நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 16
சந்திரன் இருந்தால்:- மாதா குண தோஷம், தந்தைக்கு இரண்டு தார நிலை உடல்நல குறைவினால் தாயின் மனோநிலை சரியில்லாமை, ஊன, ஈன பெண்களின் தொடர்பு தன் நிலைக்கு ஒவ்வாத காரியத்தை செய்தல்.
சந்திரன் இருந்தால்:- மாதா குண தோஷம், தந்தைக்கு இரண்டு தார நிலை உடல்நல குறைவினால் தாயின் மனோநிலை சரியில்லாமை, ஊன, ஈன பெண்களின் தொடர்பு தன் நிலைக்கு ஒவ்வாத காரியத்தை செய்தல்.
லக்கினாதிபதி செவ்வாய் ஆகி அவர் இருந்த நட்சத்திரத்திற்கு எதிரிடையான நட்சத்திரத்தில் சூரியன் இருந்தால்:- புத்திரர்களால் இலாபமின்மை தேவையான நேரத்தில் புத்தி செயல்படாமை, செய் தொழில் நஷ்டம், விரும்பாத தொழில், ராஜ்ஜிய விரோதம், அரசாங்க சம்பந்தப்பட்ட செயல்களில் அவமானம், தனித்திருத்தல், குடியினால் மனம் பேதலித்தல்.
ராகு இருந்தால்:-பாட்டன் வகையில் இல்லான்மை, மருந்து மாந்தீரிகத்தால் பீடை, முன்ஜென்மம் தோஷம், அதனால் ஏற்படும் விவகாரம், கோணல் புத்தி, சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன். கேது இருந்தால்:-சிம்ம லக்கினத்திற்கு சொன்ன பலன்.
லக்கினாதிபதி சந்திரன் ஆக இருந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில். சனி இருந்தால்:-ஆயுள் பீதி, அங்க ஹீனம், மரணத்திற்கு ஒப்பான வேதனையை நித்தமும் அனுபவித்தல், மனைவியை பிறர் கொண்டு செல்லல், திருமணத்தினால் அவமான, இல்லறத்தினால் சுகம் கிட்டாமை.
லக்கினாதிபதி சந்திரன் ஆக இருந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில். சுக்கிரன் நின்றால்:-களத்திர சுகம் கிட்டாமை, இரகசிய தொடர்பு அதனால் அவமானம், கீர்த்தி பங்கம், மாதா சுகக் குறைவு, மாதவின் ஆதரவு இல்லாதிருத்தல், வீடு நிலம், வாகனங்களால் கண்டம், நஷ்டம் எப்போதும் சுகக்கேடு.
கீதையில் நான் விரும்பும் பகுதி ஏதாவது ஒன்று இருக்கிறது என்றால், அதன் சாரமாகவும் சுருக்கமாகவும் உள்ள கண்ணனின் இந்த இரண்டு சுலோகங்கள்தாம்- யார் எல்லா உயிர்களிலும் பரம்பொருளாய் சமமாக உறைவதைக் காண்கிறானோ, அழிகின்ற பொருட்களில் அழியாதவரான இறைவனைக் காண்கிறானோ அவனே உண்மையில் காண்கிறான். ஏனெனில் எங்கும் இறைவன் சமமாக உறைவதைக் காண்பவன் ஆன்மாவை ஆன்மாவால் அழிக்க மாட்டான். இவ்வாறு அவன் உயர் லட்சியத்தை அடைகிறான்.
ஒவ்வொருவருக்கும் அவர்களின் உண்மை இயல்பைப் போதியுங்கள் உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள், அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதைப் பாருங்கள். உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும் பெருமை வரும், நன்மை வரும் தூய்மை வரும், எவையெல்லாம் மேலானதோ அவை அத்தனையும் வரும்
அளவுக்கு அதிகமான சோம்பல் அளவை மீறிய பலவீனம், ஆழ்ந்த மனவசியம் இவை நம் இனத்தின் மீது படிந்துள்ளது, படிந்தவண்ணம் உள்ளது. ஓ தற்கால இந்துக்களே, மனவசியத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். அதற்கான வழி உங்கள் சாஸ்திரங்களில் உள்ளது. அதைப் படியுங்கள்
விழித்திருங்கள் பலவீனமாகிய இந்த மனவசியத்திலிருந்து விடுபட்டெழுங்கள். உண்மையில் யாரும் பலவீனர் இல்லை. ஆன்மா எல்லையற்றது எல்லா ஆற்றலகளும் உடையது எல்லாம் அறிந்து எழுந்த நில்லுங்கள், உங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், உங்களுள் உறைகின்ற இறைவனை வெளிப்படுத்துங்கள், அவரை மறுக்காதீர்கள்.
