அர்த்த மத்ச்யேந்திராசனம் — உட்கார்ந்து இடது காலை மடக்கி இடது குதியை தொடைகள் சந்திற்குக் கொண்டு வரவும். வலது முழங்காலை மடக்கி நிறுத்தி, இடது முழங்காலருகே வலது பாகத்தைக் கொண்டு வந்து தூக்கி இடது தொடையைத் தாண்டி பக்கத்தில் சித்திரத்தில் காட்டியவாறு நிறுத்தவும். உடலை வலது பக்கம் திருப்பவும். இடது கையை வலது முழங்காலுக்கு வெளியே வீசி, பின்புறமாய் முழங்காலை அமர்த்திட இடது கையால் இடது முழங்காலையும் பிடித்துக் கொள்ளவும். முதுகை வலது பக்கம் திருப்பி, வலது கையைப் பின்னால் வீசி மூச்சை வெளியேவிட்டு வலது விரல்களால் வலது காலில் கொக்கி போல் மாட்டி உடலை நன்றாகத் திருப்பி இழுக்கவும். ஆசனத்தைக் கலைத்து இடது பக்கம் மறுபடியும் அம்மாதிரி மாற்றிச் செய்யவும். பலன்கள் — முதுகெலும்பு திருகப்பட்டு புத்துணர்ச்சி ஏற்படும். நாடி மண்டலம் நன்கு வேலை செய்யும். இளமை மேலிடும். முகக் கவர்ச்சி உண்டாகும். விலா எலும்பு பலப்படும். தொந்தி கரையும். Category: யோகாBy admin@powerathmaSeptember 5, 2020Leave a commentTags: ARDHA MATSYENDRASANAMdivine power athmaஅர்த்த மத்ச்யேந்திராசனம் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:சக்தி மயமான ஆற்றல்NextNext post:இறைவனும் ஒரு பொறியாளன் தான்Related Postsசுந்தர யோக சிகிச்சை முறை 163April 25, 2026சுந்தர யோக சிகிச்சை முறை 162April 24, 2026சுந்தர யோக சிகிச்சை முறை 161April 23, 2026சுந்தர யோக சிகிச்சை முறை 160April 22, 2026சுந்தர யோக சிகிச்சை முறை 159April 21, 2026சுந்தர யோக சிகிச்சை முறை 158November 30, 2025