சுந்தர யோக சிகிச்சை முறை  170

நெளலி செய்வதால், பெருங்குடலில் இடம் அதிகரித்து, சராசரி காற்றிறுக்கம் குறைகிறது. வெளி ஆகாயத்தில் அழுத்துதல் குறைவின்றி நிற்க, பாத்திரத்திலுள்ள தண்ணீர் அழுத்தப்பட்டு இறுக்கம் குறைந்த இடமான பெருங்குடலுக்குள் பாய்கிறது. இது சுயசக்தியால் கிடைக்கும் குணம், தகரடப்பாவை ( “எனிமா” வை) அண்டியதாலல்ல.

சுந்தர யோக சிகிச்சை முறை  169

 தற்காலத்தில் ஆராய்ச்சிக் கருவிகள் மூலம் விளக்கப் படாமல் பல தாறுமாறான எண்ணங்களுக்கு இடமிருந்து வந்தது. சுவாமி குவலயானந்தர் அவர்கள் இதைக் கைவல்யதாமா ஆசிரமத்தில் பரீட்சித்தார். சாதகரின் குடலுக்கும் ஒரு “பாரோ மீட்டரு” க்கும் (BAROMETRE) இணைப்பு செய்தார். நெளலி செய்தவுடன் கருவியிலுள்ள பாதரஸம் சடா‍லென்று கீழிறங்கியது. இதிலிருந்து இக்காலத்தில் குடலினுள் காற்றிறுக்கம் குறைகிறதென்று விளக்கப்பட்டது. “பார்ஷியல்” வேகுவம் “(PARTIAL VACUM ) உண்டாகிறதென்று தீர்மானிக்கப்பட்டது. சுவாமியார், இதற்கு ஸ்ரீ மாதவதாசாவேகுவம் ( SRI MADAVADASA VACUM) எனப்…

சுந்தர யோக சிகிச்சை முறை  168

“பஸ்தி” இப்பொழுதுதான் முடிவு பெறுகிறது பின்  ஸ்நானம் சுத்தம் செய்து கொள்ளவும். நெளலி செய்யும்பொழுது வயிற்றில் ஏதாவது “பம்பு” வேலை செய்கிறதோ எனச் சிலர் சந்தேகிக்கலாம். இல்லையேல் “உஸ்” என்று தண்ணீர் எப்படி உட்செல்ல முடியும்? குடலினுள் காற்றிறுக்கம் குறைவதால் தண்ணீர் உட்செல்கிறது. இந்த ரகசியம் யோகிகள் அறிந்திருந் தார்கள்.

சுந்தர யோக சிகிச்சை முறை 167

குடலினுள் சென்ற நீரைச் சுமார் இருபது நிமிடங்கள் அங்கேயே நிறுத்தலாம். இந்தக் காலத்தை உட்டியாணா, நெளலி முதலியவைகளுக்குச் செலவழிக்க வேண்டும். இடையில் இளைப்பாற்றிக் கொள்ளவும், சில தடவைகள் உட்டியாணா, பின் மத்ய நெளலி, பின் வாம, தட்சிண நெளலிகள், கடைசியாக நெளலிக்கிரியை  என மாற்றி, மாற்றி ஒன்றன் பின் ஒன்றாகச் செய்து கொண்டே இருக்கவும். பதினைந்து இருபது நிமிடங்கள் கழிந்த பிறகு மலங்கழிக்கும் இடம் சென்று எல்லாவற்றையும் வெளியே போக்கவும். ஒன்றிரண்டு தடவைகளில் நீர் மலக்குழம்பு கலந்தாலும்,…

சுந்தர யோக சிகிச்சை முறை 166

பஸ்தி மூலம் இழுக்கப்பட்ட தண்ணீர் உட்டியாணா, மத்யம நெளலி, வாம, தட்சிணநெளலி, நெளலிக் கிரியைகள் மூலமாக சீகம் வரையில் சந்து பொந்துகள் முதலிய எல்லா இடத்திற்கும் சென்று மலத்தைக் கரைக்கின்றது.  கீழ்க்குறித்த முறையை நன்கு கவனித்துப் பழகவும். குழாயை வெளியில் இழுத்ததும் தனிப்பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஊறவைத்துவிடவும்.  கிரியை தீர்ந்த பிறகு இதை நன்றாக சுத்தம் செய்து துடைத்து, மறு உபயோகத்திற்கு பத்திரம் செய்யவும்.

