உங்களின் அத்தனை வார்த்தைக்கும்
உங்களின் அத்தனை வார்த்தைக்கும் சரி என்று கடந்து செல்வதற்கு அர்த்தம் உங்களின் அத்தனையும் சரியானது என்பதல்ல… உங்களிடம் விளக்க முயல்வது வீண் என்பதாகவும் இருக்கலாம்.
உங்களின் அத்தனை வார்த்தைக்கும் சரி என்று கடந்து செல்வதற்கு அர்த்தம் உங்களின் அத்தனையும் சரியானது என்பதல்ல… உங்களிடம் விளக்க முயல்வது வீண் என்பதாகவும் இருக்கலாம்.
ஒரு சில வார்த்தைகள் ஒரு சில மௌனங்கள்.. ஒரு சில நிகழ்வுகள் ஒரு சில அனுபவங்கள்.. ஒரு சில ஞாபகங்கள் ஒரு சில மனிதர்கள்.. ஒரு சில பாடங்கள் ஒரு சில ஏமாற்றங்கள்.. ஒரு சில நேரங்களின் கண்ணீர் ஒரு சில நேரங்களின் புன்னகை.. இவை அனைத்தும் வாழ்க்கையின் ஒரு சில நிகழ்வுகளே.
இருப்பதுவும் பிரிவதும் அவரவர் விருப்பம் ஆனால் உடனிருந்தே அந்நியமாக்கபடுவது ஆகப்பெரும் வன்முறை இதை உங்கள் வாழ்நாளில் என்றாவது ஒரு முறையாவது உணர்ந்து இருக்கிறீர்களா இப்படி ஒரு சூழ்நிலையில் இருந்து இருக்கிறீர்களா
நினைத்தது நடக்காத சூழ்நிலையை எப்படி கையாள்கிறோம்… என்பதில் தெரிந்துவிடும் நம் முதிர்ச்சி
தேடல்கள் அர்த்தமற்றது என தெரிந்தும்… எதையோ தேடிக்கொண்டே இருக்கிறது மனது.
விடுபட எண்ணுகையில் கொஞ்சம் தீனிகேட்டு எழுந்திருக்கும் புத்தி கரையான் புற்று போல வளரத் தொடங்கிவிடும் நீங்களாக அதற்கொரு பூச்சிக்கொல்லி மருந்து அடித்துக் கலைக்கும் வரை உங்கள் பேச்சு அதன் பேச்சுடன் ஒத்துப்போகும் கவனித்துப் பாருங்களேன்.. பின் குறிப்பு எதில் இருந்து விடுபடஎன்பது அவரவர் சம்பத்தப்பட்ட விஷயம்
காத்திருப்பது வீண் சில சமயம் தோணும்போதும் மனம் காத்திருக்க தவறியதில்லை, காத்திருப்பு உனக்காக என்ற போதிலே; ஏதோ ஒரு நம்பிக்கையில்.. பாரமான உன் நினைவோடு என்றென்றும்.. பின் குறிப்பு உனக்கு என்பதை எதை கொண்டு நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்கள் தரம் உங்களுக்கு தெரியும் அடுத்தவர்களுக்கும் தெரியும்
உங்களிடம் நீங்கள் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டிய கேள்வி… நீங்கள் சரியானவற்றுக்கு உங்கள் நேரத்தை செலவிடுகிறீர்களா என்பதே.. ஏனெனில் உங்களிடம் இருப்பது நேரம் ஒன்று தான்.
பல தப்புக்களை செய்து தப்பி விடுகிறது இளமை பாவம் அதற்கு தண்டனை அனுபவிக்கிறது முதுமை.
வாழ்வென்னவோ ஊழிகாலத்தில் எல்லா கோணல்களையும் மிகச் சரியாகவே காட்டித்தொலையும்
ஒருவரை மனமார ஒரே ஒருமுறை பிடித்து விட்டால் அவர் செய்வதை அவர் சொல்வதை அப்படியே முழுதாக ஏற்றுக்கொள்கிறது இந்த மனம் இதை எப்போதாவது உணர்ந்து இருக்கிறீர்களா ஆனால் மனமார பிடிப்பது தான் குதிரை கொம்பாக இருக்கிறது