நட்சத்திர எதிரிடை 2

* ஜெனன காலத்தில் உள்ள ஒரு கிரகத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் கோச்சாரத்தில் கிரகம் சஞ்சரிக்கும் போது அக்கிரக ஆதிபத்தியம் மூலம் பாதிப்பை தரும் (உ.ம்) ஜெனன காலத்தில் செவ்வாயின் எதிரிடைநட்சத்திரத்தில் 6 – ஆம் பாவாதிபதி கோச்சாரத்தில் வரும்போது அந்த ஜாதகருக்கு சகோதர வகையில் இடையூறுகள், குழப்பம், பாதிப்பு எதிர்ப்புநோய் தொல்லைகள் காணும்.. லக்னம், 4, 9 பாவாதிபதி லக்கானாதிபதியின் எதிரிடை நட்சத்திரத்தில் இருந்தால் கிரகங்கள் எவ்வளவு வலுப்பெற்று இருந்தாலும்  யோகத்தை தராது. இவ்வமைப்பில் ஜனித்தவன் குடும்பம்…

நட்சத்திர எதிரிடை 1

லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் எந்த கிரகம் உள்ளதோ அந்த கிரகத்தின் காரகம் ஜாதகருக்கு பயன் தராது அல்லது அந்த காரகம் இல்லாமல் போய்விடும் அல்லது மிகவும் பாதிக்கும்.. தசாநாதன் அல்லது புத்திநாதன் அல்லது சந்திர நாதன், நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையாக பிறந்த நட்சத்திரம் வந்தால் சுப பலன்கள் இருக்காது. அந்த திசாபுத்தி அந்திர காலங்கள் பாதிப்பே.ஜாதகருக்கு எந்த பலனும் இருக்காது.. திசாநாதன், புத்திநாதன் அல்லது சந்திரநாதன்நின்றநட்சத்திரத்தின்எதிரிடைநட்சத்திரத்தில் கோச்சாரத்தில் எந்த கிரகம் வருகிறதோ அந்த கிரகத்தின்…

நட்சத்திர இயக்கம்.. 5 கோள்களின் கோலாட்டத்தின் படி

கோள்களுக்கு ஆதாரமே நட்சத்திரங்கள்தானே. ஒருவரின் உயர்ந்த நிலை, பதவி, கௌரவம், பணபலம், உடல்பலம் போன்ற எல்லாவற்றிற்கும் நட்சத்திரத்தூண்கள் சரியாக இருக்க வேண்டும் என்பது உறுதியாகும்.. ஒருஜாதகத்தைகையில்எடுத்துக்கொண்டோமேயானால், அந்த ஜாதகனின் நிலை இப்படித்தான் என்பதை முதலில் நிர்ணயம் செய்து கொள்ள வழி வகுப்பது  இந்த நட்சத்திரத் தூண்களே. இந்த நட்சத்திரத் தூண்கள் பலம் இழந்து எதிரிடையான நிலையில் இருந்தால் என்னதான்யோகவானாக ஜனித்து இருந்தாலும் அது செயல்படுவதில்லை என்பது கண்கூடு. ஜாதகர் பிறக்கும் போது நின்ற கோள்களின் அடிப்படையான ஆதாரமான…

நட்சத்திர இயக்கம்.. 4 கோள்களின் கோலாட்டத்தின் படி

ஜெய்முனி சூத்திரம் 8000, பெரிய வருஷாதி நூல் சினேந்திரமாலை, குமாரசுவாமியம், சுகர் பிரம்மரிஷி வக்கியம், போன்ற பழைய பிரதிகளின்அடிப்படையில் சொல்லப்பட்டவைகளை கையாண்டு பார்த்ததில் கிடைத்த முத்தை ஏன் மாணிக்கத்தைத்தான் உங்கள் முன் வைத்துள்ளேன்.அதில் சொல்லிஉள்ள சின்ன விசயங்களை மிகைப்படுத்தி பார்த்த பொழுது ஆச்சரியப்படும் அளவில் பலன்கள் கிடைத்தபோது இந்த கோலாட்டத்தை என்ன சொல்வது..பல பெரிய யோகங்களை அடக்கிக் கொண்டுள்ள ஜாதகத்தை பார்க்கும் போது அதற்குரியவர்நிலை… யோகத்திற்கும், ஜாதகருக்கும்சம்பந்தம் இல்லாத ஒன்றை காண்கிறோம். அதே சமயத்தில் எந்தவிதமான யோகங்களையும்…

நட்சத்திர இயக்கம்.. 3 கோள்களின் கோலாட்டத்தின் படி

27 நட்சத்திரங்கள் ஒரு ஜாதகனின் பலமான கட்டிடத்திற்கு உரிய தூண்கள் ஆகும். இந்த தூண்களின் பலம் குறைந்தால் கட்டிடம் ஆடத்தான் செய்யும். இந்த 27 தூண்களில் எந்த இடத்தில் உள்ள தூண் பலம் குறைந்ததாக உள்ளதோ அந்த இடம் மட்டும் பழுதாகி விடலாம். அந்த பழுதான இடத்தில் எவ்வளவு பலம் பொருந்திய கோள் இருந்தும் என்ன பயன்?. நட்சத்திரங்கள் என்னும் தூண்களின் பலம் அறிய பல நூல்களில் பல முறைகள் சொல்லி உள்ளனர். அதை பெரும்பாலானஜோதிடஆய்வாளர்கள்பெரிதாகஎடுத்துக்கொள்வதில்லை. இதனால்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 18