சுந்தர யோக சிகிச்சை முறை  165

ஹடயோகிகள் இதற்காக வியப்புறும் பயிற்சிகள் படைத்துள்ளார்கள். ‘நெளிலி’ என்று இதுவரை விளக்கியதை ‘மத்யம நெளலி’ என்பார்கள். வயிற்று மத்தியில் ஏற்படும் நெளலியே இது.  வலது, இடது ஓரங்களில், மாற்றி, மாற்றி நெளலி செய்யமுடியும்.  அவைகள் ‘ வாம நெளலி’ தட்சிண நெளலி என அழைக்கப்படும். வயிற்றின் இடப்பக்கம் நெளலி செய்து சதை துருத்தி நிற்க, இடப்பக்கம் உட்டியாணாவில் சதை உள் ஒட்டி நிற்பதே ‘தட்சிண நெளலி’ இது 3 வது பாகத்திலுள்ளது, இந்நிலகளைக் காட்டிலும் அதிசயமாய் சித்தித்துக்…

சுந்தர யோக சிகிச்சை முறை 164

உட்கார்ந்து நெளலி செய்தவுடன், குழாய் மூலமாக நீர் பெருங்குடலில் ஏறுகிறது. இருபது, முப்பது வினாடிகளுக்குள் போதுமான நீர் உட்சென்று விடும். இத்துடன், பஸ்திக்கிரியை பூர்ணமாகாது. தண்ணீர் இழுக்கும் வழியையே ‘பஸ்தி’ என்று கூறமுடியாது.  இதற்கடுத்த படியான விதிகளையும், கைப்பற்றாவிடில் பலன் கிட்டாது. உள்சென்ற நீர் பெருங் குடல் முழுவதம் பரவ வேண்டும் ‘சீகத்’தையும் எட்ட வேண்டும். நீர் வற்றி, உண்டை உருளைகளாய் மலம் காய்ந்து கிடக்கும்.  இவை நீரில் கரைய வேண்டும். இதற்குப் போதுமான காலம் குடலில்…

ரிஷிகேசம் 4

நீலகண்டராக சிவலிங்க வடிவத்தில் தியாகராஜர் சிவபெருமான் இத்தலத்தில் வணங்கப்படுகின்றார். ஆடி மாதத்தில் (இவர்களுடைய சிரவண மாதம்) காவடி எடுக்க வரும் லக்ஷக் கணக்கான பக்தர்கள் முதலில் இவருக்கு கங்கை நீரை சமர்பித்த பிறகே தங்கள் ஊர்களுக்கு கங்கை தீர்த்தம் கொண்டு செல்கின்றனர். மாசி மாத மகா சிவராத்திரியின் போதும், ஆடி மாத சிவராத்திரியின் போதும் இங்கு மேளா எனப்படும்  பெருவிழா நடைபெறுகின்றது

ரிஷிகேசம் 3

ரிஷிகேசத்திலிருந்து சுமார் 27 கி.மீ தூரத்தில் நீலகண்டர் ஆலயம் அமைந்துள்ளது. வாகனத்திலும், நடைப்பயணமாகவும் இத்திருக்கோவிலை அடையலாம் மணிகூடம், விஷ்ணு கூடம், பிரம்ம கூடம் என்று மூன்று சமவெளிகள், மற்றும் மதுமதி மற்றும் பங்கஜா ஆறுகளின் சங்கமத்தில் அடர்ந்த  காட்டின் இடையே சுமார் 1330 மீ உயரத்தில் சிவபெருமானுக்குரிய இந்த ஆலயம் அமைந்துள்ளது.

ரிஷிகேசம் 2

ஆதி சங்கரால் கட்டப்பட்ட பாரத் மாதா மந்திர் பரபரப்பான கடைவீதியில் அமைந்துள்ளது. பரதன் இங்கு தவம் செய்ததாக ஐதீகம். இங்குள்ள ஆஸ்ரமங்களில் சுவாமி பரமார்த்த நிகேதன் ஆசிரமம் மிகவும் புகழ் பெற்றது தினமும் மாலை கங்கை ஆற்றின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள யோக நிஷ்டையில் அமர்ந்த கோலத்தில் அமைத்துள்ள சிவபெருமான் சிலைக்கு எதிரே இந்த ஆசிரமத்தின் சிறார்கள் வேதம் ஓத,  ஹோமம் நடைபெற்று அந்தி சாயும் நேரத்தில் கங்கா ஆரத்தி தினமும் சிறப்பாக நடைபெறுகின்றது.

