அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 42. உலகினை வசப்படுத்த
இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து வடங்கொண்ட கொங்கை மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் லரவின் படங்கொண்ட அல்குல் பனிமொழி, வேதப் பரிபுரையே. பருத்த இரு தனங்களை உடையவளே அதில் முத்துமாலையும் அணிந்தவளே மலை போல் கொண்ட அந்த இரு தனங்களை கொண்டு சிவபிரானின் மார்பில் பதித்து சிவனை சந்தோஷபடுத்துபவளே நல்ல பாம்பின் படத்தை ஒத்த அல்குலை கொண்ட தேவியே வேதமாகிய சிலம்பை உடையவளே குளிர்ந்த வார்த்தைகளை…
