சுந்தர யோக சிகிச்சை முறை 108

 எல்லா பாகமும் விஷஸ்னானம் பெறவே வீரன், இருளன், காட்டேரியைக் போன்ற பலவித வியாதிகள்  ஒழியாக்குடி  புகுந்து கொட்ட மடிக்கின்றன. சீகத்தில் உண்டாகும் விஷய்ஙகள் சிறுகுடலுக்குள்ளும் உறிச்சென்று, அதன் சதைச்சுவர்கள் மூலம் கிரகிக்கப்பட்டு, குடியிருந்த வீட்டுக்குக் கொள்ளி வைக்க ஏற்பாடு செய்து விடுகின்றன. இந்தச் சீகம் இவ்வளவு மோசமானது! இப்பெருங்குடலின் மற்ற பாகங்கள் சாதுவல்ல. ஆனால் இதைப் போல் அபாயத்தைக் கொடுக்காது. அங்க மலம் தங்கக் கூடுமாகையால், கெடுதி உண்டு. வெட்டி விட்டால் – இந்த சீகத்தையே தொலைத்து…

சுந்தர யோக சிகிச்சை முறை 107

 பெருங்குடலின் இப்பாகமோ உறிஞ்சும் சக்தி வாய்ந்தது.  யோசனையின்றி இந்த விஷங்களையும் சீகம் உள்ளிழுத்து விடுகிறது. ரத்த ஓட்டத்துடன் கலக்கச் செய்கிறது ஒவ்வொரு கருவியும் இவ்விஷத்தை உண்டு விட்டு நோய் வாய்ப்படுகிறது. தம் தம் வேலைகளைச் செய்யச் சக்தியின்றிக் கெடுகின்றது பித்தகோசம் சிறுநீர்க் கருவிகள் கேடுற்று விஷப்பொருள்கள் வெளியே தள்ளச் சக்தியின்றி உடலில் குவியச் செய்கின்றன.

சுந்தர யோக சிகிச்சை முறை 106

 மலச்சிக்கல் நிலையில் இந்த சீகம் இவைகளை வெளியே தள்ளுவதில்லை. இச் சனீஸ்வரக் கூட்டத்துடன் அக்கம் பக்கங்களிலுள்ள சதைக்கோளங்களும் ரசங்களைக் கக்கிக் கலந்து விடுகின்றன. விஷங்கள் கலந்த இக்குழம்பு, உடைந்து கெடுகின்றது. உள் இழுக்கப்படாத புஷ்டி சத்தும் இத்துடன் கலக்கவே இந்த சீகம், பெரிய விஷ இயந்திர சாலையாக மாறிவிடுகிறது. பிறகு கேட்பானேன் இங்கிருந்து விசித்திரமான, பயங்கரமான விஷ லாகிரிப் பொருள்கள் உண்டாகின்றன.

சுந்தர யோக சிகிச்சை முறை 105

சிறுகுடலிலிருந்து தள்ளப்படும் உணவு மிகுதியால், நூற்றுக்குத் தொண்ணூறு பாகம், நீர்க் குழம்புமயமாக இருக்கின்றது. விஷப் பூச்சிகள்  விருத்தியாக இன்னும் பல செளகரியங்கள் இக்குழம்பில் அமைந்துள்ளன பித்தகோசம் உணவு ஜீரணமாவதற்குப் பித்தத்தைச் சிறுகுடலில் தாராளமாகக் கொட்டுகிறது. சிறுபாகம் உபயோகமாக, பெரும் பாகம் சீகத்திற்குள் தள்ளப்படுகிறது. இப்பித்தம், விஷப் பொருள் என்றறிய வேண்டும். சிறு குடலில் சதைச் சுவர்கள் ஜீரணத்தின் பொருட்டு விஷ ரசங்களைக் கக்குகின்றன.  இவைகளும் வந்து சேருகின்றன.

சுந்தர யோக சிகிச்சை முறை 104

குடலின் பல பாகங்களில் தள்ளப்பட்ட இப்பொருள், அதாவது மலம், தேங்கிக் கொள்ளுகிறது. இந்நிலைமையே மலச்சிக்கலென்று கூறுகிறோம் இப்பொருள்கள் தங்குமிடங்களில் அழுகி, நாறி விஷங்களை உண்டாக்கி அபாயமாக மாறுகின்றன.  எல்லா இடங்களைக் காட்டிலும் சீகம் (CECUM) என்று சொல்லக் கூடிய  குடல் பாகம்தான் மிகவும் அபாயகரமானது! எக்காரணங்களால் இம்மாறுபாடுகள் ஏற்படுகின்றன

சுந்தர யோக சிகிச்சை முறை 103

பல வியாதிகள் மலச்சிக்களிலிருந்து ஆரம்பிப்பது போலவே, எந்த ஜுர வியாதிகள் வந்தாலும் மலத்தைக் கட்டி விடுகிறது. இதை அறிந்தே வைத்தியர்கள், மருந்துகளில் பேதியாகிற வஸ்துக்களை சேர்க்கிறார்கள்.  குடலில் மலம் தங்கவே விஷம் உண்டாகிறது. இது உடலெல்லாம் பரவுகிறது.  இதைச் சுய – விஷ – வெறி ( AUTO – INTOXICATION ) என்கிறார்கள். உடல் தனக்குத்தானே விஷத்தைக் கக்கிக் கொள்கிறது.  இந்த அபாயகரமான நிலை குடலில்தான் ஏற்படுகிறது.  அதாவது, பெருங் குடலினுடையதே இப்பொறுப்பு, இக்குடல் உபயோகமற்ற…

சுந்தர யோக சிகிச்சை முறை 102

நோய்கள் பல— வெளியில் இருந்தால் தான் மலம் கொடியது என்ற நினைவு தவறு. இயற்கை இதை உடலில் வைக்க பாதுகாப்பை நிரப்பி இருக்கிறதென்று எண்ணுவதும் அறியாமையே.  தினம் இது சரியாக வெளியே போகா விட்டால் தலைவலி, பசியின்மை, பாசம் படர்ந்த நாக்கு. அபெண்டிஸைடிஸ், தூக்கமின்மை, நரம்புகளில் சோர்வு, குடல் வீக்கம், கீழ்வாதம் ( ருமேடிஸம் )  காசநோய் இன்னும் பல வியாதிகள் உண்டாகு மென்று டாக்டர் கெல்லாக் ( Dr. KELLOGG )  சொல்லியிருக்கிறார். இந்தப் பட்டியலில்…

சுந்தர யோக சிகிச்சை முறை 101

வெளியில் பார்த்தவுடன் வாந்தி எடுக்கும் மகான்.  கொஞ்சம் தன் உடலை ஞாபகம் செய்து கொள்ள வேண்டும். மலம் சேர்க்கணக்காய் இவர் குடலில் தங்கி நிற்கும். பலநாள் பண்டமாய் கேட்பாரற்று, நாறிக் கிடக்கும். பல வருடங்களாக வெளிப் போக்கின்றி வரண்டுகூட இருக்க மென வைத்திய நிபுணர்கள் கூறுகிறார்கள். இதை வயிற்றில் வைத்துக் கொண்டு, வாசனையை மேல் பூசி பகட்டு அங்கிகளால் மூடி, நாகரீக மனிதரென்று பெருமையில் உலாவுகிறார்கள் பலர். உள் உடல் சுத்த மில்லாத வாழ்க்கை நாகரீகமுற்றதாகுமா?

சுந்தர யோக சிகிச்சை முறை 100

மலம்சிக்கக் கொள்வாய் பிணிகள் பலகாண் மலமகல அன்றன்றே பண்பு. பெ ரு ங் கு ட ல் மலம் – பெருங்குடலின் பெரிய பிணி மலச்சிக்கல் மலம் என்றாலே  அருவருப்பு உண்டாகும்.  இதைக் கண்டவுடன் பலர் வாந்திகூடச் செய்து விடுவார்கள்.  பார்க்கவும், தொடவும், வெறுப்பை விளைவிக்கக் கூடியது மட்டுமல்ல, இதை சரியான முறையில் விலக்காவிட்டால் மிகுந்த அபாயத்தை உண்டாக்கும். ஊரில் சேரும் மலம் ஊரையே ஒக்கும், வயிற்றிலே சேரும் மலம் ஆளையே கொன்றுவிடும்.  இவ்வளவு கொடிய வஸ்து…

சுந்தர யோக சிகிச்சை முறை 99

விந்து நோய்கள் ஆண்மை அழியும், இதற்கும் பரிகாரம் விளம்பரத்தில் மட்டும் தானுண்டு மருந்துகளெல்லாம் ஏமாற்றமே மிகக் கெடாதவர், இயற்கை தர்மத்தால் ஒரு வேளை முன்னேறலாம். வெளிப்படையாக அறிய முடியாத கொடிய தன்மை கொண்டவை இவை. மலட்டுத் தனம் பெண் மலட்டுக்கு மருந்து ஏது?  பெண்மலடு நீங்க ரண சிகிச்சை செய்து புண்ணாக்குகிறார்கள்.  குறை நீங்கியவர் இல்லை.  ஆயுர் வேத முறையில் மிகச் சிலருக்குப் பலன் கிடைத்ததாகச் சொல்லுகிறார்கள். மூலம் இதை அறுத்துத் தள்ளுகிறார்கள்.  இராவணன் தலை போல்…

சுந்தர யோக சிகிச்சை முறை 98

பெண் நோய் அல்லது மேகப்படை ( VENEREAL DISEASE ) இதற்கு போட்டுக் கொள்ளும் ஊசிகளெல்லாம், இதன் மேல் சின்னங்களுக்கு குணம் கொடுத்தாலும், இது நன்றாகப் பரவிவிட்டால், இதற்கு உடலையும், உயிரையும் பறி கொடுக்கிறார்கள். லிவர் அல்லது கொலைக்கட்டி நாட்டு வைத்தியத்தில், அபூர்வமாக ஆயிரத்தில் ஒரு கேஸ் பிழைக்கலாம்.  இதற்கு இங்கிலீஷ் வைத்தியமே கிடையாது கிட்னி தாக்கப்பட்டால் சிகிச்சை என்பது மருந்தால் இல்லை.

சுந்தர யோக சிகிச்சை முறை 97

பராலிஸிஸ் ( PARALYSIS ) ஊசி எற்றுதலால் சொல்ப குணம் பெற்றவர் சிலர்.  இவர் பிற்காலத்தில் இந்நோயிலேயே உயிரிழப்பது உலக அனுபவம். போலியோ அல்லது குழந்தை வாதத்திற்கு இன்னும் மருந்து நினைக்கப்படவில்லை. குஷ்டத்தில் சிகிச்சை எல்லாம் பிறருக்குப் பரவாமல் தடுப்பதிலேயே நிற்கின்றது. குஷ்டத் தழும்பில் ஏற்றும் எண்ணெய் முதலிய மருந்து ஊசிகளெல்லாம் நிறத்தை மாற்றும், இடத்தில் மயிர் முளைக்கச் செய்யலாம். ஆனால் உணர்ச்சி வரச்செய்ய சக்தியற்றவை.  குணமாகிவிட்டதென்று மனப்பால் குடித்துச் சென்றவர், மனம் கசிந்து, இக்கடுநோய் வட்டியும்,…

சுந்தர யோக சிகிச்சை முறை 96

டி.பிக்கு ஏ.பி, காற்றூசி ( A.P.INJECTION ) ஸ்ட்றெப்டோமைசின் ஊசி போடுகின்றார்கள்.  காற்று ஊசி பல கோளாறுகளை உண்டாக்குகின்றது.  ஸ்ட்றெப்டோமைசின் ஊசி திருப்தி இல்லை என்பதை நோயாளிகளும், வைத்தியர்களும் ஒப்புக் கொள்ளுவார்கள்.  இந்த நோயிலிருந்து பிழைத்தவர்கள்.  அபூர்வமாக இருக்கலாம்.  சிகிச்சையால் பிழைத்தவரை, நோய், திரும்பித்தாக்காத பேர்கள் எண்ணுவதற்கு அகப்படமாட்டார்கள். டான்சிலிடிஸ், அடினாய்ட்சுக்கு ஆபரேஷன் செய்வார்கள்.  ஆனால், இவை திரும்பவராதென்று டாக்டர்கள் உறுதி கூறமாட்டார்கள்.  நோயாளிகள் இவை திரும்பி வந்தவிடுகிறதென.  முறையிடுகிறார்கள்.

சுந்தர யோக சிகிச்சை முறை 95

ஆஸ்த்மாவுக்கு ஏற்பட்டுள்ள மருந்து, அந்த சமயத்திற்கு மட்டும் கபத்தைக் கலைத்து மூச்சுவிட சிறிது எளிதாக்கும். நோய் தீவிரமடைந்தால் இன்ஜெக் ஷன் மருந்துகளும் பயன்படுவதில்லை. டயாபெடிசால் சாகாமலிக்க, தினம் இன்சுலினை எற்றிக் கொண்டே இருக்கவேண்டும்.  ஒரு நாளைக்கு ஒரு தடவையோ, பல தடவைகளோ ஊசி தேவை. இன்சுலின் நிறுத்தப்பட்டது,என்றால் பழைய நோய் திரும்பவும் முழு வேகத்தில் தாக்க ஆரம்பிக்கும், சிறுநீர் சர்க்கரையையோ, ரத்தச் சர்க்கரையையோ ஒழிப்பதில்லை.

சுந்தர யோக சிகிச்சை முறை 94

1 ஆஸ்த்மா 2. டயாபெடிஸ் 3. இருதய நோய்கள் 4 இரத்த இறுக்க நோய்கள் 5. டி.பி. 6. குடல் புண் 7. டான்சிலிடிஸ் ( TONSLITITIS) 8. அடினாய்ட்ஸ் ( ADENOIDS ) 9. ஜீரணக்கேடு ( DIGESTIVE DISORDER) 10. பராலிசிஸ் (PARALYSIS) 11 போலியோ ( POLIO ) 12. குஷ்டம் (LEPROSY) 13. கடுமையான மேகப்படை அல்லது வி.டி ( ADVANCED VENEREAL DISEASES ) 14. லிவர், கிட்னி நோய்கள்…

சுந்தர யோக சிகிச்சை முறை 93

ஹோமியோபதியும், ஆயுர்வேதமும் இந்தப் பட்டியலில் உள்ள நோய்களில் சிலவற்றை முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று கூறுகின்றன. ஆனால், இம்முறைகளைக் கையாளும் வைத்தியர்களால், குணப்படுத்த முடிவதில்லை என்று நோயாளிகளின் அனுபவத்திலிருந்து கூறலாம். வைத்திய முறை குணப்படுத்த முடியாது என்று கூறும், மருந்து கண்டு பிடிக்காத சில நோய்களின் பட்டியல்—

சுந்தர யோக சிகிச்சை முறை 92

எவ்வளவு சீக்கிரம் நோய் தாக்கியவுடன் நோயாளி யோக சிகிச்சைக்குத் திரும்புகிறாரோ, அவ்வளவு சீக்கிரமாகக் குணமடைவார்.  தற்காலத்தில் தாண்டவமாடும் மேல் நாட்டு அல்லோபதி வைத்திய நிபுணர்கள், கீழ்க் காணும் நோய்களை ஒழிக்க மருந்து, சிகிச்சை  கிடையாதென்று முறையிட்டு  விட்டனர்.  இவைகளில் சிலவற்றுக்குத் தற்போதைய பயன், சிகிச்சை மட்டும் விதிக்கின்றார்கள்.  இன்னும் சிலர் உடல், இயற்கை, உணவு ஒழுக்கத்தால் குணமடையலாம் என்று கூறுகிறார்கள்.   இப்படிப்பட்ட நோய்களின் பட்டியல் பெருகிக் கொண்டே போகின்றது.  நூதனமான புது நோய்கள் கிளம்பி சேர்க்கப்…

சுந்தர யோக சிகிச்சை முறை 91

இனி நோயாளிகள் இச் சிகிச்சையை மேற்கொள்ளும் முன், கவனிக்க வேண்டிய பொதுத் திட்டங்களைக் கூறுவோம்.  ஊசி, உள் மருந்து, வெளி மருந்து, அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம் இவை எல்லாவற்றையும் தீர்த்த பிறகு தான் யோக சிகிச்சைக்குத் திரும்புகிறார்கள்.  இதற்குள் உடலின் இயற்கைச் சக்தி எல்லாம் மிகக்குன்றி விடுகின்றன.   உட்செலுத்திய மருந்துகள், பல கோளாறுகளை விளைவித்து விடுகின்றன.  மற்ற வைத்திய பரீட்சையில் முக்கியமான காலம், வருடக் கணக்கில் வீணாகி விடுகிறது.   படுத்தபடுக்கையாக நோயாளி ஆகிவிட்டால், யோக…

சுந்தர யோக சிகிச்சை முறை 90

‘யோக சிகிச்சை’  என்ற பெயர் இந்த நூலில் கண்ட இம்முறைக்கு இடுவானேன்?  பிணியை ஒழிப்பதற்கு, ஈசன் அளித்துள்ள யோக சம்பந்தமான எல்லா அம்சங்களையும், என் நூதன அனுபவ ஆராய்ச்சி சாஸ்திர வழியில் பிணைக்கப்பட்டிருப்பதால் ‘ சுந்தர யோக சிகிச்சை ‘ என்று பெயரிடப்பட்டுள்ளது.  நான் ஒருவனே கையாளக் கூடியது என்று பொருளல்ல, யாவரும் இதில் தேர்ச்சி பெற்று மானிட உலகிற்குப் பணியாற்றலாம்.  தன்னைத் தானே காப்பாற்றிக் கொண்டு, தான் அடைந்த சுகத்தைப் பிறருக்குப் பரவச் செய்யலாம்.  இந்த…

சுந்தர யோக சிகிச்சை முறை 89 

பிணிகளும், சிகிச்சையும். சிகிச்சையின் பிரிவுகள். யோக முறைகளால், பிணியைப் போக்கும் வழிக்கு யோக சிகிச்சை  என்று பெயர் பலரும் இதைக்கையாளலாம் இவர்கள் உபயோகிப்பது பெரும்பாலும் யோகாசனம் ஒன்றே.  பிராணயாமத்தையும் இன்னும் சிலர் சேர்த்துக் கொள்கிறார்கள். உணவையும், ஒழுக்கத்தையும் அநேகமாய் மறந்து விடுகின்றனர்.  யோகப் பயிற்சிக்கு அடுத்தபடியாய் சிகிச்சையின் முக்கிய அம்சமாக உணவு ஒழுக்கத்தையும் பிணைத்து அளிப்பதில்லை.  பின் விளக்கப்படும் மற்ற தொகுதிகளை அறவே மறுக்கின்றனர்.

