உரையாடலின் ஒரு பகுதி  137

கூட்டு குடும்பங்கள் ஒரு காலம் இப்போது தனி குடும்பங்களும் தனி, தனி ஆளாக மாறிவிட்டதே கணவனும் வேலைக்கு செல்ல மனைவியும் வேலைக்கு செல்ல பிள்ளைகளை 3வயது வரை ஆயா பார்க்க அல்லது குழந்தைகள் காப்பகம் பார்க்க 5 வயதில் பள்ளிக்கு ஒட  ஆரம்பித்தால் அந்த குழந்தையும் இதே போல் ஒட அந்த குழந்தைக்கு தாய், தந்தையரே கனவு போலதான் தோன்றும் அப்படியிருக்க மற்ற சொந்தங்கள் எப்படி நினைவுக்கு வரும் பெற்ற குழந்தைக்கு பால் ஊட்ட கூட நேரமில்லாத…

உரையாடலின் ஒரு பகுதி  136

நவநாகரீகம் நடத்தும் பொருளாதார போட்டியில் பங்கு பெற தான் ஊரைவிட்டு நகரம் சென்றான் முதலில் அது பத்தவில்லை அவனுடைய வேகத்தை அதிகப்படுத்தி நாட்டைவிட்டான். பிறநாடு சென்றான் அங்கு சொந்த மொழியின் தேவையோ சடங்குகளுக்கோ வேலை இல்லை அதனால் அதை கழற்றி வீசிவிட்டான் அதோடு அவனது சொந்தங்கள் கூட  கழன்று போயின தன் ஊரைவிட்டு தன் நாடுவிட்டு தன் மொழிவிட்டு தன் உறவுகள் சொந்தங்கள் விட்டு இவை அனைத்தும் அவனுக்கு தந்த அற சிந்தனைகளையும் விட்டு இப்போது ஒத்தையாய்…

உரையாடலின் ஒரு பகுதி  135

வெற்றிக்கு வேண்டிய ஒட்டத்தில் இழந்தது. எல்லோரும் ஒடிக்கொண்டிருக்கிறார்கள் எதற்கு என்ற கேள்விக்கு பதில் பொருளாதார சுதந்திரத்திற்கு என்ற பதில் வருகிறது இந்த பொருளாதார சுதந்திரத்திற்கு கொடுக்கும் விலையைப் பற்றி யாரும் சிந்தித்ததாகவே தெரியவில்லை.

உரையாடலின் ஒரு பகுதி  134

நாம் செய்யும் செயலிலும் செயலுக்கு உண்டான எண்ணம் சிந்தனையை தவிர வேறு எந்த எண்ணங்களின் குறுக்கீடு இல்லாமல் செயலை செய்து பழகுங்கள் காலப்போக்கில் நீங்கள் செய்யும் எல்லா செயல்களிலும் நீங்கள் அதை பழகியிறுப்பீர்கள் அப்போது நீங்கள் எப்போதும் தியானத்தில் இருப்பீர்கள் தியானத்திற்கென்று தனியே நேரம் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை செய்யும் செயலுக்குண்டான எண்ணமும் சிந்தனையும் தவிர வேறு எந்த எண்ணக் குறுக்கீடுகளும் இல்லாத செயலே தியானத்தின் முதல்படி.

உரையாடலின் ஒரு பகுதி  133

வெற்றி அடைவதற்கு மட்டும் அறிவின் பயன் இல்லை எதைப்பிடித் திருந்தாலும் அதை அப்படியே விட்டு வெளியே வந்து விலகி அமைதியாய் இருக்கவும் அறிவு வேண்டும் ஏனோ இந்த அறிவு போதிக்கப்படுவதில்லை ஒரு வேளை இது புரியாமல் புதிராய் உள்ளதோ வெற்றி அடைய அறிவு வேண்டும் எனும் சமுதாயம் விட்டு விலகி அமைதியாய் வேடிக்கை பார்ப்பதை ஏனோ மறுக்கிறது அல்லது மறைக்கிறது.

