை பெற்றேன்.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 60. மெய்யுணர்வு பெற

பாலினும் சொல் இனியாய், பனி மா மலர்ப் பாதம் வைக்க மாலினும், தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின் மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒரு நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய்த்தலையே? தேவர்களும், திருமாலும் கொன்றைவார் சடையுடைய சிவனும் வேதங்கள் பாடும் நான்கு பீடங்களை காட்டிலும் பாலை காட்டிலும் இனிய சொல்லை உடைய தேவியே நின் தாமரை மலர் போன்ற திருவடிகளை நாய் தலை போல் உள்ள என் தலை…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர

தஞ்சம் பிறிது இல்லை ஈதல்லது என்றுன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள் சிலையும் அஞ்சு அம்பும் இக்கு அலராக நின்றாய் அறியார் எனினும் பஞ்சு அஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே. கரும்பினால் ஆனா நீண்ட தனி வில்லும் ஐந்து மலர்களும் கொண்ட நின்ற தேவியே நின்றை தவிர எனக்கு வேறு பிடிமானம் இல்லையென்று நின்னை தியானிக்க மனதை பழகும் படி செய்ய எண்ணவில்லை.  பஞ்சை மிதிக்கக்கூட நினையாத மென்மையான பாதங்களை உடைய தாய்மார்கள்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 58. மனஅமைதி பெற

அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும் தருணாம்புயமுலைத் தையல்நல்லாள், தகை சேர்நயனக் கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும், சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே. செந்தாமரை மலரிலும் என் இருதயத்தில் உள்ள தாமரையிலும் இருப்பவளே தாமரையின் அரும்பு போன்ற தனங்களை உடையவளே நின் கருணை விழியாகிய தாமைரையும் முகமெனும் தாமரையும் திரு கரங்களில் இருக்கும் மலரும் உன் திருவடி தாமரையையும் தவிர வேறு ஒன்றையும் சரணடையோர் இதை தவிர வேறு தஞ்சமும் புகலிடமும் எனக்கு இல்லை.

உரையாடலின் ஒரு பகுதி  137

கூட்டு குடும்பங்கள் ஒரு காலம் இப்போது தனி குடும்பங்களும் தனி, தனி ஆளாக மாறிவிட்டதே கணவனும் வேலைக்கு செல்ல மனைவியும் வேலைக்கு செல்ல பிள்ளைகளை 3வயது வரை ஆயா பார்க்க அல்லது குழந்தைகள் காப்பகம் பார்க்க 5 வயதில் பள்ளிக்கு ஒட  ஆரம்பித்தால் அந்த குழந்தையும் இதே போல் ஒட அந்த குழந்தைக்கு தாய், தந்தையரே கனவு போலதான் தோன்றும் அப்படியிருக்க மற்ற சொந்தங்கள் எப்படி நினைவுக்கு வரும் பெற்ற குழந்தைக்கு பால் ஊட்ட கூட நேரமில்லாத…

உரையாடலின் ஒரு பகுதி  136

நவநாகரீகம் நடத்தும் பொருளாதார போட்டியில் பங்கு பெற தான் ஊரைவிட்டு நகரம் சென்றான் முதலில் அது பத்தவில்லை அவனுடைய வேகத்தை அதிகப்படுத்தி நாட்டைவிட்டான். பிறநாடு சென்றான் அங்கு சொந்த மொழியின் தேவையோ சடங்குகளுக்கோ வேலை இல்லை அதனால் அதை கழற்றி வீசிவிட்டான் அதோடு அவனது சொந்தங்கள் கூட  கழன்று போயின தன் ஊரைவிட்டு தன் நாடுவிட்டு தன் மொழிவிட்டு தன் உறவுகள் சொந்தங்கள் விட்டு இவை அனைத்தும் அவனுக்கு தந்த அற சிந்தனைகளையும் விட்டு இப்போது ஒத்தையாய்…

உரையாடலின் ஒரு பகுதி  135

வெற்றிக்கு வேண்டிய ஒட்டத்தில் இழந்தது. எல்லோரும் ஒடிக்கொண்டிருக்கிறார்கள் எதற்கு என்ற கேள்விக்கு பதில் பொருளாதார சுதந்திரத்திற்கு என்ற பதில் வருகிறது இந்த பொருளாதார சுதந்திரத்திற்கு கொடுக்கும் விலையைப் பற்றி யாரும் சிந்தித்ததாகவே தெரியவில்லை.

உரையாடலின் ஒரு பகுதி  134

நாம் செய்யும் செயலிலும் செயலுக்கு உண்டான எண்ணம் சிந்தனையை தவிர வேறு எந்த எண்ணங்களின் குறுக்கீடு இல்லாமல் செயலை செய்து பழகுங்கள் காலப்போக்கில் நீங்கள் செய்யும் எல்லா செயல்களிலும் நீங்கள் அதை பழகியிறுப்பீர்கள் அப்போது நீங்கள் எப்போதும் தியானத்தில் இருப்பீர்கள் தியானத்திற்கென்று தனியே நேரம் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை செய்யும் செயலுக்குண்டான எண்ணமும் சிந்தனையும் தவிர வேறு எந்த எண்ணக் குறுக்கீடுகளும் இல்லாத செயலே தியானத்தின் முதல்படி.

உரையாடலின் ஒரு பகுதி  133

வெற்றி அடைவதற்கு மட்டும் அறிவின் பயன் இல்லை எதைப்பிடித் திருந்தாலும் அதை அப்படியே விட்டு வெளியே வந்து விலகி அமைதியாய் இருக்கவும் அறிவு வேண்டும் ஏனோ இந்த அறிவு போதிக்கப்படுவதில்லை ஒரு வேளை இது புரியாமல் புதிராய் உள்ளதோ வெற்றி அடைய அறிவு வேண்டும் எனும் சமுதாயம் விட்டு விலகி அமைதியாய் வேடிக்கை பார்ப்பதை ஏனோ மறுக்கிறது அல்லது மறைக்கிறது.

உரையாடலின் ஒரு பகுதி 132

பொறுமையாய் இருப்பது என்றால் என்ன நம்மால் மாற்ற முடியாத சூழ்நிலையில் நாம் அகப்பட்டு நிற்கும் போது இந்த சூழ்நிலையில் சிக்கி_விட்டோமே என்று மனம் புழுங்குவது அல்ல வேதனைபடுவதும் அல்ல வேதனையை புறந்தள்ளி புழுங்குவதை விட்டு விலகி அந்நியமாய் நின்று வேடிக்கை பார்த்தல் அந்த சூழ்நிலையை அங்கீகரித்து அதனோடு இணைந்து சென்று சூழ்நிலையை புரிந்து கொள்ளல்.

உரையாடலின் ஒரு பகுதி   131

எல்லோராலும் யோசிக்க முடியும் யோசித்த எல்லோரும் யோசித்த விஷயத்தில் நிலை _கொண்டு விட்டார்களா என்ற வினா வரும் போது தெளிவடைந்தவர்களின் சதவிகிதம் மிக குறைவே என்பது தெரிய வரும் இது ஏன் என்ற வினா வந்தால் யோசித்தல் தொடர்ச்சியாய் அமையாதது  தெரிய வரும் அப்படி யோசித்தல் தொடர்ச்சியாய் அமைய வேண்டுமென்றால் நமக்கு ஏதாவது ஒரு நிர்பந்தம் ஏற்பட வேண்டும் அதை காலம் தான் தர வேண்டும் அதனாலேயே அதற்கு கால நிர்பந்தம் என்று பெயர் அந்த கால…

பணக்காரரின்பதில்!  1

எனது வருட சம்பாத்தியமும் நூறு கோடிக்கு மேலானது தான். ஆனால், உங்களை போன்ற ஒரு பெண்ணை தேர்வு செய்வது என் பார்வையில் தவறு என்று தான் நான் கருதுவேன் காரணம், அழகு என்பதை பெண்ணாகவும், பணம் என்பதை ஆணாகவும் வைத்துக் கொண்டால், இங்கு ஒரு பெரிய பிரச்சனை எழும். அழகு வருடத்திற்கு வருடம் குறைந்து கொண்டே போகும் ஒன்று. மறுபுறம் பணம் என்பது வருடத்திற்கு, வருடம் உயர்ந்து கொண்டே போகும் ஒன்று.  பொருளாதார பார்வையில் இதனைக் கண்டால்,…

பணக்காரரின்பதில்!

 ஒரு அழகான இளம்பெண், “உலக பணக்கார ஆண்மகனை திருமணம் செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று இணையதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், இது குறித்து இளம்பெண்கூறியதாவது, “என் வயது 25 நான் பார்க்க மிகவும் அழகாக இருப்பேன். ஸ்டைல் மற்றும் நல்ல ரசனை உள்ள பெண். நான் வருடத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஆண் மகனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்றார். இந்த பதிவை பார்த்த…

நேர்மையானவன் 1

 ஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள். நேர்மையானவன் தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னான்.   அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள். செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.  நேர்மையானவனும் காலி தொட்டியை அலுவலகத்திற்-க்கு எடுத்து சென்றான். எல்லார்…

நேர்மையானவன் 

 ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார்.   உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும், அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் வெற்றியடைகிறார்களோ அவர் தான் அடுத்த மேலாளர் என்றார்.    என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று…

எண்ணங்களோடு போராடுவதே..

எண்ணங்களோடு போராடுவதே… ஆரம்பகால தியானம். உங்களுக்கு உதவ உங்கள் மூளையை பயன்படுத்துங்கள்… அடுத்தவருக்கு உதவ உங்கள் மனதை பயன்படுத்துங்கள்.

தேனீக்கள் கொட்டும்

தேனீக்கள் கொட்டும் என்று அஞ்சி கொண்டேயிருந்தால் என்றைக்கும் உங்கள் நாக்கால் தேனின் சுவையை உணரவே முடியாது எதற்கும் பிறரையே சார்ந்திருக்க ஊனமுற்றவர்கள்கூட விரும்பவதில்லை

ஒவ்வொரு மனிதனும்

ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தையே மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்; ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை மாற்றம் என்பது மானிடத் தத்துவம். மாறாதிருக்க நான் வனவிலங்கல்லன் நாம் மாற வேண்டும் நாம் மாறியே ஆக வேண்டும் நாம் கண்டிப்பாக மாறியே ஆக வேண்டும்

சலங்கையின் விலை

சலங்கையின் விலை ஆயிரக்கணக்கில், அதை காலில் தான் அணிய முடியும். குங்குமத்தின் விலை மிகக்குறைவு. அதை நெற்றியில் அலங்கரித்து கொள்வார்கள். இங்கு விலை முக்கியமில்லை, அதன் பெருமை தான் முக்கியம்.