வரத பித்தரோக நாடி லக்ஷணம் ….. வாதத்தில் நாடியானது பாம்பு, அட்டை, இவைகளின் நடையைப் பெற்றிருக்கும். பித்தத்தில் நாடியானது வாயசம்லாவகம், மண்டூகம் இவைகளது நடையை ஒத்து நடக்கும். சிலேண்ம ரோக நாடி ….. கபரோகத்தில் நாடியானது அன்னபக்ஷி, மயில், புறா, குருவி, கோழி இவைகளின் நடையை ஒத்து இருக்கும். வாத பித்த ரோக நாடி …. சர்பத்தின் நடையைப்போலும் அடிக்கடி மண்டூகத்திபோலும் வாத பித்த தோஷ நாடி நடக்கும். வாத சிலேஷ்ம நாடி ….. சர்பத்தின் நடை,…

நட்சத்திர இயக்கம்.. 2 கோள்களின் கோலாட்டத்தின் படி

பெரும் ஜோதிட மேதைகள்ஆராய்ச்சியாளர்கள்,வானிலைஆய்வாளர்கள்,அனுபவசாலிகள், எல்லாம் இந்த கோள்களிடம் என்ன செய்ய இயலும்?.கிழமை-திதி-நட்சத்திரம் இந்த மூன்றும் நமக்கு சாதாரண விஷயம்.இதில் எவ்வளவு நட்பங்களை அடக்கி உள்ளார்கள். எவ்வளவு செயல்பாடுகள் இத்தோடு யோகம்-கரணம் இந்த ஐந்தும் பஞ்ச பூதங்களாக நின்று நம்மை கோள்களின் வழியாக எப்படிஆட்டிப்படைக்கிறது என்பதை காணும்போது இதற்கு என்ன பெயர் சொல்வது. இது கோலாட்டம் தானே, ஒரு ஜாதகத்தில் கோணாதிபதி, கேந்திராதிபதி,உச்சம், ஆட்சி, நட்பு, பல யோகங்கள், சப்தவர்கம், அட்டவர்கம், தசவர்கம் இதில் எல்லாம் நுழைந்து பார்த்து…

யோசிக்க 2

ஆட்சிமுறை அமைப்பின் அங்கங்களாக இருப்பது சட்டமன்றம், ஆட்சி நிர்வாகம், நீதிமன்ற அமைப்பு, ஆகியவை. சட்டங்களை இயற்ற சட்டமன்றமும், சட்டங்களை செயல்படுத்த அதிகாரவர்க்கத்தை உள்ளடக்கியதாக நிர்வாகமும் சட்டப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நீதிமன்றங்களும் உள்ளன. இப்போது இருக்கும் நீதிமன்ற அமைப்பின் குறைபாட்டுப் புள்ளிவிவரங்கள் நிலைதடுமாற வைப்பவை. இருபதாயிரத்துக்கும் மேலான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சுமார் 30 லட்சம் வழக்குகள் உயர்நீதி மன்றங்களிலும், மனத்தை மரத்துப் போகச் செய்யும் அளவில் சுமார் 2 கோடியே 20…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 21

ஆகாசத்தைப் போல் நான் உள்ளேயும், வெளியேயும் நிரம்பி நிற்கிறேன். மாறுபடாமல் அனைத்திலும் ஒன்றேயாகிப் பரிசுத்தமாய்ப் பற்றற்று, மாசற்றுத் திரிபற்ற நான் பரிசுத்தமாயிருக்கிறேன். குணங்களும் செயலுமின்றி நான் என்றமுள்ளவனாய்ப் பரிசுத்தனாய், அழுக்கும், ஆசையும் அற்றவனாய், மாறுபாடற்றவனாய், வடிவற்றவனாய் எப்பொழுதும் முக்தனாய் இருக்கிறேன்.

யோசிக்க 1

தனக்கு ஒப்புமை, அனுகூலமோ, போட்டியிடும் திறனோ இல்லாத நடவடிக்கைகளில் தனது சக்தியை விரயம் செய்ததால், அரசாங்கம் தான் கட்டாயம் செய்ய வேண்டிய விஷயங்களை அலட்சியம் செய்துவிட்டது. சட்ட வடிவமைப்பு மற்றும் அமலாக்கம், ஒப்பந்தங்கள் ஏற்படவும் அவற்றை நடைமுறைப்படுத்த உள்ள  தேவையான சூழல் ஆகியவற்றை உருவாக்குவதில் கோட்டை விட்டது. பொருட்களையும், சேவைகளையும் உற்பத்தி செய்ய எடுத்த முயற்சிகளில் போதிய திறனோடு செய்ய முடியாமல் அரசாங்கம் அடைந்த தோல்விகள் ஏராளம். அதற்கு இணையான அல்லது அதைவிட பெரிய தோல்வியும் ஒன்று…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 34

பெண்கள் வெகு எளிதில் கோபத்திற்கு அளாதல் கூடாது. அவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கப் பழக வேண்டும். குழந்தைப் பருவத்திலும் பால பருவத்திலும் பெற்றோர்களும், வாலிப வயதில் அவர் தம் கணவருமே பெண்களுக்குக் காப்பாவர். பொதுவாக அவர்கள் ‘ ரோஷ ‘ முடையவர்கள். ஒரு வார்த்தையே அவர்களை நிலைகுலையச் செய்துவிடும். இக்காலத்திலோ மொழிகள் அவ்வளவு சகாயம். ஆகவே, அவர்கள் துன்பம்நேரும் காலத்தும் பொறுமையுடன் பெற்றேருக்கோ கணவருக்கோ அடங்கியொழுக முயலவேண்டும்.

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 20

நான் ரிஷி, ரிஷிகணங்களெல்லாம் நானே. சிருஷ்டியும் நான், சிருஷ்டிக்கப்படுவதும் நான் செல்வத்தின் நிறைவும், வளர்ச்சியும் நான், திருப்தியும் திருப்தி தீபத்தின் ஒளியும் நான். பிறப்பு, தேய்தல், மூப்பு, சாவு ஆகிய மாறுதல்களினின்று நான் விடுபட்டவன், நான் உடலன்று, சப்தம், ருசி முதலிய இந்திரிய விஷயங்களில் எனக்கப் பற்றில்லை, ஏனெனில் எனக்கு இந்திரியங்கள் இல்லை. துக்கமும் பற்றும் பொறாமையும் பயமும் எனக்கில்லை, ஏனெனில் நான் மனதன்று. உபநிஷதம் கூறுகிறது, அவனுக்குப் பிராணனுமில்லை, மனதுமில்லை. அவன் பரிசுத்தமானவன், உயர்ந்ததற்கெல்லாம் உயர்ந்தவன்,…

மன முதிர்ச்சி 2

6. செய்வதை மன அமைதியுடன் செய்வது. 7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது. 8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல். 9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல். 10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்.. 11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல். 12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.