ரிஷிகேசம்  1

எண்ணற்ற திருகோவில்கள், மடங்கள், ஆசிரமங்கள், ஸ்நான கட்டங்கள் நிறைந்த நகரம். சார்தாம் யாத்திரை அதாவது இமயமலை பயணத்திற்கு இந்நகரம்தான் நுழைவு வாயில். மகாவிஷ்ணு மது கைடபரை அழித்த இடம் ரிஷிகேசம். மூன்று பக்கமும் மலைகளால் சூழப்பெற்று கங்கையின் கரையில் அமைந்துள்ளது இந்த புண்ணிய நகரம். புராதன காலத்தில் இருந்தே மகான்களையும், ரிஷிகளையும் ஈர்த்து வந்த பகுதி. இந்நகரத்தின் ஒரு பகுதி முனி-கா-ரேதி அதாவது முனிவர்கள் பாதம் பட்ட மண் என்று அழைக்கப்படுகின்றது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்119

நம் முன்னோர்களின் லட்சிய மனிதனாகத் திகழ்ந்தவன் பிராமணன். நம் சாஸ்திரங்களிலும் இந்த பிராமணன். நம் சாஸ்திரங்களிலும் இந்த பிராமண லட்சியம் சிறப்பாகக் காணப்படுகிறது. ஐரோப்பாவின் கார்டினல் பிரபு தன் முன்னோர்கள் மேன்மையானவர்கள் என்பதை நிரூபிக்க எவ்வளவே சிரமப்பட்டு ஆயிரமாயிரம் பணத்தைச் செலவழிக்கிறார்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  118

முட்டாள்களும் பைத்தியங்களும், அவர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் திருமணம் செய்துகொண்டு இந்த நாட்டை ஒரு பைத்தியக்கார விடுதியாக மாற்ற வேண்டும் என்றெல்லாம் அவர்கள் கூறவும் இல்லை. அவ்வாறு வளம் பெற்ற ஒரு நாட்டை நான் இனிதான் காண வேண்டும்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  117

அவர்களும் ஜாதியை ஒழிக்வே விரும்பினார்கள். ஆனால் அவர்கள் தற்கால மனிதர்களைப் போன்றவர்கள் அல்ல. ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால் அதற்காக, நகர மக்கள் அனைவரும் ஓர் இடத்தில் திரண்டு, எல்லோரும் மதுவும் மாட்டிறைச்சியுமாக விருந்துண்டு களிக்க வேண்டும்;

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் 116

எனக்கு நேரம் இருந்திருந்தால், நாம் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைச் சட்டங்களை வகுத்துத் தந்த நமது முன்னோர்கள் எப்படி பல்லாண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்துள்ளார்கள், நமது தேசிய அமைப்புகளில் இதுவரை நிகழ்ந்துள்ள மாற்றங்களையும் இனி வரப் போகின்ற மாற்றங்களையும் எப்படி அன்றே உணர்ந்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் மகிழ்ச்சியுடன் எடுத்துச் சொல்லியிருப்பேன்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் 115

தீமைகளை நீக்குவதற்கும் நான் முயலவில்லை , ஆனால் மனித இனத்தின் முன்னேற்றத்திற்காக நமது முன்னோர்கள் மிகவும் சிறப்பாக வகுத்துத் தந்துள்ள திட்டத்தைச் செயல்படுத்த முனைந்து முன் செல்ல வேண்டும் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். மனிதனின் சார்புத்தன்மை மற்றும் அவனது தெய்வீக இயல்பு போன்ற வேதாந்த லட்சியத்தை உணர்ந்துகொள்ளப் பாடுபட வேண்டும் என்று மட்டும்தான் கூறுகிறேன்.

நம்மில் பலரது வாழ்க்கை

நம்மில் பலரது வாழ்க்கை அவர்களுக்கு பிடித்த ஒன்றை தேடுவதிலேயே வாழ்கையில் பெரும்பாலான நாட்கள் கழிந்து விடுகிறது. இதில் முக்கிய இடத்தை பிடிப்பது பணம, அன்பு, காதல் அடுத்து வருவது நாம் முக்கியம் என்று நினைத்து எடுத்து வைத்த பொருட்கள்.

