சொல்லும் பொருளும் என, நட மாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே, நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே.
ஆனந்த தாண்டவம் ஆடும் சிவனாரிடம் சொல்லும் பொருளும் போல இணைந்து நிற்கும்
மலர் பூங்கொடி போன்றோய்நின் மலர் போன்ற
திருவடிகளை அல்லும் பகலும் சேவிக்கும் அன்பர்களுக்கு
அழியாத அரச பதவி தவ வாழ்க்கை சிவலோக பதவியும் கிடைக்குமே!