மன முதிர்ச்சி – 1

1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது. 2. அனைவரையும் அப்படியே (நிறை, குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது. 3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல். 4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல். 5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 17

வாத கதி …. . காற்று அடிக்கும்போது அதற்க்கு நேரில் இருக்கும் பொருள் விசேஷமாயும், பின்புறமாகிய பொருள் மந்தமாயும் அசைவதுப்போல் மத்தியிலிருக்கும் வாதம் தன் எதிரில் இருக்கும் பித்தநாடியை அதி வேகமாயும், பின்புறமாயுள்ள கபத்தை மந்தமாயும் நடக்கச்செய்யும். பித்த கபநாடிகளுக்கு சுதந்திரமாகதானே நடக்கும்படியான சக்தி கிடையாது. வாதநாடி கமனத்தை அனுசரித்து மற்ற நாடிகளுக்கும் கமனம் உண்டாகின்றது. வக்கிரமமாய் சஞ்சரிக்கிற உலூகத்தைப்போல் நாடிகளின் முதலில் இருக்கும் வாதநாடி நடந்தால் மற்ற இரண்டும் நடக்கும் வாதம் நடக்காவிட்டால் மற்ற நாடிகள்…

நட்சத்திர இயக்கம்.. 1 கோள்களின் கோலாட்டத்தின் படி

சோதிட சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு உள்ள விசயங்கள் அனைத்தும் நடைமுறைக்கு ஒத்து வருவதாக இல்லை. பலவகையான கணிதங்கள், ஆய்வுகள், செய்தும் பலன்கள் தவறுவதை பார்க்கும் போது இந்த கோள்களின் கோலாட்டத்தை நினைக்கும் போது புரியாத புதிராக உள்ளதை யாரும் மறுக்க இயலாது. இவ்வகை கோலாட்டத்தை ஒரளவாவது எவ்வகையிலாவது தெரிந்து நடந்து கொண்டால் நம் வாழ்க்கைக்கும் பெரும் வழிகாட்டியாக இருக்கும். ஜாதகத்தில்சொல்லப்பட்டுள்ள எத்தனை வர்க்க கணிதங்கள் உண்டோ அத்துணை கணிதங்களையும் போட்டு பார்த்து பல நூல்களில் சொல்லப்பட்டுள்ள பாடல்களை அனுசரித்து…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 33

பெண்களுக்கு உபதேசம். ஒரு பெண்ணுக்கு அடக்கமே சிறந்த அணிகலன். தெய்வீக உருவின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்படும்போதுதான் ஒரு மலர் தன்னைப் பாக்கியசாலியாகக் கருதுகிறது. இல்லாவிட்டால் அம்மலர் செடியிலேயே வாடிவிடுவது சாலச்சிறந்தது. ஆடம்பரக்காரன் ஒருவன் அம்மலர்காளல் ஒரு பூச்செண்டு செய்து அதை முகர்ந்து ‘ என்ன நறுமணம் ‘ என்பதைக் காண்பது எனக்கு மிக்க வருத்தத்தைத் தருகிறது.

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 19

ஆனந்தமும், அறிவும், ஆத்மானுபவமும் நிறைந்தவன் நான். காணப்படும் பிரகிருதியைப் பற்றிய எண்ணத்திலிருந்து நான் வெகுதூரம் விலகியவன். எது அப்ராகிருதமோ அதனால் நான் என் உள்ளத்தில் மகிழ்கிறேன். நான் தான் உலகங்களின் ஆதி. உபநிஷத உத்யானத்தில் விளையாடுபவன் நான். பொங்கி வழியும் துக்கக் கடலை வற்றச் செய்யும் வடவாக்னி நான். மேலும் கீழும் நாற்புறங்களிலும் என்னுடைய அதிசயமான பெருமைகளால் நான் அனைத்தையும் வியாபித்து நிற்கிறேன். வாதத்தாலும் பிரதிவாதத்தாலும், ஆராய்ச்சியாலும், நிர்ணயிக்கப்பட்தாய் காணும் பரம புருஷன் நானே.

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 12 கோள்களின் கோலாட்டத்தின் படி

* நீச்ச உச்ச தன்மைகளுக்கும் பலாத்காரம், பிடிவாதம், நியாயம்,தர்மம், புண்ணியம், பாவம் இவைகளை சீர்தூக்கி பார்க்கும் அதிகாரம்பெறுவதோடு ஆயுளுக்கு பொறுப்பாளாரக நின்று இயங்கும் சனி.. * யோகத்தையும், உடல் உறுப்புகளில் இடுப்பிற்கு கீழ்உள்ளவைகளை செயல்படுத்தும் திறன், அருவருக்க தக்கவைகளை அனுபவிக்க தூண்டும் ராகு.. * ஞானம் எந்த காரியத்தை எவ்வகையில் செயல்பட வேண்டும். இடம், பொருள் அறிந்து செயல்படும் ஆற்றல் எதையும் சிந்தித்து செயல்படும் தன்மை போன்றவைகளை இயக்கும் கேது.. இவர்கள் நமது வினை, விதி செயல்களுக்கொப்ப…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 16

