எவ்வளவு உதவியாக இருக்கிறீர்கள்? 2

இதனால் குளிர்விட்டுப் போன புலி, நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து அங்கேயே தங்கிவிட்டது. அடுத்த நாள் வழக்கம்போல் ஒரு நபரை அடித்துக் கொன்றது. அவர் அந்த அலுவலகத்தின் பியூன். அலுவலக ஊழியர்களுக்கு காபி வாங்குவதற்காக பிளாஸ்கை கழுவ ரெஸ்ட் ரூம்புக்கு வந்திருக்கிறார்.  சிறிது நேரத்தில் காபி வாங்கச் சென்ற பியூனைக் காணவில்லையே என்று மொத்த அலுவலகமும் சல்லடை போட்டு தேடியது. நெடுநேர தேடுதலுக்குப் பின் ரெஸ்ட் ரூம்பில் உயிரிழந்து கிடந்த. பியூனையும், அந்த…

எவ்வளவு உதவியாக இருக்கிறீர்கள்? 1

காட்டிலிருந்து புலி ஒன்று வழி தவறி ஒருகார்ப்பரேட் கம்பெனியின் ரெஸ்ட் ரூம்புக்குள் நுழைந்துவிட்டது. பதட்டத்துடன் இருந்த அந்த புலி டாய்லெட்டின் ஓர் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது.  மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு பசி எடுத்தது . நான்காவது நாள் பசி தாங்க முடியாமல் ரெஸ்ட் ரூம்புக்குள் தனியாக வந்த ஒருவரை அடித்துச் சாப்பிட்டது. அவர், அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர். அவர் காணாமல் போனது அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது, யாருமே கண்டு கொள்ளவில்லை.…

நீங்கள் கோபமடைந்தால்

நீங்கள் கோபமடைந்தால் அந்த நிமிடமே கோபமடைவீர்கள் ஆனால் நீங்கள் சரணடைய வேண்டும் போல் உணரும்போது நீங்கள் அதைப்பற்றி யோசிப்பீர்கள்

மனிதனுக்குள்

மனிதனுக்குள் மிகப்பெரிய சக்தி இருக்கிறது. மனித உடல் ஒரு சாதனம். நம்முள் இருக்கும் மிகப்பெரிய சக்தியை நாம் உணர்ந்து, அந்த ஆக்க சக்திகளை வெளிக் கொணர வேண்டும் முயற்சி திருவினையாக்கும் முயன்றால் முடியும் முயன்றால் ”மட்டுமே” முடியும்

கந்தனின் அருட்கரங்களில்…

கந்தனின் அருட்கரங்களில்… கையில் வேலுடன் காட்சி தரும் முருகப்பெருமானின் திருக்கோலத்தை பல்வேறு தலங்களில் தரிசித்திருப்போம். சில திருத்தலங்களில் விசேஷமான பொருட்களை ஏந்தியபடி காட்சி தருகிறான் கந்தன். சங்கு சக்கரம் – கர்நாடக மாநிலம் அரிசிக்கரை சொர்ணபுரீஸ்வரர் கோயில் கல்வேல் – திருச்செங்கோடு கரும்பு தண்டம் – செட்டிக்குளம் (பெரம்பலூர் மாவட்டம்) கிளி – கனககிரி மாம்பழம் -திருநள்ளாறு, திருப்பனையூர் அட்சமாலை -செம்பனார் கோயில் வில் – வில்லுடையான்பட்டு, திருவண்ணாமலை திருவிடைக்கழி, சாயாவனம்