மகத்தானவர்களாக மேலோர்களாக ஒவ்வொருவரும் மாறுவதற்கான எல்லையற்ற வாய்ப்பும் எல்லையற்ற ஆற்றலும் அந்த ஆன்மாவில் உள்ளது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளட்டும் உத்திஷ்டத ஜாக்ரத ப்ராப்ய வரான் நிபோதத எழுந்திருங்கள் விழித்திருங்கள், லட்சியத்தை அடையும்வரை நில்லாமல் செல்லுங்கள் என்று ஒவ்வொருவரிடமும் முழங்குவோம்.
பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன். எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள். நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.
எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள். தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும். புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.
உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக (Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.
அதிகாலையில் எழ பழகுங்கள். வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள். அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும். நிறைய நல்ல புத்தகம் படியுங்கள். எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? “நீ பிறந்த போது, நீ அழுதாய்…உலகம் சிரித்தது… நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்… உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள். அடிக்கடி கவலை…
அந்தத் தம்ளர்களில் தேநீரை ஊற்றிக் குடித்த அவர்கள் தேநீரின் சுவை பற்றி ஆசிரியரிடம் புகழ்ந்தார்கள். அந்த ஆசிரியர் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிரத்தியேகமாகச் சொல்லித் தருவித்த உயர்தரத் தேயிலையை உபயோகித்து அந்தத் தேநீரைத் தயாரித்ததை அவர்களிடம் தெரிவித்தார். எத்தனையோ தம்ளர்கள் இருந்த போதிலும் நீங்கள் அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு போனீர்கள். அது இயற்கை தான். ஆனால் எடுத்தது எந்த தம்ளராக இருந்தாலும் உண்மையில் உங்களுக்கு முக்கியமானது நீங்கள் குடித்த தேநீர்…
அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் மூலமும்…
வித்யா கீதை* – இதில் திரிபுர ரஹஸ்யமானது அடங்கியுள்ளது. அதோடு தத்தாத்ரேயர் பரசுராமருக்கு விவரிக்கும் ஒரு கதையின் வடிவத்தில் இது உள்ளது. திரிபுரா அல்லது மூன்று புரங்களுக்கும் தலைமை தாங்கும், மிக உயர்ந்த ஞானமுடையவளான ஆதி சக்தியை வித்யா என்றும் அழைப்படுகிறாள். ஆகவே இந்த கீதையை, வித்யா கீதை என்றும் அழைப்பதுண்டு. ப்ராமர கீதை* – ஒரு இடைத்தரகராக ‘தேனீ’ (ப்ராமரா) மூலம் கோபியர்களுக்கும் உதவருக்கும் இடையிலான உரையாடல். இது ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து வந்தது. வேணு கீதை*…
யோகி கீதை* – இது சுவாமி நாராயணனின் நான்காவது ஆன்மீக வாரிசான ஸ்ரீ யோகிஜி மஹாராஜரின் பிரார்த்தனை மற்றும் ஆன்மீக போதனைகளின் தொகுப்பாகும். ஆன்மீக உணர்வை அடைவதற்கும், பிரம்மருவாக மாறுவதற்கும் அல்லது கடவுளை உணர்வதற்கும் ஒரு ஆர்வலருக்கு தேவையான அனைத்து பண்புகளையும் இது விளக்குகிறது. வல்லப கீதை* – இது ஷோதசா கிரந்தங்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது. மேலும், ஸ்ரீ வல்லபாச்சார்யரின் பதினாறு படைப்புகளின் தொகுப்பாகும். இதில் அனைத்து வகையான தலைப்புகளும் விவாதிக்கப்பட்டுள்ளன. மோக்ஷம் அல்லது விடுதலை என்ற…