சுந்தர யோக சிகிச்சை முறை 88

தொழிலாளர்கள், ரயில் உத்தியோகஸ்தர், தபாலாபீஸ், தந்தி ஆபீஸ் காரியஸ்தர்கள், இயந்திர சாலை வேலையாட்கள், மேற்கூறிய கருத்துக்களைக் கொண்டு, நோய் தடுத்து ஆரோக்கியமாய் இருக்க திட்டம் அமைத்து வாழலாம்

சுந்தர யோக சிகிச்சை முறை 87

மாணவர்களுக்கு, மேல் படிப்பாளர்களுக்கு எழுதல் 4 மணி அதிகாலை நித்தியக்கடன் 4.30 மணி வரை படித்தல் 6 மணி வரை ஆசனப் பிராணயாமம்   7 மணி வரை ஸ்னானம் துதிக்குப் பின் பால் 7.30 மணிக்குபடித்தல், உணவு காலம் வரை பகல் 9 லிருந்து 10 மணிக்குள் போஜனம் சத்துள்ள சிற்றுண்டி 2 லிருந்து 3 மணிக்குள் ஆட்டம், பொழுது போக்கு 5 லிருந்து அல்லது 6 லிருந்து 6.30 வரை படித்தல், இரவு உணவு இரவில்…

சுந்தர யோக சிகிச்சை முறை 86

கடவுளே இல்லை என்போருக்கும் ஒரு வழி சொல்லுகிறேன். துதிக்கு ஒதுக்கப்பட்ட காலத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி இருதய ஸ்தானத்தில் நிறுத்தி தானே சத்திய, நித்திய ஆனந்தம் என்று எண்ணி லயிக்கட்டும். நோய் தடுத்து ஆரோக்கிய சுகத்தில் வாழ ஒரு உதாரண திட்டம் கொடுக்கிறேன். காலை எழுதல் 4 அல்லது 4-30 மணி மலஜலப் போக்கு, நித்தியக் கடன்  அரை மணி நேரம். ஆசனம், பிராணயாமம் 5லிருந்து 6 மணி வரை ஸ்னானம், துதி 6.30லிருந்து 7.00…

சுந்தர யோக சிகிச்சை முறை 85 

துவிஜர்களாக இருந்தாலும் இவர்களுக்குத் தினசரி  சந்தியா காயத்திரியை மூன்று வேளை முறைப்படி செய்வதுதான், முறை மற்றவர்கள் தங்களுக்கு இஷ்டமான மூர்த்தியின் உருவத்தை புறத்திலும், அகத்திலும் பார்த்து, பெரியோர் இயற்றிய துதிகளை மனமுருகி  துதிக்கலாம் துதிப்பதற்கு உலக இன்னல்களுக்கு, மத்தியில் சாந்தி, சக்தி பெற கந்தன் புகழ், அன்னையின் திருவடி மலர்கள், பரமாத்ம நாம சங்கீர்த்தன பஜனாவளி என்ற எனது மூன்று நூல்கள் மிக்க உபயோகமாகும். சுந்தரோதயம் பத்திரிகையில் வெளிவந்த, பாடல்களும், கீர்த்தனங்களும் பாராயணத்திற்கு உதவும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 84

துதி நோய் தடுக்கும் திட்டத்தில் துதியும் கலந்துள்ளது.  துதி என்பதானது, மனிதன் தன் சக்தியை கணக்கற்ற அளவுக்கு, அதிகரித்துக் கொள்ளும் மார்க்கமாகும். மனத்திற்குச் சாந்தியும், நரம்புகளுக்கு வீர்யமும், அமைதியும் எண்ணற்ற எதிர்பாராத அபாயங்களிலிருந்து விடுதலை அடையும் வழியும்.  ஊழ்வினையால் ஏற்படும் கெடுதலையும் அணு அளவுக்குக் குறைத்துக் கொள்ளும் சூழ்ச்சியும் கொண்டதே துதி.  இதன் விதிகளை, சாந்தி யோகம், சந்தியா காயத்ரி ஜபயோகம் என்ற நூல்களில் காணலாம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 83

நித்திரைத்  திட்டம். தினசரி வாழ்க்கையில் நித்திரையின் தேவையும் சுமாராகக் குறிப்பிட்டுவிடுகிறேன். மூளை வேலைக்காரருக்கு 6 மணி நேரம் மாணவர்களுக்கு   8 மணி நேரம் மூளை, உடலுழைப்பு கலந்தவர்களுக்கு 7 மணி நேரம் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 9லிருந்து 10 மணி நேரம். நித்திரைக்கு செல்ல வேண்டிய காலம். இளம் மாணவர்கள் இரவு 9 மணி, உயர் படிப்பாளர்  இரவு 10 மணி மூளை வேலையும், உடலுழைப்பு கலந்தவர் இரவு 10 மணி, பாட்டாளி இரவு 9 மணி

சுந்தர யோக சிகிச்சை முறை 82

நோய் தடுத்து ஆயுள் ஆரோக்கியத்தைப் பெருக்கும் இந்த கவசத்தை காலையில் மேற்கொள்ளுதல் நலம்.  இரவில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தூங்கி எழுந்து பின்பும் அல்லது வேலை முடித்து வந்த உடனேயும், பிரயாணத் தொழிலில்லாத மறுநாள் ஓய்வு காலத்திலும் இத்திட்டத்தை நிறைவேற்றலாம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 81

கால் மணி நேர அவசரத் திட்டம், சர்வாங்காசனம் 5 நிமிடம், மத்ச்யாசனம் அரை நிமிடம், சிரசாசனம்  5 நிமிடம், சவாசனம் 1 அரை நிமிடம், நாடி சுத்தி 3 நிமிடம். ஒரு மணி நேரக் காலத்திட்டம், தினசரி பயிலுவதற்கும், அரை மணி நேர சிக்கனத் திட்டம் தேவையானால், சில சமயங்களுக்கும், கால் மணி நேர அவசரத் திட்டம் வெகு அபூர்வமாகவும் கையாள வேண்டும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 80

நாடி சுத்தி பத்மாசனத்தில் செய்யவும், மேற்கூறப்பட்ட  காலம் ஆசனங்களுக்கிடையே ஓய்வையும் உள்ளடக்கியது.  இந்த ஆசனங்கள் சரீர உழைப்பு, சிரமம் உண்டாக்காத தன்மை கொண்டதாதலால் பழகியவர், ஆசனங்களை ஒன்றன் பின் ஒன்றாக ஓய்வின்றியே செய்து கொள்ளலாம்.  ஆசனத்தில் நிற்பதே இவர்களுக்கு ஒரு ஓய்வு.

சுந்தர யோக சிகிச்சை முறை 79

அரை மணி நேர சிக்கனத் திட்டம். தனுராசனம்  3 நிமிடம்  பஸ்சிமோத்தானாசனம் 3 நிமிடம்  ஹலாசனம்  3 நிமிடம் சர்வாங்காசனம் 7 நிமிடம் மத்ச்யாசனம்  1 நிமிடம்  சிரசாசனம்  7 நிமிடம் சவாசனம் 3 நிமிடம்  உட்டியாணா  2 நிமிடம் நெளலி   2 நிமிடம் நாடி சுத்தி 5 நிமிடம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 78

1.மயூராசனம்,     2. சலபாசனம்,  3.யோகமுத்ரா,    4.புஜங்காசனம், 6. வாம, தக்ஷிண நெளலி,   7.  நெளலிக்ரியா 8.பாதஹஸ்தாசனம், 9. திரிகோணாசனம்,  10.  சித்தாசனம்.  காலம் அதிகமிருந்தால் மேற்கூறிய பத்து ஆசனங்களைக் கலக்கப் பிடித்தமில்லாவிட்டால், 1,2,3, 6, 7 மட்டும் சேர்த்து மிகுதியான காலத்தை சர்வாங்காசனம், கும்பகப் பிராணயாமங்களுக்கு, அதே வரிசைக் கிரமத்தில் சேர்க்கவும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 78

நாடி சுத்தி, பிராணயாமம் பத்மாசனத்தில் இருந்தபடியே செய்யப் பழகலாம். இந்தக் காலக் குறிப்புகள், ஆசனங்களிடையே ஏற்பட வேண்டிய ஓய்வையும் உள்ளடக்கியுள்ளது.  இந்தத் திட்டமும், கீழ்காணும் மற்ற இரண்டு திட்டங்களும், ஆரம்ப சாதகர்களுக்கல்ல, ஆசனம் நன்றாகப் பழகிய பின் ஏற்பட்டவையாகும் ஒரு மணிக்கு மேல் காலமிருந்தால் ஆனந்தரகஸ்யத்திலுள்ள  மற்ற ஆசனங்களுக்கு உபயோகிக்கவும்.  மேல் விதித்துள்ள ஆசனங்களில் நிற்கும் காலத்தையும் அதிகரித்துக் கொள்ளலாம்.  சேர்க்க வேண்டிய மற்ற ஆசனங்களில்.  கீழ்க்கண்ட வரிசை முக்கியமெனக் கருதவும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 77

ஆசனங்கள் செய்ய வேண்டிய நிமிடம்   செய்யவேண்டிய தடவை       தனுராசனம்                                        2                                  3                பஸ்சிமோத்தானாசனம்                  2                               …

சுந்தர யோக சிகிச்சை முறை 76

எவ்வளவு காலம் இதற்குச் செலவழிக்க வேண்டும்?  ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது இதில் ஈடுபடுதல் அவசியமாகும்.  எதிர்பாராத சம்பவங்கள் குறுக்கிட்டால் அரை மணி நேரமாவது பயிலலாம்.  எதற்குமே ஓய்வில்லாவிட்டால் கால்மணி நேரம் ஓய்வற்ற நாளிலும் இதற்குச் செலவிடலாம்.  தினம் தனுராசனம், பஸ்சிமோத்தானாசனம், ஹலாசனம், சர்வாங்காசனம், மத்ச்யாசனம், சிரசாசனம், அர்த்த மத்ச்யேந்த்ராசனம், பத்மாசனம், உட்டியாணா, நெளலி, சவாசனம், நாடி சுத்தி செய்ய வேண்டியது, மற்றவைகளை ஓய்வுக்குகந்தவாறு இவைகளுள் கலந்து கொள்ளலாம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 75

 நோய் தடுக்க மேல் கூறப்பட்ட பலன்களைப் பெற்று வாழ யோகாசனப் பிராணயாமத்தை எவ்வாறு உபயோகிக்க வேண்டும்?   இதற்கு தினசரித் திட்டம் என்ன?  எல்லோரும் எல்லாவற்றையும் செய்வது அவசியமா?  ஆனந்தரகஸ்ய நூலில் கூறிய ஆசனங்களில் எவற்றைத் தினம் அவசியம் செய்ய வேண்டும்?  எவைகளை இஷ்டம், காலம் , செளகரியத்திற்கொப்ப சேர்த்துக்கொள்ளலாம். ஒருவன் ஒரு வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்களாவது செய்யவேண்டும்.  ஒரு நாள் விடுமுறை எடுத்து வாரத்தில் ஆறு நாட்கள் செய்தல் அதிகப்பலனைக் கொடுக்கும். நித்தியக் கடனாக…

சுந்தர யோக சிகிச்சை முறை 74

மனதிற்குச் சாந்தி அளிக்கிறது. பிராண உடலில் சமாதானமாக இயற்கைக்குகந்தவாறு பரவி, நிலைத்து வேலை செய்யத் தூண்டுகிறது. சளைக்காது அதிக வேலை, அதிகப்படிப்பு, அதிகச் சிந்தனை செய்ய உதவுகிறது. ஒவ்வொருவரையும் அவரவர் தொழிலில், வாழ்வில் சக்தி பெற புத்தி, சாமார்த்தியத்தை அளிக்கிறது. இக்கவசத்தின் எண்ணற்ற பலன்களை எடுத்துரைக்க இயலாது.

சுந்தர யோக சிகிச்சை முறை 73

உடலை வனப்புறச் செய்கிறது. ஊளைச்சதை பற்றாது தடுக்கிறது. ஆயுளை அதிகரிக்கின்றது. புலன்களை சுத்தம் செய்கிறது. மூளையை அபிவிருத்தி செய்கிறது. நரம்புகளை, நரம்பு வலைகள், நரம்பு சக்கரங்களை விழிப்பித்து, வீரியப் படுத்தி நன்கு வேலை செய்யத்தூண்டுகிறது. காமக்ரோத, லோப, மோக, மத மத்சரங்களை விலக்கி பரிசுத்தம் செய்து ஆட்சி புரிகிறது.

சுந்தர யோக சிகிச்சை முறை 72

உயிர்கருவிகளான இருதயம், சுவாசப்பைகளை நேராகத் தாக்கி வீர்ய நிலையில் வைக்கிறது. ரத்தவோட்டத்தை சுறுசுறுப்பாக்கி, அசுத்தத்தை எளிதாக முற்றிலும் போக்குகிறது. ரசங்களை ஒழுங்கான முறையில் கக்கச் செய்து, ரத்தத்தில் கலக்கச் செய்கிறது. நோய் கிருமிகளைக்கொன்று, உயிர்ப்பிக்கும் சக்தியை எண்ணற்ற மடங்கு அதிகரிக்கிறது. வளர்ச்சி, ஆண்மை, பெண்மை, உன்னதம் பெற உதவுகிறது.