உரையாடலின் ஒரு பகுதி 132

பொறுமையாய் இருப்பது என்றால் என்ன நம்மால் மாற்ற முடியாத சூழ்நிலையில் நாம் அகப்பட்டு நிற்கும் போது இந்த சூழ்நிலையில் சிக்கி_விட்டோமே என்று மனம் புழுங்குவது அல்ல வேதனைபடுவதும் அல்ல வேதனையை புறந்தள்ளி புழுங்குவதை விட்டு விலகி அந்நியமாய் நின்று வேடிக்கை பார்த்தல் அந்த சூழ்நிலையை அங்கீகரித்து அதனோடு இணைந்து சென்று சூழ்நிலையை புரிந்து கொள்ளல்.

உரையாடலின் ஒரு பகுதி   131

எல்லோராலும் யோசிக்க முடியும் யோசித்த எல்லோரும் யோசித்த விஷயத்தில் நிலை _கொண்டு விட்டார்களா என்ற வினா வரும் போது தெளிவடைந்தவர்களின் சதவிகிதம் மிக குறைவே என்பது தெரிய வரும் இது ஏன் என்ற வினா வந்தால் யோசித்தல் தொடர்ச்சியாய் அமையாதது  தெரிய வரும் அப்படி யோசித்தல் தொடர்ச்சியாய் அமைய வேண்டுமென்றால் நமக்கு ஏதாவது ஒரு நிர்பந்தம் ஏற்பட வேண்டும் அதை காலம் தான் தர வேண்டும் அதனாலேயே அதற்கு கால நிர்பந்தம் என்று பெயர் அந்த கால…

பணக்காரரின்பதில்!  1

எனது வருட சம்பாத்தியமும் நூறு கோடிக்கு மேலானது தான். ஆனால், உங்களை போன்ற ஒரு பெண்ணை தேர்வு செய்வது என் பார்வையில் தவறு என்று தான் நான் கருதுவேன் காரணம், அழகு என்பதை பெண்ணாகவும், பணம் என்பதை ஆணாகவும் வைத்துக் கொண்டால், இங்கு ஒரு பெரிய பிரச்சனை எழும். அழகு வருடத்திற்கு வருடம் குறைந்து கொண்டே போகும் ஒன்று. மறுபுறம் பணம் என்பது வருடத்திற்கு, வருடம் உயர்ந்து கொண்டே போகும் ஒன்று.  பொருளாதார பார்வையில் இதனைக் கண்டால்,…

பணக்காரரின்பதில்!

 ஒரு அழகான இளம்பெண், “உலக பணக்கார ஆண்மகனை திருமணம் செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று இணையதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், இது குறித்து இளம்பெண்கூறியதாவது, “என் வயது 25 நான் பார்க்க மிகவும் அழகாக இருப்பேன். ஸ்டைல் மற்றும் நல்ல ரசனை உள்ள பெண். நான் வருடத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஆண் மகனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்றார். இந்த பதிவை பார்த்த…

நேர்மையானவன் 1

 ஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள். நேர்மையானவன் தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னான்.   அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள். செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.  நேர்மையானவனும் காலி தொட்டியை அலுவலகத்திற்-க்கு எடுத்து சென்றான். எல்லார்…

நேர்மையானவன் 

 ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார்.   உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும், அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் வெற்றியடைகிறார்களோ அவர் தான் அடுத்த மேலாளர் என்றார்.    என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று…

எண்ணங்களோடு போராடுவதே..

எண்ணங்களோடு போராடுவதே… ஆரம்பகால தியானம். உங்களுக்கு உதவ உங்கள் மூளையை பயன்படுத்துங்கள்… அடுத்தவருக்கு உதவ உங்கள் மனதை பயன்படுத்துங்கள்.

