ரிஷிகேசம் 3

ரிஷிகேசத்திலிருந்து சுமார் 27 கி.மீ தூரத்தில் நீலகண்டர் ஆலயம் அமைந்துள்ளது. வாகனத்திலும், நடைப்பயணமாகவும் இத்திருக்கோவிலை அடையலாம் மணிகூடம், விஷ்ணு கூடம், பிரம்ம கூடம் என்று மூன்று சமவெளிகள், மற்றும் மதுமதி மற்றும் பங்கஜா ஆறுகளின் சங்கமத்தில் அடர்ந்த  காட்டின் இடையே சுமார் 1330 மீ உயரத்தில் சிவபெருமானுக்குரிய இந்த ஆலயம் அமைந்துள்ளது.