சுந்தர யோக சிகிச்சை முறை 71

உணவு, ஒழுக்கம், உழைப்பு இயற்கை முறையில் அமைத்துக் கொள்வதுடன், நோயைத் தடுத்து, சுகமாக நீடூழி காலம் வாழ, யோகாசனப் பிராணாயாமம் எவ்வாறு நிறைவேற்றுகின்றது?  இதற்கு சக்தியுண்டு என்று அறிய விஞ்ஞானம் என்ன? இந்த கேள்விகளுக்கு விபரமாக யாவரையும் நம்பச் செய்யும் ஆனந்த ரகஸ்யம் என்னும் நூலில் காணவும். இந்தக்கவசத்தின் சக்தியையும், இது வேலை செய்யும் முறைகளையும் கீழ்க்கண்ட குறிப்புகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 70

ஆரோக்கிய வாழ்க்கைக்கும் இயற்கை வாழ்க்கைக்கும் புலனடக்கத் திற்கும், மனச்சாந்திக்கும், விரோதமாகவே அமைந்திருக்கின்றது.  இயந்திர யுக – நாகரிக – அவசர, வாழ்க்கை, உணவு, ஒழுக்கம், உழைப்பு மட்டும் நன்முறையாக இருந்தால் போதாது.  இதனால் மட்டும் நோய்களைத் தடுத்து நிறுத்த இயலாது.  வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வாலும் சிதைக்கப்படாத‍, நோய், தடுக்கும்.  சீர்திருத்தம், அமோக  சக்தி வாய்ந்த, ஒரு கவசம் வேண்டும்.  அந்த கவசம்தான் யோகாசனப் பிராணயாமம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 69

 ஹோட்டல்கள் கணக்கின்றி ஊரெல்லாம் பரவிவிட்டன.  இவைகள் பணம் திரட்ட நடத்தப்படுகின்றன.  ஜனங்களுக்குச் சேவை செய்ய அல்ல.  லாபமும், சேவையும் கலந்து நடத்தப்படுவதில்லை. இதில் உணவு தயாரிக்கும் முறைகள்  சேர்க்கப்படும் பொருள்கள், நோய் பரவக் காரணமாகின்றன.  பட்டினங்கள் பெருக இயந்திர யுகம் பரவ, வீட்டிலுண்பது குறைய, ஹோட்டல்கள் எங்கு பார்த்தாலும், கிளம்ப,காரணமாகிவிட்டது இவைகளில் உண்ண வேண்டிய அவசியம் அடிக்கடி ஏற்பட நோயிலிருந்து ஒருவன் தன்னை தடுத்துக் கொள்வது சிரமமோங்கிய, நுட்பமான செயலாகிவிட்டது.

சுந்தர யோக சிகிச்சை முறை 68

பசிக்கும் பொழுது உண்ணவேண்டும்.  நாகரீக வாழ்க்கையில் எம்மட்டும் இத்திட்டங்கள் நிறைவேறுகின்றன?  நித்திரை, உழைப்பு, இவைகளெல்லாம் எண்ணற்ற சமயங்களில் தாறுமாறாக நடக்கின்றன.  தொத்து நோயிடங்களில் புகுதல், ஒட்டு நோயுள்ளவர்களுடன் அறிந்தும், அறியாமலும் பழகுதல், இவைகளுக்கெல்லாம் பாதுகாப்பு வேண்டும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 67

மலப்போக்கு உணர்ச்சியை எடுத்துக் கொள்வோம்.  விலங்குகளுக்கு இது ஏற்பட்டவுடன் மலத்தைக் கழித்துவிடுகின்றன.  வைத்தியரும், வைத்தியசாலைகளும் இன்றி, மனிதனைக் காட்டிலும் ஆரோக்கியமாக வாழ்கின்றன.  இதிலும் மனிதனின் போக்கு தொத்துவியாதி, அசுத்த ஆபாசங்களுக்கு இடம் தரும்.  சுய இச்சையாய் காட்டில் திரியும் விலங்குகள், இன்றும் ஆரோக்கியமாக அமோகமாகப் பெருகி வாழ்கின்றன.  விலங்கின் சுதந்திரம் மனிதனுக்கில்லை.  வசதி இருந்தாலும், வம்பு பொழுதுபோக்கு, நாகரீகத் திட்டங்களை உத்தேசித்து இயற்கையின் மிக முக்கியமான இந்த உணர்ச்சியை ஒதுக்கி வைக்கிறார்கள்.

சுந்தர யோக சிகிச்சை முறை 66

நிர்வாண ஊரில் கோவணாண்டி, பைத்தியக்காரன், துணி கட்டிக் கொள்ள இஷ்டப்பட்டாலும், நிர்வாண ஊரில், துணி கிடைத்தால் தானே!  கைக்குத்தல் அரிசி, தீட்டாத அரிசியை இயற்கைக்குகந்தபடி உபயோகிக்க சிலர் விரும்பலாம்.  மந்திரியிலிருந்து மடப்பள்ளிக்காரன் வரையிலும் தீட்டிய அரிசியைத் தின்று சில கேடுகளை சம்பாதித்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.    

சுந்தர யோக சிகிச்சை முறை 65

பிணி (நோய்) தடுக்கும் கவசம் எவ்வளவு சீர்திருத்தம் செய்து கொண்டாலும், தற்கால நாகரீக வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விலகிக் கொள்ளுதல் இயலாததாகின்றது.  இப்படி நாகரீகத்தை விலக்கி வாழ விரும்புகிறவனுக்கு இடம், பொருள், ஏவல் செளகரியங்கள் குறைவாகவே இருக்கின்றன. இயற்கைக்கு விரோதமாகத் திரும்பிய சமூகம், இயற்கைக்கு விரோதமான திட்டங்களையே வாழ்வில் பிரதானமாகக் கொண்டு விட்டது. இத் திட்டங்கள் விரும்புகிறவனை, யஇற்கைக்கு ஒத்து வாழ முடியாதபடி வதைக்கின்றது. மேலும் பெரும்பாலோர் வறுமையில் உயிர்ப்பொருள், துணைப்பொருள், தேவைக்குத் தக்கபடி பிரதானப் பொருள் பெறாததால்,…

சுந்தர யோக சிகிச்சை முறை 64

                யம் லப்தவா சாபரம் லாபம் மன்யதே நாதிகம் தத!                 யஸ்மினஸ்திதோ ந துக்கேன குருணாபி விசால்யதே !! எது கிட்டியபின், அதற்கும் மேலான பலன் இல்லையென்று நினைக்கின்றாரோ எதில் நிலைத்த பிறகு எப்படிப்பட்ட கடுமையான துக்கம் வந்தாலும் அசையாமல் சலிக்காமல் இருக்கின்றாரோ.                 தம் வித்யாத்துக்கஸம்யோகவியோகம் யோகஸம்ஞிதம்!                 ஸநிஸ்சயேனயோக்தவ்யோயோகோ ஸ நிர்விண்ணசேதஸா!! அது துக்கத்தின் சேர்க்கையிலிருந்து விடுபட்டதான யோகம் என்று பெயருள்ளதென அறியப்படட்டும்.  இந்த யோகம் திடமான தீர்மானத்துடன் பழக்கப்படவேண்டும்.  எப்பிணியும் துக்கமே,…

சுந்தர யோக சிகிச்சை முறை 63

 சாந்தி யோகம் என்ற என்நூலைப் படித்தால், கருத்து நன்கு விளங்கும், ருத்ரம், சமகம் முதலிய வேதாந்த மந்திரங்கள், சாந்தி பஞ்சகம், அஷ்டாங்க யோகம் என்ற எல்லா மன சிகிச்சைகளும், நாம் இவைகளில் பெற்றுள்ள தேர்ச்சியையும் இவைகளின் அவசியத்தையும் புலப்படுத்துகின்றன. நம் மேதாவிகள் உடல்பிணி, மனப்பிணி என்பவைக்கு மேலாக பவப்பிணி என்பதையும் கண்டுபிடித்துவிட்டார்கள். சுகம் சாந்தியாக நிலைக்கும்.  தன்மைக்கு விரோதமான அவித்தை பிறப்பிறப்புப் பிணியைப் போக்கும் சிகிச்சையை யோகம் என்று நிரூபித்திருக்கிறார்கள். எனவே உடல் பிணி மனப்பிணி, மனப்பிணி,…

சுந்தர யோக சிகிச்சை முறை 62

 இன்னும் இரண்டு சுலோகங்கள் இந்த விசாரணையில் கலக்க வேண்டி யிருக்கிறது.  உடல்பிணி மட்டும் கவனித்தோம்.  உடல்பிணி, மனப்பிணியை உண்டாக்கும். மனப்பிணி, உடல்பிணியை உண்டாக்கும். தற்காலப் பிணி, விஞ்ஞான மேதாவிகள் மேல்நாட்டு ஆராய்ச்சி சிகரத்திலிருந்து முறையிடுகின்றனர்.  மன சிகிச்சை, அதாவது, சைகியாட்ரி (  PSYCHIATRY OR PSYCHOANALYSIS ) என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.  இவர் கூற்றைக் கேட்டு, மருந்துக் கடலில் மிதக்கும் நம் மக்களுக்கு, இதைப் பற்றி ஏதோ உளறவும், விசாரிக்கவும், சிறிது ஆரம்பித்திருக்கிறார்கள்.  இந்த மன சிகிச்சை  யோகத்தின் …

சுந்தர யோக சிகிச்சை முறை 61

யோகியார்- யோகம் யாருக்குக் கிட்டுகிறது? என்ற கேள்விகளுக்குப் பரமாத்மா சொன்ன ” யுக்தம் ” பிணைந்ததான உணவு, ஓய்வு, உழைப்பு, தூக்கம், விழிப்பு என்ற ஐந்து திட்டங்களை ஆராய்ந்தோம். இங்கு நோய் தடுத்தல் என்று விசாரணை  செய்யும் பொழுது, மேல் வறிய ஆராய்ச்சிகளுக்கு இடம் ஏது என்று வினவலாம்.  பரமாத்மா துக்கத்தைப் போக்கும் யோகம் கிட்டுகிறது எனக்கூறுகிறார்.  யோகத்தால் பிணியைத் தடுத்தலே நாம் எடுத்த விஷயமாகும்.  பிணி என்பது துக்கத்தின் ஒரு தொகுதி.  பிணி வந்தபின் அதைப்போக்கும்…

சுந்தர யோக சிகிச்சை முறை 60

கடமை இயற்றவோ, ஸ்மரண, மனன நிதித்யாசனத்திற்கோ   நன்மை தரும் செயலாற்றலுக்கோ ஏற்படவேண்டும் .  இத்தகைய விழித்தலே மிதம் – யுக்தம். மேத்யம் — சோம்பல் கலவாத, சுறுசுறுப்பான விழிப்பைக் குறிக்கிறது. அசுத்தத்திற்குச் செலவழிக்கப்படாத, சுத்தம், அறிவு மிகுதி யாகும், செயலுக்காக விழிப்பது, இத்தகை விழிப்பே மேத்யம் – யுக்தம்.                       

சுந்தர யோக சிகிச்சை முறை 59

ஹிதம் — நித்திரை செய்யும் விதம் ஆரோக்கியத்தையும் உடல் மனத்திற்கு நன்மை விளைவிக்க வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்கு மூன்று மணி நேரம் பின்பும், சூர்யோதயத்திற்கு இரண்டு மூன்று மணிக்கு முன்பும் ஏற்படும் ஹிதம் – யுக்தம். மேத்யம் — சுத்தமான உறக்கம், கனவு, சினிமாப் படக்காட்சி போல் இல்லாமல் உண்மையான கேவலம், சுத்த சுழுத்தி ஏற்படவேண்டும்.  சுத்தமான படுக்கையில் தூய எண்ணங்களை மனத்தில் நினைத்து உறங்க வேண்டும். இத்தகைய நித்திரையே மேத்யம் – யுக்தம். விழிப்பு– மிதம்…

சுந்தர யோக சிகிச்சை முறை 58

உழைப்பு — மிதம் –உடல் சக்தி ஏற்கும்.  வாழ்வுக்கு அவசியமான  உழைப்பே மிதம்.  உடல் தாங்காத அதிக உழைப்பு யுக்தமாகாது. ஹிதம் — பயன் தரக்கூடிய கெடுதலை விளைவிக்காத, ஆரோக்கியத்திற்கு ஏற்றதான உழைப்பே ஹிதம். மேத்யம் — உழைப்பு அல்லது செயல், எவ்விதத்திலும் சுத்தம் கொண்டதாக இருக்க வேண்டும். அசுத்தச் செயல் துக்கத்தை விளைவிக்கும்.  சுத்தமே, மங்களமே யதார்த்தைத்க் கொடுப்பதே மேத்யம் – யுக்தம். தூக்கம்–மிதம்–தூங்குவது அவசியம்.  ஆனால் அளவில்லாது உறங்கிக் கம்பளிக்கடியில் பாதி வாழ்வைக் கழிப்பது…

சுந்தர யோக சிகிச்சை முறை 57

உணவு — மிதம்  — மிதமாக தேவைக்குகந்தவாறு உண்ண வேண்டும். ஹிதம் — உடலுக்குகந்தவாறு இருக்க வேண்டும். மேத்யம் — சுத்தமானதாக, உன்னதம் பெற்றதாக சத்துள்ளதாக இருக்கவேண்டும். ஓய்வு — மிதம் — அமிதமான ஓய்வு சோம்பலாகும். ஹிதம் –நன்மை தரக்கூடியதாக இருக்கவேண்டும்.  ஓய்வு சங்கம், இடம் தன்மை என்பவைகளால் பாதிக்கப்படும்.  சினிமா, டிராமா கொட்டகை, சூதாடும் இடம், சாக்கடை முதலிய அசுத்த நிலம், உகந்த ஆட்டம், கலை, கானம் சம்பந்தமற்றவையே ஹிதம் ஓய்வாகாது. மேத்யம் —…

சுந்தர யோக சிகிச்சை முறை 56

எது நன்மை? என்று ஆராய வேண்டும்.  இந்த ஆராய்ச்சி மேற்கூறப்பட்ட ஐந்து திட்டங்களையும் பற்ற வேண்டும். எது நன்மை என்றால், எது மிதம், ஹிதம், மேத்யமோ, அது தான் நன்மை, மிதமாக மட்டும் இருந்தால் போதாது என்பதால் தான் இம்மூன்றையும் உள்ளடக்கிய ‘ யுக்தம் ‘ என்ற பதத்தை பகவான் வீசுகிறார்.  மிதமான நன்மையைத் தரக்கூடிய சுத்தமான அல்லது உன்னதமானதே உசிதமானதே தகுதியானது.  சிலர் ” மேத்யம் ” என்ற பதம் உணவுக்குத்தான் உபயோகமாகும்.  மற்ற நான்கு…

சுந்தர யோக சிகிச்சை முறை 55

யுக்தம் என்ற பதத்தை பரமாத்மா ஒப்பற்ற அர்த்த புஷ்டியுடன் உபயோகித்திருக்கிறார். யுக்தம் என்ற பதத்தை உசிதமானது என்று மொழி பெயர்த்தால்தான், இதில் யுக்தம் அடங்கிய பல கருத்துக்களையும் வெளிப்படுத்தலாம். யுக்தம் என்ற பதத்திற்கு ‘மிதம்’ (MODERATE) என்று மட்டும் பொருள் கூறுவது.  சுலோகத்தின் ஆழ்ந்த விசாலமான கருத்துக்களைக் குறுக்குவதேயாகும். உசிதம் என்ற பதத்தை தகுதியான என்ற தமிழ் வார்த்தை விளக்கும். பரமாத்மா, யுக்தம் என்ற பதத்தை உணவு, ஓய்வு, உழைப்பு, தூக்கம், விழிப்பு என்ற ஐந்து திட்டங்களுடன்…

சுந்தர யோக சிகிச்சை முறை 54

 யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு  யுக்தஸ்வப்னாவபோதஸ்ய யோகோ பவதி து- கஹா!!  உசீதமான உணவையும் ஓய்வையும் உடையவனுக்கு, கர்மங்களில்  உசிதமான உழைப்பை உடையவனுக்கு, உசிதமான தூக்கமும்,  விழிப்பும் உடையவனுக்கு, துக்கத்தைப் போக்கும் யோகம் கிட்டுகிறது.

சுந்தர யோக சிகிச்சை முறை 54

                யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு                 யுக்தஸ்வப்னாவபோதஸ்ய யோகோ பவதி து- கஹா!!  உசீதமான உணவையும் ஓய்வையும் உடையவனுக்கு, கர்மங்களில் உசிதமான உழைப்பை உடையவனுக்கு, உசிதமான தூக்கமும், விழிப்பும் உடையவனுக்கு, துக்கத்தைப் போக்கும் யோகம் கிட்டுகிறது.

சுந்தர யோக சிகிச்சை முறை 53

                நாத்யஸ்னதஸ்து யோகோஸ்தி ந சைகாந்தமனஸ்நத                 ந சாதி ஸ்வப்னஸீவஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஸுன மிதம் மீறி உண்பவனுக்கும், உண்ணாமலே இருப்பவனுக்கும், அதிகமாகத் தூங்குகிறவனுக்கும், தூக்கத்தைக் கெடுத்து சதா விழித்திருப்பவனுக்கும் யோகம் கிட்டாது. இவ்விரு பான்மையர்களும் யோகிகளல்லர், இவர்கள் வாழ்க்கை   நோய் தடுக்கும் யோக வாழ்க்கை ஆகாது.

