இந்த வலைதளம் உங்களுக்காக என்று சொல்லலாம் அலங்கார மான, அழகான மனதை சந்தோஷப்படுத்தும் வார்த்தை தான். ஆனால் கொஞ்சம் உற்று பார்த்தால் அதில் உள்ள பொய் தெரியும். அதனால், உண்மையை சொல்ல ஆசைப்படுகிறேன். இந்த வலை தளம் எனக்கு வேண்டிதான் அதில் உங்களின் கால எல்லை அனுபவங்களில் இதில் இணையும் சந்தர்ப்பம் உங்களுக்கும் ஏற்படும் என்று நம்புகிறேன்.
நான் அனுபவப்பட்ட , நான் சிந்திக்க காரணமாயிருந்த வாய்ப்புக்களை தந்தவர்களில் குறிப்பிட தக்கவர்கள் பாலகுமாரன், எண்டமூரி வீரேந்திரநாத், ரா.சு.நல்லபெருமாள், இந்திராபார்த்தசாரதி, நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், கண்ணதாசன், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ, இராமகிருஷ்ண பரமஹம்சர், இன்னும் பலர் அதனால் இந்த வலைதளத்தின் பதிவுகளில் இவர்களின் தாக்கம் அதிக அளவு இருக்கும் இதை தவிர்க்க முடியாது.
இதில் நான் படித்த, நான்கேட்ட, நான் அனுபவித்த, நான் விட்ட, தொடர நினைத்த, தொடர்ந்த, சிந்தித்த, செயல்படுத்திய , பிடித்த, இப்படி பல விஷயங்களின் பதிவுகளை காணமுடியும் சரி என்று எனக்கு பட்டது படிக்கும், பார்க்கும் உங்களுக்கு சரியில்லாததாக படும் அதற்கு என்னால் ஒன்றும் செய்யமுடியாது, நான் எனது பாதையில் வெகு தூரம் பயணப்பட்டுவிட்டதால் இனி திரும்பவோ பாதை மாறவோ முடியாது அதனால் இப்படியும் ஒன்று என்ற நிலையில் பாருங்கள்.
இதில் வரும் உற்றுப்பார், உணரப்பார், பல்சுவை கதம்பம் ஜோதிடம் போன்றவற்றில் பல விஷயங்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது ஆனால் உறுதியாக என்னால் சொல்ல முடியும் முற்றிலும் உங்களால் அதை ஒதுக்கவும் முடியாது என்று, காமம், கோபம், லோபம், மதம், மாச்சர்யம் போன்றவை மனிதனின் அடிப்படை குணங்களான பிறகு காதல், அன்பு, பரிவு, பாசம், நேசம், நட்பு, உண்மை தியாகம், மன்னித்தல், போன்றவற்றை மிக கடின முயற்சியுடன், பயிற்சி செய்து பின்பற்றி நிலைநிறுத்த வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம் என்பதே நிஜம் ஏமாறுதலும், ஏமாற்றுதலும் நாணயத்தின் இரு பக்கங்கள் போலவும் உடலும், உயிரும் போலவும் ஆகிவிட்ட பின் என்ன செய்ய, எவ்விடம் நகர, எப்படி பயணிக்க
இனி வலைதளத்திற்க்குள் நீங்கள்,
என்னுள் இனி நான்
இப்படிக்கு,
என்றென்றும் இயல்புடன்:
ஆத்மா.