தமிழ் மாதங்களில் வரும் சிவராத்திரி விரதமும். பலன்களும் 4

ஐப்பசி மாதம் :- வளர்பிறை-துவாதசி சிவராத்திரி இந்திரனால் வழிபடப்பட்டது. கார்த்திகை மாதம் :- இரண்டு சிவராத்திரி வளர்பிறை சப்தமியும் தேய்பிறை அஷ்டமியும் சிவராத்திரிகள் இவை சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்டது. மார்கழி மாதம் :- வளர்பிறை, தேய்பிறையில் வரும் சிவராத்திரி லட்சுமியால் வழிபடப்பட்டது. தை மாதம் :- வளர்பிறை-நந்தி தேவரால் வழிபடப்பட்டது. மாசி மாதம் :- தேய்பிறை-தேவர்களால் வழிபடப்பட்டது. பங்குனி மாதம் :- வளர்பிறை-குபேரனால் வழிபடப்பட்டது.நெற்றிக்கண் ஆஞ்சநேயர்

தமிழ் மாதங்களில் வரும் சிவராத்திரி விரதமும். பலன்களும் 3

சித்திரை மாதம் :- இம்மாதம் தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி உமாதேவியால் வழிபடப்பட்டது. வைகாசி மாதம் :- வளர்பிறை. அஷ்டமி சிவராத்திரி சூரிய பகவானால் வழிபடப்பட்டது. ஆனி மாதம் :- வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரி ஈசனால் வழிபடப்பட்டது. ஆடி மாதம் :- தேய்பிறை பஞ்சமி சிவராத்திரி முருகனால் வழிபடப்பட்டது. ஆவணி மாதம் :- வளர்பிறை-அஷ்டமி சிவராத்திரி சந்திரனால் வழிபடப்பட்டது. புரட்டாசி மாதம் :- வளர்பிறை திரியோதசி சிவராத்திரி ஆதி சேஷனால் வழிபடப்பட்டது.

தமிழ் மாதங்களில் வரும் சிவராத்திரி விரதமும். பலன்களும் 2

சிவனடியார்கள் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைபிடித்துவருகின்றனர். சிவராத்திரி விரதம் கடைபிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒரு நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணைசெய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

தமிழ் மாதங்களில் வரும் சிவராத்திரி விரதமும். பலன்களும் 1

மாத சிவராத்திரி விரதங்களைப் பற்றி மாத சிவராத்திரி விரத கல்பம் என்னும் நூல் விரிவாகச் சொல்லுகிறது.அதனைச் சுருக்கி இங்கே தரப்படுகிறது. நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  114

அது முடியாது, அப்படிச் செய்யவும் கூடாது. பின்னால் செல்வது என்பது இந்த நாட்டை நாசத்திற்க்கும் மரணத்திற்க்குமே அழைத்துச் செல்லும். எனவே முன்னேறிச் செல்வோம் மகத்தான காரியங்களைச் செய்வோம் . நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியது இதுதான். அவ்வப்போதைய தேவைகளை மட்டும் நிறை வேற்றுவதான சமூகச் சீர்த்திருத்தத்தைப் போதிக்கின்ற பிரச்சாரகன் அல்ல நான்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   113

ஒன்று நாம் முன்னே செல்ல வேண்டும் அல்லது பின்னே செல்ல வேண்டும்; முன்னேற வேண்டும் அல்லது வீழ்ச்சி அடைய வேண்டும். கடந்த காலத்தில் நம் முன்னோர்கள் மகத்தான காரியங்களைச் செய்தார்கள். நாமும் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து, அவர்கள் செய்ததை விட மகத்தான சாதிக்க வேண்டும் இந்த நிலையில் நம்மால் எப்படிப் பின்னே சென்று நம்மை நம்மையே இழிவுபடுத்திக் கொள்ள முடியும்?  

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   112

இந்த நாட்டில் மகத்தான காரியங்கள் கடந்த காலத்தில் செய்யப்பட்டுள்ளன. அதைவிடச் சிறப்பான காரியங்களைச் செய்வதற்கான நேரமும் வாய்ப்பும் இப்போது உள்ளது. எதுவும் செய்யாமல் நம்மால் இருக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியும் என்பது உறுதி எதுவும் செய்யாமலிருந்தால் செத்துப்போவோம்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   111