நீ வெற்றி பெற்றால்

நீ வெற்றி பெற்றால் சாதனையாளன் பெறாவிட்டால் பிறருக்கு போட்டியாளனே தவிர தோல்வியாளன் இல்லை..!   சூழ்நிலை மாறும் போது.. சிலரது வார்த்தைகள் மாறும்.. பலரது முகங்கள் கூட மாறும்.. இதுவே நிதர்சனம்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   109

இரண்டாவதாக, கண்டனம் ஒருபோதும் நன்மை செய்வதற்கான வழியல்ல. நம்முடைய சமூகத்தில் சில கேடுகள் இருக்கின்றன, இதை ஒரு குழந்தையாலும் காண முடியும். எந்தச் சமூகத்தில்தான் தீமைகள் இல்லை? என் நாட்டு மக்களே, நான் பார்த்த பல்வேறு இன மற்றும் நாட்டு மக்களோடு, நம் மக்களை ஒப்பிட்ட பின் நான் கண்ட முடிவை இந்த வேளையில் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   108

ஆனால் பெரும்பாலான நமது நவீனச் சீர்த்திருத்த இயக்கங்கள் சிறிதும் சிந்திக்காமல் மேலை முறைகளைக் காப்பியடிப்பவைகளாக உள்ளன. இது இந்தியாவிற்கு ஏற்றதல்ல என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதனால்தான் நமது சமீப காலச் சீர்த்திருத்த இயக்கங்கள் எதுவும் எந்தப் பலனையும் அளிக்கவில்லை

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   107

நான் முன்பு கூறியது போல், முதலில் காலங் காலமாக நாம் பெற்று வந்துள்ள நமது நாட்டின் பண்பைக் பாதுகாக்க முயல வேண்டும் . பிற நாடுகளிலிருந்து பல விஷயங்களை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும், வெளியிலிருந்து பல பாடங்களை நாம் கற்றாக வேண்டும் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   106

அதேவேளையில், இந்த நூறு ஆண்டுகளின் சமுதாயச் சீர்த்திருத்தம் உருப்படியான, பாரட்டத்தக்க, நிலையான எந்த விளைவையும் இந்த நாட்டில் எங்குமே தோற்று விக்கவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை ஆயிரக்கணக்கானோர் மேடையில் முழங்குகிறார்கள். அப்பாவியான இந்து இனத்தின் மீதும் அதன் நாகரீகத்தின் மீதும் மூட்டை மூட்டையாகக் கண்டனங்கள் சுமத்தப்படுகின்றன. ஆனாலும் நடைமுறையில் எந்த நல்ல பலனையும் காணோம். ஏன் ? இதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. அது அவர்களின் கண்டனத்திலேயே உள்ளது

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   105

ஏறக்குறைய கடந்த நூறு ஆண்டுகளாக நமது நாடு சமூகச் சீர்திருத்தவாதிகளாலும் பல வகையான சமுதாயச் சீர்திருத்தத் திட்டங்களாலும் மூழ்கடிக்கப்பட்டு வருகிறது இந்தச் சீர்திருத்தவாதிகளிடம் என்னால் தவறு எதையும் காண முடியவில்லை அவர்களுள் பெரும்பாலானோர் நல்லவர்கள், தெளிவான சிந்தனையுடையவர்கள், சில விஷயங்களில் அவர்களது நோக்கங்கள் கூடப் பாராட்டத் தக்கவையாகவே உள்ளன

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 57. வறுமை ஒழிய

ஐயன் அளந்தபடி இரு நாழிகொண்டு, அண்டம் எல்லாம் உய்ய அறம்செயும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால் செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும் மெய்யும் இயம்பவைத்தாய், இதுவோ உன்தன் மெய்யருளே. தாயே நீ என் சிவபிரான் அளந்து தந்த இரண்டு படி நெல் கொண்டு உலகமெல்லாம் பசி நீங்கி பிழைக்கும் படி தர்மம் செய்யும் உன்னையும் பாடி பின் செல்வர் செய்யும் தானங்களை கண்டு அவரையும் என்னை புகழ்ந்து பாட வைத்தாயே இதுவா உன்னுடைய உண்மையான…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 56. யாவரையும் வசீகரிக்கும் ஆற்றல் உண்டாக

ஒன்றாய் அரும்பிப், பலவாய் விரிந்து, இவ் உலகு எங்குமாய் நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன், நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்றவா, இப்பொருள் அறிவார் அன்று ஆலிலையில் துயின்றபெம்மானும், என் ஐயனுமே. ஆதியாக ஒன்றாய் இருந்து பல பல சக்திகளாய் விரிந்து இந்த உலகெங்கும் நிறைந்து நின்றாலும் விலகி நிற்பவளே நீ என் சிந்தையினுள் நிற்பவளே நீ என் சிந்தையினுள் நீங்காமல் நிற்பது வியப்பல்லவோ இதை யார் அறிவார் என் தந்தையாகிய சிவபெருமானும் யோக துயிலில் உள்ள…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 55. விருப்பு வெறுப்பற்ற மோனநிலை எய்த

மின்ஆயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்ற அன்னாள், அகமகிழ் ஆனந்தவல்லி, அருமறைக்கு முன்னாய், நடு எங்குமாய், முடிவாய முதல்வி தன்னை உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்றில்லையே. பல ஆயிரம் மின்னல்கள் உருவெடுத்து வந்தது போல் விளங்கும் கோலத்தை உடைய அபிராமவல்லி அடியவர்களின் நெஞ்சத்தில் இருக்கும் ஆனந்தமயமாக கொடி போன்றவள் அரிய வேதத்தின் முன் நடு கடையாகி முழுவதுமாய் இருப்பவன் இவளை உலகத்து உயிர்கள் போற்றி தொண்டு செய்தாலும் செய்யாவிட்டாலும் அவளுக்கு அதனால் எந்த பயனும் இல்லை.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 54. கடன் தொல்லைகள் தீர

இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பாற் சென்று, இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில், நினைகுவிரேல், நித்தம் நீடு தவம் கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே. எவரிடமும் சென்று தன் இல்லாமையை சொல்லி இழிவு படும் நிலை எக்காலத்திலும் வராது. யாருக்கு என்றால் தாயை தியானிப்பவர்களுக்கு அது மட்டுமல்ல நித்தமும் தவம் செய்யாத இழி குணத்தோரிடம் செல்லாத நிலை வைத்த திரிபுர சுந்தரியின் திருவடிகளுக்கு சரணம்.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 53. பொய்யுணர்வு நீங்க

சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும், பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சிமொய்த்த கன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத் தன்னந்தனி இருப்பார்க்கு, இது போலும் தவமில்லையே. தன்னுடைய சின்னஞ்சிறிய இடையில் சாத்திய சிவந்த நிற பட்டுடையை அணிந்த தேவி தனது பெரிய தனங்களின் மேல் அணிந்த முத்துமாலையும் பிச்சி மலர் சூடிய கூந்தலும் மூன்று கண்ணும் உடைய தேவியை தனித்திருந்து தங்களது சிந்தையில் நிறுத்தி தவம் செய்வது போல் வேறு தவம் எதுவும்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 52. இம்மையில் பெருஞ்செல்வம் அடைய

வையம், துரகம், மதகரி, மா மகுடம்,சிவிகை பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறை முடித்த ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு செய்யும் தவம்உடையார்க்கு உளவாகிய சின்னங்களே. தேர் – குதிரை – மதம் மிக்க யானை பெரிய கிரீடம் பல்லக்கு பிற மன்னர்கள் திரையாக வழங்கும் பொன் மிக்க விலையுடைய பொன்னாரம் முத்துமாலை போன்றவை பிறையை திருமுடியில் சூடியுள்ள சிவ பெருமானின் அழகிய பத்தினியாகிய அபிராமியின் திருவடித்தாமரைக்கு முன் பிறவிகளில் தொண்டு செய்த தவமுடைய…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல்   51. மோகம் நீங்க

அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள் முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே, சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார், மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே. பொன் வெள்ளி இரும்பு போன்றவற்றால் ஆகிய மதில்களே உண்மையான செல்வமென்று கருதிய அசுர்களுடைய வலிமையை அழிந்து போகும் படி கோபித்த ஈசனும், திருமாலும் நின் திருவடியே சரண் என்று இருக்க நின்னை தொழும்அடியார்கள் இறப்பு, பிறப்பு எனும் இரண்டையும்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல்   50. அம்பிகையை நேரில் காண

நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு வாய் அகி மாலினி, வாராகி சூலினி, மாதங்கி என்று ஆய கியாதி உடையாள் சரணம் அரண்நமக்கே. ஈஸ்வரி நான்க முகங்கள் கொண்டவர் நாராயணி கை தாமரையில் 5 மலரம்புகளை  உடையவள் சம்புவின் மனைவி சங்கரி சாமளை நஞ்சை வாயிலே உடைய நல்ல ஜாதி பாம்பை மாலையாக கொண்டவள் வராகி சூலினி மாதங்கி என்ற நாமம் கொண்ட அபிராமியின் திருவடிகளே நமக்கு…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 49. மரணத் துன்பம் இல்லாதிருக்க

குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி, வெங்கூற்றுக்கு இட்ட வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து, அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்து, அஞ்சல் என்பாய் நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே. யாழ் நரம்பில் பொருந்திய இசை வடிவாகிய ஈஸ்வரியே கருப்பையில் வாசம் செய்து வந்த   இந்த உடம்பும் உயிருமானது பிரம்மன் விதித்த நேரத்தில் காலன் வரும் சமயம் நின்னை துதிக்கும் தேவ மகளியர் சூழ நீ வந்து உன் வளையணிந்த திரு கரத்தால் அஞ்சாதே என்று…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 48. உடல் பற்று நீங்க

சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப் படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில் இடரும் தவிர்த்து இமைப்போதிருப்பார், பின்னும் எய்துவரோ குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே. பிரகாசிக்கும் கலைகளை உடைய மேருமலை போன்ற சடையோடு கூடிய திருமுடி உடைய சிவ பெருமானோடு இணைந்து படருகின்ற பசுங்கொடியாகிய அபிராமவல்லியை நெஞ்சில் தியானித்து அதனால் துன்பம் நீங்கி இமைக்கும் ஒரு கணப்போதாவது, பரமனாந்த நிலையில் இருப்பவர்கள் மீண்டும் நினமும், இரத்தமும் கூடிய இந்த தேகத்தை அடைவார்களோ…

உரையாடலின் ஒரு பகுதி  130

மனிதனின் மோசமான மறதிதான் கவலையின் கணக்கில் உள்ளது. ஆனால் காலத்தின் ஞாபக சக்தி அப்படிப்பட்டதன்று மனிதன் தன் சக மனிதரோடு கொண்ட தொடர்பையும் பிரபஞ்சத்தில் மற்ற உயிர்களோடு கொண்டுள்ள தொடர்பையும் காலம் நினைவில் வைத்திருந்து ஒவ்வொரு கண்ணிமைப் பொழுதிலும் கணக்கை தீர்த்துக்கொள்ள அவனை வற்புறுத்துக்கின்றது ஒவ்வொரு வாழ்வின் தொடர்ச்சியிலும் மரணங்களின் தொடர்ச்சியிலும் அது நிகழ்ந்து கொண்டே வருகிறது

உரையாடலின் ஒரு பகுதி  129

கொலையுண்டவன் கொலைகாரனின் கத்தியை ரத்தத்தால் நினைக்கிறான் . மரண குத்துக்கு இருவருமே காரணமாவார்கள். கொள்ளை கொடுத்தவன் கொள்ளையனின் செயலை வழி நடத்துகிறான். கொள்ளையில் இருவருக்கும் பங்கு உண்டு.

உரையாடலின் ஒரு பகுதி  128

காலம் மறப்பதில்லை மனிதனுக்கு எல்லாவற்றின் மேலும் விருப்பம் உண்டு. எல்லாமும் மனிதனை விரும்புகின்றன. இந்த பரிமாற்றம் தடையில்லாமல் நடந்து கொண்டே இருக்கிறது. ஒரு மாடு – குத்துபடுகிறவன் அதை தன் பக்கம் ஈர்க்காதவரை அது அவனை கொம்பால் குத்தாது. ரத்தம் சிந்தியதில் மாட்டைவிட மனிதனின் குற்றமே அதிகம்.