சுந்தர யோக சிகிச்சை முறை 52

எங்கிருந்தாலும் தன்கடமையை இயற்றி, உடல் புலனிலேயே ஜீவனைப் புதைத்து விடாமல், உயர்மானிடப் புனிதத்தன்மையும் பற்றி, இயம நியம, ஆசனப் பிராணயாமக் கோட்டைக்குள் வாழ்பவனே யோகி. இவனிடம், மிதம், சமாதானம், ஹிதம், மூன்றும் காணப்படும். இவ்வாழ்க்கை மிக்க எளிது.  நோயைத் தடுத்துச் சுகத்திலூன்றும் யோகி என்பவன் யார்?   யோக வாழ்க்கை என்பது என்ன? என்ற கேள்விகளுக்குப் பதில் பரமாத்மா கீதையில் விளக்குகிறார் அந்த சுலோகங்களைக் கவனித்து இத்தொகுதியை முடிப்போம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 51

நோய் தடுக்க எல்லாவற்றிலும் மிதம், சமாதானம், ஹிதம் என்பவை பிணைய வேண்டும். சுருக்கமாகக் கூறினால், ஒவ்வொரு ஆணும், பெண்ணும் யோகியாக வாழ வேண்டும். யோக வாழ்க்கையை கைப்பற்ற வேண்டும்.  யோகி என்றால் தாடி, ஜடை, அழுக்கு, மணி, ருத்திராட்சம், ஆடம்பரம், படிப்புச் சொற்களுடன், மலை மடங்களில் வாழ்கிறவனல்ல. 

சுந்தர யோக சிகிச்சை முறை  50

உடலுழைப்பே அற்று ஓய்வின்றி மூளை வேலை செய்யும் மானிடரும் உழைப்பின் சீர் தூக்கின்மையால் நோய் கொள்வர், நோயைத் தடுக்க, மூளை வேலையும் வரம்புக்குட்பட வேண்டும். மனஉழைப்பு, இதை மனக்கவலை என்று பொதுவாகக் கூறலாம்.  வாழ்க்கையின் சம்பவங்கள் அதிகமாக மனதைத் தாக்கிவிட்டால், வலிவு குன்றும், சிகிச்சைக்கடங்காப் பிணிகள் உண்டாகும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 49

மானிட வாழ்க்கை, இந்த பொய் நாகரீக சுயநல புலனடிமை விலங்குகள் உலாவும் உலகில் எளிதல்ல, அறிவைப் பெருக்கி நற்புத்தியைத் தீட்டி வாழாவிட்டால், கேடும், தோல்வியும் பற்றிக் கொள்ளும். அதிக உழைப்பு உடலை அழிக்கும்.  நோயைத் தடுக்காது.  இந்த அதிக உழைப்பு உடலை மட்டும் குறிப்பதாகக் கருதக்கூடாது.  மூளையையும், மனத்தையும் குறிக்கும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 48

உழைப்புக்கும் வரம்புண்டு. அதற்கு மீறி உழைக்கப்பட்டால் உடல் நசியும், உணவின் அதே சேர்க்கையால் திருத்தக் கூடிய இவைக் காட்டிலும் உழைப்பு உடலை நசித்தால், ஆரோக்கியம் குன்றி நோயைத் தடுக்க முடியாது. உழைப்பு இயற்கை வாழ்க்கையில் ஏற்படாமல் வயிற்றுப் பாட்டுக்கென்று ஏற்பட்டால், மனப்போக்கின் கூட்டுறவால் இந்த உழைப்பு ஒரு பங்கு சோர்வைத் தரும். மனதின் உற்சாகத்தால் ஏற்படும் உழைப்புக்கும், நாம் நன்மைக்காகச் செய்கின்றோம் என்ற கருத்துடன் செய்யும் உழைப்புக்கும் முடிந்ததோ முடியவில்லையே, தலை விதியே, என்று செய்யும் கட்டாய…

சுந்தர யோக சிகிச்சை முறை 47

 உழைப்புடன் மட்டும் நிறுத்தவில்லை எப்படி சுகஜீவிதம் உடையவன், உழைப்பு இல்லாமல் வாழுகிறனோ அதற்கு நேரிடையாகப் பாட்டாளிக்கு சக்திக்கு மீறி தொழில் காரணத்தைக் குறித்து, உழைப்பு தினம் ஏற்படுகிறது.  இந்த உழைப்பைத் தாங்க, உழைப்பால் ஏற்படும் உடல் சதை சக்திக்கழிவை மறுபடி நிரப்ப, போதுமான உணவுக்கு வசதி இல்லாமல் போய்விடுகிறது உழைக்கப்பட்ட உடல், உணவையும் ஓய்வையும் கேட்கின்றது.  இவைகளைப் பெறமுடியாமல் பாட்டாளியிடம் வறுமை ஒரு முக்கியத் தடையாக நிற்கின்றது.

சுந்தர யோக சிகிச்சை முறை 46

கிராம வாழ்க்கையில் ஓய்வுடன் இருப்பவர் இவைகளையும் செய்யலாம் மலப்போக்குக்குக் கூட செம்பு தூக்கப் பண்ணையாள் இருக்கும் பொழுது, இந்த கிராம சுக புருஷர்கள் உழைப்பிற்கு இறங்குவதும் ஆகாததாகத் தோன்றுகிறது. பணம் பெருக, நடையும் இல்லாமல் போய்விடுகிறது. நோய் தடுத்தலுக்கு உழைப்பு, அவசியமென்று விளக்கினேன். இந்த உழைப்பும், ஒழுக்கமும் தானத்துடன் கலந்திருக்க வேண்டும்.  உழைப்பே நோயற்ற வாழ்க்கைக்கு முக்கியமானால்.  ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளியிடம் ஆரோக்கியப் பெருக்கைக் காணோமே என்று வினவலாம்.  இந்த சந்தேகத்தை நினைத்தே நோயற்ற வாழ்க்கையை…

சுந்தர யோக சிகிச்சை முறை 46

இந்த நிலையில்தான் பயிற்சி என்று சொல்லக்கூடிய, செயற்கை உழைப்புகள் அவசியமாகின்றன. இந்தப் பயிற்சி நோய், தடுக்க எவ்விதம் இருக்க வேண்டும் என்பதை அடுத்த அத்தியாயத்தில் கவனிப்போம். ஆனால் யாராயிருந்தாலும் கால் நடைக்கும் சாதாரண உழைப்புக்கும் காலம், காரணம், சமயம் இல்லையென்று கூற முடியாது. நம் வாழ்க்கைச் செயல்களை நாமே நமக்குச் செய்து கொள்ளுவதால் உடலின் பல பாகங்களுக்கும் உழைப்பு ஏற்படும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 44

பண்டைக்கால உழைப்பை எல்லாம், தற்கால வாழ்வில் எப்படி தருவது? முன்போல் வாழ்க்கை நிதானத்தில் இல்லையே எல்லாம் அவசரம், எல்லாம் காலச் சிக்கனம், எ ல்லாம் கொள்ளையும் கூத்துமாக இருக்கிக்கின்றன. ஒவ்வொரு வரும் விறகு வெட்டவோ, மரம் ஏறவோ, தண்ணீர் தூக்கவோ, செய்வதென்பது சாத்தியமானது அல்ல.

சுந்தர யோக சிகிச்சை முறை 43

உழைப்பற்றால் பசி எடுக்காது. ஜீரணம் குறையும். பித்த சோகம் ஓய்வெடுக்கும். ரத்தவோட்டம் மந்தமாகும். சுவாசநடை தாறுமாறாகும். பூர்ண சுவாசமுண்டாகாது. சதைக்கூட்டங்கள் பல உழைப்பின்மையால் முதுமை அடையும். தூங்கும், அழுகும். உடல் கொழுக்க இருதயத்தின் மேலும் கொழுப்பு இறங்கும். சகல வியாதிகளுக்கும் மூல காரணமான மலச்சிக்கல் உண்டாகி அதிகரிக்கும். உழைப்பற்ற மானிட சரீரத்தை கண்ணால் பார்க்கச் சகிக்காது. தையல்காரனைக் கூப்பிட்டு அவனுதவியால் தான் ” இதுவும், மனித சரீரம் ” என்று அறிய வேண்டும். எளிதில் நோய் பற்றும்,…

சுந்தர யோக சிகிச்சை முறை 42

பொய் நகாகரிகமற்ற பண்டைக்காலத்தில், இயந்திர, விஞ்ஞான முன்னேற்ற செளகரியக் குறைவால் உடல் மேற்கூறிய பலவித உழைப்புகளுக்கு ஈடுபட்டு, நன்றாக வளர்ந்து, திறமை திடம் பெற்று, மானிடர் வனப்பு ஓங்கி, கஷ்ட சுகங்களின் மாறுதலைத் தாங்கும் சக்தியுடன் இருந்தனர். இவர்களுடைய ரத்த நாடிகளும், இருதயமும், ஸ்வாசக் கருவிகளும், பலத்துடன், சுறுசுறுப்புடன், சிரமம் தாங்கி வேலை செய்து நின்றன. எனவே நோய் எளிதில் வரவில்லை. வந்தாலும், நீண்டு நிற்கவில்லை உயர், உயிர் கருவிகளைச் சிதைக்கவில்லை. தாறுமாறான நிலைகளை உண்டாக்கி, புதுப்புது…

சுந்தர யோக சிகிச்சை முறை 41

இந்த உழைப்பை நடத்தல், ஓடுதல், ஏறல், இறங்கல், பிடித்தல், விழுதல், கடித்தல், மடித்தல், நீட்டல், திருப்பல் என்று முக்கிய பாகங்களாகப் பிரிக்கலாம். இச்செயல் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான சதைக் கூட்டங்கள், ஒவ்வொரு தொகுதி நரம்புகள், நரம்புவலைகள், சக்கரங்கள், சக்திகள் உபயோகமாகின்றன. சதைக்கூட்டமும் ஒவ்வொருவித சக்தியை உபயோகித்து பலனுண்டாக்குகிறது.

சுந்தர யோக சிகிச்சை முறை 40

சதைக் கூட்டங்கள் உழைத்தே உயிர், வீரியம் பெறவேண்டும். உழைக்காத சதைகள் மெலிந்து விடும் அல்லது உளைச் சதையாகப் பயனின்றி ஜீவனுக்கு அவசியமற்ற பாரமாக வளரும். இயந்திர முன்னேற்றம், மனிதனுடைய இயற்கைக்குகந்த உழைப்பு வாழ்வைப் பாழாக்கிவிட்டது. இயந்திர முன்னேற்றமே நேராகக் கெடுத்ததென்று சொல்ல நியாயமில்லை. இயந்திரம் உழைப்பின் அவசியத்தை நீக்கவே, மனிதர் சோம்பலுக்கிடங் கொடுத்தனர். இயந்திரம் நீக்கிய உடலுழைப்பை வேறு விதமாகப் பெற முயற்சிக்கவில்லை, உடலை எத்தீவிரத் திட்டத்தில் வைக்கின்றோமோ அதற்கொத்தவாறு தான் வீணைத் தந்தி போல் உயிர்…

சுந்தர யோக சிகிச்சை முறை 39

இயற்கை, உடலை உழைப்பிற்கென்றே அமைத்துள்ளது. உடலின் எந்த பாகமும் அவசியமற்றதல்ல. ஒவ்வொரு பாகமும் உழைப்பில் ஈடுபட்டு, உழைப்புக் கூட்டுறவால் உடல், உயிர், உன்னத வாழ்வு பெறவேண்டுமென்பதே திட்டம். இந்த திட்டத்தை முறித்தால் அந்த பாகம் பலவீனமடையும் அல்லது உடல் முழுவதும் நோய் கொண்டு அழிவு ஏற்படும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 38

பழக்க வழக்கங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். இந்த சுத்தம் நோய் வராமல் தடுக்க மெத்த அவசியமாகும். இதற்கு விரோதமானவை குடி போதை, பொடி, சுருட்டு, புகையிலை பழக்கங்கள், போதையில் கஞ்சா, அபின் பிரதானம் பெற்றவை மூக்கில் தூளேற்றுவது, புகையிலையை வாயில் போடுவது எல்லாம் நோயை அதிக சீக்கிரத்தில் வரவழைத்துக் கொள்ளும். பிணி தடுத்தலுக்கு இப்பழக்கங்கள் எதுவும் உதவாது.

சுந்தர யோக சிகிச்சை முறை 37

போகம் தேவையானால் மணத்திற்குக் காத்திருக்கும் காலமல்ல இது. போகிக்க ஆண், பெண் கூட்டுறவிற்கும் எதிர்பார்ப்பதில்லை. தன் கையே தான் கெட உதவியாகக் கொண்டு, சமூகத்தின் நர உருக்கொண்டு உலாவும், கழுதைப் புலிகளின் சண்டாளச் சேர்க்கை கற்பித்தலால், இஷ்டம் போல் விந்துவை செலவழிக்கக் கூடாது. மணவாழ்க்கை கொண்டவர்கள், கூட்டுறவை மிதமாக வைத்துக் கொள்ள வேண்டும். நோய் பற்றாது தடுத்துக் கொள்ள முக்கிய உதவி, பிந்து ரக்ஷணை.

சுந்தர யோக சிகிச்சை முறை 36

போகம் என்பது பிந்து ( விந்து ) வீரியத்திற்கு சம்பந்தப்பட்டது. வயது வந்து, இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டவர்களுக்கென்று ஏற்பட்ட திட்டம் தற்காலக் கலியுக வாழ்க்கையில், மணந்தவன், மணமாகாதவன், எல்லோரும் விந்துவை வரியில்லாத குழாய்த் தண்ணீர் போல் செலவழித்துவிடுகிறார்கள். மணமாகாதவன் பண்டைக் காலத்தில் பிரம்மசாரி என்று பெயர் பெற்றிருந்தான். பிரம்மசாரி என்பது விந்துவை ரட்சணை செய்கிறவன் என்றும் பொருள் பெற்றிருந்தது.

சுந்தர யோக சிகிச்சை முறை 35

அவரவர்களின் தினசரி வாழ்வின் தன்மைக்குத் தக்கபடி 24 மணி நேரத்தில் ஆறிலிருந்து எட்டு மணி நேரமாவது நித்திரை செய்ய வேண்டும். இந்த நித்திரையில் ஒரு முக்கியப் பகுதி நடுநிசிக்கு முன்பாக அமைந்தால் உடல் மெத்த நன்மை பெறும் நாடகம், சினிமா, கூத்து, அதிகப்படிப்பு, உழைப்பு இவைகளால் நித்திரை கெட்டால் நோய் பற்றிக் கொள்ளக்காத்து நிற்கும். நோய் தடுத்தலுக்கு முக்கியமான திட்டம். சுமார் ஆறிலிருந்து எட்டுமணி நேரம் நித்திரை செய்வது.

சுந்தர யோக சிகிச்சை முறை 34

தூக்கத்தில் உடலியந்திரங்கள் எல்லாம் ஓய்வெடுக்கின்றன. செத்த அணுக்கள் புதுப்பிக்கப்படுகின்றன. உழைப்பில் செலவான பிராண சக்தி. மறுபடி சேகரிக்கப்படுகின்றது. மூளை, நரம்புகள், அமைதி, ஆரோக்கியம் பெறுகின்றன. ஓய்வற்ற இருதயமும் ஸ்வாசக்கருவிகளும், சிரமக் குறைவுடன் வேலை செய்து, வீரியம் பெறுகின்றன. சுவாசம் நிதானமும் அமைதியும் அடைகிறது. செத்த, உதவாத அணுக்கள் ஒதுக்கி அகற்ற ஏற்பாடாகின்றன. உணவற்றுப் பலநாள் இருந்தாலும் உடலுக்குக் கேடு அவ்வளவு இல்லை. ஒரு நாள் தூக்கமில்லாமல் இருந்தால் ஜீவன் படாத பாடு படுகின்றது. பைத்தியம் பிடித்துவிடும் போல்…

சுந்தர யோக சிகிச்சை முறை 33

ஒழுக்கத்தை சில முக்கிய பழக்கங்களாகப் பிரிக்கலாம். அவைகளாவன, குளித்தல், தூக்கம், போகம், பழக்கம். ஸ்நானம் அல்லது குளித்தல் உடலின் வெளிப்பாகத்தை சுத்தமாக வைக்கின்றது. தோல்களில் பதிந்துள்ள வியர்வை, தைலம் கசியும் எண்ணற்ற துவாரங்களை அடைத்து விடாமல் அழுக்குகளை வெளியே தள்ளி தம் தொழிலைச் சரிவரச் செய்ய உதவுகின்றது. நரம்பு சக்தியைப் பொதுவாக அதிகரிக்கின்றது. தோல் நோய் ஏற்படாமல் காக்கின்றது. உடல் சூட்டைக் குறைக்கின்றது. தினம் குளித்தல் அவசியம். குளிர் நீரில் குளித்தலே சீதோஷ்ண ஸ்திதி மாற்றத்தால் உடல்…

சுந்தர யோக சிகிச்சை முறை 32

16. தோப்பையும் விற்பரே, பற்களும் காட்டுவார், காப்பி குடிக்கும் வெறிக்கு. 17. புகையிலை, ஊனைத் தொலைக்கும் பணத்தைப் புகைத்திடும் கோடரிக் காம்பு. 18. சுருட்டுப் பழக்கம் குருட்டுப் பழக்கம்! விரட்டிப் பழக்கம் வெறு!

