ஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள்.
நேர்மையானவன் தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னான்.
அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள்.
செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை.
நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.
நேர்மையானவனும் காலி தொட்டியை அலுவலகத்திற்-க்கு எடுத்து சென்றான்.
எல்லார் தொட்டியையும் பார்த்தான் விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும்
ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார்.
அருமை எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்து உள்ளீர்கள்
உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏத்துகொள்ளபோகறீர்கள் என்றார்.
எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார்.
நேர்மையானவன் கடைசி வரிசையில் நின்றிருந்தான் அவனை அருகே வருமாறு அழைத்தார்.
நேர்மையானவன் தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே சென்றான்.
முதலாளி நேர்மையானவனிடம் உன் செடி எங்கே என்று கேட்டார்.
ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக சொன்னான்.
முதலாளி நேர்மையானவனை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார்.
பிறகு நேர்மையானவன் தோளில் கையை போட்டுகொண்டு
நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார்.
நேர்மையானவனுக்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை
பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பிபோனார்.
சென்ற வருடம் நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா
அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது.
நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால்
அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள்
. இவன் மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான்,
ஆகவே அவனே என் நிறுவனத்தை நிர்வாகிக்க தகுதியானவன் என்றார்.
நாம் சொல்லும் சொல் நாம் பயணிக்கும் பாதை
நேர்மையாக இருந்தால் வெற்றிகள் நம்மைத் தேடி வரும்…!
