32. அகால மரணமும் துர்மரணமும் வராமலிருக்க

ஆசைக்கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப் பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் எனும் வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து, ஆண்டுகொண்ட நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர் பாகத்து நேரிழையே. ஈசனின் இடபாகத்தில் இருக்கும் தேவியே மண் பெண் பொன் எனும் மூன்றின் ஆசைக் கடலில் சிக்கி இரக்கமற்ற யமனின் பாச கயிற்றுக்கு அகப்பட்டு துன்ப்படும்படி இருந்த என்னை மணமுள்ள தாமரை மலரை போன்ற திருவடியை என் தலையின் மேல் வலிய வைத்து என்னை ஆண்டு கொண்ட…

31. மறுமையில் இன்பம் உண்டாக

உமையும், உமையொரு பாகனும் ஏக உருவில்வந்திங் கெமையும் தமக்கன்பு செய்ய வைத்தார், இனி எண்ணுதற்குச் சமயங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை, அமையும் அமையுறு தோளியர் மேல்வைத்த ஆசையுமே. சிவபிரானின் தேகத்தில் ஒரு பாதியாய் விளங்குகின்ற ஒருவராகவே திகழும் உமாதேவியே பக்குவமற்ற என்னை போன்றோரையும் தன் திருவடிக்கு அன்பு செய்யும்படி நல்ல நிலையில் வைத்துள்ளனர் அதனால் கடைபிடிக்க வேறு சமயங்கள் இல்லை நம் பிறவி பிணி தீர்ந்த காரணத்தால் பெற்று எடுக்க இனி தாயும் இல்லை…

30. அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்க

அன்றே தடுத்தென்னை ஆண்டுகொண்டாய், கொண்டதல்ல என்கை நன்றே உனக்கினி நான் என் செயினும், நடுக்கடலுள் சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமே, ஒன்றே, பலஉருவே, அருவே, என் உமையவளே. ஒன்றாயும் பலவாயும் உள்ள உருவ மற்றதாயும் உள்ள உமாதேவியே என் அன்னையே முன் காலத்திலேயே என்னை நீ ஆட்கொண்டாய் இனி நான் என்ன குற்றம் செய்தாலும் கடலுக்கு நடுவே சென்று விழுந்தாலும் என் குற்றத்தை மறந்து கரையேற்றுதல் நின் பொறுப்பாகும்!

29. அணிமாதி அஷ்ட சித்திகளைப் பெற

சித்தியும், சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும்பரா சத்தியும், சத்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார் முத்தியும், முத்திக்கு வித்தும், வித்தாகி முளைத்தெழுந்த புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தையன்றே. அஷ்டமா சித்திகளை தரும் தெய்வமாக விளங்கும் பராசக்தியும் தன்னுள்ளே சக்தியை தழைக்க செய்தவரான சிவனும் தவம் செய்பவர்கள் பெறும்  ஆனந்தமும் அந்த முக்தியை பெறுவதற்கு உண்டான மூலமும் மூலத்தில் தோன்றி எழுந்த ஞானமும் ஆகிய எல்லாமாகவும் இருப்பவளே அறிவினுக்கு உள்ளே நின்று பாதுகாக்கும் திரிபுர சுந்தரியே!

28. இம்மை மறுமை இன்பங்கள் அடைய

சொல்லும் பொருளும் என, நட மாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே, நின் புதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும் செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே. ஆனந்த தாண்டவம் ஆடும் சிவனாரிடம் சொல்லும் பொருளும் போல இணைந்து நிற்கும் மலர் பூங்கொடி போன்றோய்நின் மலர் போன்ற திருவடிகளை அல்லும் பகலும் சேவிக்கும் அன்பர்களுக்கு அழியாத அரச பதவி தவ வாழ்க்கை சிவலோக பதவியும் கிடைக்குமே!