சுந்தர யோக சிகிச்சை முறை 31

11. இடைக்கிடை கீரைகாய் சோறுடன் உண்ணக் கிடைக்குமே பொன்னுடன் பண்பு. 12. காய்கீரை வெந்திடும் நீரைக் கழிக்காதே காய்ந்து கெடுமே உடல். 13. மிளகாய் எரிக்கும், மிளகும் வதைக்கும் அழகு உடலிற் கழிவு. 14. காப்பி கருஞ்சனி போதையே, இவ்வெறி தேத்தண்ணீர் தானும் விலக்கு. 15. காப்பிநீர் நின்று நசிக்கும் உடல் பொருள் காப்பதரி திவ்வடிமை கள்.

சுந்தர யோக சிகிச்சை முறை 30

6. தவிடே விடமினாம் புஷ்டிநற் காப்பு, தவிடற்றால் டோ தெறும்பு. 7. வீரத் தமிழினே நீக்கிவிடு தீட்டுதலை சூரனாவாய் கஞ்சியுடன் உண். 8. கஞ்சி வடிப்பது காலனைக் கூவலாம் கஞ்சியுடன் உண்டுநீ வாழ். 9. சாக்கடை போகும் அரிசியின் கஞ்சியே போக்கும் வறுமைப் பிணி. 10. பாலைக் குடித்துப் பலத்தைப் பொறுவீரே மாலையும் காலை தினம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 29

ஆரோக்கிய வாழ்வுக்கும் நோய் தடுத்தலுக்கும் அவசியமான திட்டங்களை சுந்தரக் குறள்கள் மூலமாக கொடுத்துள்ளேன். 1. உணவால் உடலுறுதி நீளுமாயுள், நாக்கால் உணவழியின் நொந்தபின் சாவு. 2. நாக்கிற் கடிமை நசிவானே நொந்து, நல் வாழ்க்கைக் கியற்கையே தூக்கு. 3. மென்றே உணவை விழுங்குக, இல்லையேல் தின்றாலும் ஏதே பயன்? 4. திணித்துத் திணித்து நீ தின்பது தீது துணிப்பையா? அல்ல வயிறு. 5. தவிடே உயிரிவ் வரிசியிலே, குத்தின் தவிடு தனம் சுகம் தாழ்வு.

சுந்தர யோக சிகிச்சை முறை 28

இத் தேவை வயது வந்த மனிதனுக்கு, வயது, வளர்ச்சித் தேவை தொழிலுக்குத் தக்கபடி புஷ்டிப் பொருள்கள், தானியங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். பசிக்கும், பழக்கத்துக்கும், தகுந்தவாறு தான்யாதிகளைக் குறைக்கவும் செய்யலாம். தினம் அளக்கவோ, எடை போடவோ தேவையல்லை, மனதில் நிதானத்தை அறிந்து கொண்டு, ஒரு குடும்பத்தின் ஜன எண்ணிகைக்குகந்தாறு மாற்றிக் கொள்ளவும். நோய் தடுத்தல், உணவுப் பொருள்களை வயிற்றுள் கொட்டுவதால் மட்டும் சித்திக்காது. அவைகளை உண்ணும் விதம், கால திட்டத்தாலும் ஏற்பட வேண்டும். உடலை எரிக்கும். பசி,…

சுந்தர யோக சிகிச்சை முறை 27

அரிசி,கோதுமை,ராகி தானியங்கள் — சுமார் 10 அவுன்ஸ் வேறு தானியங்கள் — சுமார் 5 அவுன்ஸ் பால் — சுமார் 8 அவுன்ஸ் பருப்புகள் — சுமார் 3 அவுன்ஸ் காய்கள் — சுமார் 6 அவுன்ஸ் கீரைகள் — சுமார் 4 அவுன்ஸ் எண்ணெய்கள் — சுமார் 2 அவுன்ஸ் பழங்கள் — சுமார் 2 அவுன்ஸ் இந்த உணவுச் சேர்மானம் சுமார் 2600 உஷ்ணப் பிரமாணம் கொடுக்கும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 26

சர்க்கரை சத்து — அரிசி, கோதுமை தானியங்களில் தேவைக்கு மீறி இருக்கின்றது. கொழுப்பு — எள்ளு கடலை, தேங்காய், எண்ணெய்கள், வெண்ணெய், நெய், பால். விட்டமின் வகையாறா — தானியங்கள், இதன் தவிடுகள், சிறிதளவாய் பருப்புகளில் காய், கீரைகள், பால், முளை கொண்ட கடலைகள். அயம், கால்சியம், உலோகம் — கீரைகள், ரசமுள்ள பழங்கள், பால், சில பருப்புகள், தினம், நாம் தானியங்கள், பருப்புகள், எண்ணெய், நெய், பால், காய் கீரைகள், பழங்கள் சேர்ப்பதால் மேற்கூறிய சத்துக்கள்…

சுந்தர யோக சிகிச்சை முறை 25

இவ்வைந்து தன்மைகள் தேவையானால் உணவில் கீழ்க் குறிக்கப்பட்டுள்ள பகுதிகள் சேர வேண்டும். 1. புஷ்டிச் சத்து 2. சர்க்கரைச் சத்து 3. கொழுப்புச் சத்து 4. விட்டமின் சத்து 5. அயன், கால்ஷியம், உலோக சத்துக்கள். இந்த சத்துக்களை கீழ்கண்ட உணவுப் பொருள்களால் பெறலாம். புஷ்டி — அரிசி, கோதுமை, ராகி போன்ற பிரதான தானியங்கள் துவரை, உளுந்து, முதலிய பருப்புகள், நிலக்கடலை, பாதாமி, பால் , முட்டை ( மிருக உணவுகளை இங்கு கூறவில்லை. ஆனால்…

சுந்தர யோக சிகிச்சை முறை 24

பிணியை தடுக்க விரும்பினாலும் சுகமாக வாழ விரும்பினால் உட்கொள்ளும் உணவானது 1. தேவையான உழைப்பு, ஜீவித நடைக்குத் தேவையான உஷ்ணப் பிரமாணத்தைக் கொடுக்க வேண்டும். 2. செத்த அணுக்களை புதுப்பிக்கும் சக்தி கொண்டாதாக வேண்டும். 3. வளரும் வயதானால், வளர்ச்சி பெற பொருள் கொண்டதாக வேண்டும். 4. உட்கருவிகள், கோளங்கள் தம், தம் தொழிலுக்குத் தேவையான பொருள்களைப் பெற உதவுவதாக இருக்க வேண்டும். 5. ஜீவிதத்தில் ஏற்படும் பிழைகளைத் திருத்தி வாழ, சத்துக் கொண்டதாக இருக்க வேண்டும்.…

சுந்தர யோக சிகிச்சை முறை 23

மோட்டார் கார் உழைப்பால் கேடடைந்து கொண்டே போகும். தனக்குத் தானே பொருளை உண்டு, சரி செய்து கொள்ளச் சக்தியற்றது. தன்னை வளர்த்துக் கொள்ளவும் சூழ்ச்சி கொண்டதல்ல, மானிட இயந்திரமான உடலோ கிடைக்கும். பொருளால் வளரவும், தன்னைச் சரி செய்து கொள்ளவும் சக்தி பெற்றது. எண்ணற்ற வித்தியாசங்களில் இது ஒன்றே ஒன்று. எனவே அளிக்கப்படும் உணவுப் பொருளானது, உஷ்ணம், சக்தி கொடுப்பதுமின்றி உடலை வயதுக்கு தகுந்தவாறு வளரச் செய்யவும், வாழ்வில் செத்த அணுக்களுக்குப் பதில் புது அணுக்களை உண்டாக்கவும்…

சுந்தர யோக சிகிச்சை முறை 22

ஆண்டவன் படைத்த இயந்திரமான உடலும், சீர்கெட்ட உணவை, குறைவுபட்ட உணவைப் பெற்றால், சரியாக வேலை செய்யாமல் சக்தி குன்றி, நோய் வந்து, வேலை நிறுத்தம் செய்யும். இந்த உதாரணம் உணவின் அவசியத்தையும் அது சீரோங்கி இருக்க வேண்டியதையும் விளக்குகிறது. மோட்டார் கார், மனிதன் உண்டாக்கிய இயந்திரம், மானிட உடலோ, ஆண்டவன், ஜீவனுக்கு சுகித்து வாழ்ந்து அகண்ட நித்திய சுகமான தன்னுடன் முடிவில் கலக்க, கொடுக்கப்பட்ட ஒப்பற்ற இயந்திரமாகும். இவ்விரண்டுக்கும், சக்தி சூழ்ச்சி உழைப்புகளில், சொல்ல முடியாத வித்தியாசங்கள்…

சுந்தர யோக சிகிச்சை முறை 21

ஆண்டவன் படைத்த இயந்திரமே மானிடஉடல். இந்த இயந்திரம் சுழல, வேலை செய்ய இதற்குப் பெட்ரோல் எண்ணெய் வேண்டும். இந்த பெட்ரோல் எண்ணெய் தான் நாம் தேடி உட்கொள்ளும் உணவென்பது. உழைப்பின் குணம், தீவிரங்களுக்குத் தக்கபடி உணவின் விதம். பிரமாணம் மாறுபாட்டைகிறது. எப்படி மோட்டார் காரில், பெட்ரோல் எண்ணெய் ஆவியாக மாறி தீப்பொறியால் வெடித்து, சூட்டு சக்தியைக் கிளப்பி உழைக்கிறதோ, அதே மாதிரி மானிட இயந்திரமான உடலில் உட்கொள்ளும் உணவு சூட்டுச் சக்தியாக மாறி, உயிரோங்க உழைக்கச் செய்கிறது.…

சுந்தர யோக சிகிச்சை முறை 20

உணவு ஒழுக்கம் உழைப்பு. ஒரு இயந்திரம் வேலை செய்ய அது நன்றாக அமைக்கப்பட்டிருந்தால் மட்டும் போதாது. மோட்டார் காரை எடுத்துக் கொள்ளவும், இயந்திர சாலையிலிருந்து எல்லாம் உண்டாக்கப்பட்டு தொழில் புரியத்தயராகச் சேர்க்கப்பட்டு, அமைக்கப்பட்டு வெளிவருகின்றது. உடனே தானாக, ஏறி உட்கார்ந்ததும் ஓட அரம்பித்து விடாது. இந்த மோட்டார் வேலை செய்ய, அதற்கு உயிரளிக்கும் இஞ்சின் ( சூட்டு இயந்திரம் ) சுழல பெட்ரோல், எண்ணெய் வேண்டும். இந்த பெட்ரோல் எண்ணெய் தான் இதற்கு உணவு. இந்த உணவிலிருந்து…

சுந்தர யோக சிகிச்சை முறை 19

உணவைப்பற்றி ” ஆரோக்கிய உணவு ” நூல் வெகு விரிவாக விஞ்ஞான முறையில் எழுதப்பட்டிருக்கின்றது. ஒழுக்கத்தைப் பற்றி ‘ சாந்தி யோகம் ‘ என்ற நூல் சிறிது தனிப்பட்ட முறையில் விளக்குகின்றது. உழைப்பு எத்தகையது என்று ” ஆனந்த ரகசியம் ” வலிவும், வனப்பும் ” என்ற நூல்களில் அறிவைத் தீட்டும் முறையில் காணவும். ஆனால் நோய் தடுத்தல் என்ற தொகுதிக்கு விஞ்ஞான அவசிய விளக்கமாக, உணவு ஒழுக்கம், உழைப்பு என்பவைகளைப் பற்றி இங்க திரட்டி சுருக்கமாக…

சுந்தர யோக சிகிச்சை முறை 18

பிராணாவை உடலைமைப்புகளே, தமக்குத் தாமே சரி செய்து கொண்டு வாழ்க்கையை நடத்துவதற்கு அவசியமாக என்ன வேண்டும்? உணவு, ஒழுக்கம், உழைப்பு இம்மூன்றும் இயற்கைக்கு இணங்கி ஏற்பட்டு நடந்தால், பிராணா சமாதானத்தில் நின்று சரிசெய்யப்பட்டு, பிணி தடுக்கப்படுகின்றது. நோய் வந்தபின் சிகிச்சையைத் தேடுவதைக் காட்டிலும், தேடியும் சிகிச்சை கிட்டாமல், இறப்பதைக் காட்டிலும், நோய் வராமல் தடுத்துக் கொள்ளுதலே மேலானது. பகுத்தறிவு கொண்ட மனிதனுக்கு ஏற்றதானது, சுலபமானது, சுகத்தைப்பற்றிச் சுகிக்தது வாழ இயல்பானது.

சுந்தர யோக சிகிச்சை முறை 17

சாதாரண வைத்தியம் சுற்று வழியில் பிராணாவை சமாதானம் செய்ய முயலுகின்றது. நேர் வழியில் பிராணாவைச் சரி செய்வதே யோக சிகிச்சை. இந்த விளக்கங்களிலிருந்து பிராணாவை சமாதான நிலையில் வைத்திருப்பதே பிணி தடுத்தலுக்கு வழி என்ற முடிவுக்கு நாம் வரலாம். பிராணா சூக்ஷமமாயிற்‍றே! நாம் அதை எவ்வாறு பார்த்து அறிந்து சரி செய்து கொள்ள முடியும்? குழம்பு கூட்டானால் குறைந்து சேர்த்து சரி செய்து கொள்ளலாம். கைகளுக்கு எட்டாத, புலன்களுக்கு விளங்காததாயிற்றே எனலாம். இதைப்பற்றி நாம் கவலை கொள்ளத்…

சுந்தர யோக சிகிச்சை முறை 16

பிணியை அறிந்தபின் பிணியைப் போக்க பிராண சக்தி அளிக்கப் படுகின்றது. வைத்தியர் மருந்து மூலமாக இதை அளிக்க முயலுகிறார். அந்தப் பிணியைப் போக்க, தேவையான பிராணாவை எந்தப் பொருளிடமிருந்து கேடுண்ட கருவி, பாகம் எடுத்துக் கொள்ளும் என்று தேர்ந்தெடுத்தலே, தகுதியான மருந்தைக் கண்டுபிடித்தல், பிராணாவைச் சரிசெய்ய, மருந்துடன் சிலபுத்தியுள்ள வைத்தியங்கள் உணவு ஒழுக்கத்தையும் கையாளுகிறார்கள். ரண சிகிச்சை ஏற்பட்டிருக்கிறது. காக்கத் தெரியாமல், சரி செய்யத் தெரியாமல் போய் விட்டால், கேடுண்ட பாகத்தை அறுத்தெறிந்துவிடுகிறார்கள். ரண சிகிச்சை எல்லாம்…

சுந்தர யோக சிகிச்சை முறை 15

எக்கருவி எப்பாகம், உடலின் எத்தொழில் கெட்டிருக்கிறதென்று ஆராய்ச்சியாலறிவதே, வைத்தியத்தின் முதல் முக்கிய தொழில், இதை அறிந்து பிற்பாடு சிகிச்சை ஆரம்பிக்கப்படுகிறது. வைத்தியம் மேல் நாட்டு முறையிலும் எவ்வளவோ வளர்ச்சி பெற்றிருந்தும், எவ்வளவோ ஆராய்ச்சி முறைகள், ஆராய்ச்சிக் கருவிகள் ஏற்பட்டும், நோயின் காரணத்தை கண்டுபிடித்தல், இன்னும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது. நோய்களின் உற்பத்தி ஆராய்ச்சி வலுக்க, வலுக்க சீர் கெட்ட இயற்கை விரோத நாகரிக வாழ்க்கையால், காரணம் கண்டுபிடிக்க முடியாத நூதன பிணிகள், ராக்ஷசத் தன்மையுடன் வளர்ந்து கொண்டே…

சுந்தர யோக சிகிச்சை முறை 14

யோக பாஷையில் பிணி என்பதானது பிராணா, பிராண சக்தி ஒழுங்கான ஒருவித சமாதான முறையில் சரீரம், சரீர தர்மங்கள் முழுவதிலும் பரவி நிற்காமல், ஏற்ற தாழ்வுறுவதே, பிராணாவின் சமாதானமற்ற நிலையே ( STATE OF INEQUILIBRIUM ) பிணி. இந்தப் பிராணாவை சமாதான நிலைக்குச் சரி செய்வதே சிகிச்சை எந்த பாகத்தில் எந்த கருவியில் பிராண குறைந்திருக்கிறதோ அதற்கு அதிகமாக இருக்குமிடத்திலிருந்தோ அகண்டக் களஞ்சியத்திலிருந்தோ பிராணாவை அளித்து அக்குறையை நீக்குதல் சிகிச்சை, அதே போல அதிகப் பிராண…