உரையாடலின் ஒரு பகுதி  127

இப்படி நீங்கள் இருக்க தொடங்கினால் உங்களுக்குள் ஏற்படும் மாற்றம் உங்களுக்கு மட்டுமல்ல உங்களை சுற்றி இருப்பவர்களையும் பரவசபடுத்தும் அந்த பரவசத்தை அறிய ஆசைபடுங்கள் உணர முயற்சி செய்யுங்கள் விடாது அதை அடைய அதை பின் தொடருங்கள் அதில் நீங்கள் பயணப்பட்டு அதை நீங்கள் கண்டடையும்  நேரம் உங்களில் உங்களுக்கு இன்னும் சொல்ல போனால் உங்களுக்காக மட்டுமே இருந்த கொண்டிருந்த ஒன்றை காணுவீர்கள் அதை கண்ட கணம் நீங்கள் அதை பிரிந்த காலம் எல்லாம் மறைந்து காலமில்லா பெரு…

உரையாடலின் ஒரு பகுதி  126

இதற்கு பயிற்சி செய்ய ஆரம்பிக்க வேண்டுமென்றால் நாம் நம்மை கவனித்தலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் கவனிக்க வேண்டும் ஒவ்வொரு சிந்தனையையும் சிந்திக்க வேண்டும். உங்களிடம் உள்ள ஒவ்வொரு  உணர்வுகளையும் கவனியுங்கள் உங்களின் மெல்லிய அசைவுகளையும் கவனியுங்கள் அதாவது நடத்தல் சாப்பிடுதல், குளித்தல் இது போன்று உள்ள எல்லாவற்றையும் கவனியுங்கள்

உரையாடலின் ஒரு பகுதி 125

உரையாடலின் ஒரு பகுதி  125 காரணம் உங்கள் செயல், எண்ணம், உணர்வு  இவற்றில் உங்கள் கவனம் இல்லை இவை பிளவுபட்டு பிரிந்து இருப்பதே காரணம் என்று தெரிந்து கொள்ளுங்கள் ஒற்றுமை எப்போதுமே வெற்றி தரும் அதில் சந்தேகமே இல்லை அந்த ஒற்றுமையை உங்களிடம் இருந்து துவங்குங்கள் நீங்கள் இதுவரை பார்த்த விஷயங்கள் அனைத்தும் வேறெரு கோணத்தில் அறிய துவங்குவீர்கள் அப்போது உங்களின் புரிதலும் வேறு ஒரு தளத்தில் இருக்கும் அப்போது உங்களுக்கு ஆகாயம் சேதி சொல்லும் நட்சத்திரங்களின்…

வினை தீர்க்கும் வீரபத்திரர்

திருப்பறியலூர் என்று புராணத்தில் அழைக்கப்படும் இடம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பரசலூர். இங்குதான் வீரபத்திரரின் வாயிலாக தட்சனை, சிவபெருமான் தண்டித்த வீரட்டான தலம் இருக்கிறது. இங்கு கருவறையில் வீராட்டேஸ்வரர் வீற்றிருக்கிறார். கோவில் மகா மண்டபத்தின் வடக்கு பக்கத்தில் வீரபத்திரருக்கு சன்னிதி இருக்கிறது. மழு, கேடயம், மணி, கபாலம், சூலம், கதாயுதம், கத்தி தாங்கி காட்சி தருகிறார்

‘கமண்டல நதி கணபதி

கர்நாடகா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஊரில் ஒன்று, சிருங்கேரி. இங்கு ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட, சைவ மத பீடம் இருக்கிறது. இந்த ஊரின் அருகில் ‘கேசவே’ என்ற திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு ‘கமண்டல நதி கணபதி திருக்கோவில்’ இருக்கிறது. உயிர்கள் அனைத்துக்கும் ஆதாரமாக, அவசியமாக இருக்கும் ஒரே பொருள், நீர். அந்த நீர் தொடர்ந்து சுரந்து கொண்டே இருக்கும் ஆலயமாக இந்த கமண்டல கணபதி கோவில் திகழ்கிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில், விநாயகர் விக்கிரகத்தின் முன்பாக…

விசேஷ திருக்கோலங்கள்    3

கர்நாடகா மாநிலம் பேலூர் என்ற ஊரில் நடனம் ஆடும் கோலத்தில் வீற்றிருக்கும் சரஸ்வதிதேவியை தரிசனம் செய்யலாம். திருவையாறு தலத்தில் வில் அம்பு ஏந்தி வேட்டைக்குச் செல்லும் கோலத்தில் அருள்கிறார் முருகப்பெருமான்.

விசேஷ திருக்கோலங்கள் 2

நாகப்பட்டினம் மாவட்டம் கடலங்குடியில் வளையல், கொலுசு அணிந்தபடி சரஸ்வதி தேவி காட்சியளிக்கிறாள். சிருங்கேரியில் சரஸ்வதி தேவியானவள், மாணவி வடிவில் படிக்கின்ற  கோலத்தில் அருள்பாலிக்கிறாள் சரஸ்வதி தேவியின் கையில் எப்போதும் வீணை இருக்கும். ஆனால் வேதாரண்யம், திருக்கோடிக்கா ஆகிய தலங்களில் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி, வீணை இல்லாமல் காட்சி தருகிறார்.

விசேஷ திருக்கோலங்கள் 1

திருச்சி அருகே உள்ள உய்யக்கொண்டான் மலை உச்சியில் சிவபெருமானும், அடிவாரத்தில் முருகப்பெருமானும் அமர்ந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியில் அருளும் முருகப்பெருமான் வேட வடிவில் காட்சி தருகிறார். இவருக்கு வியர்வை துளிர்ப்பது விசேஷ அம்சம். செம்பொன்னார் கோயிலில் ஜடாமகுடத்துடனும், கரங்களில் அட்சமாலை ஏந்தியபடியும் தவக்கோலத்தில் அருள்கிறார் முருகன்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   104

உங்கள் ஜாதிகளிலோ சமூகச் சீர்த்திருத்தத்திலோ நேரடியாக எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. நீங்கள்  எந்த ஜாதியைச் சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருங்கள் . ஆனால் அதற்காக ஏன் மற்றொருவனை, மற்றொரு ஜாதியை நீங்கள் வெறுக்க வேண்டும்? நான் போதிப்பது அன்பு, அன்பு ஒன்றை மட்டுமே. பிரபஞ்சம் முழுவதும் ஆன்மா ஒன்றே, அது எங்கும் நிறைந்தது என்ற மகத்தான வேதாந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டுதான் நான் பிரச்சாரம் செய்கிறேன்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   103

பல நூற்றாண்டுகளாகவே நம் மக்களின் மனத்தை ஆக்கிரமித்திருப்பவையும் வெறுப்டையச் செய்து. வருபவையுமான ஜாதி மற்றும் சமூகச் சீர்திருத்தம் பற்றிய கடினமான சில கேள்விகள் இந்த இடத்தில் இயல்பாகவே எழுகின்றன. நான் ஜாதிகளை உடைப்பவனோ, வெறும் சமூகச் சீர்திருத்தவாதியோ அல்ல என்பதை வெளிப்படையாக உங்களிடம் சொல்லிக் கொள்கிறேன்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   102

நம் சாஸ்திரங்கள் இவ்வாறே கூறுகின்றன. என் அனுபவமும் இதையே சொல்கிறது இதுவே வேதாந்தத்தின் மகத்தான லட்சியம். ஒரு லட்சியத்தைக் கொள்வது என்பது ஒன்று, அதனை அன்றாட வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நடைமுறையில் கடைபிடிப்பது என்பது முற்றிலும் வேறான ஒன்று ஒரு லட்சியத்தைக் காட்டுவது, மிகவும் நல்லதுதான் ஆனால் அதை அடைவதற்க்கு உரிய செயல்முறை எங்கே இருக்கிறது?

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   101

எங்கெல்லாம் தீமை இருக்கிறதோ, எங்கெல்லாம் அறியாமை நிலவுகிறதோ அஞ்ஞானம் உள்ளதோ அங்கெல்லாம் அவற்றிற்கு மூலகாரணமாகக் காணப்படுவது வேறுபாட்டு உணர்ச்சிகளே . சமத்துவம், பொருட்களின் அடிப்படையாகத் திகழ்கின்ற சமநிலை மற்றும் ஒருமைப்பாடு – இவற்றின் மீதுள்ள நம்பிக்கையிலிருந்தே எல்லா நன்மைகளும் பிறக்கின்றன.   

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   100

இங்கும் இதர நாடுகளிலும் வேதாந்தத்தின் மூலம் பயனுள்ள காரியங்கள் செய்வதற்கு இவ்வாறு மகத் தான வாய்ப்பு உள்ளது. மனித இன வளர்ச்சிக்காகவும் மேன்மைக்காகவும் இந்த அற்புதக் கருத்தை, ஆன்மா ஒன்றே, அது எங்கும் நிறைந்தது என்பதான அற்புதக் கருத்தை இங்கும் பிற இடங்களிலும் பிரச்சாரம் செய்ய வேண்டும்

ராகு 3

ராகு 1ம் வீட்டில் நோயாளி மனைவி அமைவாள், 2ம் வீட்டில் இருதாரம் ஏற்படும். ராகு லக்னத்திற்கு 3,6,7,11ம் இடத்திலிருப்பது ராகுதிசை நடைபெறின் உயர்ந்த அந்தஸ்க்கு சென்ற பேரும் புகழும் ஏற்படுகிறது. ராகு, கேது ஏதாவது ஒரு கிரகம் செவ்வாயுடன் 6ம்பாவாதியோடு இருந்தால் விஷபயம் ஏற்படலாம். ராகு இருந்த வீட்டின் அதிபதியும், கேது இருந்த வீட்டின் அதிபதியும், ஒருவரின் கர்மாவை வெளிகொணரும் கிரகங்கள்.

ராகு 2

ராகு, கேது கிரகங்கள் பாபருடன் எந்த ஆதிபத்தியம் பெற்ற கிரகங்களுடன் சேர்ந்துள்ளாரோ அக்கிரக பலனை தனது திசையில் வழங்குவர். ராகுவிலிருந்து 5, 9ல் லக்னாதிபதியும், 9மிடத்தின் அதிபதியும் சேர்ந்து இருப்பின் லெளகீக வாழ்க்கையில் நாட்டம் இருக்காது.  துறவி வாழ்க்கை வாழ்ந்து சன்னியாசியாக மாறிவிடுவர். ராகு 12ல் இருந்தால் கண்வியாதி வரும், சனி 12ல் இருந்தால் மாலை கண், அல்லது கண் சிமிட்டல் ஏற்படும்.

ராகு 1

நமது நல்லநேரம், கெட்டநேரம் கிரகங்களின் கையில், பலன், பயன்தரும் கிரகங்களை வழிபடுவோம். ராகு லக்னத்தில் இருக்கும் ஜாதகம், குடும்பத்தில் பிரச்சனைகள், வாழ்க்கையில் சோபிக்க மாட்டார்கள், எதிலும் குறைபாடுகள் மூர்க்கத்தனம் இருக்கும். ராகுவை, குருபகவான் பார்வை கிட்டினால் எந்த பாதிப்புக்கும் உள்ளாக மாட்டார்கள். ராகு 7ல் அல்லது சுக்கிரனுடன் இணைந்த ஜாதகர் அயல் நாட்டில் வசிப்பர்.  அயல் நாட்டிற்கு அடிக்கடி சென்ற வருவர்.  திருமண வாழ்வு சிறப்பாக இருக்கும்.

பழ மொழிகள் 33

எந்த மனிதன் தீவிரமாகவும், திடமாகவும், சிந்திக்கிறானோ அந்த சிந்தனைகளின் வளர்ச்சி கலையாகும். அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன் ஆவான்.   பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல பணக்காரர்களுடன் பழகினாலும் பணக்காரன் ஆக மாட்டாய்.   இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல. நீ செய்வதை விரும்புவதில்தான்.

பழ மொழிகள் 32

சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தல்களாகவும், கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது.   சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு எல்லாமே எளிதாகத் தோன்றும்.   எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 47. யோகநிலை அடைய

வாழும் படிஒன்று கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர் வீழும்படிஅன்று, விள்ளும்படிஅன்று, வேலை நிலம் ஏழும் பரு வரை எட்டும், எட்டாமல் இரவுபகல் சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே. எப்போதும் உள்ள இன்பத்தில் இருக்கும்படியான வாழும் முறையை அந்த பரம் பொருளின் மெய் ஞானத்தால் அறிந்து கொண்டேன் அந்த வழி மனதில் ஒருவர் விரும்பி தியானிக்குமாறு உள்ளதல்ல வாயினாலும் சொல்ல இயலாது கடல் ஏழும் உலகு ஏழும் அசைக்க முடியாமல் இருப்பது அது இரவையும் பகலையும் உண்டாக்கும்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 46. நல்நடத்தையோடு வாழ

வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம்அடியாரை மிக்கோர் பொறுக்கும் தகைமை புதியது அன்றே, புது நஞ்சை உண்டு கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே, மறுக்கும் தகைமைகள் செய்யினும், யான் உன்னை வாழ்த்துவனே. ஆலகால விஷத்தை உண்டு கண்டம் கருத்த சிவ பெருமானின் இடபாகத்தில் இருக்கும் தேவியே நான் உனக்கு ஒவ்வொத தவறுகளை செய்தாலும் அவற்றை ( மதி உடையவர் மதி குறைந்தவர் செய்யும் தவறுகளை பொருட்படுத்தாது இருப்பது )  போல பொறுத்து அருள்வாய் எனும் நம்பிக்கையால் உன்னை…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல்      45. உலகோர் பழியிலிருந்து விடுபட

தொண்டு செய்யாதுநின் பாதம்தொழாது, துணிந்திச்சையே பண்டு செய்தார்உளரோ, இலரோ? அப் பரிசடியேன் கண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச் செய்தவமோ? மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே, பின்வெறுக்கை அன்றே. தாய் நின் திருவடியை தொழுது செய்யாது உண்மை பொருளை இதுவென்று கண்டு கொண்டு இருந்தவர் பழங்காலத்தில் இருந்தனரோ இல்லையோ இருந்தினர் என்றால் அவர்களை போல் நான் ஆசை கொண்டு செய்தால் அது தவறாய் இருந்தாலும் நீ எனை பொறுத்து, வெறுத்து ஒதுக்காமல் இருக்க வேண்டும்.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 44. பேதபுத்தி நீங்க

தவளே இவள், எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் அவளே, அவர்தமக் கன்னையும் ஆயினள், ஆகையினால், இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம், துவளேன், இனிஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே. தவத்திற்கு முதன்மையான இவள் எங்கள் சங்கரின் மனைக்கு மங்களமாக இருப்பவள் அவரை சீராட்டி அவருக்கு தாயும் ஆனவள் அதனால் தேவர்கள் அனைவருக்கும் மேலான தலைவி இவளே அதனால் இவளை தவிர வேறு தெய்வம் உண்டென்று எண்ணி தொண்டு செய்ய மாட்டேன்.!