பீஷ்ம கீதை* – மஹாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ள இந்த கீதையில், மகேஸ்வரர், விஷ்ணு மற்றும் நாராயணன் என பல்வேறு பெயர்களை உச்சரிக்கும் பீஷ்மரின் பாடல்கள் உள்ளன. மேலும் இந்த பாடல்களை நம்பிக்கையுடனும் பக்தியுடனும் பாடும் ஆர்வலருக்கு பேரின்பம், அமைதி மற்றும் வளம் ஆகியவற்றை அளிப்பதாக கூறப்படுகிறது. ப்ராமண கீதை* – மஹாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ள இந்த கீதை, மாயா மற்றும் மாயையின் பிணைப்புகளிலிருந்து எவ்வாறு தப்பிப்பது அதோடு அனைத்து மனித இருப்புக்கும் இலக்காக இருக்கும் மிக உயர்ந்த விடுதலையை அடைவது…
கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை, விட அரவின் பைக்கே அணிவது பண்மணிக் கோவையும், பட்டும்,எட்டுத் திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே. எட்டுத் திசையையே உடுத்த அழகிய உடையாக உடைய சிவபெருமானது வாமபாகத்தைப் பொருந்திய அபிராமி, தன் திருக்கரத்தில் அணிந்திருப்பன கரும்பாகிய வில்லும் மலராகிய அம்புகளும் செந்தாமரைபோன்ற நிறமுடைய திருமேனியில் அணிவது வெள்ளிமுத்துமாலையாம்: விஷம் பொருந்திய நாகத்தின் படம் போன்ற குஹ்ய ஸ்தானத்தில் தரிப்பவை பல மணிகளால் ஆகிய…
பொருளே, பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும் மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து இருள் ஏதும் இன்றி ஒளிவெளி ஆகி இருக்கும் உன்தன் அருள் ஏது, அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே. பலவகை செல்வமாக உள்ளவளே அந்த செல்வத்தின் மூலம் அனுபவிக்கும் போகமே அரிய போகங்களை அனுபவித்து செய்யும் மாயா ரூபியே இதில் எல்லாம் உண்டாகும் மயக்கங்கள் தீர்ந்த பின் உண்டாகும் தெளிந்த ஞானமே தாமரை இருக்கையில் இருப்பவளே என்னுடைய மனதில் மாயையின்…
திங்கட் பகவின் மணம்நாறும் சீறடி சென்னிவைக்க எங்கட்கு ஒருதவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர் தங்கட்கும் இந்தத் தவம்எய்துமோ? தரங்கக் கடலுள் வெங்கட் பணிஅணை மேல்துயில் கூரும் விழுப்பொருளே அலைகளை உடைய பாற்கடலில் உள்ள ஆதிசேஷனின் மீது துயில்பவளே சிவபிரானின் திரு முடியில் உள்ள பிறை சந்திரனது ஒளி வீசும் சிறிய அடி ஒன்றுக்கும் பற்றாத எங்கள் சிரத்திலே நீ வைத்து அருள எங்களுக்கு ஒப்பற்ற தவம் அமைந்தது எவ்வாறு இது அதிசயமே கணக்கில்லாத பல தேவர்களுக்கும்…
வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம் தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும், பைந் தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும், பொற் செந் தேன் மலரும், அலர் கதிர் ஞாயிறும், திங்களுமே. அபிராமி தாயே உன்னிடம் வந்து தஞ்சமடையும் அடியவர்களுக்கு சொர்க்லோக பதவியை அன்போடு தந்து நான் முக பிரம்மாவின் கழுத்தில் துழாய் மாலையும் திருமாலின் திருமார்பில் பருத்த கவுத்துவ மணியும் ஈசனின் இடபாகத்தில் இருந்து தேனொழுரும் தாமரை மலரில் பரவிய கிரகணங்களை உடைய சூரிய…
இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனைநடுங்க அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய், அத்தர் சித்தம் எல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே, உழைக்கும் பொழுது, உன்னையே, அன்னையேஎன்பன் ஓடிவந்தே. ஈசனின் உள்ளம் முழுவதும் உருகும்படி சந்தன சலவையை பூசியுள்ள குவிந்த தன பாரங்களை உடைய யாமளையாகிய தேவியே நான் செய்யும் பாவத்தின் விளைவாக எனை கொல்ல புகும் நான் நடுங்கும்படி என்னை அழைக்கும் சமயத்தில் நான் பயந்து நடுங்கி வருந்தி உன்னிடம் ஒடி வந்து…
ஆசைக்கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப் பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் எனும் வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து, ஆண்டுகொண்ட நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர் பாகத்து நேரிழையே. ஈசனின் இடபாகத்தில் இருக்கும் தேவியே மண் பெண் பொன் எனும் மூன்றின் ஆசைக் கடலில் சிக்கி இரக்கமற்ற யமனின் பாச கயிற்றுக்கு அகப்பட்டு துன்ப்படும்படி இருந்த என்னை மணமுள்ள தாமரை மலரை போன்ற திருவடியை என் தலையின் மேல் வலிய வைத்து என்னை ஆண்டு கொண்ட…
உமையும், உமையொரு பாகனும் ஏக உருவில்வந்திங் கெமையும் தமக்கன்பு செய்ய வைத்தார், இனி எண்ணுதற்குச் சமயங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை, அமையும் அமையுறு தோளியர் மேல்வைத்த ஆசையுமே. சிவபிரானின் தேகத்தில் ஒரு பாதியாய் விளங்குகின்ற ஒருவராகவே திகழும் உமாதேவியே பக்குவமற்ற என்னை போன்றோரையும் தன் திருவடிக்கு அன்பு செய்யும்படி நல்ல நிலையில் வைத்துள்ளனர் அதனால் கடைபிடிக்க வேறு சமயங்கள் இல்லை நம் பிறவி பிணி தீர்ந்த காரணத்தால் பெற்று எடுக்க இனி தாயும் இல்லை…
அன்றே தடுத்தென்னை ஆண்டுகொண்டாய், கொண்டதல்ல என்கை நன்றே உனக்கினி நான் என் செயினும், நடுக்கடலுள் சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமே, ஒன்றே, பலஉருவே, அருவே, என் உமையவளே. ஒன்றாயும் பலவாயும் உள்ள உருவ மற்றதாயும் உள்ள உமாதேவியே என் அன்னையே முன் காலத்திலேயே என்னை நீ ஆட்கொண்டாய் இனி நான் என்ன குற்றம் செய்தாலும் கடலுக்கு நடுவே சென்று விழுந்தாலும் என் குற்றத்தை மறந்து கரையேற்றுதல் நின் பொறுப்பாகும்!
சித்தியும், சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும்பரா சத்தியும், சத்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார் முத்தியும், முத்திக்கு வித்தும், வித்தாகி முளைத்தெழுந்த புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தையன்றே. அஷ்டமா சித்திகளை தரும் தெய்வமாக விளங்கும் பராசக்தியும் தன்னுள்ளே சக்தியை தழைக்க செய்தவரான சிவனும் தவம் செய்பவர்கள் பெறும் ஆனந்தமும் அந்த முக்தியை பெறுவதற்கு உண்டான மூலமும் மூலத்தில் தோன்றி எழுந்த ஞானமும் ஆகிய எல்லாமாகவும் இருப்பவளே அறிவினுக்கு உள்ளே நின்று பாதுகாக்கும் திரிபுர சுந்தரியே!
சொல்லும் பொருளும் என, நட மாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே, நின் புதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும் செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே. ஆனந்த தாண்டவம் ஆடும் சிவனாரிடம் சொல்லும் பொருளும் போல இணைந்து நிற்கும் மலர் பூங்கொடி போன்றோய்நின் மலர் போன்ற திருவடிகளை அல்லும் பகலும் சேவிக்கும் அன்பர்களுக்கு அழியாத அரச பதவி தவ வாழ்க்கை சிவலோக பதவியும் கிடைக்குமே!