எனது லட்சியம் வளர்ச்சி, விரிவு, தேசியப் பாதையில் முன்னேற்றம். நம் நாட்டின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது, இந்த உலகம் முழுவதிலும் எந்த நாடும் இதைப்போல மனித மனத்தின் வளர்ச்சிக்காக அதிகமான காரியங்களைச் செய்யவில்லை என்பதைக் நாம் காண முடியும். எனவே என் நாட்டை நிந்திக்கும் எந்த வார்த்தையும் என்னிடம் இல்லை. அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம், நீங்கள் நன்றாகச் செய்திருக்கிறீர்கள், இன்னும் நன்றாகச் செய்ய முயலுங்கள் என்பது தான்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   110

என்னவென்றால், நம் மக்களே எல்லோரையும் விட மிகவும் ஒழுக்கம் வாய்ந்தவர்கள், மிகவும் தெய்வீக மானவர்கள். நமது சமுதாய அமைப்புக்களே மனித குலத்தை மகிழ்ச்சிகரமாக்க, அமைப்பிலும் நோக்கத்திலும் மிகவும் பொருத்தமானவை. எனவே நான் எந்த சீர்திருத்தத்தையும் விரும்பவில்லை.

ராகு 8

ராகு 10ம் வீட்டில் இருப்பின் போலித்தனம் கூடவே உண்டு.  அன்னிய பாஷையில் அறிவு உண்டு. ராகு, செவ்வாய் லக்னத்தில் உள்ளவர்கள் முன் கோபக்காரகள் சட்டென முடிவு எடுப்பார்கள், எடுத்தேன், கவுத்தேன் என்று பேசுவார்கள். ராகுவோ, சூரியனோ 7ல் இருப்பின் ஜாதகர் கை பணத்தை ஸ்திரீயிடம் தந்து ஏமாற்றமுருவார். ராகு ஜாதகரை அடிக்கடி பயணம் செய்ய வைப்பார்.  வெளிநாட்டோர் தொடர்பை வலுப்படுத்துவார்.

ராகு 7

ராகு, கேது ஆகிய இரு சாயா கிரகங்களும் ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் தங்களது தசாபுத்தி காலங்களில் குறுக்கு அதிர்ஷ்டத்தால் ஜாதகரை குபேரனாக்குவார்கள். ராகு 5மதிபதியுடன் 6,8,12ல் இருப்பது, 5ம் வீட்டில் பெண் கிரகம் பலம் பெற்றிருந்தாலும் பெண் சந்தானம் ஏற்படும். ராகு, கேது ஆண் ஜாதகத்தில் எங்கு உள்ளாரோ அதே போல் பெண் ஜாதகத்திலும் இருப்பின் இல்லற சுகம் கெடுவதில்லை.

ராகு 6

ராகு 10 ம் வீட்டோடு தொடர்பு ஏற்படின், வெளிநாட்டு நிறுவனம், போக்குவரத்து அமைப்புகளில் பணிபுரிய வைப்பார். ராகுவும், சனியும் கூடி 6, 9, 12ம் வீடுகளில் அதிபர்கள் தொடர்பு கொண்டு 10ம் வீடு சரராசியாகுமானால் அன்னிய தேசத்தில் தொழில் வாய்ப்பு ஏற்படும். ராகு 5ம் வீட்டிலிருக்க அல்லது 5ம் மாதியுடன் சேர்ந்து இருக்க, அவனை சுப கிரகம் பார்க்காவிட்டால் சர்ப்ப சாபத்தினால் புத்திர நாசமுண்டாகும்.

ராகு 5

ராகு, கேதுகள், ரிஷபம், விருச்சிகத்தில் இருக்க பிறந்தவர்கள் ஏதோ ஒரு வகையில் புகழ் பெறுவர்.   சாதனை படைப்பர், பயன் கூடிய விஷயங்களில் ஈடுபடுவர், வாக்கு வன்மை, இறையருள் உள்ளவராக இருப்பர். ராகு ரிஷபத்திலும், கேது விருச்சிகத்திலும் இருந்தால் சன்னியாச வாழ்க்கையை உருவாக்கும். ராகுவானவர் 3 அல்லது 6ம் இடங்களில் இருந்தால் அவரது திசை காலத்தில் அறிவும், ஆற்றலும், அந்தஸ்தும், திறமையும் கூடிவரும்.