ஜீவசாக்ஷினி நாடிகதனம் ….. மூலத்தின் நாடிக்கு ஜீவசாக்ஷி என்று பேர். அதன் கதி விசேஷத்தால் ரோகியின் சுகதுக்கங்களை அறிந்து கொள்ள வேண்டியது. நாடி நாமங்கள் ….. நாடிக்கு – ஸ்நாயுவென்றும், பசயென்றும் ஹிம்ஸ்ரயென்றும், தமனியென்றும், தாமனியென்றும், தரயென்றும், தந்துகி என்னும் ஜீவிதக்கியயென்றும் ப்ரியாய நாமங்கள் உண்டு. நாடியின் குறிகள் ….. ரோகியின் மணிபந்தத்தில் தாதுவை வைத்தியன் பரீக்ஷிக்கும்போது தர்ஜனி விரல் (ஆள் காட்டி விரல்) அசைகிற நாடி, வாதமென்றும், நடுவிரலில் அசைகிற நாடி பித்தமென்றும், அநாமிகை அதாவது…

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 11 கோள்களின் கோலாட்டத்தின் படி

* நம் கண்களுக்கு ஒரு விதமான காந்த சக்தியையும் எலும்புகளுக்கு பலத்தையும் உடலை இயக்கும் ஆன்மாவாக உடலை உருவாக்க காரணமாக, தந்தை என்ற தகுதியோடு செயல்படும் சூரியன்…. * உடலுக்கும், மனத்திற்கும், எண்ணங்களுக்கும் தாய்க்கும் அதிபதியாக சந்திரன் நின்று இயங்குகிறார். இவர் மிகவும் துரிதமாக செயல்படும் கிரகமாகும். க்ஷண நேரத்தில் மனிதனின் மனதை மாற்கும்தன்மை உள்ள இவர் செய்யும் வினோதங்கள் பல.. பல..பல… * வீறு கொண்டு செயல்பட செய்யும் தைரிய பராக்கிரம சாதுர்யம் உஷ்ணத்தை ஏற்றும்…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 18

நான் யார் ? நான் ஈசுவரர்களுக்கு ஈசுவரன் என்னிடத்தில் பொறாமையும், பகைமையையும் ஒரு சிறிதும் இல்லை, இலக்ஷியத்தை அடைய முயல்பவர்களின் மனோரதத்தைப் பூர்த்தி செய்விப்பவன் எவனோ அவன் நானே. நான் அழியாதவன், என்னை அழிக்க முடியாது. நான் ஈசுவரன், உயிருக்கு உயிராகியவன். நான் ஒப்பிலா ஆனந்தம் நிறைந்தவன். நான் பரமசிவன். நான் அளவிலடங்காதவன். ஆத்மாவை அறிந்தவர்களில் நான் சிறந்தவன், ஆத்மானந்தத்தையனுபவிப்பவன். பாலர்களும் படிப்பில்லாதவர்களுங்கூட, எந்த ஆத்மாவின் பெருமையை ‘ நான் ‘ என்ற உணர்வில் கண்டனுபவிக்கிறார்களோ அந்த…

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 10 கோள்களின் கோலாட்டத்தின் படி

‘‘அரிது அரிது மானிட பிறவி கிடைத்தல் ’’ என்ற பெரும் பேற்றை பெற்ற இம் மனித பிறவியை நவக்கிரகங்களின் கதிர்வீச்சு காற்றில் கலந்துசுவாசத்தின் மூலம் மனித தேகத்திற்குள் சென்று தோற்றுவிக்கும் விசித்திரங்கள் தான் எத்தனை எத்தனை… பராசக்தியின் படைப்பில் எவ்வளவோ மாற்றங்கள், விசித்திரங்கள், வினோதங்கள் இவையெல்லாம் எப்படி எவ்விதத்தில் நிகழ்கின்றன என்பதை சிந்தித்துப்பார்த்தால் சிந்தனை தான் சிறகடித்து பறக்குமே ஒழிய நிலையான முடிவிற்கும் இடத்திற்கும் வரமுடிவதில்லை. இதேபோல் அத்தெய்வத்தால் சிருஷ்டிக்கப்பட்ட நவநாயகர்கள் நடத்தம் வினோத விசித்திரங்களை காணும்போது…

ஒரு சிறந்த மருத்துவனின் லட்க்ஷணம்

சிறந்த மருத்துவர் நோயாளியின் உடலின் தன்மைகளை சரியாக அறிந்து தான் கற்ற மருந்துகளையும், ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த மருந்துகளையும் தந்து அது தவிர, தவறான மருந்துகளின் குறிப்புகளையும் தருபவரே சிறந்த மருத்துவர்

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 32

கேள்வி – தியானம் செய்யும் போது என் மனத்தை என்னால் ஒருமைப்படுத்த முடியவில்லை. அது அடிக்கடி மாறக்கூடியதாகவும், நிலையில் நில்லாததாகவும் இருக்கிறது. பதில் – அதில் என்ன உள்ளது? அதுவே மனிதன் இயல்பு, பார்த்தலும், கேட்டலும் முறையே கண், காது இவற்றின் இயல்பாக இருத்தலைப் போலவே, தியானத்தை ஒழுங்காகச் செய்துவா, இறைவனது பெயர் இந்திரியங்களைக் காட்டிலும் மிக பலமுள்ளது. எப்போதும் உங்களைக் காத்து வரும் தாகூரை (ஸ்ரீ ராமகிருஷ்ணரை) யே மனத்தில் நினைத்துக் கொண்டிரு. உன்னிடமுள்ள தவறுகளைக்…