சுந்தர யோக சிகிச்சை முறை 13

பிறக்கும் பொழுதே நொண்டி, கண், செவி, வாய் போன்ற கருவிகள் வேலை செய்யாமல் பிறக்கும் ஜென்மங்கள், பிணியாளர் வர்க்கத்தவர் அல்லர், அங்கம் இல்லாவிட்டால், கண்கள் இல்லாவிட்டால், செவி கருவியற்றிருந்தால், பேசும் நாவே உயிரிழந்திருந்தால் உடல் சிகிச்சை செய்யக்கூடியது அதிகமில்லை. ஆனால், சுந்தர யோக சிகிச்சையின் ஒரு அங்கமான துதி சிகிச்சையால் இதையும் இவர்கள் சரிப்படுத்திக் கொள்ள முடியும். நமது சரித்திரங்கள் இதிகாச புராணங்கள், பக்தி மார்க்கம் ஆகியவை இக்கூற்றுக்கு ஆதாரம். ஆனால் பிறவியிலேயே நாக்கு, மூக்கு, வாய்,…

சுந்தர யோக சிகிச்சை முறை 12

இயற்கைக்கு விரோதமான நடத்தையால்தான் நூற்றில் தொண்ணூற் றென்பது விழுக்காடு. மானிட வர்க்கத்தில் பிழை ஏற்படுகிறது. மிகுதியான ஒரு விழுக்காடு, பல காரணங்கள், பகுதிகள் கூடியது, இதுவும் பெரும்பாலும் யோக சிகிச்சைக்குக் கட்டுப்படும். ஓரு ஜீவனின் இச்சை சக்தி, நடத்தைக்கு மீறி நோய் வருவதுண்டு, ஆனால் இந்தப் பகுதியும் மிக்க சொல்பமே ( மிக குறைவு ) ” வறுமை, விலக்க முடியாத அல்லது எதிர்பாராத சந்தர்ப்பம், தொத்து நோய் ” என்று கூறி வாதிக்கலாம். உண்ணச் சிறிதும்…

சுந்தர யோக சிகிச்சை முறை 11

பிராணாவும் (சுவாசம்) நோயும் இயற்கைக்கு விரோதமான நடத்தையால்தான் எல்லோரும் நோயடைகிறார்களா? ஒரு ஜீவனின் இச்சை, சக்தி, நடத்தைக்கு மீறி நோய் வருவதில்லையா? இயற்கையாகவே பிறக்கும் பொழுது சக்தி மாறாட்டம், ஊனங்களைப் பெறுவதில்லையா? எல்லா மானிடரும் ஒரே சக்தி ஆரோக்கிய வீச்சுடன் பிறக்கிறார்களா? பிறக்கும் பொழுது குருடாயும், நொண்டியாயும், ஊமையாயும், கருவிகள் பங்கமாயும், பிறப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது? கெட்ட பழக்கமின்றி தொத்து நோய்கள் கேடு விளைத்தால்? இக்கேள்விகள் கடினமான கேள்விகளே, இவைகளையும் சிந்தித்து, ஆராய்ந்து குழப்பமின்றி, தைரியமாக…

சுந்தர யோக சிகிச்சை முறை 10

பிந்து (விந்து) வீரியம் இருக்கின்றது இதை வெளிப்படுத்தும் பொழுது சுகம் ஏற்படுகின்றது. உடல், புலன், மனம், பிணைந்து சுகம் ஏற்படுகின்றது. இதனின் இயற்கை முறையான உபயோகம், இகத்திலிருப்பவர்க்கு, இல்லற வாழ்வுக்கு அவசியமென்றே கூறுவோம். இயற்கை அனுபதிக்கப்பட்ட சுக உணர்ச்சிகளில் இதுவும் ஒன்று இயற்கை வளர்ச்சிக்கு இயற்கை தூண்டும். மறுக்க மிக்க கடினமான சுகங்களில் சுக உணர்ச்சிகளில் இதுவும் ஒன்று. தர்ம விரோதமின்றி ஆண், பெண் சேர்க்கையால் உடல் நிலை, காலதேச வர்த்தமானத்திற்குகந்தவாறும், மக்கட்பேறுக்கென்றும் முடிவில் இதை புறக்கணிக்க,…

சுந்தர யோக சிகிச்சை முறை 9

கண்களால் கண் பார்வையால் சுகம் அனுபவிக்கிறோம். பார்க்க முறையானதைப் பார்க்குமளவு பார்த்து, பாதுகாப்பு முறையில் உபயோகிப்பதால், நீண்ட காலம், உண்மையான இதன் சுகத்தை அனுபவிக்கிறோம்! நம் கண்களை மூடி, இம்முறையாய் அனுபவிக்கும் சுகத்தைத் தடுக்க, யாருக்கு அதிகாரமிருக்கிறது. யாருக்கு சக்தி இருக்கிறது? நம்மைத் தவிர, இச்சுகத்தை இழக்கக் காரணம் வெளியிலிருந்து ஏற்படுவதில்லை. பார்க்கக் கூடாத சிற்றின்ப முறையில் பார்த்து நிற்கின்றோம். இயற்கை விரோதமாக, அதிகமான ஒளியையோ, குறைந்த ஒளியையோ பார்க்க உபயோகிக்கிறோம். அசைந்து, அசைந்து அதிக ஒளியில்…

சுந்தர யோக சிகிச்சை முறை 8

சுகம் நமது பிறப்புரிமை  இதை வெளியார் யாரும், ஈசன் கூட, நம்மிடமிருந்து தடுக்க முடியாது இதுதான் உண்மை சுகத்தை நம்மிடமிருந்து அகற்றிக் கொள்ளுதல், பிறப்புரிமையை இழத்தல் நாமே இதுவும் உண்மைதான் நாம் தானே இயற்கைக்கு விரோதமாக, ஒழுக்கம், அடக்கம், மிதம், காலம் முறையின்றி உண்டு  ஜீவிதத்தில், உடற் பகுதியான, ஆரோக்கிய வாழ்வால் உண்டாகும். மனத்தன்மையான  இச்சுகத்தை, அகற்றிக்கொண்டது,  நாம் தானே!  இந்த நிலைக்கு பொறுப்பு நாம் தானே வேறு யாரும் இல்லையே

சுந்தர யோக சிகிச்சை முறை 7

பொய்யான இன்பத்தை வழக்கமாக கொண்டிருந்தால் நோய்தான் வரும். இன்பம் வராது. சுகம் சாக, அதில் பிணி பிறக்கின்றது. சுகம் மறைய நோய் வளர்ந்து, அதிகமாகிறது, ஆயுளும் குறைகின்றது எவ்வாறு? உண்ணும் கணச் சுகத்தை எம்முறையில் அனுபவிக்கிறோம்? வயிறு நிறைய சாப்பிடுவதால், அளவுக்கதிமாக சாப்பிடுவதால் பலமிழந்து நூறு வயது இருக்க வேண்டிய இரைப்பை கெட்டு, சில வருஷங்களில் உயிரற்ற தோல்பை போல் மாறுகிறது. இயற்கை விரோதமான மிளகாய், காபி, கள், உயிரற்ற தீட்டிய கஞ்சி வடித்த உணவுகளை நிரப்புவதால்…

சுந்தர யோக சிகிச்சை முறை 6

உண்ணும் சுகத்தை இன்னொரு விதமாகப் பெரும்பாலாகப் பெற முயலுகிறார்கள். சுகமடைந்ததாக மனப்பால் குடிக்கிறார்கள். இயற்கைக்கு விரோதமான முறையில் பழக்கப்பட்ட நாக்கை பிரதிநிதியாகக் கொண்டு, வலிவற்ற மனம், தீயதாய் மாறிய புலன்களை ஆதாரமாக நிறுத்தி, வலிவு, வளர்ச்சி, ஆரோக்கியம் என்ற தொகுதிகளை மறந்து, தேவை மீறி, கால தேச வர்த்தமானங்களுக்கு கட்டுப்படாமல் வாழ்வது, கண்டதைக் கண்டபடி சாப்பிடுவதற்கென்றே! என்ற முறையில் வாழ்ந்து அவ்வுண்ணும் சுகத்தை அனுபவிப்பது ஒரு வழியாகும். இது தீயதில் பிறந்து (சுகம்) இல்லாத பொழுது இருப்பதாக…

சுந்தர யோக சிகிச்சை முறை5

சுகமெது? கெட்ட புலதேலே அல்ல! சுகம் அது, சுத்தம் கொடல். உதாரணம் கூறுவோம். உண்பதில் சுகமென்று வைத்துக் கொள்ளுவோம். நாக்கை இயற்கைக் காவலனாகக் கொண்டு, உடலின் வலிவுக்கும், வளர்ச்சிக்குமாக பசியாற்றலுக்கென்றே, உசிதமான பொருளைத் தேவைக்குத் தக்கபடி, குறிப்பிட்ட காலத்தில் உண்டு, உண்ணும் சுகத்தை அனுபவிப்பது முறை. இச்சுகம் இயற்கை வழியில் தொடங்கி, ஒழுக்கத்திற்கு முறையாக நின்று, நீடூழி எதிர்காலத்தில் அனுபவிக்கவும் காரணமாகின்றது. இது உண்மைச் சுகம் வலிவுள்ள மனம், சுத்தமான புலன், ஆரோக்கியமான உடல், என்ற அஸ்திவாரங்களின்…

சுந்தர யோக சிகிச்சை முறை 4

சுகம் ஏனென்று உணராதது, அறியாமையால் சுகம் போல் வேஷம் தரித்தவைகளைச் சுகமென்று அனுபவித்தலும், அறியாமையால் அறியாமைக் கருவிகள், தாமஸ, ராஜஸ, குணங்கள். இத்தகைய சுகம் கானல் சுகம் ( இன்பம் இருந்தும் இல்லாதது போல ) இயற்கை தர்மத்தை முறிப்பதால் ஏற்படுவது தீயதால் தூண்டப்பட்டு, கணப்பொழுதே நிலைத்து, தீயதை விளைவிப்பது. ஆயுள் ஆரோக்கிய மானிடத் தன்மையின் திட்டங்களுக்குக் கட்டுப்படாதது. உயர்வு, நல்லுணர்ச்சி, ஒழுக்கத்தால் கட்டுப்படுத்தப்படாதது கெட்ட தாழ்வு மனம், கேடுண்ட புலன்கள் மூலம் தூண்ட இப்பொய், கணநிழல்…

சுந்தர யோக சிகிச்சை முறை 3

இயற்கைக்கு விரோதமான செயலால் உண்டாகாததோர் தன்மை. இத்தகைய சுகம், இயற்கை ஆரோக்கியமான தூண்டுதலால் தோன்றி இயற்கை ஆரோக்கியத்தை நிலை நிறுத்தி, மனிதனை பகுத்தறிவு மனிதனாக வாழச் செய்து தன் அடிப்படையான தெய்வீகத் தன்மையை விளக்கி, அத் தெய்வீகமாக நின்று பரவி ஒளிறச் செய்வதேயாகும். இந்த சுகம், உடல் நலன், இயற்கை ஒழுக்கத்திற்குக் கட்டுப்பட்டது. இதை மீறியதாக ஆகாது. மீறியதால் ஏற்படுதலாகாது

சுந்தர யோக சிகிச்சை முறை 2

அறியாமை சோம்பல் புகுந்த கூட்டில், யாரும் அறியாமல் ஊன்றுமே நோய்! உடலில் நோய் வந்துவிட்டாலே இன்பம் கெட்ட நிலைதான், மன நிம்மதியும் போய்விடும். மனநோய், மன சாந்தி இவை எல்லாம் ஒன்றே என்றாலும் பெரியதாக இன்பம் ஏதும் இல்லை. மனப்பிணி தொத்துமுடல் ஊண்பிணி தொத்தும் மனதை மனமுடல் கா! உடல் சோர்வு மனதை தாக்கும், மனசோர்வு உடலை தாக்கும். மனநோய், மூளை நோய், நரம்புபிணி, உடற்பிணி! கெட்டதில் பிறவாது. கெட்டது நிலை விளைக்காது. முன்னும், தற்பொழுதும், பின்னும்,…

சுந்தர யோக சிகிச்சை முறை 1

பிணியும், பிணி தடுத்தலும் சுகத்திற்கே, வாழ்வு பிணிக்கல்ல! ஈசன் சுகத்திற்கெனறீன்றனே வாழ்வு பிறவி, சுகத்தைப் பற்றி சுகித்து வாழ! பிணியால் வாடி வதையுறுவதற்கல்ல! சுகம் நமது பிறப்புரிமை! சுகம் பெறவே எல்லாம் படைக்கப்பட்டிருக்கின்றன! நம்மிடமிருந்து நம் இன்பத்தை தடுக்க எவராலும் முடியாது. இறைவனாலும் முடியாது. இறைவன் நாம் இன்பமாக வாழவே நம்மை படைத்திருக்கிறான். இறைவனா தடுப்பான்? நம்மிடமிருந்து நம் இன்பத்தை, தடுப்பவன் நாமேதான் அல்லாமல் இறைவன் அல்ல, பிறரும் அல்ல. இந்த மாதிரி செயலுக்கு நமது அறியாமையும்,…

பர்வதாசனம் — PARVATHASANAM (பருமன் அல்லது ஊளைச்சதையினைக் குறைத்தல் )

பெண்கள் மெல்லிய உடலமைப்பும் கட்டான உறுப்புகளும் பெற்றிருந்ததால் அழகாகவும் கவர்ச்சியாகவும் காணப்படுகிறார்கள். கவனமின்மையின் காரணமாக பெண்கள் தங்கள் உடலை தடிக்கச் செய்து பார்க்க அசிங்கமாக இருக்கிறார்கள். செய்முறை – பர்வதாசனத்தில் அமர்ந்து இரு கைகளையும் தலைக்கு  மேலாக நன்றாக வளைவு இல்லாமல் நீட்டி இரு கைகளின் விரல்களையும் பின்னிக்கொண்டோ அல்லது ஒன்றின் மீது மற்றொன்று இறுக்கமாகச்  சேர்ந்து இருக்கும்படியோ வைக்கவும். விரல்களை மடக்காமல் நீட்டிவிடவும்.  இரண்டு தோள்களையும் காதுகளுக்கு மிக அருகில் இருக்கும்படி செய்து  தலையை நேராக…

பத்மாசனம் — PADMASANAM

விரிப்பின் மேல் அமர்ந்து இருகால்களையும் நேராக நீட்டி சுவாசத்தை வெளிவிட்டு வலது முழங்காலை மடித்து மடிக்கப்பட்ட வலது காலின் குதிக்கால் தொட்டுக்கொண்டிருக்கும்படி வைக்கவும். பின்னர் இடதுகாலை மடக்கி மடித்து வலது காலின் தொடையின் அருகில் அடிவயிற்றை தொட்டுக் கொண்டிருக்கும் படி வைக்கவும். இவ்வாறு மாற்றி வைக்கப்பட்ட இரண்டு குதிகால்களும் மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அதவாது, மார்பு, முகம் ஆகியவற்றை நேராக நிமிர்த்தி முதுகை வளைக்காமல் சுவாசத்தை வெளியிட்டுக் கொண்டு நிமிர்ந்து இருந்து இரண்டு கைகளையும்…

குதபாத ஆசனம்

.குதபாத ஆசனம் ( குருவாய் ) படத்திலுள்ளபடி இரண்டு பாதங்களையும் ஒன்றோடொன்று சேர்த்து ஆசனவாயின் பக்கத்தில் சேர்த்து இரண்டு கைகளையும் இடுப்புக்கு நேராகக் கீழே ஊன்றிச் சைக்கிள் சீட்டின் மேல் அமருவதுபோல் இரண்டு பாதங்கள் மேல் உட்கார வேண்டும். பிருஷ்ட பாகம் பூமியில் படக்கூடாது. இரு கைகளையும் இரண்டு முழங்காலின் மேல் சின் முத்திரையுடன் வைத்து 3 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை செய்ய வேண்டும். சாதாரணமாக மூச்சை இழுத்துவிட வேண்டும். குறிப்பு — புத்திர…

கூர்மாசனம்

படத்திலுள்ளபடி குய்யபாத ஆசன நிலையிலுள்ளபடியே இரண்டு கைகளை மட்டும் சிரசிற்குமேல் கும்பிடுவது போல அமைத்து மூச்சை உள்ளுக்கிழுத்து நிறுத்தாமல் சாதாரணமாக இழுத்தும் விட்டும் ஒரு நிமிடம் முதல் 3 நிமிடம் வரை அப்படியே இருத்தல் வேண்டும் இம்மாதிரி 3 முதல் 5 முறை வரை செய்யவேண்டும். குறிப்பு – கூர்மம், ஆமை, தன் ஐந்து உறுப்புக்களையும் ( தலை, நான்கு கால் ) தன் விருப்பப்படி வெளியில் நீட்டவும், அடக்கவும் செய்யும். அதுபோல இந்த ஆசனத்தைச் செய்பவர்களும்…

குய்யபாத ஆசனம் ( கருவாய் )

குய்யபாத ஆசனம் இரண்டு பாதங்களையும் ஒன்றோடொன்று சேர்த்து, இரண்டு குதிகால்களும் ஆசன வயிற்படும்படி பொருத்தி வைத்துக் கொண்டு இரண்டு கணுக்கால்களையும் பிடித்துக் கொண்டு மூச்சை வெளியில் விட்டுக் கொண்டே குனிந்து இரண்டு கால் பெருவிரல்களும் நெற்றியில் படும்படி செய்து, பின் மூச்சை உள்ளுக்கிழுத்துக் கொண்டே நிமிரவும் இம்மாதிரி 3 முதல் 5 முறை செய்ய வேண்டும். குறிப்பு — கர்ப்பத்தடைக்குச் சிறந்த ஆசனம். பெண்கள்விடாமல் காலை, மாலை, மூன்று மாதங்கள் செய்து வந்தால் நிச்சயமாய் கர்ப்பமுண்டாகாது.

