அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 40 பூர்வ புண்ணியம் பலன்தர
வாணுதற் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப் பேணுதற் கெண்ணிய எம் பெரு மாட்டியை, பேதைநெஞ்சிற் காணுதற் கண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு பூணுதற் கெண்ணிய எண்ணமன்றோ, முன்செய் புண்ணியமே. ஒளி பொருந்திய முகத்தில் நெற்றி கண் உடையவளே தேவர்கள் அனைவரும் நின்னை வழிபடுவதையே லட்சியமாக கொண்டவர்கள் அறியாமை உடைய நெஞ்சினால் காண கிடைக்காதவள் அப்படிப்பட்ட தேவியை தரிசித்து அன்பு கொள்ள எண்ணிய எண்ணத்திற்கு காரணம் முற்பிறவிகளில் செய்த புண்ணியமே!