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 27. மனநோய் அகல

உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை, சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே. பேரழகியே என் கர்மத்தால் வந்த பிறவியை தகர்த்து என் உள்ளம் உருகும்படியான அன்பை உண்டாக்கி தாமரை போன்ற நின் பாதங்களில் வீழ்ந்து வணங்கும் தொண்டினை தந்தாய் என் கர்மத்தால் விளைந்த என் நெஞ்சில் இருந்த ஆணவம், கன்மம், மாயை போன்ற அழுக்கையெல்லாம் நின்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 26. சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக

ஏத்தும் அடியவர், ஈரேழுலகினையும் படைத்தும், காத்தும், அழித்தும் திரிபவராம்,கமழ்பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே, மணம் நாறும் நின் தாளிணைக்கென் நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு, நகையுடத்தே. பூங்கடம்பின் மணம் வீசும் மலரை அணிகின்ற கூந்தலை உடைய தேவி உன்னை துதிக்கும் அடியவர்களால் 7 உலகங்களையும் படைத்தும், காத்தும், அழித்தும் செய்தும் தம் தொழிலை நடத்தி திரிகின்ற மும் மூர்த்திகளாவர் நான் உன் மனம் பொருந்திய இரண்டு திருவடிகளுக்கு ஒன்றுக்கும் பற்றாத என்னுடைய நாவிலிருந்து வார்த்தைகளக்கு பொருள் தந்து…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 25. நினைத்த காரியம் நிறைவேற

பின்னே திரிந்து, உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன், முதல் மூவருக்கும் அன்னே, உலகுக் கபிராமி என்னும் அருமருந்தே, என்னே? இனி உன்னை யான் மறவாமல் நின் றேத்துவனே. மும் மூர்த்திகளின் தாயே உலகின் உயிர்கள் அனைத்திற்கும் பிறவி பிணியை போக்குவிக்கும் அருமருந்தே முற்பிறப்பின் நின் அடியார்களின் பின் சென்று அவர்களுக்கு வேண்டிய கைங்கரியங்கள் செய்து பிறவி பிணியை நீக்கும் தவங்களை செய்து வைத்த நான் உன்னை என்றும் மறவாமல் நிலையாக நின்று…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 24. நோய்கள் விலக

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணிபுனைந்த அணியே, அணியும் அணிக்கழகே, அணுகாதவர்க்குப் பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே, பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே மாணிக்கமே – மாணிக்கத்தின் ஒளியே அப்படி ஒளிரும் மாணிக்க கற்களால் செய்த ஆபரணத்தை அணிந்தவளே நீ அந்த ஆபரணம் அணிந்ததால் அந்த ஆபரணத்திற்கு அழகை உண்டாக்கியவளே உன்னை அணுகி இருப்பவர்களுக்கு அழகை உண்டாக்கியவளே உன்னை அணுகாமல் இருப்பவர்களுக்கு நோய் போன்றவளே உன்னை அணுகிய பக்தர்களுக்கு பிறவியெனும் நோயை போக்குபவளே,…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 23. எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க

கொள்ளேன், மனத்தில் நின் கோலம்அல்லாது, அன்பர்கூட்டந்தன்னை விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத் தேவிளைந்த கள்ளே, களிக்கும்களியே, அளியஎன் கண்மணியே. என்னுடைய மனதில் நின் திருகோலத்தை தவிற வேறு எதையும் நினையேன் நின் அன்பரை தவிர வேறு யாருடனும் இணையமாட்டேன் .மூன்று உலகத்துள்ளும் அதையும் தாண்டியிருக்கின்ற பொருளாய் இருந்தாலும் எதனுடனும் இல்லாதிருப்பவளே, பக்தர்களின் உள்ளத்தே இன்பத்தை சுரக்க வைக்கும் ஆனந்த கள்ளே என் கண்ணின் மணி போன்றவளே!