பவனமுக்தாசனம்

 பவனமுக்தாசனங்கள் ஆண், பெண், வயதானவர், சிறுவர் யாவரும் செய்யக்கூடிய மிக இலகுவான ஆசனமாகும். உடல் முதுமை அடைந்து இறுகுவதைத் தடை செய்யும். பலவீனமானவர்கள், நோயாளிகள் உடல் கனமானவர்கள் யாவரும் செய்யக்கூடிய மிக எளிமையான யோகாசனம், இரத்த அழுத்த நோய்க்கு மிகச் சிறந்த பயிற்சி. பவன முக்தாசனம் மனிதனை அமைதிப்படுத்தி, ஒரு சிறந்த நல்ல ஆரோக்கியப் பாதைக்கு அழைத்துச் செல்லும், யோகாசனத்தைப் பற்றியோ பிற விரைவுப் பயிற்சியைப் பற்றியோ ஒன்றும் தெரியாதவர்கள் கூட இப்பயிற்சியை வெகு எளிதாகப் பயிலலாம்.…

சவாசனம் ( சாந்தியாசனம் ) SAVASANAM

விரிப்பில் மல்லாந்து படுத்துக் கொண்டு கால்களைச் சேர்த்து வைத்துக் கொள்ளவும். கைகளைப் பக்கவாட்டில் நீட்டி படத்தில் காட்டியபடி அமைக்கவும். கண்ணை இலேசாக மூடிக்கொள்ளவும். உடல் பாதத்திலிருந்து மூட்டு, தொடை, இடுப்பு, வயிறு, மார்பு, கைகள், முகம் இவைகள் வரிசையாக இணைத்து இருக்க வேண்டும். சாதாரண மூச்சு. நாம் இறந்து போனால் எவ்வாறு உடல் இருக்குமோ அது போன்று உடலை இளக்கி சலனமின்றி 3 முதல் 5 நிமிடம் இருந்து, எழுந்திருக்கவும். ஆசனங்கள் செய்தபின் கடைசியாக சவாசனம் செய்யாமல்…

ஹஸ்த பாதாங்குஸ்தாசனம் – HASTHA PADANGUSTHASANAM

கால்களை விறைப்பாக நிறுத்தி, கைகளைப் பக்கவாட்டில் தொங்கவிட்டு, மார்பை முன்புறம் தள்ளி நிமிர்த்தி ஒரு காலைத் தூக்கும்போது மூச்சை வெளியிட்டு, மடக்கிய காலை படத்தில் காட்டியபடி உடம்பிற்கு நேர்கோணத்தில் கொண்டு வரவும். இப்பொழுது கால் தூக்கிய நிலையில் வந்தவுடன் இரு கைகளையும் படத்தில் காட்டியபடி நீட்டி, தூக்கிய நிலையில் உள்ள காலின் பாதங்களை சுவாசத்தை வெளியே விட்ட நிலையில் உள்ள காலின் பாதங்களை சுவாசத்தை வெளியே விட்ட நிலையில் பிடித்துக்கொண்டு சில வினாடியில் நிறுத்திவிட்டு, பின்னர் சுவாசத்தை…

சக்கராசனம் — CHAKKARASANAM

சக்கராசனம் — CHAKKARASANAM முதல் முறை — பிறையாசனம் கொஞ்ச நாள் செய்த பிறகு இவ்வாசனத்தைச் செய்ய முயற்சிக்க வேண்டும். நின்ற நிலையில் கைகளைத் தரையில் தொட வேண்டும். பின் மூச்சை உள்ளே இழுத்து கைகளைத் தரையில் அழுத்தி எழுந்திருக்கவேண்டும். இரண்டாவது முறை — தரையில் படுத்துக்கொண்டு கால்களை இழுத்து கைகளைப் பின்னால் ஊன்றி முதுகையும் உடலையும் உயர்த்தி படத்தில் காட்டியபடி நிற்க வேண்டும். ஒரு முறைக்கு 15 வினாடியாக 2 முதல் 3 முறை செய்யலாம்.…

நெளலி — NAULI

நெளலி உட்டியானா செய்யச் செய்ய நெளலி தானாக வந்துவிடும். கால்களை அகற்றி நின்று, கைகளைப் படத்தில் காட்டியபடி தொடை மேல் அமர்த்தி உடலை முன்னால் குனிந்து கொள்ளவும். சுவாசம் முழுமையும் மெதுவாய் வெளியில் விட்டு வயிற்றை உட்டியானா செய்யவும். பின் தளர்ச்சியைடைந்த வயிற்றின் சதைகளை இறுகக் கட்டிச் செய்யவும். இப்படி இறுக்கியவுடன் மேல் சென்ற வயிறு தானாக முன்னால் துருத்தும் பின் வயிறு தடிபோல் முன்வந்து நிற்கும். சில வினாடிகள் நின்ற பிறகு சதையை நழுவவிட்டு சுவாசத்தை…

உட்டியானா – UDDIYANA

உட்டியானா கால்களை ஒரடி அகற்றி நின்று கொள்ளவும். உடலை வாந்தி செய்வது போல் முன் வளைந்து கைகளை தொடையில் வைத்துக் கொள்ளவும். மூச்சை முழுவதுமாக வெளியே விடவேண்டும். வயிற்றை எக்கி கைகளை தொடையில் அழுத்தி குடலை படத்தில் காட்டியபடி ஏற்றவும். இவ்வாசனத்தை மிக மெதுவாக அவசரப் படாமல் செய்ய வேண்டும். 5 வினாடிகள் நிறுத்தி இளைப்பாறவும். ஒரு முறைக்கு 5 வினாடிகள் 2 முதல் 4 முறை செய்யலாம். உட்டியானா வெறும் வயிற்றில் காலையில்தான் செய்யவேண்டும். ஆகாரம்…

கோணாசனம் — KONASANAM

கோணாசனம் நேராக நின்றுகொண்டு கால்களை 2 அடி அகற்றி வைக்கவும். கைகளைப் படத்தில் காட்டியபடி தலைக்கு மேலே தூக்கிக் கோத்துக் கெள்ள வேண்டும். முதலில் வலப்பக்கம் உடல் திருகாமல் வளையவேண்டம். 20 எண்ணிக்கை ஆசன நிலையில் இருந்து பின் இடப்பக்கம் சாயவேண்டும். 3 முறை செய்யலாம். பலன்கள் — விலா எலும்புகள் பலப்படும். கபநோய் நீங்கும். இடுப்பு வலிகள் குறையும் பெண்கள் இவ்வாசனத்தைச் செய்வதால், இடுப்பு, பிருஷ்டம் இவற்றில் சதை போடாமல் தடுக்கலாம்.

திரிகோணாசனம் — THIRIKONASANAM

திரிகோணாசனம் கால்களை 2 அடி அகற்றி நின்றுகொண்டு இரு கைகளையும் பக்கவாட்டில் ஒரு நேர்கோடுபோல் இருக்கும்படி உயர்த்தவும். மூச்சை வெளியே விட்ட நிலையில் இடது பக்கம் படத்தில் காட்டியபடி வளைந்து கை இடதுபாதப் பெருவிரலைத் தொடும்படியாகவும் தலையை மேலே திருப்பி, கண்கள் இடதுகைப் பெருவிரலைப் பார்க்கும்படியும் நிற்கவும். பின் மெதுவாக நேராக நிமிர்ந்து வலது பக்கம் திருப்பி வலது கால் பெருவிரலை வலது கையால் தொடும்படி நின்று கால் பெருவிரலை வலது கையால் தொடும்படி நின்று மெதுவாக…

பாதஹஸ்தாசனம் — PADHAHASTHASANAM

பாதஹஸ்தாசனம் — பாதங்கள் சேர்த்து நிமிர்ந்து நிற்கவும். மூச்சை வெளியே விட்டபடி உடலைத் தளர்த்திக் குனிந்து கைகளால் கால்களின் பெருவிரலைப் பிடித்துக் கொள்ளவும். முழங்கால் கொஞ்சமும் வளையக் கூடாது. கால்களை விறைப்பாக வைத்துக் கொள்ளவும். முகத்தை முழங்காலை நோக்கி அணுகச் செய்யவும். ஆரம்பத்தில் கால் விரலைப் பிடிக்க வராது. கைகளை இரு கால்களில் மூங்காலுக்குப் பின்னால் கட்டி, கிட்டிப்போட்டு முகத்தை காலுக்குள் தொட முயற்சிக்க வேண்டும். ஒரிரு வாரங்களில் படத்தில காட்டியபடி முழுநிலை அடையலாம். ஒரு முறைக்கு…

பிறையாசனம் — PIRAIYASANAM

பிறையாசனம் — இவ்வாசனத்தை அர்த்த ( பாதி ) சக்ராசனம் எனகூறுவர். நின்ற நிலையில் காலைச் சற்று அகலமாக வைத்துக் கொண்டு கைகளினால் முதுகைப் பிடித்துக் கொண்டு முடிந்த அளவு பின்னால் வளையவேண்டும். கொஞ்ச நாளில் படத்தில் காட்டியபடி இரண்டு கால்களையும் கைகளினால் பிடித்தபடி பின்னால் வளையும் தன்மை கிடைக்கும். சாதாரண மூச்சு ஒரு முறைக்கு 15 வினாடியாக 2 முதல் 3 முறை செய்யலாம். – பலன்கள் — முதுகுத் தண்டு பலம் பெறும். இளமை…

நின்ற பாத ஆசனம் — STANDING FOOT ASANAM

நின்ற பாத ஆசனம் — இவ்வாசனம் சிரசாசனம், அர்த்த சிரசாசனம் இவற்றிற்கு மாற்று ஆசனம். ஒற்றைக் காலில் நிற்பது. வலது காலில் நின்று கொண்டு இடது காலைமடக்கி குதிகாலை வலது தொடை மேல் வளைத்து ஆசனவாயில் படும்படி நிறுத்த வேண்டும். இரு கைகளையும் உயரே முடிந்த அளவு உயர்த்திக் கும்பிட வேண்டும். கையை விறைப்பாக வைக்கக்கூடாது. பின் இடது காலில் நிற்க வேண்டும். முறைக்கு 1 நிமிடமாக 2 முதல் 4 முறை செய்யலாம். நின்று கொண்டு…

சிரசாசனம் — SIRASASANAM

சிரசாசனம்   15 நாட்கள் அர்த்த சிரசாசனம் செய்த பின்புதான் சிரசானம் தொடங்க வேண்டும். அர்த்த சிரசாசன நிலையில் சுவர் ஒரமாகவோ, மூலையிலோ இருந்து கொண்டு இலேசாக மூச்சுசப் பிடித்து கால்கள் இரண்டையும் உயரே மெதுவாகத் தூக்க வேண்டும். கால்களை விறைப்பாக இல்லாமல் சாதாரண நிலையில் வைக்க வேண்டும். சாதாரண மூச்சு. கண் மூடி இருக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் பிறர் உதவியுடன் செய்யலாம். நன்றாக பேலன்ஸ் கிடைத்தபின் தனியாக நிற்கலாம். ஆரம்பத்தில் 3 நிமிடம் முதல் 5…

அர்த்த சிரசாசனம் — ARDHA SIRASASANAM

அர்த்த சிரசாசனம் கெட்டியான விரிப்பில மண்டியிட்டு உட்காரவும். விரல்களைச் சேர்த்து முக்கோணம் போல் விரிப்பின் மேல் அமர்த்தவும். உச்சந்தலையைத் தரையில்அமர்ததி, பிடரியில் விரல்கள் ஒட்டியவாறு குனிந்து அமரவும். பிருஷ்டபாகத்தைத் தூக்கி கால்களை அருகே இழுத்து முக்கோண வடிவமாக நிற்கவும். சாதாரண மூச்சு. கண் மூடியிருக்க வேண்டும். உடல் கனம் யாவும் கையால் தாங்கும்படியாக இருக்கவேண்டும். ஒருமுறைக்கு 1 முதல் 2 நிமிடம் வரை இருக்கலாம். பின் மெதுவாக ஆசனத்தைக் கலைக்க வேண்டும். 2 முதல் 5 முறை…

அர்த்த மத்ச்யேந்திராசனம் — ARDHA MATSYENDRASANAM

அர்த்த மத்ச்யேந்திராசனம் —  உட்கார்ந்து இடது காலை மடக்கி இடது குதியை தொடைகள் சந்திற்குக் கொண்டு வரவும். வலது முழங்காலை மடக்கி நிறுத்தி, இடது முழங்காலருகே வலது பாகத்தைக் கொண்டு வந்து தூக்கி இடது தொடையைத் தாண்டி பக்கத்தில் சித்திரத்தில் காட்டியவாறு நிறுத்தவும். உடலை வலது பக்கம் திருப்பவும். இடது கையை வலது முழங்காலுக்கு வெளியே வீசி, பின்புறமாய் முழங்காலை அமர்த்திட இடது கையால் இடது முழங்காலையும் பிடித்துக் கொள்ளவும். முதுகை வலது பக்கம் திருப்பி, வலது…

மகாமுத்ரா — MAHAMUDRA

மகாமுத்ரா — உசர்ட்டாசனத்திற்கு மாற்று ஆசனம். வஜிராசன நிலையில் கைகளை முதுகின் பின்புறம் படத்தில் காட்டியபடி கட்டிக் கொண்டு, தலையைத் தரையில் தொடும்படி முன்னால் குனியவும். உடலை 3 மடிப்புகளாக வளைப்பதால் உடல் விறைப்புத்தன்மை குறையும். சாதாரண மூச்சு. 20 எண்ணும் வரை இருந்தால் போதுமானது. 3 முறை செய்யவும் .பலன்கள் — வாத நோய்க்கு சிறந்த ஆசனம். யோக முத்ரா ஆசனத்திற்கு உள்ள பலன்கள் இதற்குக் கிடைக்கும்.