சிலருக்கு இலையாக

சிலருக்கு இலையாக இருப்பதும்….. சிலருக்கு கிளைகளாக இருப்பதும்….. சிலருக்கு மரமாக இருப்பதெல்லாம்…. அவர்கள்  நம்மை புரிந்து கொள்ளும் விதம் தான்……

நன்றி ஏன் சொல்ல வேண்டும்?

பெற்றுள்ளதை உணர்வதற்காகவும் இன்னும் தேவையானதை பெறுவதற்காகவும்… இருக்கும் நல்லதைத் தக்க வைத்து கொள்வதற்காகவும் நன்றி சொல்ல வேண்டும்

காற்றுக்கு உருவமில்லை

காற்றுக்கு உருவமில்லை கதிரவனுக்கு நிழலில்லை நீருக்கு நிறமில்லை, நெருப்புக்கு ஈரமில்லை. ஒன்றைக் கொடுத்து ..ஒன்றை எடுத்தான், ஒவ்வொன்றிற்கும் காரணம் வைத்தான் எல்லாம் இருந்தும் எல்லாம் தெரிந்தும் கல்லாய் நின்றான் இறைவன்.  எவர் வாழ்விலும் நிறைவில்லை, எவர் வாழ்விலும் குறைவில்லை, புரிந்துகொள் மனிதனே அமைதி கொள் !!!!

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 77 பகை அச்சம் நீங்க

பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்ச பாணி, வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா வயிரவி, மண்டலி, மாலினி, சூலி, வராகியென்றே செயிர்அவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே   தீயவர்களின் பலியாக கொள்ளும் மிகுந்த பெருமையுடைய சண்டிகாதேவி காளி வைரங்களில் வட்டமாக கலைகளை உடைய மேகலையை கொண்டவள் மாலினி, சூலி, வராகி என்ற நால் வேதங்களாலும் கூறப்பட்ட இந்த திரு நாமங்கள் உடையவளே!

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 76 தனக்கு உரிமையானதைப் பெற

குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பறிந்து மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை, மெய்யில் பறித்தே, குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே. பஞ்ச புஷ்ப மாலையாகிய பைரவியே நீ வண்டுகளினால் தேன் ஒழுகின்ற கொன்றை கண்ணியை திருமுடியில் அணிந்த சிவ பிரானின் இடபாகத்தில் இருப்பவளே நின் வடிவை என் மனதில் தியானம் செய்ததன் பயனாக நின் மன குறிப்பறிந்து என் உயிரை கவர…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 75 விதியை வெல்ல

தங்குவர், கற்பக தாருவின் நீழலில், தாயர் இன்றி மங்குவர், மண்ணில் வழுவாப் பிறவியை மால்வரையும் பொங்குவர் ஆழியும், ஈரேழ் புவனமும் பூத்த உந்திக் கொங்கிவர் பூங்குழலாள் திரு மேனி குறித்தவரே பொங்கி எழும் 7 கடல்களும், 14 புவனங்களையும் பெற்றெடுத்த திருவயிறையும் வாசனை உள்ள மலர்களை அணிந்த கூந்தலை உடைய தேவியின் திருஉருவத்தை   தியானம் செய்யும் அடியார்கள் இந்திர பதவி பெற்று கற்பக மர நிழலில் இருப்பர் பின் இடையுறாது வரும் பிறவியை தரும் தாய்மார்களின்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 74 தொழிலில் மேன்மை அடைய

நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும், அயனும் பரவும் அபிராம வல்லி அடியிணையப் பயனென்று கொண்டவர், பாவையர் ஆடவும் பாடவும், பொன் சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே. மூன்று கண்களை உடைய சிவபெருமானும், வேதமும், திருமாலும், நான்முக கடவுளாகிய பிரம்மனும், புகழ்ந்து பாராட்டுகின்ற அபிராமி தாயின் திருவடிகளையே முக்திக்கு பயனென்ற தியானிப்பவர் தேவ மகளியரின் ஆடல்களுக்கு நடுவில் தங்க கட்டிலில் படுத்து இந்திர லோகத்தில் இந்திரனை போல் இருப்பார்கள்.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 73 பெண்களுக்கு குழந்தைப் பேறு உண்டாக

