உமையும், உமையொரு பாகனும் ஏக உருவில்வந்திங்
கெமையும் தமக்கன்பு செய்ய வைத்தார், இனி எண்ணுதற்குச்
சமயங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை,
அமையும் அமையுறு தோளியர் மேல்வைத்த ஆசையுமே.
சிவபிரானின் தேகத்தில் ஒரு பாதியாய் விளங்குகின்ற ஒருவராகவே திகழும் உமாதேவியே
பக்குவமற்ற என்னை போன்றோரையும் தன் திருவடிக்கு
அன்பு செய்யும்படி நல்ல நிலையில் வைத்துள்ளனர்
அதனால் கடைபிடிக்க வேறு சமயங்கள் இல்லை
நம் பிறவி பிணி தீர்ந்த காரணத்தால்
பெற்று எடுக்க இனி தாயும் இல்லை
வேறு மகளியர் பால் வைத்த மோகமும் போதும்!
