தங்கச் சிலைகொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங்கட் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்
செங் கைக் கரும்பும், மலரும் எப்போதும்என் சிந்தையதே.
அசுரர்களின் திரிபுரத்தை மேரு மலையாகிய வில்லை கொண்டு அழித்து
மதங்கொண்ட யானையின் தோலை உடுத்த
சிவபெருமானின் மேனி முழுவதும்
இரு தனங்களை கொண்டு அடையாளத்தை வைத்த
அம்பிகையின் தாமரை போன்ற
சிவந்த கையில் உள்ள கரும்பு வில்லும்
மலரம்புகளும் எப்போதும் என் சிந்தையில் இருக்கும்.