தாமம் கடம்பு, படைபஞ்ச பாணம், தனுக் கரும்பு, யாமம் வயிரவர் ஏத்தும் பொழுதெமக் கென்றுவைத்த சேமம் திருவடி, செங்கைகள் நான்கொளி செம்மை, அம்மை நாமம் திரிபுரை, ஒன்றோ டிரண்டு நயனங்களே. அபிராமி தேவிக்கு மாலை கடம்பு ஆயுதம் வில், கரும்பு, அம்பு, பஞ்ச புஷ்ப பாணம் அவளுடைய சாதகர்களாகிய பைரவர்கள் தேவியை துதிக்கும் நேரம் அர்த்த ஜாமம் நான் மேன்மை அடைய அபிராமியின் திருவடி கரங்கள் நான்கோடு சிவந்த திருமேனியும் மூன்று கண்களம் உடைய தேவியின் பெயர்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 72 பிறவிப் பிணி தீர

என்குறை தீரநின் றேத்துகின்றேன், இனி யான் பிறக்கின், நின்குறையே அன்றி யார்குறை காண்? இரு நீள்விசும்பின் மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய், தன்குறை தீர, எங்கோன்சடை மேல்வைத்த தாமரையே.  அகன்று உயர்ந்த வானத்தில் உண்டாகும் மின்னலை குறை சொல்லும் அளவிற்கு அதனினும் மெலிந்த சிறிய இடையையும் மிக மென்மையையும் உடைய தாயே சிவ பெருமான் உன் ஊடல் கண்டு அதை தீர்க்கும் வண்ணம் நின் திருவடி தாமரைகளை  தன் தலையில் தாங்கிய வண்ணம் போல் என்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 71 மனக்குறைகள் தீர்ந்து மகிழ்ச்சி பெற

அழகுக்கொருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள் பழகிச் சிவந்த பதாம் புயத்தாள், பனி மாமதியின் குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல், உனக்கென் குறையே? தன் அழகிற்கு ஒப்பில்லாத கொடி போன்ற அபிராமி தாயே தினமும் வேதங்கள் பயிலுவதனால் சிறந்த திருவடி மலர்களை உடையவள் குளிர்ச்சியும் பெருமையும் உடைய பிறையை திருமுடியிலே சூடும் யாமளை எனும் கற்பக பூக்கொம்பு இருக்கும் போது எதற்கு வருத்தம் கொள்ளாதே எந்த குறையும் இல்லை.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 70 நுண் கலைகளில் சித்தி பெற

கண்களிக்கும்படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில் பண்களிக்கும்குரல் வீணையும், கையும் பயோதரமும் மண்களிக்கும்பச்சை வண்ணமும் ஆகி மதங்கர்குலப் பெண்களில்தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே தும்ப வனத்தில் நல்ல பாடல்களால் சந்தோஷ குரலோடு இணைந்த வீணையும் அதனை கொண்ட திருகரமும் தனபாரமும் உலகெல்லாம் தரிசித்து மகிழும் பச்சை நிறமும் மதங்க குல பெண்களில் ஒருத்தியாய் அவதரித்த தேவியின் வடிவழகை என் விழிகள் நிறையும் வண்ணம் கண்டு தரிசித்தேன்.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 69 சகல சௌபாக்கியங்களும் அடைய

தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வறியா மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங் குழலாள், அபி ராமி கடைக்கண்களே. பூக்களினால் கேச பாரத்தை உடைய அபிராமியின் கடைகண்கள் தேவியின் அன்பர்களுக்கு எல்லா வகை ஐஸ்வர்யங்களையும், கல்வியையும் தளர்வில்லாத உறுதியான மனத்தினையும் தெய்வீக அழகினையும் மனதில் வஞ்சம் இல்லாத உறவுகளையும் நண்பர்களையும் தரும் இது தவிர நல்லது என்று…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 68 நிலம் வீடு போன்ற செல்வங்கள் பெருக

பாரும், புனலும், கனலும், வெங் காலும், படர் விசும்பும், ஊரும் முருகு சுவையொளி யூறொலி ஒன்றுபடச் சேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீறடிக்கே சாரும் தவமுடையார் படை யாத தனம் இல்லையே. பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவைகளின் தன் மாத்திரைகளாக முறையே வாசனை, சுவை, ஒளி, ஸ்பரிசம், சத்தம் இவைகளின் உள்ளே பரவி நிற்கும் பரமேஸ்வரியாகிய சில காம சுந்தரியின் பாதத்தில் பக்தி பூண்டு பணிவோர்க்கு கிடைக்காத செல்வம் எதுவும் இல்லையே!