தேனீக்கள் கொட்டும்

தேனீக்கள் கொட்டும் என்று அஞ்சி கொண்டேயிருந்தால் என்றைக்கும் உங்கள் நாக்கால் தேனின் சுவையை உணரவே முடியாது எதற்கும் பிறரையே சார்ந்திருக்க ஊனமுற்றவர்கள்கூட விரும்பவதில்லை

ஒவ்வொரு மனிதனும்

ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தையே மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்; ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை மாற்றம் என்பது மானிடத் தத்துவம். மாறாதிருக்க நான் வனவிலங்கல்லன் நாம் மாற வேண்டும் நாம் மாறியே ஆக வேண்டும் நாம் கண்டிப்பாக மாறியே ஆக வேண்டும்

சலங்கையின் விலை

சலங்கையின் விலை ஆயிரக்கணக்கில், அதை காலில் தான் அணிய முடியும். குங்குமத்தின் விலை மிகக்குறைவு. அதை நெற்றியில் அலங்கரித்து கொள்வார்கள். இங்கு விலை முக்கியமில்லை, அதன் பெருமை தான் முக்கியம்.

நீ வெற்றி பெற்றால்

நீ வெற்றி பெற்றால் சாதனையாளன் பெறாவிட்டால் பிறருக்கு போட்டியாளனே தவிர தோல்வியாளன் இல்லை..!   சூழ்நிலை மாறும் போது.. சிலரது வார்த்தைகள் மாறும்.. பலரது முகங்கள் கூட மாறும்.. இதுவே நிதர்சனம்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   109

இரண்டாவதாக, கண்டனம் ஒருபோதும் நன்மை செய்வதற்கான வழியல்ல. நம்முடைய சமூகத்தில் சில கேடுகள் இருக்கின்றன, இதை ஒரு குழந்தையாலும் காண முடியும். எந்தச் சமூகத்தில்தான் தீமைகள் இல்லை? என் நாட்டு மக்களே, நான் பார்த்த பல்வேறு இன மற்றும் நாட்டு மக்களோடு, நம் மக்களை ஒப்பிட்ட பின் நான் கண்ட முடிவை இந்த வேளையில் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   108

ஆனால் பெரும்பாலான நமது நவீனச் சீர்த்திருத்த இயக்கங்கள் சிறிதும் சிந்திக்காமல் மேலை முறைகளைக் காப்பியடிப்பவைகளாக உள்ளன. இது இந்தியாவிற்கு ஏற்றதல்ல என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதனால்தான் நமது சமீப காலச் சீர்த்திருத்த இயக்கங்கள் எதுவும் எந்தப் பலனையும் அளிக்கவில்லை

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   107

நான் முன்பு கூறியது போல், முதலில் காலங் காலமாக நாம் பெற்று வந்துள்ள நமது நாட்டின் பண்பைக் பாதுகாக்க முயல வேண்டும் . பிற நாடுகளிலிருந்து பல விஷயங்களை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும், வெளியிலிருந்து பல பாடங்களை நாம் கற்றாக வேண்டும் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   106

அதேவேளையில், இந்த நூறு ஆண்டுகளின் சமுதாயச் சீர்த்திருத்தம் உருப்படியான, பாரட்டத்தக்க, நிலையான எந்த விளைவையும் இந்த நாட்டில் எங்குமே தோற்று விக்கவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை ஆயிரக்கணக்கானோர் மேடையில் முழங்குகிறார்கள். அப்பாவியான இந்து இனத்தின் மீதும் அதன் நாகரீகத்தின் மீதும் மூட்டை மூட்டையாகக் கண்டனங்கள் சுமத்தப்படுகின்றன. ஆனாலும் நடைமுறையில் எந்த நல்ல பலனையும் காணோம். ஏன் ? இதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. அது அவர்களின் கண்டனத்திலேயே உள்ளது

