அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 36. பழைய வினைகள் வலிமை பெற

பொருளே, பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும் மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து இருள் ஏதும் இன்றி ஒளிவெளி ஆகி இருக்கும் உன்தன் அருள் ஏது, அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே. பலவகை செல்வமாக உள்ளவளே அந்த செல்வத்தின் மூலம் அனுபவிக்கும் போகமே அரிய போகங்களை அனுபவித்து செய்யும் மாயா ரூபியே இதில் எல்லாம் உண்டாகும் மயக்கங்கள் தீர்ந்த பின் உண்டாகும் தெளிந்த ஞானமே தாமரை இருக்கையில் இருப்பவளே என்னுடைய மனதில் மாயையின்…