அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 35. திருமணம் நிறைவேற
திங்கட் பகவின் மணம்நாறும் சீறடி சென்னிவைக்க எங்கட்கு ஒருதவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர் தங்கட்கும் இந்தத் தவம்எய்துமோ? தரங்கக் கடலுள் வெங்கட் பணிஅணை மேல்துயில் கூரும் விழுப்பொருளே அலைகளை உடைய பாற்கடலில் உள்ள ஆதிசேஷனின் மீது துயில்பவளே சிவபிரானின் திரு முடியில் உள்ள பிறை சந்திரனது ஒளி வீசும் சிறிய அடி ஒன்றுக்கும் பற்றாத எங்கள் சிரத்திலே நீ வைத்து அருள எங்களுக்கு ஒப்பற்ற தவம் அமைந்தது எவ்வாறு இது அதிசயமே கணக்கில்லாத பல தேவர்களுக்கும்…