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 43. தீமைகள் ஒழிய

பரிபுரச் சீறடிப் பாசாங்குசை,பஞ்சபாணி, இன்சொல் திரிபுர சுந்தரி, சிந்துர மேனியள் தீமைநெஞ்சில் புரிபுர, வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச்சிலைக் கை, எரிபுரை மேனி, இறைவர் செம்பாகத் திருந்தவளே. மன்மதனின் ஐந்து மலர்பாணங்களை தரித்தவளே சிறிய திருவடிகளில் சிலம்பை அணிந்தவளே இனிய சொற்களை உடைய திரிபுர சுந்தரியே செந்தூர நிறத்திற்கு ஒப்பான மேனி உடையவளே மனதில் வஞ்சம் கொண்ட அசுரர்களை அழிக்கும் சிவபிரானின் இடபாகத்தை கொண்டவளே!

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 42. உலகினை வசப்படுத்த

இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து வடங்கொண்ட கொங்கை மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் லரவின் படங்கொண்ட அல்குல் பனிமொழி, வேதப் பரிபுரையே. பருத்த இரு தனங்களை உடையவளே அதில் முத்துமாலையும் அணிந்தவளே மலை போல் கொண்ட அந்த இரு தனங்களை கொண்டு சிவபிரானின் மார்பில் பதித்து சிவனை சந்தோஷபடுத்துபவளே நல்ல பாம்பின் படத்தை ஒத்த அல்குலை கொண்ட தேவியே வேதமாகிய சிலம்பை உடையவளே குளிர்ந்த வார்த்தைகளை…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 41. நல்லடியார் நட்புப் பெற

புண்ணியம் செய்தனமே மனமே, புதுப் பூங்குவளைக் கண்ணியும், செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால் நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப் பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே. புதிய குவளை மலரைப் போன்ற திருவிழிகளை உடைய அபிராமியும் அவளது கணவரும் இணைந்து நம்மை ஆட்கொள்ளும் காரணத்தால் நாம் இருக்கும் இடத்தை அணுகி வந்து நம்மை தம் அடியார்களிடையே இருக்கும்படி திருவருள் பாலித்து நம் தலையின் மேல் திருவடியை பதிக்க உண்டான…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 40 பூர்வ புண்ணியம் பலன்தர

வாணுதற் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப் பேணுதற் கெண்ணிய எம் பெரு மாட்டியை, பேதைநெஞ்சிற் காணுதற் கண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு பூணுதற் கெண்ணிய எண்ணமன்றோ, முன்செய் புண்ணியமே. ஒளி பொருந்திய முகத்தில் நெற்றி கண் உடையவளே தேவர்கள் அனைவரும் நின்னை வழிபடுவதையே லட்சியமாக கொண்டவர்கள் அறியாமை உடைய நெஞ்சினால் காண கிடைக்காதவள் அப்படிப்பட்ட தேவியை தரிசித்து அன்பு கொள்ள எண்ணிய எண்ணத்திற்கு காரணம் முற்பிறவிகளில் செய்த புண்ணியமே!

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 39. கருவிகளைக் கையாளும் வலிமை பெற

ஆளுகைக்கு, உன்தன் அடித் தாமரைகள் உண்டு, அந்தகன்பால் மீளுகைக்கு உன்தன் விழியின் கடைஉண்டு, மேல்இவற்றின் மூளுகைக்கு என்குறை, நின்குறையே அன்று, முப்புரங்கள், மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான், பங்கில் வாணுதலே. திருமாலாகிய அம்மை தொடு தூது மேரு மலையை வில்லாக கொண்டு திரிபுரங்களையும் அழிக்கும் சிவபிரானின் இடபாகத்தில் ஒளி படர்ந்த திருநுதலை உடைய தேவி உன் திருவடி தாமரைகள் என்ன ஆட்கொண்டுள்ளது காலன் பால் செல்லாமல் என்ன காக்க உன் கடாஷம் உள்ளது இதன் மேல் என்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 38. வேண்டியதை வேண்டியவாறு அடைய

பவளக் கொடியில் பழுத்தசெவ் வாயும், பனிமுறுவல் தவளத் திருநகையும் துணையா, எங்கள் சங்கரனைத் துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள் அவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே. நல்ல இன்பப் பதவி வேண்டுமென்று நினைக்கும் மனிதர்களே, இந்திரப் பதவியைப் பெற்றுத் தேவலோகராசதானியாகிய அமராவதியை ஆள வேண்டுமெனெனின் அதன்பொருட்டு, பவளக் கொடிபோலக் கனிந்த செவ்வாயும் குளிர்ந்த புன்னகையோடு கூடிய வெள்ளிய அழகிய பல் வரிசையும் தமக்குத் துணையாக நிற்க, எங்கள் கடவுளாகிய சிவபெருமானைக் குழையும்படியாக எதிர்ப்பட்டுத் துடிபோன்ற…

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு  16

சந்திரன் இருந்தால்:- மாதா குண தோஷம், தந்தைக்கு இரண்டு தார நிலை உடல்நல குறைவினால் தாயின் மனோநிலை சரியில்லாமை, ஊன, ஈன பெண்களின் தொடர்பு தன் நிலைக்கு ஒவ்வாத காரியத்தை செய்தல்.

மேச, விருச்சிக லக்னம்:- நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 15

லக்கினாதிபதி செவ்வாய் ஆகி அவர் இருந்த நட்சத்திரத்திற்கு எதிரிடையான நட்சத்திரத்தில் சூரியன் இருந்தால்:- புத்திரர்களால் இலாபமின்மை தேவையான நேரத்தில் புத்தி செயல்படாமை, செய் தொழில் நஷ்டம், விரும்பாத தொழில், ராஜ்ஜிய விரோதம், அரசாங்க  சம்பந்தப்பட்ட செயல்களில் அவமானம், தனித்திருத்தல், குடியினால் மனம் பேதலித்தல்.

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 14

ராகு இருந்தால்:-பாட்டன் வகையில் இல்லான்மை, மருந்து மாந்தீரிகத்தால் பீடை, முன்ஜென்மம் தோஷம், அதனால் ஏற்படும் விவகாரம், கோணல் புத்தி, சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன். கேது இருந்தால்:-சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 13

லக்கினாதிபதி சந்திரன் ஆக இருந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில். சனி இருந்தால்:-ஆயுள் பீதி, அங்க ஹீனம், மரணத்திற்கு ஒப்பான வேதனையை நித்தமும் அனுபவித்தல், மனைவியை பிறர் கொண்டு செல்லல், திருமணத்தினால் அவமான, இல்லறத்தினால் சுகம் கிட்டாமை.

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 12

லக்கினாதிபதி சந்திரன் ஆக இருந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில். சுக்கிரன் நின்றால்:-களத்திர சுகம் கிட்டாமை, இரகசிய தொடர்பு அதனால் அவமானம், கீர்த்தி பங்கம், மாதா சுகக் குறைவு, மாதவின் ஆதரவு இல்லாதிருத்தல், வீடு நிலம், வாகனங்களால் கண்டம், நஷ்டம் எப்போதும் சுகக்கேடு.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   99

கீதையில் நான் விரும்பும் பகுதி ஏதாவது ஒன்று இருக்கிறது என்றால், அதன் சாரமாகவும் சுருக்கமாகவும் உள்ள கண்ணனின் இந்த இரண்டு சுலோகங்கள்தாம்- யார் எல்லா உயிர்களிலும் பரம்பொருளாய் சமமாக உறைவதைக் காண்கிறானோ, அழிகின்ற பொருட்களில் அழியாதவரான இறைவனைக் காண்கிறானோ அவனே உண்மையில் காண்கிறான். ஏனெனில் எங்கும் இறைவன் சமமாக உறைவதைக் காண்பவன் ஆன்மாவை ஆன்மாவால் அழிக்க மாட்டான். இவ்வாறு அவன் உயர் லட்சியத்தை அடைகிறான்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   98

ஒவ்வொருவருக்கும் அவர்களின் உண்மை இயல்பைப் போதியுங்கள் உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள், அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதைப் பாருங்கள். உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும் பெருமை வரும், நன்மை வரும் தூய்மை வரும், எவையெல்லாம் மேலானதோ அவை அத்தனையும் வரும்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   97

அளவுக்கு அதிகமான சோம்பல் அளவை மீறிய பலவீனம், ஆழ்ந்த மனவசியம் இவை நம் இனத்தின் மீது படிந்துள்ளது, படிந்தவண்ணம் உள்ளது. ஓ தற்கால இந்துக்களே, மனவசியத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். அதற்கான வழி உங்கள் சாஸ்திரங்களில் உள்ளது. அதைப் படியுங்கள்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   96

விழித்திருங்கள் பலவீனமாகிய இந்த மனவசியத்திலிருந்து விடுபட்டெழுங்கள். உண்மையில் யாரும் பலவீனர் இல்லை. ஆன்மா எல்லையற்றது எல்லா ஆற்றலகளும் உடையது எல்லாம் அறிந்து எழுந்த நில்லுங்கள், உங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், உங்களுள் உறைகின்ற இறைவனை வெளிப்படுத்துங்கள், அவரை மறுக்காதீர்கள்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  95

மகத்தானவர்களாக மேலோர்களாக ஒவ்வொருவரும் மாறுவதற்கான எல்லையற்ற வாய்ப்பும் எல்லையற்ற ஆற்றலும் அந்த ஆன்மாவில் உள்ளது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளட்டும் உத்திஷ்டத ஜாக்ரத ப்ராப்ய வரான் நிபோதத எழுந்திருங்கள் விழித்திருங்கள், லட்சியத்தை அடையும்வரை நில்லாமல் செல்லுங்கள் என்று ஒவ்வொருவரிடமும் முழங்குவோம்.

தன்னை அறிதல்  5

பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன். எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள். நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

தன்னை அறிதல்   4

எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள். தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும். புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.

தன்னை அறிதல்  3

உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக (Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.