யோக மஞ்சரி.6

மேஷ ராசியில் சந்திரனும், மீன ராசியில் புதனும்,விருஷபத்தில் அங்காரகனும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். புதன் மீன ராசியில் நீசம்பெற்றதாலும் சுக்கிரனுடைய ராசியில் அங்காரகன்இருப்பதாலும் இந்த அங்காரக புதர்களால் ஏற்படும்குற்றங்குறைகள் ஜாதகனிடத்தில் அதிகப்படியாகஇருக்குமென்று ஊகிக்கலாம்.அங்காரகன் சுக்கிரனுடைய ராசியிலோ,சுக்கிரனுடைய நவாம்சத்திலோ சுக்கிரன் இருந்தாலும்,ஜாதகன் பொதுவாக அதிகாமியாகவும், பரஸ்திரீகமனமுள்ளவனாகவும் இருப்பானென்பது இவ்விதம்அங்காரக புதர்களால் ஏற்படும் தோஷ பலன்கள்அவர்கள் தங்களுக்குரிய அசுபராசிகளில் இருந்தால் அதிக்கிரமித்தும், அவர்கள் தங்களுக்குரிய சுபராசிகளிருந்தால் தோஷங்கள் ரொம்பவும் குறைந்தும்நடைபெறும். கிரகங்களின் ராசி, பாவ சம்பந்த, வீக்ஷண, சுபா சுபத் தன்மையைக்கவனித்தே…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 5

21) உடல், உயிராதிபதிகள் வாங்கிய சாராதிபதி எந்த பாவத்தில் உள்ளதோ, அந்த பாவத்தின் குணங்களே அந்த ஜாதகருக்கு எற்படும். 22) 1 – க்குரியவர் சந்திரன் சாரம் பெற்று, சந்திரன் பெற்ற சாரநாதன் 1- ல் இருப்பின் சதா வெளியில் பிரயாணம் செய்பவன் பெரிய செலவாளி, ஊர் சுற்றும் ஆர்வம் உள்ளவன். 23) 1 – ல் 2, 4, 9 – க்குரியவர் சேர்க்கை இருந்து 12 – க்குடையவரின் தொடர்பு பெற்றால் தனமெல்லாம் கடன்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 15

ஸ்திரி புருஷ நாடி பேதம் ….. மாதர்களுக்கு இடது கையிலும், புருஷர்களுக்கு வலது கையிலும், நாடியை பரீக்ஷிக்க வேண்டியதென்று சிவபெருமான் சிவகாமி சுந்தரியுடன் ஆயுர்வேதத்தில் சொல்லியிருக்கிறார். மாதர்களுக்கு இடது கரத்திலும், புருஷர்களுக்கு வலது கரத்திலும் நாடியை பரீக்ஷிக்க வேண்டியதற்கு ஹேது யாதுயென்று தேவியார் கேட்க சிவபெருமான் சொல்கின்றார். ஒமேரு புத்திரீ ஆடவர்களுக்கு நாபி ( கொப்பூழ், கத்தூரி ) கூர்மமானது ஊர்த்துவ முகமாயும், புருஷர்களுக்கு அதே முகமாயும் இருப்பதால் இருவர்களின் நாடிகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாகயிருக்கும், ஆகையால்தான் மாதர்களுக்கு…

யோக மஞ்சரி.5 துருதுரா யோகம்

பொதுவாக சுனபா யோகத்தில் பிறந்தவன்அரசனாகவோ, அல்லது அரசனுக்கு ஒப்பானவனாகவோ இருப்பான். நல்ல கீர்த்தி, தனவரவு, தீக்ஷண புத்தி, இவைகளுடன் கூடியவனாகவுமிருப்பான். அனபா யோகத்தில்பிறந்தவன் பிரபுவாகவும், சுகவானாகவும், கியாதியுள்ளவனாகவும், ரோக மற்றவனாகவும் இருப்பான்.இவ்விதம் ஜாதக தத்வமென்ற ஜோதிஷ நூல் என்று சொல்கிறது சந்திர லக்னத்திற்கு இருபுறமும் அதாவது 2 – வது12 – வது ராசிகள் இரண்டு இடங்களிலும் கிரஹங்கள்இருந்தால் துருதுரா யோகமெனப்படும். பொதுவாகதுருதுரா யோகத்தில் பிறந்தவன் தன, வாகனாதிசுகமுள்ளவனாகவும், கிடைத்த விஷயங்களின் அனுபவத்தினால் உண்டான சுகத்தைஅனுபவிக்கிறவனாகவும் இருப்பான்…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 17

சிரவணத்தாலும் மனனத்தாலும் நீண்டகாலம் தொடர்ந்த இடை விடாத தியானத்தாலும் முனிவன் ஒப்புயர்வற்ற நிர்விகல்ப ஸமாதி நிலையையடைந்து பிரம்ம நிர்வாணப் பேரின்பத்தை அனுபவிக்கிறான். ஆலமரத்தடியில் ஒரு விசித்திரம் காணப்படுகிறது. குரு யெளவனமாகவும், சீடர்கள் கிழவர்களாவும் இருக்கிறார்கள். குருவினுடைய உபதேசம் மெளனமாய் நிகழ்கிறது. சீடர்கள் சந்தேகங்களெல்லாம் முற்றுந் தீர்ந்தவர்களாகின்றனர். எனக்குச் சரண் தாயுமன்று, தந்தையுமன்று, மக்களுமன்று, சகோதரர்களுமன்று, மற்றொருவருமன்று. என்னுடைய குரு எந்தப் பாதத்தை என் தலையில் சூட்டினாரோ அதுவே எனக்குச் சரண். என் குருநாதரின் கருணாகடாக்ஷம் பூர்ண சந்திரனுடைய…

பிரமாணம் அப்படீன்னா என்ன 3

சத்துவ குணத்தோடு உள்ள தூயவனால்தான் பிரபஞ்ச சக்தியின் உண்மைகளை உணர்ந்து கிரகிக்க முடியும். அதனால ஆப்த வாக்கியம் தருகிற ஆப்தன்ங்கிறவன் முற்றிலும் தூயவனாக புலன்களை கடந்தவனாக, கடந்த கால அறிவுக்கும் முரண்படாத கருத்தை சொல்லறவனாக இருக்கணும் புதிதாக கண்டிபிடிக்கப்பட்ட உண்மை என்று நாம் சொல்லும் எதுவும் பழைய உண்மைக்கு மாறுபட்டதாய் இருக்ககூடாது அடுத்தது அந்த ஆப்தனின் வாக்கியபடி பயணப்படும் அனைவரும் ஆப்தன் ஆவார்கள். ஆப்தனின் வாக்கியம் அப்படிபட்டதாகவே இருக்கும். அதைவிட்டுட்டு ஆப்தனின் வாக்கியம் ஆப்தனுக்கு மட்டுமே சொந்தம்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 31