உசர்ட்டாசனம் — USSERT ASANAM

உசர்ட்டாசனம் —  உசர்ட் ஆசனம் என்றால் ஒட்டக ஆசனம் எனப்பெயர். மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டு கைகளால் பின்னால் இரு கணுக்கால்களையும் பிடித்துக்கொண்டு பிருஷ்ட பாகத்தை காலில் உட்கார்ந்து இருப்பதிலிருந்து கிளப்பி தலையைப் பின்னால் படத்தில் காட்டியபடி தொங்கப் போட வேண்டும். மூச்சை முடிந்த மட்டும் 4, 5 முறை வேகமாக இழுத்து விட வேண்டும். பின் காலில் உட்கார்ந்து கைகளை எடுக்க வேண்டும். ஒரு முறைக்கு 5 வினாடியாக 2 முதல் 4 முறை செய்ய வேண்டும்.…

ஜானுசீராசனம் — JANUSEERASANAM

ஜானுசீராசனம்  நேராக உட்கார்ந்து கொண்டு கால்களை அகலமாக முடிந்த அளவு விரித்து, பின் வலது காலை மடக்கி குதிகால் ஆசனவாயில் படும்படி வைக்கவேண்டும். இரு கைகளையும் குவித்த நிலையில் மெதுவாகக் குனிந்து இடது கால் பாதத்தைப் பிடிக்க வேண்டும். முகம், இடது கால் மூட்டைத் தொட வேண்டும். பின் வலதுகாலை நீட்டி இடதுகாலை மடக்கி முன்போல் செய்ய வேண்டும். ஆசன நிலையில் 5 முதல் 15 வினாடி இருந்தால் போதுமானது. ஒவ்வொரு காலையும் 3 முறை மடக்கிச்…

யோக முத்ரா — YOGA MUDRA

யோக முத்ரா — YOGA MUDRA பத்மாசன நிலையில் உட்கார்ந்து கொண்டு கைகளை மிக இளக்கமாக முதுகுக்குப் பின்புறம் கட்டிக் கொள்ளவும். நாடி நெஞ்சைத் தொடும்படியாக வைத்துக்கொண்டு மூச்சை மெதுவாக வெளியே விடடவாறே முன் நெற்றி தரையில் தொடும்படி மெதுவாகக் குனியவும். சில வினாடி இந்நிலையில் இருந்தபின் தலையை நேராக முன்போல் நிமிர்த்தவும். நிமிரும்போது மூச்சை உள்ளுக்கு இழுக்கவும். பத்மாசனம் செய்ய முடியாதவர்கள் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டு இவ்வாசனத்தைப் பயிலலாம். ஒரு முறைக்கு 20 வினாடியாக 5…

தனுராசனம் — DHANURASANAM

தனுராசனம் விரிப்பில் குப்புறப் படுத்துக் கைகளால் காலை ( கரண்டைக்கால் ) இறுகப் பிடிக்கவும். சுவாசத்தை வெளியே விட்ட நிலையில் கைகளால் காலை இழுத்து தலையையும் கழுத்தையும் மேல் தூக்கி வளைத்து கால்களையும் மேல் நோக்கி இழுத்து உடலை படத்தில் காட்டியபடி வில்போல் வளைத்து நிற்கவும். தனுர் என்றால் வில் எனப்பொருள். ஒரு முறைக்கு 5 முதல் 15 வினாடியாக 3 முதல் 5 தடவை செய்யவும். ஆரம்ப காலத்தில் காலை விரித்துச் செய்யவும். பின் மிக…

சலபாசனம் — SALABASANAM

சலபாசனம் — குப்புறப் படுத்து முகத்தை விரிப்பில் தாழ்த்தி வைத்துக் கொள்ளவும். இரு கைகளையும் குப்புற மூடிய நிலையில் அடி வயிற்றின் கீழ் வைத்துக் கொள்ளவும். மூச்சை உள்ளே இழுத்து அடக்கியவாறு, கைகளைத் தரையில் அழுத்தியவாறு கால்களை விறைப்பாக வைத்து படத்தில் காட்டியவாறு மேலே தூக்கவும். ஒரு முறைக்கு 5 முதல் 10 வினாடியாக மிக மெதுவாக உயரே தூக்கி கீழே இறக்க வேண்டும். ஆரம்பத்தில் சில நாள் ஒவ்வொரு காலாக மாற்றி மெதுவாகப் பழகவும். பலன்கள்…

புஜங்காசனம் — BUJANGASANAM

புஜங்காசனம் குப்புறப் படுத்துக் கொண்டு கைகளைப் பக்கங்களில் காதுக்கு நேராக தரையில் பொத்தியவாறு வைத்து தலையை மட்டும் பாம்பு போல் மெதுவாக முடிந்தவரை தூக்கி கழுத்துக்குப்பின் வளைக்கவும். சாதாரண மூச்சு , பின் மெதுவாகத் தலையைக் கீழே இறக்கவும். ஒருமுறைக்கு 15 வினாடியாக 2 முதல் 3 மு‍றை ‍ செய்யலாம். புஜங்கம் என்றால் பாம்பு எனப் பொருள். பாம்பு படம் எடுப்பதைப் போல் வளைவதால் இவ்வாசனம் புஜங்காசனம் பெயர் பெற்றது. பலன்கள் –– வயிற்றைறையில் தசைகள்…

சுப்தவஜிராசனம் — SUPTAVAJIRASANAM

சுப்தவஜிராசனம்முழங்கால்களை மடக்கி, பாதங்களின் மேல் பிருஷ்டபாகம் நன்கு படும்படி அமரவேண்டும். பின்னர் இரு முழங்கைகளின் உதவியால் முதுகைத் தாங்கி மெதுவாக முதுகை வளைத்து விரிப்பில் படும்படு படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு முழங்கால்களையும் நெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும் தலையை மடக்கி தரையில் இருக்கும்படி தலையைப் பின்புறமாக வளைத்து அமரவும். பின்னர் கைகளைக் கோர்த்து மார்பில் வைக்க வேண்டும். சித்திரத்தைப் பார்த்துக் கவனித்துச் செய்ய வேண்டும். சுவாசத்தை உள்ளிழுத்தவாறு முதுகை வளைத்துப் படுக்க வேண்டும். அடுத்து ஆசன…

மச்சாசனம் — MATSYASANAM

மச்சாசனம் பத்மாசனம் போட்டு மல்லாந்து படுத்துக் கொள்ளவும். கைகளைப் பின்னால் ஊன்றி முதுகைத் தூக்கி வில் போல் வளைத்து தலையைப் படத்தில் காட்டியபடி பின் வளைத்து, கைகளை எடுத்து, கால் கட்டை விரல்களைப் பிடிக்கவும். தீர்க்கமாய் சுவாசிக்கவும். ஒரு முறைக்கு 5 முதல் 15 வினாடியாக 3 முதல் 4 முறை செய்யலாம். பலன்கள் –– சர்வாங்காசனம், விபரீத கரணி, ஹலாசனம் இவற்றிற்கு மாற்று ஆசனம், சுரப்பிகள் அனைத்தும் புத்துணர்ச்சியோடு வேலை செய்யும். முதுகெலும்பு பலப்படும். மார்பு…

ஹலாசனம் — HALASANAM

ஹலாசனம் — HALASANAM சர்வாங்க ஆசன நிலையில் இருந்து விபரீத கரணி நிலைக்கு வந்து, இரு கால்களையும் தலைக்குப் பின்பக்கம் மெதுவாகக் கொண்டுவந்து தரையைத் தொட முயற்சிக்கவும். ஆரம்ப காலத்தில் தரையைத் தொட இயலாது. ஓரிரு வாரங்களில் தரையைத் தொடும். அல்லது விரிப்பில் மல்லாந்து படுத்து, கால்களை ஒட்டியவாறு நீட்டி கைகளை உடல் பக்கத்தில் தரையில்வைத்துக்கொண்டு உள்ளங்கையைக் குப்புற வைக்கவேண்டும். கால்கள் நேராக ஒட்டியவாறு இருக்கவேண்டும். மூச்சைச் சிறிது உள்ளிழுத்து கால்களை இடுபபிலிருந்தும் மேல் கிளப்பி உயர்த்தி…

எதனைக் கொண்டு இந்த விதிகள் சொல்லப்பட்டுள்ளது – 4

ஜோதிட விதிகள் இலக்கினத்தில் சனியிருந்து சந்திரனாவது, சுக்கிரனாவது 7 – ல் நிற்க, அழிந்து போனவளுக்குப் பர்த்தாவாவான். இலக்கினாதிபதியுன் புதன் கூடினால், முந்தின பிள்ளை பெண் பெறுவன். இலக்கினாதிபதி பாபருடன் கூடி ராசியிலாவது 8 – லாவது இருந்தால், சரீரத்தில் சிரங்கு, கொப்பளம், அரையாப்பு கிரந்தி இரணமுள்டாகும். இலக்கினாதிபதி, சூரியன் செவ்வாய்கில், சுடு சாதத்தின் மேற் பிரியன். இலக்கினாதிபதி, சந்திரனாகில் தித்திப்பில் விருப்பன் இலக்கினாதிபதி புதனாகில், புளிப்பில் விருப்பன். இலக்கினாதிபதி வியாழனாகில் தயிரில் விருப்பன் இலக்கினாதிபதி சுக்கிரனாகில்,…

மயூராசனம் — MAYURASANAM

மயூராசனம் மயூர் ஆசனம் என்றால் மயில் ஆசனம் எனப்பெயர். முழங்கால் மண்டியிட்டு குதிகால் மேல் உட்காரவும். முன் கைகளைச் சேர்த்துத் தரையில் உள்ளங்கைகளை ஊன்றவும். வயிற்றை இறுக்கி மூச்சை உள் வைத்துத் தொப்புளை முழங்கை மேல் வைத்து கால்களை மெதுவாகப் பின் நீட்டி முன்சாய்த்து சித்திர நிலைக்கு வரவும். ஆரம்பத்தில் முகத்திற்குக் கீழ் தலைய‍ணை கண்டிப்பாக வைக்க வேண்டும். ஒரு முறைக்கு 10 முதல் 15 வினாடி வரை 3 முறை செய்யலாம். பலன்கள் – வாத…

வஜ்ராசனம் — VAJIRASANAM

வஜ்ராசனம் கால்களைப் படத்தில் காட்டியபடி மண்டியிட்டு உட்கார்ந்து கைகளைத் தொடையின் மீது வைத்து முதுகை நேராக நிமிர்த்தி கம்பீரமாக உட்காரவும். நன்றாக மூச்சை 4 முதல் 10 முறை இழுத்து விடவும். 2 முதல் 4 நிமிடம் ஆசன நிலையில் இருக்கலாம் ..பலன்கள் — வச்சிரம் போன்று திட மனது ஏற்படும் அலையும் மனது கட்டுப்படும். தியானத்திற்குரிய ஆசனம்

உத்தித பத்மாசனம் – UTHITHA PADMASANAM

உத்தித பத்மாசனம்  பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் கைகள் இரண்டையும் பக்கவாட்டில் அமர்த்தி உடலை மேலே தூக்க வேண்டும். பத்மாசனம் போட முடியாதவர்கள் சாதாரண நிலையில் உட்கார்ந்து உடலை மேலே தூக்கலாம். ஆரம்பத்தில் மூச்சு பிடிக்கத் தோன்றும். சாதாரண மூச்சுடன் செய்வது நல்லது ஒருமுறைக்கு 15 வினாடியாக 3 முறை செய்தால் போதுமானது பார்வை நேராக இருக்க வேண்டும். கைகளைத் தங்கள் செளகரியம்போல் வைத்துக் கொள்ளலாம். கால் மூட்டுகள் மேல் நோக்கிச் செல்ல முயற்சிக்கவும். பலன்கள் – தொந்தி…

சர்வாங்காசனம் – SARAVANGASANAM

சர்வாங்காசனம் – விபரீத கரணியை கொஞ்ச நாள் செய்த பின்புதான் சர்வாங்காசனம் செய்ய முடியும். விபரீத கரணி நிலையில் இருந்து கொண்டு இரு கைகளையும் மேலும் அழுத்தி நெஞ்சு நாடியில் தொடும்படி உடலை உயர்த்தி கைகளை முதுகில் தாங்கி நிற்கும்படி ” L ” உருவில் நிற்கவும். சாதாரண மூச்சு நிலையில் கால்களின் பெருவிரல்களை இரு கண்களையும் அரைகுறையாக மூடிய நிலையில் பார்க்கவும். கால்களை விறைப்பாக வைக்காமல் இளக்கமாக இருக்கும்படி நிற்கவேண்டும். 2 நிமிடத்திற்கு ஒரு முறையாக,…

விபரீத கரணி — VEEBAREETHA KARANI

விபரீத கரணி  விரிப்பில் மல்லாந்து படுத்து உடலை இணக்கவும். கால்களை வயிற்றின்மேல் மடித்து உயரத்தூக்கி கைகளின் உதவியால் பிருஷ்டத்தையும் (குண்டியை ) முதுகையும் உயரக்கிளப்பி, முழங்கைகளைத் தரையில் நன்றாக ஊன்றி, விரிந்த இரு கைகளாலும் பிருஷ்டத்தைத் தாங்கி கால்களை நேராக நிமிர்த்தி நிற்கவும். கண்பார்வை கால் பெருவிரலை நோக்கி இருக்க வேண்டும் .ஆரம்பக் காலத்தில் பிறர் உதவியுடன் பிருஷ்ட பாகத்தில் தலையணைகளைத் தாங்கலாகக் கொடுத்து நிற்கலாம். அல்லது சுவரின் ஒரமாகப் படுத்து கால்களால் சுவரை மிதித்து பிருஷ்ட…

நவாசனம் — NAVASANAM

நவாசனம்  நேராகத் தரையில் படுத்துக் கொள்ளவும். படத்தில் காட்டிய படி, தலையையும் காலையும் ஒரே சமயத்தில் தூக்கவேண்டும். முதுகு தரையில் படக்கூடாது. தோணி போன்று உடலை அமைக்க வேண்டும். பார்வை கால் பெருவிரலை நோக்கி இருக்க வேண்டும். சாதாரண மூச்சு . பலன்கள் — இவ்வாசனம் வயிற்றின் மத்திய பாகத்‍தை நன்றாக அமுக்கம் கொடுக்கும். தொந்தி கரையும். கணையம நன்கு இயங்கும். ஜீரணக் கருவிகள் நன்கு வேலை செய்யும். அஜீரணம், ஏப்பம், வாயுத் தொல்லை நீங்கும். மலச்சிக்கல்…

பஸ்சிமோத்தாசனம் — PASCHI MOTHASANAM.

பஸ்சிமோத்தாசனம் — PASCHI MOTHASANAM. விரிப்பில் மல்லாந்து படுத்த நிலையில் – இரு கால்களை ஒன்றாகச் சேர்த்துப் படுத்த நிலையில் வைத்துக் கொள்ளவும். பின் இரு கைகளை தலைப் பக்கம் நீட்டி காதுகளுடன் ஒட்டியவாறு சுவாசத்தை உள்ளிழுத்துது ஒரே முயற்சியில் இடுப்பு நிலைக்கு வரவும். பின் இரு கைகளில் எக்கிப்பிடிக்க முயற்சிக்கவும். விரல்கள் எட்டவில்லையாயின், கால்களை உள்ளே இழுத்துப் பெருவிரலைப் பிடித்திடவும். பின் முகத்தால் கால்களின் மூட்டுக்களைத் தொட முயற்சிப்பதோடு, வயிற்றை மூச்சை வெளியே விட் நிலையில்…

உத்தானபாத ஆசனம் — UDANAPADA ASANAM

உத்தானபாத ஆசனம் — UDANAPADA ASANAM நேராக நிமிர்ந்து படுத்த நிலையில் கைகளைக் குப்புற மூடியவாறு படத்தில் காட்டியபடி பக்கவாட்டில் உடம்பை ஒட்டிய நிலையில் வைத்துக் கொள்ளவும் . இரண்டு கால்களையும் சாதாரண நிலையில் ( விறைப்பாக இல்லாமல் ) தரையிலிருந்து அரை அடி மட்டும் மிக மெதுவாக உயர்த்தி சிறிது நேரம் நிறுத்தி மெதுவாக இறக்கவும். சாதாரண மூச்சு, ஆரம்ப காலத்தில் மூச்சுப் பிடிக்க நேரிடும். ஒரு முறைக்கு 20 வினாடியாக 2 முதல் 4…

பஸ்சிமோத்தாசனம்

செய்முறை: மல்லாந்து படுத்த நிலையில் இரு கால்களையும் ஒன்றாக சேர்த்து படுத்த நிலையில் வைத்துக் கொள்ளவும். பின் இரு கைகளை தலைப் பக்கம் நீட்டி காதுகளுடன் ஒட்டியவாறு ஒரே முயற்சியில் இடுப்பு நிலைக்கு வரவும். பின் இரு கைகளில் உள்ள ஆள்காட்டி விரலினால் கால்களின் பெருவிரலை பிடிக்கவும், விரல்கள் எட்டவில்லையானால், கால்களை உள்ளே இழுத்துப் பெருவிரலை பிடிக்கவும். முகத்தால் கால்களின் மூட்டுகளைத் தொட முயற்சிப்பதோடு, மூச்சை வெளியேவிட்ட நிலையில் வயிற்றுப் பகுதியை மெதுவாக எக்கவும். கைகளின் இரு…

பத்மாசனம்.

                                                           பத்மாசனம். பத்மாசனம் செய்யும் முறை — முதலில் காற்றோட்டமான நல்ல ஒரு இடத்தைத் தேர்ந்தெடுங்கள். தூய ஒரு வெண்ணிற ஆடையை விரியுங்கள், உடலுக்கு இறுக்கமில்லாத ஆடையை அணியுங்கள், அப்படி அணியக்கூடிய ஆடை பருத்தி ஆடையாக இருப்பது…