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 22. இனிப் பிறவா நெறி அடைய

கொடியே, இளவஞ்சிக் கொம்பே, என க்கு வம்பே பழுத்த படியே மறையின் பரிமளமே,பனி மால் இமயப் பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே, அடியேன் இறந்திங் கினிப்பிற வாமல்வந் தாண்டுகொள்ளே. கொடி போன்றவளே இளைய வஞ்சி கொம்புக்கு இணையானவளே எனக்கு பக்குவமில்லா நிலையிலும் அருள் புரிந்த தேவி வேதமாகிய மலரின் மணத்தை உடையவளே இமயத்தில் இங்கும் அங்கும் விளையாடும் யானையே பிரமன் முதலான தேவர்களை  பெற்ற தாயே நான் இவ்வுலகில் இறந்த பின் மீண்டும் பிறவாமல்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய

மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச் சங்கலை செங்கைச் சகல கலாமயில் தாவுகங்கை பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள் பிங்கலை, நீலி, செய்யாள்,வெளியாள், பசும் பெண்கொடியே. நித்திய மங்களையாகிய அபிராமி அம்மை சிவந்த கலசத்தை போன்ற தனங்களும் மலை மகள் நிறம் பெற்ற சங்காலாகிய வளையல்கள் கொண்ட சிவந்த திருகரங்களை உடையவள் எல்லா கலைக்கும் தலைவி மயிலை போன்றவள் பாய்ந்து வரும் கங்கையினை தன் முடியில் தாங்கிய சிவபிரானின் இடபுறத்தை கொண்டவள் பொன் நிறம் படைத்த…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக

உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒருபக்கமோ, அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம் நிறைகின்ற வெண் திங்களோ, கஞ்சமோ, என்றன் நெஞ்சகமோ, மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே. பூரண அருளால் நிறைவான நித்திய மங்கலையே நீ வாசம் செய்யும் ஆலயம் நின் பதியாகிய சிவனின் ஒரு பக்கமோ அல்லது நின் புகழை எப்பொழுதும் பாடும் வேதங்களின் மூலமோ அல்லது அவற்றின் முடியாய் விளங்குகின்ற உபநிடதங்களோ அமுதம் நிறைந்த வெள்ளிய சந்திரனோ வெண் தாமரையோ அல்லது…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 19. பேரின்ப நிலையடைய

வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்தென் விழியும் நெஞ்சும், களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை கருத்தினுள்ளே தெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன, திருவுளமோ? ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே. ஸ்ரீ சக்கரத்தில் உள்ள 9 கோணங்கள் ஒளி வீச காரணமாய் உள்ள தாயே நின் திருவடிவை புறக்கண்ணிலும் அந்த தேஜஸ்யை அகக்கண்ணிலும் கண்ட எனக்கு ஏற்பட்ட ஆனந்த வெள்ளத்திற்கு கரைகளே இல்லை இந்த காட்சியின் அருளுள் என் உள்ளத்து உள்ளே மெய்ஞானம் விளங்குகின்றது. இவ்வளவு பேரருளை செய்வதற்கு காரணம்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 18. மரண பயம் நீங்க

வவ்விய பாகத் திறைவரும், நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து வெவ்விய காலன் என் மேல்வரும் போது வெளிநிற்கவே. அம்மையே உன்னால் அடையப்பெற்ற வாம பாகத்தை உடைய சிவனும் நீயும் இணைந்து மகிழ்ந்து ஒன்றியிருக்கும் கோலமும் உங்கள் திருமண கோலமும் என் உள்ளத்து உள்ளே இருந்த ஆணவத்தை போக்கி தெளிவு பொலிவு பெற்ற திருவடிகள் என் உயிரை பறிக்க பாசக் கயிறுடன் காலன் என் முன் வரும்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 17. கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய

அதிசய மான வடிவுடை யாள், அர விந்தமெல்லாம் துதிசய ஆனன சுந்தர வல்லி, துணை இரதி பதிசய மான தபசய மாகமுன் பார்த்தவர்தம் மதிசய மாக அன் றோவாம பாகத்தை வவ்வியதே? யாவரும் வியக்கும் வண்ணம் உள்ள திருவுருவம் கொண்டவளே தாமரை மலர்கள் யாவும் துதிப்பதற்கு காரணமாயுள்ள பேரழகு கொண்டவளே அழகிய திருமுகத்தை கொண்ட அழகிய கொடிபோல் இருப்பவளே ரதிக்கு நாயகனாகிய மன்மதன் பெற்ற வெற்றியெல்லாம் யார் முன் தோல்வியுற்றதோ அவரை வெல்லவே அவரின் இடபாகத்தை கவர்ந்து…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 16. முக்காலமும் உணரும் திறன் உண்டாக

கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்தொளிரும் ஒளியே, ஒளிரும் ஒளிக்கிடமே, எண்ணில் ஒன்றும் இல்லா வெளியே, வெளிமுதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே, அளியேன் அறிவளவிற்கள வானத திசயமே. உன் பக்தர்கள் மனதில் நிலைபெற்று விளங்கும் ஞான ஒளிக்கெல்லாம் ஆதாரமாய் உள்ள அருள் ஒளியே கிளியின் பச்சை வண்ண திருமேனி உடையவளே எண்ணிப் பார்த்து உணர முடியாததுவும் கடந்த பரவெளியே ஆகாசம் முதலான ஐந்து பூதங்களாக விரிந்த அம்மையே இந்த அளவிற்கு பெரியவளான நீ இரங்கத்தக்க எளியேனின்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற

தண்ணளிக் கென்று, முன்னே பலகோடி தவங்கள் செய்வார், மண்ணளிக் கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம் விண்ண ளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ? பண் ணளிக்கும் சொற் பரிமள யாமளைப் பைங்கிளியே. இனிய இசையின் ராகங்களை ஒத்த மொழிகளை பேசும் நல்ல வாசனையுடைய மேனியை உடைய யாமளை யாகிய பச்சை கிளியே முன் பிறவிகளில் நின் திருவருளை பெற பலகோடி தவங்களை செய்தவர்கள் இப்பூமியின் உள்ளசெல்வமாகிய அரசு செல்வம் போன்ற இவற்றை மட்டுமா பெறுபவர்கள்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 14. தலைமை பெற

வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள், சிந்திப்பவர், நற்றிசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச் சந்திப்பவர்க்கெளிதாம் எம்பிராட்டி, நின் தண்ணளியே. தேவர்களும் அசுரர்களும் ஆகிய இரு இனத்தினரும் அபிராமி தாயே நின்னை வழிபடுகின்றனர். பிரம்ம தேவரும் திருமாலும் உன்னை தியானம் செய்பவர் தம் உள்ளத்தின் உள்ளே அன்பினால் பூட்டி வைப்பவர் ஆனந்த உருவினரான சிவபெருமான் இத்தனை இருந்தாலும் பூவுலகில் உன்னை தரிசிப்பவர்க்கு உன் திருவருள் எளிதாக கிட்டுகிறது.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 13. வைராக்கிய நிலை எய்த

பூத்தவளே, புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே பின்கரந்தவளே, கறைக் கண்டனுக்கு மூத்தவளே, என்றும்மூவா முகுந்தற் கிளையவளே, மாத்தவளே, உன்னை அன்றிமற் றோர்தெய்வம் வந்திப்பதே? அபிராமி தாயே உன் திருவருளால் உலகம் பதினான்கையும் ஈன்றாய் அந்த திருவருளோட அதை காத்துக்கொண்டும் இருக்கின்றாய் பின்  சிந்தனைக்கேற்ப அழிக்கவும் செய்கின்றாய். திரு நீல கண்டருக்கு முன் பிறந்தவளே என்றும் இளமையாய் இருக்கும் திருமாலுக்கு தங்கையே மிக பெரும் தவத்தை உடையவளே உன்னை தவிர என்னால் வேறு தெய்வத்தை வழிபட இயலுமோ.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 12. நெஞ்சம் தியானத்தில் நிலைபெற