ராகு 4

ராகு கேந்திர கோணமாக அல்லது 3, 11 ஆக அமைந்தாலும் ஆட்சி உச்சம் பெற்றாலும் ராகு, கேது தசை நன்மை செய்யும். ராகு, சூரியன் சந்திப்பு அமாவாசை, சூரியகிரகணம், பெளர்ணமியில் கேது, சந்திர சந்திப்பு சந்திர கிரகணம். ராகு, கேதுக்கிடையே அனைத்து கிரகம் இருப்பது கால சர்ப்பயோகம்.  கேது, ராகுவிற்கிடையே இருப்பது காலசர்ப்ப தோஷமாகும்.  காலசர்ப்பயோகம் உள்ளவர்கள் வாழ்வின் பிற்பகுதியில் வெற்றி பெறுவார்கள்.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 67 பகைவர்கள் அழிய

தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை, குலம், கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் குடில்கள் தொறும் பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர் பார் எங்குமே. தேவி நின்னை துதித்து வணங்கி மின்னலை போல் சுடர் விடும் நின் திருமேனி தோற்றத்தை ஒரு கணம் கூட இருத்தாதவர் குலம், கோத்திரம், கல்வி, நல்ல குணம் இவையெல்லாம் அடையாமல் ஒவ்வொரு நாளும் குடிசை தோறும் பிச்சை எடுக்கும்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 66 கவிஞராக

வல்லபம் ஒன்றறியேன் சிறியேன், நின் மலரடிச் செம் பல்லவம் அல்லது பற்றொன்றிலேன், பசும் பொற்பொருப்பு வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த சொல் அவமாயினும் நின்திருநாமங்கள் தோத்திரமே கவலை ஏதுமில்லாமல் பசும்பொன் மலையாகிய மேருவை வில்லாக கொண்ட சிவபெருமானுடன் இணைந்திருக்கும் தேவியே எனக்கு அறிவாற்றல் எதுவுமில்லை நின் திருவடியை தவிர வேறு எதன் மீதும் பற்று உடையவன் அல்ல இந்த நிலையில் உள்ள நான் தொடுத்த நின்னை பற்றிய சொற்கள் பொருள் இல்லாததாய் இருந்தாலும் அவை உன்னுடைய…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 65 ஆண்மகப்பேறு அடைய

ககனமும் வானமும் புவனமும் காண, விற் காமன் அங்கம் தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு, தடக்கையும் செம் முகனும், முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின் மகனும் உண்டாயது அன்றோ? வல்லி, நீ செய்த வல்லபமே. அபிராமவல்லியே உன் வலிமையான செயலால் ஈரேழு உலகங்களும் பார்க்கும் படி காமனது உடலை சிவ பெருமான் எரித்தார். அவருக்கு 6 முகங்களும் 12 கைகளும் உடைய குமரன் அமைந்தது நின் வல்பத்தினால் அன்றோ.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 64 பக்தி பெருக

வீணே பலி கவர் தெய்வங்கள்பாற் சென்று, மிக்க அன்பு பூணேன், உனக்கன்பு பூண்டு கொண்டேன் நின்புகழ்ச்சியன்றிப் பேணேன், ஒருபொழுதும் திரு மேனி ப்ர காசமின்றிக் காணேன், இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே. தாயே வீணாக உயிர் பலியை ஏற்றுக்கொள்ளும் சிறு தெய்வங்களிடம் பக்தி கொள்ளேன் உனக்கு மட்டுமே என் பக்தியென்று வைராக்கியம் கொண்டேன் உன்னை  துதிப்பதை தவிர வேறு எதையும் செய்யமாட்டேன். நான் திசைகளிலும் ஆகாயத்திலும் பூமியிலும் நின் ஒளி வெள்ளத்தை தவிர வேறு ஒன்றையும்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 63 அறிவு தெளிவோடு இருக்க