தன்னை அறிதல்  2

அதிகாலையில் எழ பழகுங்கள். வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள். அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும். நிறைய நல்ல புத்தகம் படியுங்கள். எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

தன்னை அறிதல்  1

நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?  “நீ பிறந்த போது, நீ அழுதாய்…உலகம் சிரித்தது… நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்… உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள். அடிக்கடி கவலை…

தேநீர் விருந்து  2

  அந்தத் தம்ளர்களில் தேநீரை ஊற்றிக் குடித்த அவர்கள்  தேநீரின் சுவை பற்றி ஆசிரியரிடம் புகழ்ந்தார்கள். அந்த ஆசிரியர் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிரத்தியேகமாகச் சொல்லித் தருவித்த உயர்தரத் தேயிலையை உபயோகித்து அந்தத் தேநீரைத் தயாரித்ததை அவர்களிடம் தெரிவித்தார். எத்தனையோ தம்ளர்கள் இருந்த போதிலும் நீங்கள் அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு போனீர்கள். அது இயற்கை தான். ஆனால் எடுத்தது எந்த தம்ளராக இருந்தாலும் உண்மையில் உங்களுக்கு முக்கியமானது நீங்கள் குடித்த தேநீர்…

தேநீர் விருந்து 1

அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் மூலமும்…

கீதைகள் மொத்தம்\ – 60 58 – 60

வித்யா கீதை* – இதில் திரிபுர ரஹஸ்யமானது அடங்கியுள்ளது. அதோடு தத்தாத்ரேயர் பரசுராமருக்கு விவரிக்கும் ஒரு கதையின் வடிவத்தில் இது உள்ளது. திரிபுரா அல்லது மூன்று புரங்களுக்கும் தலைமை தாங்கும், மிக உயர்ந்த ஞானமுடையவளான ஆதி சக்தியை வித்யா என்றும் அழைப்படுகிறாள். ஆகவே இந்த கீதையை, வித்யா கீதை என்றும் அழைப்பதுண்டு. ப்ராமர கீதை* – ஒரு இடைத்தரகராக ‘தேனீ’ (ப்ராமரா) மூலம் கோபியர்களுக்கும் உதவருக்கும் இடையிலான உரையாடல். இது ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து வந்தது. வேணு கீதை*…

கீதைகள் மொத்தம்\ – 60 55- 57

யோகி கீதை* – இது சுவாமி நாராயணனின் நான்காவது ஆன்மீக வாரிசான ஸ்ரீ யோகிஜி மஹாராஜரின் பிரார்த்தனை மற்றும் ஆன்மீக போதனைகளின் தொகுப்பாகும். ஆன்மீக உணர்வை அடைவதற்கும், பிரம்மருவாக மாறுவதற்கும் அல்லது கடவுளை உணர்வதற்கும் ஒரு ஆர்வலருக்கு தேவையான அனைத்து பண்புகளையும் இது விளக்குகிறது. வல்லப கீதை* – இது ஷோதசா கிரந்தங்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது. மேலும், ஸ்ரீ வல்லபாச்சார்யரின் பதினாறு படைப்புகளின் தொகுப்பாகும். இதில் அனைத்து வகையான தலைப்புகளும் விவாதிக்கப்பட்டுள்ளன. மோக்ஷம் அல்லது விடுதலை என்ற…

கீதைகள் மொத்தம்\ – 60 51-54

பீஷ்ம கீதை* – மஹாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ள இந்த கீதையில், மகேஸ்வரர், விஷ்ணு மற்றும் நாராயணன் என பல்வேறு பெயர்களை உச்சரிக்கும் பீஷ்மரின் பாடல்கள் உள்ளன. மேலும் இந்த பாடல்களை நம்பிக்கையுடனும் பக்தியுடனும் பாடும் ஆர்வலருக்கு பேரின்பம், அமைதி மற்றும் வளம் ஆகியவற்றை அளிப்பதாக கூறப்படுகிறது. ப்ராமண கீதை* – மஹாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ள இந்த கீதை, மாயா மற்றும் மாயையின் பிணைப்புகளிலிருந்து எவ்வாறு தப்பிப்பது அதோடு அனைத்து மனித இருப்புக்கும் இலக்காக இருக்கும் மிக உயர்ந்த விடுதலையை அடைவது…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 37. நவமணிகளைப் பெற

கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை, விட அரவின் பைக்கே அணிவது பண்மணிக் கோவையும், பட்டும்,எட்டுத் திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே. எட்டுத் திசையையே உடுத்த அழகிய உடையாக உடைய சிவபெருமானது வாமபாகத்தைப் பொருந்திய அபிராமி, தன் திருக்கரத்தில் அணிந்திருப்பன கரும்பாகிய வில்லும் மலராகிய அம்புகளும் செந்தாமரைபோன்ற நிறமுடைய திருமேனியில் அணிவது வெள்ளிமுத்துமாலையாம்: விஷம் பொருந்திய நாகத்தின் படம் போன்ற குஹ்ய ஸ்தானத்தில் தரிப்பவை பல மணிகளால் ஆகிய…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 36. பழைய வினைகள் வலிமை பெற

பொருளே, பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும் மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து இருள் ஏதும் இன்றி ஒளிவெளி ஆகி இருக்கும் உன்தன் அருள் ஏது, அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே. பலவகை செல்வமாக உள்ளவளே அந்த செல்வத்தின் மூலம் அனுபவிக்கும் போகமே அரிய போகங்களை அனுபவித்து செய்யும் மாயா ரூபியே இதில் எல்லாம் உண்டாகும் மயக்கங்கள் தீர்ந்த பின் உண்டாகும் தெளிந்த ஞானமே தாமரை இருக்கையில் இருப்பவளே என்னுடைய மனதில் மாயையின்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 35. திருமணம் நிறைவேற

திங்கட் பகவின் மணம்நாறும் சீறடி சென்னிவைக்க எங்கட்கு ஒருதவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர் தங்கட்கும் இந்தத் தவம்எய்துமோ? தரங்கக் கடலுள் வெங்கட் பணிஅணை மேல்துயில் கூரும் விழுப்பொருளே    அலைகளை உடைய பாற்கடலில் உள்ள ஆதிசேஷனின் மீது துயில்பவளே சிவபிரானின் திரு முடியில் உள்ள பிறை சந்திரனது ஒளி வீசும் சிறிய அடி ஒன்றுக்கும் பற்றாத எங்கள் சிரத்திலே நீ வைத்து அருள எங்களுக்கு ஒப்பற்ற தவம் அமைந்தது எவ்வாறு இது அதிசயமே கணக்கில்லாத பல தேவர்களுக்கும்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க

வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம் தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும், பைந் தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும், பொற் செந் தேன் மலரும், அலர் கதிர் ஞாயிறும், திங்களுமே. அபிராமி தாயே உன்னிடம் வந்து தஞ்சமடையும் அடியவர்களுக்கு சொர்க்லோக பதவியை அன்போடு தந்து நான் முக பிரம்மாவின் கழுத்தில் துழாய் மாலையும் திருமாலின் திருமார்பில் பருத்த கவுத்துவ மணியும் ஈசனின் இடபாகத்தில் இருந்து தேனொழுரும் தாமரை மலரில் பரவிய கிரகணங்களை உடைய சூரிய…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க

இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனைநடுங்க அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய், அத்தர் சித்தம் எல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே, உழைக்கும் பொழுது, உன்னையே, அன்னையேஎன்பன் ஓடிவந்தே. ஈசனின் உள்ளம் முழுவதும் உருகும்படி சந்தன சலவையை பூசியுள்ள குவிந்த தன பாரங்களை உடைய யாமளையாகிய தேவியே நான் செய்யும் பாவத்தின் விளைவாக எனை கொல்ல புகும் நான் நடுங்கும்படி என்னை அழைக்கும் சமயத்தில் நான் பயந்து நடுங்கி வருந்தி உன்னிடம் ஒடி வந்து…

32. அகால மரணமும் துர்மரணமும் வராமலிருக்க

ஆசைக்கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப் பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் எனும் வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து, ஆண்டுகொண்ட நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர் பாகத்து நேரிழையே. ஈசனின் இடபாகத்தில் இருக்கும் தேவியே மண் பெண் பொன் எனும் மூன்றின் ஆசைக் கடலில் சிக்கி இரக்கமற்ற யமனின் பாச கயிற்றுக்கு அகப்பட்டு துன்ப்படும்படி இருந்த என்னை மணமுள்ள தாமரை மலரை போன்ற திருவடியை என் தலையின் மேல் வலிய வைத்து என்னை ஆண்டு கொண்ட…

31. மறுமையில் இன்பம் உண்டாக

உமையும், உமையொரு பாகனும் ஏக உருவில்வந்திங் கெமையும் தமக்கன்பு செய்ய வைத்தார், இனி எண்ணுதற்குச் சமயங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை, அமையும் அமையுறு தோளியர் மேல்வைத்த ஆசையுமே. சிவபிரானின் தேகத்தில் ஒரு பாதியாய் விளங்குகின்ற ஒருவராகவே திகழும் உமாதேவியே பக்குவமற்ற என்னை போன்றோரையும் தன் திருவடிக்கு அன்பு செய்யும்படி நல்ல நிலையில் வைத்துள்ளனர் அதனால் கடைபிடிக்க வேறு சமயங்கள் இல்லை நம் பிறவி பிணி தீர்ந்த காரணத்தால் பெற்று எடுக்க இனி தாயும் இல்லை…

30. அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்க

அன்றே தடுத்தென்னை ஆண்டுகொண்டாய், கொண்டதல்ல என்கை நன்றே உனக்கினி நான் என் செயினும், நடுக்கடலுள் சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமே, ஒன்றே, பலஉருவே, அருவே, என் உமையவளே. ஒன்றாயும் பலவாயும் உள்ள உருவ மற்றதாயும் உள்ள உமாதேவியே என் அன்னையே முன் காலத்திலேயே என்னை நீ ஆட்கொண்டாய் இனி நான் என்ன குற்றம் செய்தாலும் கடலுக்கு நடுவே சென்று விழுந்தாலும் என் குற்றத்தை மறந்து கரையேற்றுதல் நின் பொறுப்பாகும்!

29. அணிமாதி அஷ்ட சித்திகளைப் பெற

சித்தியும், சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும்பரா சத்தியும், சத்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார் முத்தியும், முத்திக்கு வித்தும், வித்தாகி முளைத்தெழுந்த புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தையன்றே. அஷ்டமா சித்திகளை தரும் தெய்வமாக விளங்கும் பராசக்தியும் தன்னுள்ளே சக்தியை தழைக்க செய்தவரான சிவனும் தவம் செய்பவர்கள் பெறும்  ஆனந்தமும் அந்த முக்தியை பெறுவதற்கு உண்டான மூலமும் மூலத்தில் தோன்றி எழுந்த ஞானமும் ஆகிய எல்லாமாகவும் இருப்பவளே அறிவினுக்கு உள்ளே நின்று பாதுகாக்கும் திரிபுர சுந்தரியே!

28. இம்மை மறுமை இன்பங்கள் அடைய

சொல்லும் பொருளும் என, நட மாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே, நின் புதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும் செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே. ஆனந்த தாண்டவம் ஆடும் சிவனாரிடம் சொல்லும் பொருளும் போல இணைந்து நிற்கும் மலர் பூங்கொடி போன்றோய்நின் மலர் போன்ற திருவடிகளை அல்லும் பகலும் சேவிக்கும் அன்பர்களுக்கு அழியாத அரச பதவி தவ வாழ்க்கை சிவலோக பதவியும் கிடைக்குமே!