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   105

ஏறக்குறைய கடந்த நூறு ஆண்டுகளாக நமது நாடு சமூகச் சீர்திருத்தவாதிகளாலும் பல வகையான சமுதாயச் சீர்திருத்தத் திட்டங்களாலும் மூழ்கடிக்கப்பட்டு வருகிறது இந்தச் சீர்திருத்தவாதிகளிடம் என்னால் தவறு எதையும் காண முடியவில்லை அவர்களுள் பெரும்பாலானோர் நல்லவர்கள், தெளிவான சிந்தனையுடையவர்கள், சில விஷயங்களில் அவர்களது நோக்கங்கள் கூடப் பாராட்டத் தக்கவையாகவே உள்ளன

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 57. வறுமை ஒழிய

ஐயன் அளந்தபடி இரு நாழிகொண்டு, அண்டம் எல்லாம் உய்ய அறம்செயும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால் செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும் மெய்யும் இயம்பவைத்தாய், இதுவோ உன்தன் மெய்யருளே. தாயே நீ என் சிவபிரான் அளந்து தந்த இரண்டு படி நெல் கொண்டு உலகமெல்லாம் பசி நீங்கி பிழைக்கும் படி தர்மம் செய்யும் உன்னையும் பாடி பின் செல்வர் செய்யும் தானங்களை கண்டு அவரையும் என்னை புகழ்ந்து பாட வைத்தாயே இதுவா உன்னுடைய உண்மையான…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 56. யாவரையும் வசீகரிக்கும் ஆற்றல் உண்டாக

ஒன்றாய் அரும்பிப், பலவாய் விரிந்து, இவ் உலகு எங்குமாய் நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன், நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்றவா, இப்பொருள் அறிவார் அன்று ஆலிலையில் துயின்றபெம்மானும், என் ஐயனுமே. ஆதியாக ஒன்றாய் இருந்து பல பல சக்திகளாய் விரிந்து இந்த உலகெங்கும் நிறைந்து நின்றாலும் விலகி நிற்பவளே நீ என் சிந்தையினுள் நிற்பவளே நீ என் சிந்தையினுள் நீங்காமல் நிற்பது வியப்பல்லவோ இதை யார் அறிவார் என் தந்தையாகிய சிவபெருமானும் யோக துயிலில் உள்ள…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 55. விருப்பு வெறுப்பற்ற மோனநிலை எய்த

மின்ஆயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்ற அன்னாள், அகமகிழ் ஆனந்தவல்லி, அருமறைக்கு முன்னாய், நடு எங்குமாய், முடிவாய முதல்வி தன்னை உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்றில்லையே. பல ஆயிரம் மின்னல்கள் உருவெடுத்து வந்தது போல் விளங்கும் கோலத்தை உடைய அபிராமவல்லி அடியவர்களின் நெஞ்சத்தில் இருக்கும் ஆனந்தமயமாக கொடி போன்றவள் அரிய வேதத்தின் முன் நடு கடையாகி முழுவதுமாய் இருப்பவன் இவளை உலகத்து உயிர்கள் போற்றி தொண்டு செய்தாலும் செய்யாவிட்டாலும் அவளுக்கு அதனால் எந்த பயனும் இல்லை.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 54. கடன் தொல்லைகள் தீர

இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பாற் சென்று, இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில், நினைகுவிரேல், நித்தம் நீடு தவம் கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே. எவரிடமும் சென்று தன் இல்லாமையை சொல்லி இழிவு படும் நிலை எக்காலத்திலும் வராது. யாருக்கு என்றால் தாயை தியானிப்பவர்களுக்கு அது மட்டுமல்ல நித்தமும் தவம் செய்யாத இழி குணத்தோரிடம் செல்லாத நிலை வைத்த திரிபுர சுந்தரியின் திருவடிகளுக்கு சரணம்.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 53. பொய்யுணர்வு நீங்க

சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும், பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சிமொய்த்த கன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத் தன்னந்தனி இருப்பார்க்கு, இது போலும் தவமில்லையே. தன்னுடைய சின்னஞ்சிறிய இடையில் சாத்திய சிவந்த நிற பட்டுடையை அணிந்த தேவி தனது பெரிய தனங்களின் மேல் அணிந்த முத்துமாலையும் பிச்சி மலர் சூடிய கூந்தலும் மூன்று கண்ணும் உடைய தேவியை தனித்திருந்து தங்களது சிந்தையில் நிறுத்தி தவம் செய்வது போல் வேறு தவம் எதுவும்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 52. இம்மையில் பெருஞ்செல்வம் அடைய

வையம், துரகம், மதகரி, மா மகுடம்,சிவிகை பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறை முடித்த ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு செய்யும் தவம்உடையார்க்கு உளவாகிய சின்னங்களே. தேர் – குதிரை – மதம் மிக்க யானை பெரிய கிரீடம் பல்லக்கு பிற மன்னர்கள் திரையாக வழங்கும் பொன் மிக்க விலையுடைய பொன்னாரம் முத்துமாலை போன்றவை பிறையை திருமுடியில் சூடியுள்ள சிவ பெருமானின் அழகிய பத்தினியாகிய அபிராமியின் திருவடித்தாமரைக்கு முன் பிறவிகளில் தொண்டு செய்த தவமுடைய…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல்   51. மோகம் நீங்க

அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள் முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே, சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார், மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே. பொன் வெள்ளி இரும்பு போன்றவற்றால் ஆகிய மதில்களே உண்மையான செல்வமென்று கருதிய அசுர்களுடைய வலிமையை அழிந்து போகும் படி கோபித்த ஈசனும், திருமாலும் நின் திருவடியே சரண் என்று இருக்க நின்னை தொழும்அடியார்கள் இறப்பு, பிறப்பு எனும் இரண்டையும்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல்   50. அம்பிகையை நேரில் காண

நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு வாய் அகி மாலினி, வாராகி சூலினி, மாதங்கி என்று ஆய கியாதி உடையாள் சரணம் அரண்நமக்கே. ஈஸ்வரி நான்க முகங்கள் கொண்டவர் நாராயணி கை தாமரையில் 5 மலரம்புகளை  உடையவள் சம்புவின் மனைவி சங்கரி சாமளை நஞ்சை வாயிலே உடைய நல்ல ஜாதி பாம்பை மாலையாக கொண்டவள் வராகி சூலினி மாதங்கி என்ற நாமம் கொண்ட அபிராமியின் திருவடிகளே நமக்கு…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 49. மரணத் துன்பம் இல்லாதிருக்க

குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி, வெங்கூற்றுக்கு இட்ட வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து, அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்து, அஞ்சல் என்பாய் நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே. யாழ் நரம்பில் பொருந்திய இசை வடிவாகிய ஈஸ்வரியே கருப்பையில் வாசம் செய்து வந்த   இந்த உடம்பும் உயிருமானது பிரம்மன் விதித்த நேரத்தில் காலன் வரும் சமயம் நின்னை துதிக்கும் தேவ மகளியர் சூழ நீ வந்து உன் வளையணிந்த திரு கரத்தால் அஞ்சாதே என்று…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 48. உடல் பற்று நீங்க

சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப் படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில் இடரும் தவிர்த்து இமைப்போதிருப்பார், பின்னும் எய்துவரோ குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே. பிரகாசிக்கும் கலைகளை உடைய மேருமலை போன்ற சடையோடு கூடிய திருமுடி உடைய சிவ பெருமானோடு இணைந்து படருகின்ற பசுங்கொடியாகிய அபிராமவல்லியை நெஞ்சில் தியானித்து அதனால் துன்பம் நீங்கி இமைக்கும் ஒரு கணப்போதாவது, பரமனாந்த நிலையில் இருப்பவர்கள் மீண்டும் நினமும், இரத்தமும் கூடிய இந்த தேகத்தை அடைவார்களோ…