தேறும்படி சில ஏதுவும் காட்டி, முன் செல்கதிக்குக் கூறும் பொருள், குன்றிற் கொட்டும் தறி குறிக்கும் சமயம் ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும் வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே. ஆறு சமயங்களுக்கு தலைவி அபிராமி தாய் என்று அறிந்திருந்தாலும் இவளை தவிர வேறு சமயங்களும் உண்டு எனும் மதியிழந்தவர்களுக்கு பிரமாணங்களை காட்டி நற்கதிக்கு அறிவுறுத்தப்படுவது மலையை மரத்துண்டால் பொடியாக்குவதற்கு சமம்.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 62 எத்தகைய அச்சமும் அகல

தங்கச் சிலைகொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங்கட் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச் செங் கைக் கரும்பும், மலரும் எப்போதும்என் சிந்தையதே. அசுரர்களின் திரிபுரத்தை மேரு மலையாகிய வில்லை கொண்டு அழித்து மதங்கொண்ட யானையின் தோலை உடுத்த சிவபெருமானின் மேனி முழுவதும் இரு தனங்களை கொண்டு அடையாளத்தை வைத்த அம்பிகையின் தாமரை போன்ற சிவந்த கையில் உள்ள கரும்பு வில்லும் மலரம்புகளும் எப்போதும் என் சிந்தையில் இருக்கும்.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 61 மாயையை வெல்ல

நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து, நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம் பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன் தாயே, மலைமகளே, செங்கண்மால் திருத் தங்கச்சியே. உலகத்து உயிர்களுக்கெல்லாம் தாயே பார்வதி தேவியே சிவந்த கண்களை உடைய திருமாலின் தங்கையே நாயாக உள்ள எனையும் ஒரு பொருளாக மதித்து உன்னை உள்ளபடி உன்னை அறியும் அறிவு தந்தாய் இதற்கு நான் என்ன புண்ணியம் செய்து இந்த அருளை பெற்றேன்.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 60. மெய்யுணர்வு பெற

பாலினும் சொல் இனியாய், பனி மா மலர்ப் பாதம் வைக்க மாலினும், தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின் மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒரு நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய்த்தலையே? தேவர்களும், திருமாலும் கொன்றைவார் சடையுடைய சிவனும் வேதங்கள் பாடும் நான்கு பீடங்களை காட்டிலும் பாலை காட்டிலும் இனிய சொல்லை உடைய தேவியே நின் தாமரை மலர் போன்ற திருவடிகளை நாய் தலை போல் உள்ள என் தலை…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர

தஞ்சம் பிறிது இல்லை ஈதல்லது என்றுன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள் சிலையும் அஞ்சு அம்பும் இக்கு அலராக நின்றாய் அறியார் எனினும் பஞ்சு அஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே. கரும்பினால் ஆனா நீண்ட தனி வில்லும் ஐந்து மலர்களும் கொண்ட நின்ற தேவியே நின்றை தவிர எனக்கு வேறு பிடிமானம் இல்லையென்று நின்னை தியானிக்க மனதை பழகும் படி செய்ய எண்ணவில்லை.  பஞ்சை மிதிக்கக்கூட நினையாத மென்மையான பாதங்களை உடைய தாய்மார்கள்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 58. மனஅமைதி பெற

அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும் தருணாம்புயமுலைத் தையல்நல்லாள், தகை சேர்நயனக் கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும், சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே. செந்தாமரை மலரிலும் என் இருதயத்தில் உள்ள தாமரையிலும் இருப்பவளே தாமரையின் அரும்பு போன்ற தனங்களை உடையவளே நின் கருணை விழியாகிய தாமைரையும் முகமெனும் தாமரையும் திரு கரங்களில் இருக்கும் மலரும் உன் திருவடி தாமரையையும் தவிர வேறு ஒன்றையும் சரணடையோர் இதை தவிர வேறு தஞ்சமும் புகலிடமும் எனக்கு இல்லை.