கண்ணியது உன்புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பத்தி பண்ணியது உன் இருபாதாம் புயத்தில், பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன்செய்த புண்ணியம் ஏது? என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே. நான் முன் ஜென்மத்தில் எத்தனை புண்ணியங்கள் செய்திருந்தால் உன் அடியார் கூட்டத்தோடு மட்டும் கலக்கும் பேறு பெற்று இருப்பேன் இது மட்டுமல்லாது ஏழுலகங்களையும் பெற்ற தேவியே நான் கருதுவது உன் புகழ் கற்பது உன் பெயர் மனமுருகி பக்தி செய்வது…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 11. இல்வாழ்க்கையில் இன்பம் பெற

ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய், வான் அந்தமான வடிவுடையாள், மறை நான் கினுக்கும் தானந்தமான சரணார விந்தம் தவளநிறக் கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே. ஆனந்தமாயும் அறிவாயும் அமுதமாயும் இருக்கின்ற அபிராமி தேவியே நான்கு வேதங்களுக்கும் முடிவாய் நிற்கும் நின் திருவடி தாமரை வெண்ணிறத்தையுடைய  சிவபெருமான் தன் ஆடும் இடமாக கொண்ட மயான பூமியில் ஆடும் போது அவரின் திருமுடி மாலையாக உள்ளது.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 10. மோட்ச சாதனம் பெற

நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்ப துன்னை, என்றும் வணங்குவ துன்மலர்த் தாள், எழு தாமறையின் ஒன்றும் அரும்பொருளே, அருளே உமையே இமயத் தன்றும் பிறந்தவளே, அழியாமுத்தி ஆனந்தமே. இமய மலையில் அவதரித்த தாயே எழுதாமல் கேட்கப்படுகின்ற வேதங்களின் பொருளாய் இருப்பவளே சிவபெருமானுக்கு அருளாய் இருப்பவளே உமாதேவியே என்றும் அழியாத முக்தியின் உறைவிடமாய் இருப்பவளே உன்னை நான், நின்ற போதும் நடக்கும் போதும் படுத்து இருக்கும் போதும் உன் திருவடி தாமரையை தியானம் செய்து கொண்டிருக்கிறேன்.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 9. அனைத்தும் வசமாக

கருத்தன எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பிற் பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர் திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும் முருத்தன மூரலும், நீயும், அம்மே, வந்தென் முன்னிற்கவே. தாயே, எம் தந்தையாராகிய சிவபிரானது திருவுள்ளத்தில் இருப்பனவும், திருவிழிகளில் உள்ளனவும், அழகு பெற்ற பொன் மலையாகிய மேருவைப் போலப் பருத்திருப்பனவும், அழுத திருஞானசம்பந்தப் பிள்ளையாருக்குப் பாலை வழங்கினவும் ஆகிய பெரிய திருவருள் மிகுந்த அழகிய திருத்தனபாரமும், அவற்றின்மேல் உள்ள முத்துமாலையும், சிவந்த திருக்கரத்தில் உள்ள…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 8 பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட

சுந்தரி எந்தை துணைவி, என் பாசத் தொடரைஎல்லாம் வந்தரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல் அந்தரி நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன் கந்தரி கைத்தலத் தாள் மலர்த்தாள் என் கருத்தனவே. என் தந்தையாகிய சிவபெருமானின் தேவி சுந்தரி என் பாச தளைகளையல்லாம் அழிக்கும் சிந்தூர வண்ண தேவி மகிஷனின் தலை மேல் பாதம் வைத்து அழுத்தும் அந்தரி நீல நிறம் கொண்டவள் என்றும் அழிவில்லாத கன்னி பிரம்மனது கபாலத்தை திருக்கரத்தில் தாங்குபவள் தாமரை மலரைப் போல் திருப்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 7. மலையென வரும் துன்பம் பனியென நீங்க

ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி, தளர்விலதோர் கதியுறு வண்ணம் கருதுகண்டாய் கமலாலயனும், மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கி, என்றும் துதியுறு சேவடியாய், சிந்து ரானன சுந்தரியே. தயிரை கடைதற்க்காக உள்ள மத்து சுழல்வது போல் எண்ணற்ற பிறவிகள் கடந்து அலைந்து திரிந்து சுழன்று உள்ள எனக்கு தாமரை மலரை இருக்கையாய் கொண்ட பிரம்மதேவனும் சந்திரனை தன் திருமுடியில் தாங்கிய சிவபெருமானும் பாம்பனை மேல் துயிலும் திருமாலும் தோத்திரம் செய்யும் அம்பிகையே வீடு பேற்றை தந்து…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 6. மந்திர சித்தி பெற

சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை, சிந்தையுள்ளே மன்னியது, உன் திரு மந்திரம், சிந்துர வண்ணப்பெண்ணே, முன்னிய நின்அடியாருடன் கூடி, முறைமுறையே பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே. செந்நிறம் கொண்ட சிந்தூரத்தின் வண்ண  மேனியை கொண்ட அம்பிகையின் பொற்பாதங்கள் என் சிரத்தின் மேல் இருக்க என் மனதில் நிலை பெற்று இருப்பது அம்பிகையே உன் திருமந்திரம் உன்னையே  தியானிக்கும் அடியார்களுடன் கூடி முறைபடி நான் உன் ஆகம பத்ததியை பாராயணம் செய்கிறேன்.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 5. மனக்கவலை தீர

பொருந்திய முப்புரை, செப்புரை செய்யும் புணர்முலையால், வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார்சடையோன் அருந்திய நஞ்சமு தாக்கிய அம்பிகை, அம்புயமேல் திருந்திய சுந்தரி அந்தரி, பாதம் என் சென்னியதே. மனதை ஞான நிலைக்கு எழுப்பும் மனோன்மணி தாயின் செப்பிற்கு உவமை சொல்லும்படியான இரு தனங்களும் அதன்பாரத்தால் வளைந்த இடையும் நீண்ட சடை உடைய ஈசன் உண்ட நஞ்சை தன் கைகளினால் தடுத்து நஞ்சை அமுதாக்கிய அம்பிகையின் மென் பாதங்களில் என் தலை இருக்கிறது.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 4. உயர் பதவிகளை அடைய

மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி குனிதரும் சேவடிக் கோமளமே, கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும் பாம்பும், பகீரதியும் படைத்த புனிதரும் நீயும் என் புந்திஎந் நாளும் பொருந்துகவே. யோகத்தாலும், தவத்தாலும் பூமியில் உள்ள மனிதரை காட்டிலும் மேம்பட்ட முனிவர்களும், வானுலகில் உள்ள தேவர்களும் வணங்கும் மெல்லிய செவ்வண்ணமுடைய தேவியே நீண்ட சடாபாரமும் அதில் கங்கையையும் குளிந்த நிலவினையும் கண்டத்தில் பாம்பை அணிந்தவருமாகிய சிவ பெருமானும் நீயும் என் அறிவிடத்தே எந்நாளும் இணைந்து இருப்பீர்களாக

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 3 குடும்பக் கவலையிலிருந்து விடுபட

அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு செறிந்தேன், உனது திருவடிக்கே திருவே வெருவிப் பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால், மறிந்தே விழுநர குக்குற வாய மனிதரையே. வேறு யாரும் அறியாத மறையின் இரகசியத்தை நான் அறிந்தேன்; அங்ஙனம் அறிந்தமையால் அதுகொண்டு நின் திருவடியிடத்தே அடைந்தேன்; நின் அடியார்கள் பெருமையை எண்ணாத பாவம் மிக்க மனம் காரணமாகக் குப்புற விழும் நரக லோகத்தின் தொடர்புடைய மனிதரை அஞ்சி விலகினேன் நின் திருவடிக்கண் அடைக்கலம் புகுதல் எல்லா…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 2 பிரிந்தவர் ஒன்று சேர