தியானம் செய்யும் பழக்கம் மனத்தை ஒருமுகப்படுத்தும். அழியாப்பொருள்களையும் அழியும் பொருள்களையும் எப்போதும் பிரித்தறிக. இவ்வுலகப் பொருள்களுளொன்றின் மீது உங்கள் மனம் செல்லுவதைக் காணும் போதெல்லாம் உடனே அப்பொருள்களின் நிலையற்ற தன்மையைச் சிந்தித்துக் கடவுள் மீது மனத்தை நிலை நிறுத்த முயற்சி செய்க. வாழ்க்கையில் துன்பங்களால் அடிப்பட்ட பிறகே, பலர் இறைவனது நாமத்தை ஒதுகின்றனர். ஆனால் எவன் தன் இளமை முதற்கொண்டடே மனத்தை இறைவனுடைய திருவடிகளில் அன்றலர்ந்த மலரைப்போல் அர்ப்பணம் செய்வானோ, அவனே உண்மையில் பாக்கியசாலி. மனம் எப்போதும்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 14

நாடி பார்க்கும் விதம் ….. மருத்துவன் நோயாளியின் வலது கையை முழங்கை முதல் நன்றாய் தனது இடது கையால் பிடித்து அந்த கையின் அங்குஷ்ட மூலத்தில் கீழ்பாக மத்தியில் தனது இடதுகை மூன்று விரல்களால் சதாவாதகதியை பரீக்ஷித்து ரோக நிதானத்தை தெரிந்துக் கொள்ள வேண்டியது. வைத்தியன் செய்கை …. வைத்தியன் அதிகாலையில் எழுந்து காலை கடன்களை முடித்து, கடவுளை தொழுது பரிசுத்தமாய், சுகமாய் உட்கார்ந்திருக்கும் ரோகியின் இடத்திற்கு ஏகி தானும் சுகாசீனனாய் ரோக நிதானத்தை அறிதல் வேண்டியது…

பிரமாணம் அப்படீன்னா என்ன 2

தம்பி இப்ப நாம இருக்குற இந்த ரூமுக்குள்ள ஒரு பயித்தியகாரன் வந்து இந்த ரூம் பூரா தேவதைக இருக்காங்க அதுலயும் உண்ண பாத்து கடவுள்ன்னு சொன்னா அது பிரமாணமாகாது. நான் சொல்லறது  கரெக்ட்டா  கரெக்ட் ஏன், அவன் புத்திசரியில்லாதவன், அப்ப சரி, பிரமாணம் அப்படின்னு சொல்லறவங்க அறிவோட ,புத்தியும் இருக்கிறவங்களா இருக்கனும். சரி தானே சரி தான் இப்ப அடுத்தது கடந்த கால அறிவுக்கு முரண்படாம இருக்கனும் இதுல என்ன முரண்பாடு இருக்கு என்னை கடவுள்னா அப்ப…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 16

சொற்களின் கூட்டம் ஒரு பெரியகாடு போன்றது. மனதை மயக்குவதற்குக் காரணமாகின்றது. ஆகையால் உண்மையறிவை நாடுபவர்களால் ஆத்மாவைப் பற்றிய உண்மை ஒன்றே நன்முயற்சியால் அறியப்படவேண்டும். அஞ்ஞானமாகிற பாம்பினால் கடிக்கப்பட்டவனுக்கு பிரம்மஞானமாகிற மருந்தல்லாமல் வேதங்களாலும் சாஸ்திரங்களாலும் ஆவதென்ன? மந்திரங்களாலாவதென்ன? வேறு மருந்துகளாவெதென்ன? ஆகையால் எல்லாவிதமான வழிகளையும் கைக்கொண்டு நோய் முதலியவற்றினின்று விடுபட முயலுவது போல் பிறவித்தளையினின்றும் விடுபடுவதற்குத் தனக்குத்தானாகவே அறிவாளிகளால் முயற்சி செய்யப்படவேண்டும். முக்திக்கு முதல்படி நிலையற்ற பொருள்களில் தீவிரமான வைராக்கியம், பிறகு அகக்கரணங்களின் அடக்கமும், புறக்கரணங்களின் அடக்கமும், அதன்…

பிரமாணம் அப்படீன்னா என்ன 1

 காமு பிரமாணம் அப்படீன்னா என்ன கோமு பிரமாணம் அப்படீங்கறது ஆப்த வாக்கியம்.  காமு அப்ப ஆப்தவாக்கியங்கறது கோமு ஆப்த வாக்கியம்னா உண்மையை கண்டிறிந்த ரிஷிகள், ஞானிகள், யோகிகள், இவர்களின் வார்த்தைகள், இவர்களால் உருவாக்கப்பட்ட சாஸ்திரங்களுக்கு ஆப்த வாக்கியம்ன்னு பேர்  காமு ஓஹோ அப்படியா கோமு விஷயங்களை புரிஞ்சுக்க புலன்களை தாண்டுன அறிவுன்னு ஒன்னு இருக்கு அந்த அறிவுனால சிந்திச்சு யோகிகள் சொன்னது தான் ஆப்த வாக்கியங்கள் காமு ஆப்தவாக்யங்களுக்கு  எது அத்தாட்சி கோமு நீ பெரிய அறிவாளி…