உரையாடலின் ஒரு பகுதி  124

நான் ஒரூ மனிதன் எனும் நிலையில் இருந்து இயந்திரம் எனும் நிலைக்க மாறிவிட்டோம் ஆமாம் நீங்கள் செய்வது எல்லாம்  உங்கள் திறமை, தேர்ச்சி காரணமாக தானியங்கி மயமாகியிருப்பதை அறிவீர்கள் அப்படி தானியங்கிமயமாவதே வாழ்க்கையின் வெற்றி நிலை என்ற சிந்தனை எப்படியோ எந்த காலத்திலோ ஏதோ ஒரு ரூபத்தில் உங்கள் கல்வி மூலமாகவோ, உங்களின் சூழ்நிலை மூலமாகவோ அறிந்து அதை பிடித்தே உயிரற்ற இயந்திரமாய் இருந்து கொண்டு உங்கள் குழந்தைகள் முதற்கொண்டு மற்றவர்களையும் இயந்திரமாக்க எல்லா முயற்சிகளை எடுத்துக்கொண்டு…

உரையாடலின் ஒரு பகுதி  123

கார் ஒட்ட கற்றுக்கொள்ளும் போது இருந்த கவனம் நீங்கள் ஒட்டுவதில் தேர்ச்சி அடைந்ததும் உங்களிடம் இருக்கிறதா என்று உங்களை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள் அப்போது உங்களுக்கு தெரியும் நீங்கள் இது போல் எத்தனை விஷயங்களில் பிளவு பட்டு சிதறுண்டு இருக்கின்றீர்கள் என்று இன்னும் சரியாய் உங்களை நீங்கள் பரிசோதித்து பார்த்தீர்களானால் கலவியில் கூட நீங்கள் செயலில் இருப்பீர்கள் கவனத்தில் இருந்திருக்க மாட்டீர்கள் என்ற அதிர்ச்சிகரமான உண்மையை கண்டு கொள்வீர்கள் அப்போது உங்களுக்கு புரியும்

உரையாடலின் ஒரு பகுதி  122

நாம் எல்லா வேலைகளையும் சரியாக செய்கிறோம் இன்னும் சொன்னால் திறமையோடும் செய்கிறோம் ஆனால் கவனமோடு செய்கிறோமா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் சைக்கிள் ஒட்டுகிறீர்கள் பைக் ஒட்டுகிறீர்கள், கார் ஒட்டுகிறீர்கள் உண்மையாய்  சொன்னால் சரியாய் ஒட்டுகிறீர்கள் திறமையுடனும் ஒட்டுகிறீர்கள் ஆனால் கவனமாய் ஒட்டுகிறீர்களா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்

உரையாடலின் ஒரு பகுதி  121

உண்மையில் நாம் நமக்குள் என்ன நடக்கிறது என்றும் சிந்திப்பதில்லை நம்மை சுற்றியும் என்ன நடக்கிறது என்றும் சிந்திப்பதில்லை உண்மையை சொல்லப் போனால் நமக்கு நம்மிடமும் கவனம் இல்லை நம்மை சுற்றி நடப்பவற்றிலும் கவனம் இல்லை

உரையாடலின் ஒரு பகுதி  120

இதில் ஒற்றுமையை யார் செய்வார்கள் அடுத்தவர்களா அடுத்தவர்களால் செய்ய முடியுமா? அப்படி அடுத்தவர் செய்தால் அசிங்கமில்லையா அந்த அசிங்கம் நமக்கு தேவையா அதனால் நாம் அசிங்கப்டாமல் இருக்க நமக்குள் ஒற்றுமையை நாமே உருவாக்குவோம் நமது சிந்தனை உணர்வு செயல் இந்த மூன்றையும் ஒவ்வொரு வினாடியும் ஒற்றுமையாய் இருக்கும்படி செய்வோம் அப்படி செய்ய முயற்சியையும் பயிற்சியையும் மேற்கொண்டு அதில் நிற்போம் அப்படி நின்ற பின் நாம் அடுத்தவரிடம் ஒற்றுமையாய் இருப்பது பற்றியும் அடுத்தவருக்கு ஒற்றுமையை பற்றியும் உபதேசிப்பதையும் செய்வோம்.

உரையாடலின் ஒரு பகுதி  119

நமக்குள் நாம் எத்தனை முரண்பட்டு இருக்கிறோம் ஒவ்வொரு வினாடியிலும் இதை என்றாவது நீங்கள் சிந்தித்தது உண்டா, கவனித்தது உண்டா நாம் ஒரு செயல் செய்து கொண்டிருப்போம் எண்ணம் வேறு ஒன்றில் பிரயாணபட்டு கொண்டு செல்கிறது எண்ணம், செயல் இப்படி ஒற்றுமையில்லாமல் இருக்கிறது என்றால் நமது உணர்வுகள் வேறு பக்கம் ஒடுகிறது.   இப்படி பிரிந்து பிளவுபட்டு இருப்பதை ஒன்றாக்க வேண்டாமா இதில் நாம் ஒற்றுமையை உண்டாக்க வேண்டாமா

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  94

நமது ஏழைகளும் தாழ்த்தப்பட்ட இந்தப் பாமர ஜனங்களும்தான் உண்மையில் தாங்கள் யார் என்பதைக் கேட்கவும் அறிந்து கொள்ளவும் வேண்டியிருக்கின்றது ஜாதி குலம் பலம் பலவீனம் போன்ற எவ்வித பாகுபாடுமின்றி ஒவ்வோர் ஆணும் பெண்ணும் குழந்தையும் இதைக் கேட்கட்டும்; வலிமையானவர் வலிமையற்றவர், உயர்ந்தவர் தாழ்ந்தவர்  அனைவரிடமும்  ஆன்மா உள்ளது   

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  93

ஏ பிராமணர்களே, பரம்பரை காரணமாக பிராமணர்களுக்கு கீழ் ஜாதியினரைவிட நன்றாகப் படிக்கின்ற திறமை இருக்கிறது என்றால் பிராமணர்களின் படிப்பிற்கு எந்தப் பணமும் இனி செலவழிக்காதீர்கள்; எல்லாவற்றையும் கீழ் ஜாதியினருக்காகச் செலவிடுங்கள். உதவியற்றவர்களுக்கு கொடுங்கள், ஏனெனில் அவர்களுக்குதான் எல்லா செல்வமும் தேவைப்படுகிறது. பிராமணன் பிறவியிலேயே அறிவாளி அறிவாளி அல்லாத பிறர் எல்லா போதனைகளையும் ஆசிரியர்களையும் பெறட்டும். இதுதான் நான் புரிந்து கொண்ட நீதியும் பகுத்தறிவுமாகும்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  92

குழந்தையையும் கொன்று சமைக்கக் கட்டளையிட்டான் அவன். ஆனால் சிறுவன் தப்பிவிட்டான் பல பயங்கரமாக இன்னல்களை அனுபவித்து, பல நூறு மைல்கள் பயணம் செய்து கடற்கரையை அடைந்தான். பின்னர் அமெரிக்காக் கப்பல் ஒன்றில் அமெரிக்கா கொண்டு வரப்பட்டான். அந்தப் பையன் தான் அவ்வளவு சிறப்பாக உரையாற்றினான் . அதை கேட்ட பிறகு உங்கள் பரம்பரை வாதத்தைப் பற்றி எண்ண என்னதான்  இருக்கிறது?

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  91

ஒரு முறை இங்கிலாந்தில் இருந்தபோது சில அமெரிக்கர்களைச் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் அவனைப்பற்றிக் கீழ்வரும் செய்திகளைச் சொன்னார்கள். அந்த இளைஞன் மத்திய ஆப்ரிக்காவில் வாழ்ந்த ஒரு நீக்ரோ இனத்தலைவனின் மகன். ஒருநாள் மற்றோர் இனத்தின் தலைவன் அந்த இளைஞனின் தந்தை மீது கோபம் கொண்டு அவனது தந்தையையும் தாயையும் கொன்று விட்டான் . கொன்றதுடன் தின்றும் விட்டான்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   90

அமெரிக்காவில் சர்வசமயப் பேரவையில் நீக்ரோ இளைஞன் ஒருவன் கலந்து கொண்டான். உண்மையான ஆப்ரிக்க நீக்ரோ அவன். அழகாகப் பேசினான். எனவே அவனிடம் பேச வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அவனிடம் அவ்வப்போது பேசினேன். ஆயினும் அவனைப் பற்றி எதையும் தெரிந்துகொள்ள முடியவில்லை

கீதைகள் மொத்தம்\ – 60 – 47 to 50

*விபீஷன கீதை* – இந்து இதிகாசமான இராமாயணத்தின் யுத்தகாண்டத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஸ்ரீராமருக்கும் விபீஷணனுக்கும் இடையிலான உரையாடல் இது. விபீஷணனுக்கு இராமர் ஆன்மீக ரீதியில் ஊக்கமளிக்கும் வார்த்தைகளை மனதில் வைத்து வாழ்க்கையின் சோதனைகள் மற்றும் துன்பங்களை கடந்து செல்ல, விபீஷண கீதை நமக்கு உதவுகிறது. *ஹனுமத் கீதை* – இராவண வதத்திற்குப் பின்னர் அயோத்தி திரும்பி, ஸ்ரீராமரும் தேவி சீதையும் ஹனுமனுக்கு அளித்த உரை. *அகஸ்திய கீதை* – அகஸ்திய முனிவர் மோக்ஷ தர்மத்தின் கருத்துகளையும், ஜீவத்மா பக்தி,…

கீதைகள் மொத்தம்\ – 60 – 43 – 46

*சம்பக கீதை* – ஒரு கற்றறிந்த பக்திமானான ப்ராமணன், சம்பகன் துறவறத்தினால் மட்டுமே ஒருவர் நித்ய மகிழ்ச்சியை அடைய முடியும் என்ற செய்தியை அளிக்கிறார். இது மஹாபாரதத்தின் சாந்தி பர்வத்தில் பீஷ்மருக்கும் யுதிஷ்டிரருக்கும் இடையிலான உரையாடலின் வடிவத்தில் விவரிக்கப்படுகிறது. *சூத கீதை* – ஸ்கந்தபுராணத்தின் யாக வைபவ கண்டத்தில் உள்ளது. இது ஒற்றுமையை ஆதரித்து இரட்டை வாதத்தை மறுக்கிறது. *சூர்ய கீதை* – இது பிரம்மனுக்கும் தக்ஷிணாமூர்த்திக்கும் இடையிலான உரையாடல். இதில் சூர்யன் தனது சாரதியான அருணனிடம்…

கீதைகள் மொத்தம்\ – 60 – 38 to 41

*மன்கி கீதை* – மஹாபாரதத்தின் சாந்தி பர்வத்தில், மன்கி எனும் முனிவரின் கதையை பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு கூறுவது. *வியாஸ கீதை* – பிரம்ம புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ள ரிஷிகளுக்காக வியாஸ மஹரிஷியின் சொற்பொழிவு. வியாஸ கீதை மிகவும் கருத்தியல் வாய்ந்தது. ஆகவே, யோகிகளுக்கும் மேம்பட்ட தேடுதலில் ஈடுபடும் ஆர்வலருக்கு ம் ஏற்றவாறு அமைந்தது. இருப்பினும் பிரம்மத்தை அடைய விரும்புவோருக்கும் சிரத்தையுடன் யோக அனுஷ்டானங்களை உறுதியாகவும் விடாமுயற்சியுடன் செபவருக்கும், வேதங்களை விடாமுயற்சியுடன் கற்று பாகுபாடு அறிபவர்களுக்கும் இந்த கீதை பொருந்துகிறது.…

கீதைகள் மொத்தம்\ – 60 – 35 to 38

*பிங்கல கீதை* – மீண்டும் மஹாரதத்தின் சாந்தி பர்வத்தில் இடம் பெற்ற ஒன்று இது. பிங்கலை எனும் ஆடல் பரத்தைக்கு கிட்டிய ஞானத்தையும் அறிவொளியையும் இக்கீதை கொண்டுள்ளது. *போத்ய கீதை* – யயாதி மன்னனுக்கு ரிஷி போத்யருக்கும் இடையிலான உரையாடல். மஹாபாரத்ததில் சாந்தி பர்வத்தில் ஒரு பகுதியான மோக்ஷ பர்வத்திலிருந்து எடுக்கப்பட்டது. *யம கீதை* – ஒரு விஷ்ணு பக்தனின் குணங்கள், சுயத்தின் தன்மை, பிரம்மத்தின் கருத்தாக்கம், பிறப்பு – இறப்பு சுழற்சியிலிருந்து தன்னை விடுவித்து மோட்சம்…

கீதைகள் மொத்தம்\ – 60 -31 to 34

*ஈஸ்வர கீதை* – கூர்மபுராணத்தில் விவரிக்கப்பட்டுள்ள சிவபெருமானின் போதனைகள். ஈஸ்வர கீதை என்பது சிவபெருமானை மையமாகக் கொண்ட ஒரு சைவ போதனை தத்துவமாகும் . பகவத் கீதையைப் போலவே அத்வைத வேதாந்தம், பக்தி, ஒருமுகப்படுதல் மற்றும் சிவபெருமானிடம் சரணடைதல் ஆகியவை சம்ஸார கடலைக் கடந்து தெய்வீக பேரின்பத்தையும் விடுதலையும் அடையச் செய்கிறது என்பதை விளக்குகிறது. *கணேஷ கீதை* – அரசன் வாரேண்யனுக்கு ஸ்ரீ கணபதி உரையாற்றியது. கணேஷ புராணத்தின் க்ரீட கண்டத்தில் இது விளக்கப்பட்டுள்ளது. *தேவி கீதை*…

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 11

லக்கினாதிபதி சந்திரன் ஆக இருந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில். குரு இருந்தால்:-எதிரிகளால் அபாயம், மறைமுக நோய், பாக்கியம் இல்லாததிருத்தல், கைக்கெட்டியது வாய்க்கு எட்டாத நிலை, கடன் தொல்லை பிதா ஆதரவு இல்லாதிருத்தல், மேலோர் சாபம்.

