அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 46. நல்நடத்தையோடு வாழ
வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம்அடியாரை மிக்கோர் பொறுக்கும் தகைமை புதியது அன்றே, புது நஞ்சை உண்டு கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே, மறுக்கும் தகைமைகள் செய்யினும், யான் உன்னை வாழ்த்துவனே. ஆலகால விஷத்தை உண்டு கண்டம் கருத்த சிவ பெருமானின் இடபாகத்தில் இருக்கும் தேவியே நான் உனக்கு ஒவ்வொத தவறுகளை செய்தாலும் அவற்றை ( மதி உடையவர் மதி குறைந்தவர் செய்யும் தவறுகளை பொருட்படுத்தாது இருப்பது ) போல பொறுத்து அருள்வாய் எனும் நம்பிக்கையால் உன்னை…
