அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 44. பேதபுத்தி நீங்க

தவளே இவள், எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் அவளே, அவர்தமக் கன்னையும் ஆயினள், ஆகையினால், இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம், துவளேன், இனிஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே. தவத்திற்கு முதன்மையான இவள் எங்கள் சங்கரின் மனைக்கு மங்களமாக இருப்பவள் அவரை சீராட்டி அவருக்கு தாயும் ஆனவள் அதனால் தேவர்கள் அனைவருக்கும் மேலான தலைவி இவளே அதனால் இவளை தவிர வேறு தெய்வம் உண்டென்று எண்ணி தொண்டு செய்ய மாட்டேன்.!