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 10

லக்கினாதிபதி சந்திரன் ஆக இருந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில். புதன்இருந்தால்:-அம்மான்வர்க்கத்தாருக்கு பிரயோசனம் இல்லாமை சகோதரர்கள் பிரிந்திருத்தல் நாடோடி தன் ஊரைவிட்டு வெளியேறுதல், சுயஸ்தானத்தில் தங்காமை, வித்தை பங்கம், இரகசிய மனவருத்தல், நிலையான புத்தி இல்லாமை, எப்போதும் சுயநலக்காரர்களால் சூழ்ந்திருத்தல்.

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 9

லக்கினாதிபதி சந்திரன் ஆக இருந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில். செவ்வாய் இருந்தால்:-புத்திரர் அற்பம், புத்தி சுவாதினம் அற்ற குழந்தைகள், பாக்கியம் பிரயோசனப்படாமல் போகுதல், இரத்த காயம், விபத்து, தொழிலில் மறைமுக எதிரிகளால் இழப்பு, அவமானம், நஷ்டம், சகோதர பலம் குறைதல்.

நட்சத்திர எதிரிடையில் நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 8

கடக  லக்னம். லக்கினாதிபதி சந்திரன் ஆக இருந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில். சூரியன் இருந்தால்:- பிதா தனகுறைவு, கண் கோளாறுகளால் பாதிப்பு, தந்தை வழி குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, கடும் சொல்லால் அவமானம், குழந்தைகளால் ஈமக்கிரிகை செய்ய முடியாத நிலை, தாய் சுகம் கெடுதல், மனைவிக்கு இரகசிய நோய்.

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 7

லக்கினாதிபதி சூரியன் ஆக வந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில். ராகு நின்றால்:-  பொருளாதார பாதிப்பு, பிற மதத்தினரால் வரும் கெடுதல் விஷபயம், மாந்திரீக தொல்லை அறுவறுக்கத் தக்க நோய்கள் மன பேதம், செயற்கை மரணம். கேது நின்றால்:- நாஸ்தீக தன்மை.  பிற மதத்தினால் வரும் பயம் தொல்லைகள், விஷ ஜந்துக்களால் வரும் ஆபத்து, துர்தேவதா சேஷ்டைகளால் வரும் பாதிப்பு கெட்ட ஆவிகளின் தொல்லை.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 27. மனநோய் அகல

உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை, சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே. பேரழகியே என் கர்மத்தால் வந்த பிறவியை தகர்த்து என் உள்ளம் உருகும்படியான அன்பை உண்டாக்கி தாமரை போன்ற நின் பாதங்களில் வீழ்ந்து வணங்கும் தொண்டினை தந்தாய் என் கர்மத்தால் விளைந்த என் நெஞ்சில் இருந்த ஆணவம், கன்மம், மாயை போன்ற அழுக்கையெல்லாம் நின்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 26. சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக

ஏத்தும் அடியவர், ஈரேழுலகினையும் படைத்தும், காத்தும், அழித்தும் திரிபவராம்,கமழ்பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே, மணம் நாறும் நின் தாளிணைக்கென் நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு, நகையுடத்தே. பூங்கடம்பின் மணம் வீசும் மலரை அணிகின்ற கூந்தலை உடைய தேவி உன்னை துதிக்கும் அடியவர்களால் 7 உலகங்களையும் படைத்தும், காத்தும், அழித்தும் செய்தும் தம் தொழிலை நடத்தி திரிகின்ற மும் மூர்த்திகளாவர் நான் உன் மனம் பொருந்திய இரண்டு திருவடிகளுக்கு ஒன்றுக்கும் பற்றாத என்னுடைய நாவிலிருந்து வார்த்தைகளக்கு பொருள் தந்து…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 25. நினைத்த காரியம் நிறைவேற

பின்னே திரிந்து, உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன், முதல் மூவருக்கும் அன்னே, உலகுக் கபிராமி என்னும் அருமருந்தே, என்னே? இனி உன்னை யான் மறவாமல் நின் றேத்துவனே. மும் மூர்த்திகளின் தாயே உலகின் உயிர்கள் அனைத்திற்கும் பிறவி பிணியை போக்குவிக்கும் அருமருந்தே முற்பிறப்பின் நின் அடியார்களின் பின் சென்று அவர்களுக்கு வேண்டிய கைங்கரியங்கள் செய்து பிறவி பிணியை நீக்கும் தவங்களை செய்து வைத்த நான் உன்னை என்றும் மறவாமல் நிலையாக நின்று…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 24. நோய்கள் விலக

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணிபுனைந்த அணியே, அணியும் அணிக்கழகே, அணுகாதவர்க்குப் பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே, பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே மாணிக்கமே – மாணிக்கத்தின் ஒளியே அப்படி ஒளிரும் மாணிக்க கற்களால் செய்த ஆபரணத்தை அணிந்தவளே நீ அந்த ஆபரணம் அணிந்ததால் அந்த ஆபரணத்திற்கு அழகை உண்டாக்கியவளே உன்னை அணுகி இருப்பவர்களுக்கு அழகை உண்டாக்கியவளே உன்னை அணுகாமல் இருப்பவர்களுக்கு நோய் போன்றவளே உன்னை அணுகிய பக்தர்களுக்கு பிறவியெனும் நோயை போக்குபவளே,…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 23. எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க

கொள்ளேன், மனத்தில் நின் கோலம்அல்லாது, அன்பர்கூட்டந்தன்னை விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத் தேவிளைந்த கள்ளே, களிக்கும்களியே, அளியஎன் கண்மணியே. என்னுடைய மனதில் நின் திருகோலத்தை தவிற வேறு எதையும் நினையேன் நின் அன்பரை தவிர வேறு யாருடனும் இணையமாட்டேன் .மூன்று உலகத்துள்ளும் அதையும் தாண்டியிருக்கின்ற பொருளாய் இருந்தாலும் எதனுடனும் இல்லாதிருப்பவளே, பக்தர்களின் உள்ளத்தே இன்பத்தை சுரக்க வைக்கும் ஆனந்த கள்ளே என் கண்ணின் மணி போன்றவளே!

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 22. இனிப் பிறவா நெறி அடைய

கொடியே, இளவஞ்சிக் கொம்பே, என க்கு வம்பே பழுத்த படியே மறையின் பரிமளமே,பனி மால் இமயப் பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே, அடியேன் இறந்திங் கினிப்பிற வாமல்வந் தாண்டுகொள்ளே. கொடி போன்றவளே இளைய வஞ்சி கொம்புக்கு இணையானவளே எனக்கு பக்குவமில்லா நிலையிலும் அருள் புரிந்த தேவி வேதமாகிய மலரின் மணத்தை உடையவளே இமயத்தில் இங்கும் அங்கும் விளையாடும் யானையே பிரமன் முதலான தேவர்களை  பெற்ற தாயே நான் இவ்வுலகில் இறந்த பின் மீண்டும் பிறவாமல்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய

மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச் சங்கலை செங்கைச் சகல கலாமயில் தாவுகங்கை பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள் பிங்கலை, நீலி, செய்யாள்,வெளியாள், பசும் பெண்கொடியே. நித்திய மங்களையாகிய அபிராமி அம்மை சிவந்த கலசத்தை போன்ற தனங்களும் மலை மகள் நிறம் பெற்ற சங்காலாகிய வளையல்கள் கொண்ட சிவந்த திருகரங்களை உடையவள் எல்லா கலைக்கும் தலைவி மயிலை போன்றவள் பாய்ந்து வரும் கங்கையினை தன் முடியில் தாங்கிய சிவபிரானின் இடபுறத்தை கொண்டவள் பொன் நிறம் படைத்த…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக

உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒருபக்கமோ, அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம் நிறைகின்ற வெண் திங்களோ, கஞ்சமோ, என்றன் நெஞ்சகமோ, மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே. பூரண அருளால் நிறைவான நித்திய மங்கலையே நீ வாசம் செய்யும் ஆலயம் நின் பதியாகிய சிவனின் ஒரு பக்கமோ அல்லது நின் புகழை எப்பொழுதும் பாடும் வேதங்களின் மூலமோ அல்லது அவற்றின் முடியாய் விளங்குகின்ற உபநிடதங்களோ அமுதம் நிறைந்த வெள்ளிய சந்திரனோ வெண் தாமரையோ அல்லது…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 19. பேரின்ப நிலையடைய

வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்தென் விழியும் நெஞ்சும், களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை கருத்தினுள்ளே தெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன, திருவுளமோ? ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே. ஸ்ரீ சக்கரத்தில் உள்ள 9 கோணங்கள் ஒளி வீச காரணமாய் உள்ள தாயே நின் திருவடிவை புறக்கண்ணிலும் அந்த தேஜஸ்யை அகக்கண்ணிலும் கண்ட எனக்கு ஏற்பட்ட ஆனந்த வெள்ளத்திற்கு கரைகளே இல்லை இந்த காட்சியின் அருளுள் என் உள்ளத்து உள்ளே மெய்ஞானம் விளங்குகின்றது. இவ்வளவு பேரருளை செய்வதற்கு காரணம்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 18. மரண பயம் நீங்க

வவ்விய பாகத் திறைவரும், நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து வெவ்விய காலன் என் மேல்வரும் போது வெளிநிற்கவே. அம்மையே உன்னால் அடையப்பெற்ற வாம பாகத்தை உடைய சிவனும் நீயும் இணைந்து மகிழ்ந்து ஒன்றியிருக்கும் கோலமும் உங்கள் திருமண கோலமும் என் உள்ளத்து உள்ளே இருந்த ஆணவத்தை போக்கி தெளிவு பொலிவு பெற்ற திருவடிகள் என் உயிரை பறிக்க பாசக் கயிறுடன் காலன் என் முன் வரும்…

உரையாடலின் ஒரு பகுதி  118

ஆனாலும் நாம் ஒற்றுமையை பற்றி வாய் கிழிய தொண்டை வரள பேசிக் கொண்டும் கத்திக் கொண்டும் இருக்கிறோம் எத்தனை அபத்தம் இது எத்தனை ஏமாற்றுத்தனம் இது ஆனால் கொஞ்சம் கூட கூச்சமோ குற்ற உணர்வோ இல்லாமல் இதை செய்து கொண்டே இருக்கிறோம் நமக்கு பின் வருபவர்களுக்கு சொல்லிக்கொடுத்துக் கொண்டும் இருக்கிறோம்

உரையாடலின் ஒரு பகுதி  117

 ஒற்றுமை என்றால் என்ன? ஒன்றாய் இருத்தல் இணைந்திருத்தல்  கருத்தொருமித்து இருத்தல் என்று நிறைய  வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போகலாம் ஆனால் அதன் பொருளை அறிந்து அதனை நம்முள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறோமா  என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் எதையும் நம்மிள் இருந்தே தொடங்க வேண்டும் என்ற நியதியின் படி ஒற்றுமையை நம்மிடம் இருந்தே தொடங்க வேண்டும் நாம் எத்தனை விதமாய் பிளவுண்டு சிதறி போயிருக்கிறோம் என்பதே நமக்கு தெரிவதில்லை அதை தெரிந்து கொள்ளும் ஆவலும்…

உரையாடலின் ஒரு பகுதி  116

ஒற்றுமை எனும் வார்த்தையை கேட்டவுடனேயே நமக்கு தோன்றுவது அண்ணனிடம், அக்காவிடம், தம்பியிடம், தங்கையிடம், அம்மாவிடம், அப்பாவிடம், மனைவியிடம், குழந்தைகளிடம், நண்பர்களிடம் என்று தான் தோன்றுகிறதே தவிர தன்னிடம் தான் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்பதே தோன்றுவதில்லை என்னிடம் நான் ஒற்றுமையாய் இருப்பதா இது என்ன புது பைத்தியகாரதனமான பேச்சாய் இருக்கிறது என்றுதான் மனமும் அறிவும் சிந்திக்கிறதே அல்லாமல் இது என்ன? என்ன சொல்ல வருகிறது என்று கூட யோசிப்பதில்லை காரணம் நம் கல்வி, அறிவு, மற்றும் சூழ்நிலைகள்

உரையாடலின் ஒரு பகுதி  115

ஒன்றை கவனித்து மனதில் கொள்ளுங்கள் சிலரிடம் காணப்படும் பதற்றம் படபடப்பு ஆர்பாட்டம் உற்சாகம் அல்ல உண்மையான உற்சாகத்தில் படபடப்போ, ஆர்ப்பாட்டமோ, பதற்றமோ இருக்காது.