காலம் மறப்பதில்லை 1

மனிதன் தனது குழப்பங்களை தானே தான் வரவழைத்துக்கொள்கிறான். அவற்றிக்கு அவன் எங்கே எப்போது அழைப்பு விடுத்தான் என்பதை மறந்து போய் அவற்றை அவன் எதிர்க்கிறான். ஆனால் காலம் மறப்பதில்லை. அது சரியான தருணத்தில் சரியான முகவரியில் அது நீ விடுத்த அழைப்பை உனக்கு விநியோகிக்கவே செய்கிறது. நீ எந்த முகவரியில் இருந்தாலும் அந்த முகவரியை காலம் அறிந்து கொள்கிறது. சரியானபடி உன் அழைப்பை விநியோகிக்கவும் செய்கிறது. இது புரிந்தது என்றால் நமக்கு வினை, விதி பற்றிய அடிப்படை…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 30

மனம் மதங்கொண்ட யானையைப் போன்றது. அது காற்றுடன் போட்டியிட்டுக் கொண்டு ஓடும். ஆகவே, ஒருவன் எப்போதும் நிலைாயன, நிலையற்ற பொருட்களை ஆராய்ந்து, இறைவனைக் காணவே பாடுபட வேண்டும். குருதேவருக்காகப் பணி செய். அதனுடன் ஞானசாதனையும் பழகு. சிறிதளவு வேலை செய்தல் மனத்தை அற்ப நினைவுகளினின்றும், விடுவிக்கின்றது. எவ்வித வேலையும் செய்யாமல் ஒருவன் அமர்ந்திருப்பானேயாகில் பலவகை எண்ணங்களும் அவன் மனத்தினூடே புகும். உண்மையில் இறைவனிடம் உங்களுக்கு எவ்விதப் பற்றும் தோன்றாதிருந்த போதிலும், அவனது பெயரை உரைப்பதால் மட்டுமே, அவனைக்…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 13

அதோகாமி நாடி கதி ….. ஆமை போன்ற நாபியின் மேல் மார்பில் சூழ்ந்திருக்கும் நாலு நாடிகளில் இரண்டு இடுப்பின் மார்க்கமாய் தொடைகளின் சந்திகளின் வழியாக பாதத்திர் சேர்ந்து ஐந்து பிரிவுகள் உடையதாய் பாதாங்குலத்தில் வியாபித்து காலை முடக்கவும், நீட்டவும் செய்யும். இன்னம் மற்ற இரண்டு நாடிகள் தொடைகளின் பின்புறத்து சந்திகளின் மார்க்கமாய் பாத அந்தியம் வரையிலும் வியாபித்து காலை நீட்ட செய்கின்றது. லிங்க நாடி ….. அந்த நாபி கூர்மத்திலிருந்து ஒன்பதாவது ஆகிய லிங்கநாடி பிறந்து ஆண்குறி…

யோக மஞ்சரி.4 அனபா யோக பலா பலன்கள்

சந்திர லக்னத்திற்கு விரையஸ்தானமான 12 – வது ராசியில்இருக்கக்கூடிய குஜாதி பஞ்சக்கிரஹங்கள் மூலம்ஜாதகனுக்கு ஏற்படக்கூடிய பலா பலன்கள்சந்திர லக்னத்திற்கு 12 – வது ராசியில் அங்காரகன் இருக்கும்பொழுது ஜனித்தவன் யுத்தசேவையில் பிரியமுள்ளவனாகவும்,குரோதியாகவும் அதாவது கோபியாகவும், திருஷ்டஸ்சோர ஜனப்பிரபுவாகவும்அதாவது துஷ்ட ஜனங்களுக்குத் தலைவனாகவும், தீரனாகவும் இருப்பான். இங்கே அங்காரகன் சந்திர லகனத்திற்கு 12 – வதுராசியில் இருப்பதற்குரிய பலன்களைப் பொதுவாகச்சொல்லியிருப்பினும் அந்தந்த ராசியின் தன்மையைஅனுசரித்தே பல நிர்ணயம் பண்ணவேண்டும்.உதாரணமாக சிம்ம சந்திரனுக்கு 12 – வது ராசியான கடக…

யோக மஞ்சரி.3 சுனபாதி யோக பலன்கள்.

சந்திரனுக்கு இரண்டில் குஜன் பலத்துடனிருந்தால்ஜாதகன் பூபதியாகவும் ( அரசனாகவோ, அல்லதுமிகுந்த செல்வாக்குள்ளவனாகவோஆகலாமென்பதும் பொருள் கொள்ளலாம். ) குரூரசுபாவமுள்ளவனாகவும், டாம்பீகனாகவும்,மனேபலமுள்ளவனாகவும் தனம்விக்கிரமம் உள்ளவனாகவும், கோபியாகவும்இருக்கக்கூடும்.சந்திரனுக்கு இரண்டாவது இராசியில் புதன்பலத்துடன் இருந்தால் வேத சாஸ்திரங்களிலும், சங்கீத முதலான சாஸ்திரங்களிலும் தேர்ச்சியுள்ளவனாய்இருக்கக்கூடும். மனஸ்வீயாகவும், இத வாக்குள்ளவனாகவும், தார்மீகனாகவும் இருக்கக்கூடும் சந்திரனுக்கு இரண்டாவது இராசியில் குருபலத்துடனிருந்தால் சர்வ வித்தைகளிலும் தேர்ச்சிஉள்ளவனாகவும், ஸ்ரீமானாகவும் ( சௌக்கியமுள்ளவனாகவும் ) குடும்பியாகவும் அரசனுக்கு வேண்டியவனாகவும், இராஜத்துல்லியவனாகவும்,யஸஸ் ( கீர்த்தி ) உள்ளவனாகவும் இருக்கக்கூடுமென்பர்.சந்திரன் இருக்கும் இராசிக்கு இரண்டாவதுஇராசியில்…

யோக மஞ்சரி.2 சந்திரனும் குஜாதி பஞ்சக் கிரகங்களும்.