துணையும், தொழும் தெய்வமும் பெற்றதாயும், சுருதிகளின் பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனிமலர்ப்பூங் கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங் குசமும், கையில் அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே. தனக்கு துணை என்று சொல்லும் அபிராமி பட்டர் சூட்சமாய் உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் அபிராமியே துணை என்றும் கூறுகிறார். தன்னை பெற்ற தாயும் வேதம் எனும் மரத்தின் கிளையும் கிளையின் நுனியில் உள்ள கொழுந்தும் அம்மரத்தின் வேராகவும், அபிராமியே உள்ளாள் என்று சொல்கிறார், குளிர்ச்சியுடைய மலரம்புகளையும் கரும்பு…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 1 ஞானமும் நல்வித்தையும் பெற

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயம்-என்ன விதிக்கின்ற மேனி, அபிராமி என்றன் விழுத்துணையே. உதய கால சூரியனின் கிரகணங்களின் நிறத்தை ஒத்த உச்சித் திலகம் போன்று யோகியரின் ஞானியரின் நெற்றியின் நடுவே மாணிக்கம் போன்று ஒளிர்பவளே! அதுமட்டுமல்லாது மாதுளம் பூவின் நிறத்தையும் ஒத்தவளே தாமரை மலரில் அமர்ந்த தேவியால் துதிக்கப்படும் அபிராமியே மின்னலை போன்ற தோற்றம் அழகிய குங்கும வர்ணம் கொண்ட உடலை உடைய…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல்

அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி 100 பாடல்களை கொண்டது காப்பு, செய்யுளும் சேர்த்தால் 102 செய்யுள்கள் வரும் இதை நாம் தெளிந்த மனதுடன் பாராயணம் செய்ய நம் மனம் சந்தோஷமடையும் நம் சங்கடங்கள் யாவும் நீங்கும் அழகு தமிழும் அழகுக்கு அழகான அம்பிகையின் உடல் செய்கை தீரம் போன்றவற்றை விவரிக்கும் போது தமிழும் அழகுக்கு அழகாகிறது அந்த அழகில் நாம் மனதை பறிகொடுத்த வண்ணம் அந்தாதியின் காப்பு செய்யுளுக்கு செல்வோம். காப்பு தாரமர் கொன்றையும், சண்பகமாலையும் சாத்தும்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல்

அபிராமி அம்மையை பார்க்கும் இடந்தோரும் பார்க்கும் திசை தோறும் கண்டு ஆராதித்து அகம் மலர்ந்தவர் எண்ணும் எண்ணத்திலும் சிந்திக்கும் சிந்தையிலும் செய்யும் செயல் யாவையிலும் அபிராமியை கண்டு பூரித்து புளங்காகிதம் அடைந்தவர் அவர் அந்த அனுபவத்தை வார்த்தைகளால் இப்படி நமக்கு சொல்லுகின்றார். பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறை வண்டார்க்கும் புது மலர் ஐந்தும் கரும்பும் என் அல்லெல்லாய் தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும் சிற்றிடையும் – வார்க்குங்கும முலையும் மேல் முத்து மாலையுமே என்று நமக்கு சொல்கிறார்.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல்.

சக்தியின் வடிவங்கள் பல பல அதில் அவரவர்களுக்கு பிடித்த சக்தியில் தோய்ந்து அதனுள் மூழ்கி திளைத்து அந்த அனுபவத்தையும் அந்த சக்தியின் நிலைகளையும் உலகுக்கு கொடுத்த புண்ணியர்கள் பலர் அந்த பலரில் சுப்பிரமணி எனும் நாமம் பெற்றோரால் இடப்பட்டு உலகிற்கு அபிராமி பட்டராய் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட புண்ணியரை ஆட்கொண்ட சக்தி திருக்கடவூர் வாழ் அபிராமி அம்மையேயாகும். சக்தியின் பல வடிவங்களில் ஒன்றாகிய அபிராமியின் அருளால் ஆட்கொண்டு நமக்கு தந்ததே அபிராமி அந்தாதி.  தெய்வ அருள் பெற்ற அபிராமி…