உரையாடலின் ஒரு பகுதி  114

நாம் ஒரு லட்சியத்தை குறிக்கோளை வைத்திருந்தால் அதற்கு தக்கபடி நாம் மாறியே ஆக வேண்டும். நாம் மாறும் விதம் அல்லது மாறிய விதம் உறவினர்களாலோ அல்லது நண்பர்களாலோ கேலி செய்யப்பட்டாலும் நாம் நம் குறிக்கோளை அடைய நாம் மாறிவிட்டோம் என்று அவர்களுக்கு காட்டியபடி இருக்க வேண்டும் அப்போது தான் இலக்கை அடைய முடியும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 163

முடிந்தவரையில் மலத்தைக் கழித்துக் கொள்ளவும் உட்டியாணா, நெளலி சில தடவைகள் செய்து வயிற்றுச் சதைகளைக் கட்டுக்குக் கொண்டு வரவும், சுமார் முக்கால் அல்லது ஓரடி உயரமுள்ள முக்காலி மேல் அகலப் பாத்திரத்தில் சுமார் அரைப்படி தண்ணீரை ஊற்றி அமர்த்தவும், மூங்கில் குழாயின்  மேல் சுமார் நான்கு அங்கலத்திற்கு வெண்ணெய், நெய் அல்லது விளக்கெண்ணெய் பூசவும். மலப்போக்குக் காலத்தில் முக்கி மலத்துவாரத்தைத் திறப்பது போலத் திறந்து, எண்ணெய் தடவிய மூங்கில் பாகத்தை ஆசனவாய் வழியாய்  மலக்குழாய்க்குள் சுமார் மூன்றங்குலம்…

சுந்தர யோக சிகிச்சை முறை 162

இதை செய்ய விரும்புவோர், சுமார் ஆறு மாதங்களாவது உட்டியாணா, நெளலியுடன் யோகாசனங்களைப் பழகி இருக்க வேண்டும்.  சிரமமின்றி நெளலி எந்நிலையிலும் செய்ய வேண்டும். இக்கிரியை நெளலி செய்யும் பொழுது, மலத்துவாரம் திறந்தே இருக்க வேண்டும். கருவியின்றி இது சாதாரணமாய் இயலாது.  இதற்காக ஒரு மூங்கிலை உபயோகிக்கலாம். இதை எட்டங்குல நீளமுள்ளதாயும், தடுப்பற்றதாயும் அமைத்துக் கொள்ளவும், காலையில் இதைச் செய்வதே உத்தமம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 161

உலக வாழ்க்கையில் ஈடுபட்டுப் பயிலும் சாதகர், மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை செய்தால் போதும். அன்று சிறிதளவு சத்துள்ள ஆகாரத்தை உட்ககொள்ள வேண்டும். மோரும், கீரையும் சேர்க்கவும், பருப்புகளை விலக்குவது உசிதம். பாசிப்பருப்பு கஞ்சி நன்மை தரும். அன்று உடலுழைப்பு அதிகம் வைத்துக் கொள்ளக்கூடாது.

சுந்தர யோக சிகிச்சை முறை 160

மந்திரத்தை நம்பாத நாகரீகரும், ஆங்கில வைத்தியர்களும் வேறு காரணமில்லாத காரணங்களைக் கற்பனை செய்து கொண்டார்கள். ஆன்ட்டி பெரிஸ்டால்டிக் ஆக்ஷன் ( ANTI-PERISTALTIC  ACTION ) என்பதால் முடிகிறதென்று பிதற்றினார்கள். ஏழைகளை ஏமாற்றினார்கள்.  ஏழைகளை ஏமாற்ற எண்ணிய பல பைராகிகள், இதை காசுக்குச் செய்து காண்பித்து வந்தார்கள். இதன் காரணம் உடல்சாதனை ஹடயோகியால் கண்டுபிடிக்கப் பட்டது. நிகரற்றது, பலன் பெற்றது, எவரும் பழகியாள முடியும். இதன் நுட்பத்தையறியுமுன் பழகும் வகையை கவனிப்போம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 159

பிரமிக்கச் செய்யும் பஸ்தி உட்கார்ந்த நெளலி வந்த பிறகே, விசித்திரமான ‘பஸ்தி’ என்ற கிரியை கைகூடும்.  மலச்சிக்களை ஒழிக்கவும், நெருங்கவிடாமல் தடுக்கவும் இதைக் கையாளலாம்.  முன்காலத்தில் சாதகர்கள் தண்ணீரின் மேல் உட்கார்ந்து மலத்துவாரம் வழியாய் நீரை உள்ளிழுத்துக் குடலைச் சுத்தம் செய்து கொள்வார்கள்.  இப்படிச் செய்ய மலக்குழாய் உள்சதைகளினாட்சி (  CONTROL OF THE SPHINCTER  MUSCLES ) வேண்டும். சாதாரணமாக இதைச் சுலபத்தில் பெறமுடியும். இதன்  இரகசியத்தை அறியாத மக்கள் இந்தக் கிரியையை ‘ஜால’ வித்தை…

பழ மொழிகள் 20

ஒளவை வாக்கு செவ்வை வாக்கு. புலி இல்லாத ஊரில் பூனை தான் ராஜா. பெண்ணுக்கு மௌனத்தைப் போன்ற அணிகலன் வேறில்லை. ஒருவர் அறிந்தால் ரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம். எறும்பு ஊறக் கல்லும் தேயும்.

பழ மொழிகள் 19

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான். உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா ? அரைக்கிணறு தாண்டுவது ஆபத்தானது. ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள். உனக்கு நேரமிருந்தால் காலத்திற்காகக் காத்திருக்காதே

பழ மொழிகள் 18

பேராசையின் இருப்பிடம் நிம்மதியின் இறப்பிடம். வேலை செய்தால் கூலி, வேஷம் போட்டால் காசு. வில்லம்பை விடச் சொல்லம்பு வேதனை தரும். அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான். அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

பழ மொழிகள் 17

இதயத்தின் மொழி பெயர்ப்பு தான் வாய். இனிய முகம் உறவை வளர்க்கும். பணமில்லாத வியாபாரி நிலமில்லாத விவசாயியைப் போன்றவன் ஆத்திரம் அறிவுக்கு எதிரி. பெண்கள் இருக்குமிடம் சண்டைகள் பெருகுமிடம்.

பழ மொழிகள் 16

அகம் குளிர முகம் மலரும். அகப்பை அறுசுவை அறியுமா? அச்சம் ஆண்மையைக் குறைக்கும். அயல் வீட்டுப் பிள்ளை ஆபத்தில் உதவுமா? அன்புக்கு ஈடு அகிலத்தில் இல்லை.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 16

கொல்லிமலை அறப்பளீஸ்வரர் ஆலய நந்திக்கு வலது பின்னங்கால் கிடையாது. இவர் இக்கோவிலுக்கு அருகில் உள்ள புளியஞ்சோலையில் பயிரிடப்பட்டிருந்த கடலைச்செடியின் பூக்களின் மணம் கவரவே, கடலைக் காய்களைத் தின்பதற்கு இரவில் அங்குசென்றது. இதனை அறிந்த காவலர்கள் நந்தியை பயங்கர ஆயுதத்தால் தாக்க, நந்தியின் ஒரு கால் வெட்டுப்பட்டது. அந்த நிலையில் அப்படியே கோவிலுக்கு வந்து அமர்ந்தது. அந்தத் தோற்றத்துடன் இன்றும் காட்சி தருகிறது நந்தி.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 15

தேப்பெருமாநல்லூர் குடந்தை நாகேஸ்வரம் கோவிலுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தேப்பெருமாநல்லூர் விஸ்வநாதசுவாமி கோவிலில் உள்ள நந்திக்கு வலது காது இருக்காது. காரணம், பிரளய காலத்தில் சிவபெருமான் எழுந்தருளிய தலத்தைத் தேடி ஓடிவந்ததில், ஒரு பக்கமாக வழுக்கி விழுந்து வலது காது பழுதடைந்து போனது. எனவே இவர் வலது காது இல்லாமல் காட்சி தருகிறார்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 14

நஞ்சன்கூடு கர்நாடக மாநிலத்தில் உள்ள நஞ்சன்கூடு என்ற தலத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் நந்தியானவர் வாயிலை நோக்கி உள்ளார். இறைவனை வழிபட வருபவர்களை மனசுத்தி உள்ளவர்களாக மாற்றி, முகர்ந்து அனுப்புவதாக ஐதீகம்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 13

சுருட்டப்பள்ளி ஆந்திர மாநிலத்தில் உள்ள சுருட்டப்பள்ளி சிவராத்திரித் தலம் என்று போற்றப்படுகிறது. இங்கு அருள்புரியும் சிவபெருமான் ஆலகால விஷம் உண்டதால் மயங்கிய நிலையில் அம்பாளின் மடியில் பள்ளி கொண்டுள்ளார். இங்கு நந்தியெம்பெருமான் எதிரில் இல்லாமல் தலைப்பக்கம் உள்ளார்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 12

திருவோத்தூர் காஞ்சியிலிருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் செய்யாறு அருகில் திருவோத்தூர் திருத்தலம் உள்ளது. இத்தலத்து இறைவன், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசிக்கும் வேளையில் இவர்கள் கவனம் சிதறாமல் இருப்பதற்கும் மற்றவர்கள் உள்ளே நுழையாமலிருக்கவும் வாயிலை நோக்கித் திரும்பிய நிலையில் உள்ளார் நந்தி

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 17. கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய

அதிசய மான வடிவுடை யாள், அர விந்தமெல்லாம் துதிசய ஆனன சுந்தர வல்லி, துணை இரதி பதிசய மான தபசய மாகமுன் பார்த்தவர்தம் மதிசய மாக அன் றோவாம பாகத்தை வவ்வியதே? யாவரும் வியக்கும் வண்ணம் உள்ள திருவுருவம் கொண்டவளே தாமரை மலர்கள் யாவும் துதிப்பதற்கு காரணமாயுள்ள பேரழகு கொண்டவளே அழகிய திருமுகத்தை கொண்ட அழகிய கொடிபோல் இருப்பவளே ரதிக்கு நாயகனாகிய மன்மதன் பெற்ற வெற்றியெல்லாம் யார் முன் தோல்வியுற்றதோ அவரை வெல்லவே அவரின் இடபாகத்தை கவர்ந்து…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 16. முக்காலமும் உணரும் திறன் உண்டாக

கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்தொளிரும் ஒளியே, ஒளிரும் ஒளிக்கிடமே, எண்ணில் ஒன்றும் இல்லா வெளியே, வெளிமுதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே, அளியேன் அறிவளவிற்கள வானத திசயமே. உன் பக்தர்கள் மனதில் நிலைபெற்று விளங்கும் ஞான ஒளிக்கெல்லாம் ஆதாரமாய் உள்ள அருள் ஒளியே கிளியின் பச்சை வண்ண திருமேனி உடையவளே எண்ணிப் பார்த்து உணர முடியாததுவும் கடந்த பரவெளியே ஆகாசம் முதலான ஐந்து பூதங்களாக விரிந்த அம்மையே இந்த அளவிற்கு பெரியவளான நீ இரங்கத்தக்க எளியேனின்…