சூரியன் தவிர சந்திரன் இருக்கிற இராசிக்குஇரண்டாவது இராசியில் கிரகங்கள் இருந்தால் சுனபாஎன்ற யோகமும், பன்னிரண்டாவது இராசியில்இருந்தால் அனபா என்ற யோகமும் இரண்டிலும்பன்னிரண்டிலுமிருந்தால் துருதரா என்ற யோகமும்சந்திரனுக்கு இரண்டாவது ராசியிலும்,பன்னிரண்டாவது ராசியிலும் கிரகமேஇல்லாவிட்டால் கேமத்துரும என்ற ஒரு அசுபயோகமும் ஏற்படுகின்றன.இவ்விதம் சந்திரனுக்கு இரண்டாவதுபன்னிரண்டாவது இராசியில் இருக்கிற கிரகங்கள்பூர்ண பலத்துடனிருந்தால் அதற்குத் தகுந்தபடி பலன்கள் நடக்குமென்று கூறுவர். இது சாமானியமான விதியாகத் தோற்றினும் இந்த யோகத்திற்குச்சொல்லிய பலன்கள் அனுபவத்திற்கும் சரியாகவேஇருக்கின்றன. மீன இராசியில் இருந்து அதற்கு இரண்டாவதான மேஷ இராசியில்…

யோக மஞ்சரி.1

ஜாதக பலன்களை அறிவதற்குரியசித்தாந்தப்படி லக்கின கிரகஸ்புடாதிகளை கணித்துக் கொண்டு ஸ்ரீபதி தம்முடைய பத்ததியில் உபதேசித்துள்ளபடி, 1. பாவஸ்புடம், 2 – கிரக ஷ்ட்பலம்,அதாவது ( ஸ்தான, ஜேஷ்டா, அயன, கால, திக், திருக்,ஆகிய இவ்வாறு பலமும் ), 3. சகமஸ்புடம், 4.அஷ்டக வர்க்கம், 5.ஆயுர்த்தாயம் இவ்வைந்தையும்கணித்துக் கொண்டு பலாபலன்களையறிவது சாஸ்திரீய மென்றும், சந்தேகத்திற்கு இடம் ஏற்படாதமுறை யென்றும் சொல்வர். பிராணன் என்றுசொல்லப்பட்டுள்ள உதய லக்கினம், சரீரகாரகன்என்று பெயர் பெற்ற சந்திரன் இருக்கும் லக்கினம்,ஆத்மகாரகனான சூரியன் இருக்கிற கிரகங்களின்…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 15

தலையில் வைக்கப்பட்ட பளு முதலியவற்றால் ஏற்படம் துன்பம் பிறரால் தீர்க்கப்படலாம். பசி முதலியவற்றால் ஆக்கப்பட்ட துன்பமோ எனின் தன்னாலன்றி வேறு எவராலும் தீர்க்க இயலாதது. கட்டுப்படான உணவும் மருந்தை உட்கொள்ளுதலும் எந்த நோயாளியால் பின்பற்றப்படுகிறதோ அவனுக்க உடல் நலம் கைகூடுவது காணப்படுகிறது. மற்றொருவனால் அனுஷ்டிக்கப்பட்ட இச்செயல்களால் இவனுக்கு உடல் நலம் சிந்திப்பதென்பதில்லை. அறிவின்மை ஆசை தொழில் முதலிய வலைகளாலான தளையை நீக்குவதற்குத் தனக்குத் தானேயல்லாமல் நூறு கோடி கல்பகாலமானாலும் எவன் திறமை உடையவனாவான்? போகத்தாலன்று, ஸாங்கியத்தாலன்று, கர்மத்தாலன்று,…

அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 12அன்ன ரச விவரணம்

அன்ன ரச விவரணம் ….. மனிதர்கள் புசிக்கும் அன்னமானது முதலில் ஆமாசயத்தில் பிரவேசித்து அப்புறம்  பச்சமானாசயத்தில் சேர்ந்து அதற்கு கீழ்பாகத்திலுள்ள ஜடராக்கினியால் பக்குவமாய் அதன் பிப்பியானது பக்குவாசயத்தில் சேரும்.பச்சயமானாசயத்தில் பக்குவமான அன்னரசம் நாபிநாளத்தில் பிரவேசித்து வாயுவினால் சகலநாடிகளின் மார்க்கமாய் சரீரத்தில் வியாபிக்கும்.நாடி ஸ்தானமும் கதியும் ….. நாடி ஸ்தானம் மஹா நாடிகள் என்கிற எட்டு பாதங்களுடன் சேர்ந்திருக்கும். அந்த எட்டு நாடிகளில் நாலு நாடிகள் பின்பாகத்திலும், நாலு நாடிகள் மார்பிலும் வியாபித்து இருக்கின்றது.ஊர்த்துவ காமி நாடிகள் …..…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 29

மனம் ஒருமைப்படாவிட்டாலும் தூய மந்திரத்தை ஜபிப்பதை விட்டுவிடவேண்டா. உங்கள் கடமையை நீங்கள் ஆற்றுங்கள். இறைவனது பெயரை ஓதும் போதே, காற்று அடியாதபடி தடுக்கப்பட்டுள்ள ஒரிடத்தில் உள்ள விளக்கின் சுடரைப் போல், மனத்தானாகவே ஒருமைப்படும். காற்றே சுடரை ஆடச் செய்கின்றது. அதுபோல், நம்மிடத்துள்ள பாவனைகளும் விருப்பங்களுமே நமது மனத்தை அமைதியற்ற தாக்குகின்றன. காற்று மேகத்தை அடித்துச் செல்வதுபோலவே, இறைவனது திருநாமம் நமது மனத்தைச் சூழ்ந்துள்ள உலகப்பற்று எனப்படும் மேகத்தை அழிக்கிறது. கடுந்தவம் பழகிய பிறகே மனம் தூயதாகின்றது. ஒழுங்காகச்…