சுகமாக வாழ சில ஆலோசனைகள் 34

மனித குலத்திற்க்கு தவம் செய்யாமலேயே கிடைத்த மிகப்பெரிய வரம் கற்பனா சக்தி ஆகும் அந்த சக்தியின் அளவை எதனைக் கொண்டும் அளக்க முடியாது அப்படி அளவற்ற ஆற்றலை முறைப்படுத்தி செயல்படுத்தினால் நம் வாழ்வு என்றும் ஆனந்தம்.

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 33

உருவம் இருக்கும் எதனுள்ளும் அதனை இயக்கும் உருவமில்லா  சக்தி ஒன்று இருந்தே தீரும் என்பதே அது நாம் உருவம்  கொண்டிருக்கிறோம் நாம் இயங்க நம்முள் உருவமற்ற காற்று தேவைப்படுகிறது. அது போல தான் எல்லாவற்றிற்கும் அண்டங்களாலும் அணுவானாலும் இது தான் விதி இதனையே பண்டைய சித்தர்கள் அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் இருக்கிறது என்று கண்டு உணர்ந்து கூறினார்கள். மனிதன் செயலில் கற்பனையெனும் பாகம் நம்மை வளமாக்கவும் செய்யும், நாசமாக்கவும் செய்யும் அது என்ன செய்யும், எப்படி செய்யும்…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 32

நாம் மனதின் ஒரு செயலான கற்பனை எனும் விஷயத்தை பற்றி நாம் நன்கு தெரிந்து கொண்டால் அதை செயல்படுத்தும் சூட்சுமத்தை அறிந்து கொண்டால் நம் வாழ்வில் நாம் துன்பம், சோகம், தோல்வி, விரக்தி போன்றவற்றை அடியோடு ஒழித்துவிட்டு இன்பம், மகிழ்ச்சி, வெற்றி, உற்சாகம் எனும் நிலையினை இறக்கும் வரை அனுபவிக்கலாம் கற்பனையின் திறன் எப்படிப்பட்டதென்றால் அதால் கடவுளையே உருவாக்க முடியும் இன்னும் ஒரு படி மேலேபோய் யோசித்தால் அதனைக் கொண்டு நாம் கடவுளாகவே ஆக முடியும். நான்…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 31

 கனவுகள் காண்பதை விட்டுவிட வேண்டாம் அதே போல் எல்லா கனவுகளும் பலித்துவிடும் என்றும் எண்ண வேண்டாம். பலிக்காத கனவுகளுக்கு மாற்று முறை கையாள எப்போதும் தயாராக இருங்கள் தேவைப்பட்டால் அந்த நிறைவேறாத கனவுகளை மறக்கவும், அழிக்கவும் சிறிதும் தயக்கம் காட்டாதீர்கள் அப்படி அதை அழித்துவிட்டு வேறு கனவுக்கு சென்றுவிடுங்கள்.

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 30

தோல்விகளும், கவலைகளும் நம்மை அலைக்கழிக்கும் போது நாம் வாழும் வழிக்கான உபாயத்தினை கண்டுணர மிகுந்த அக்கரையை ஏற்படுத்தி நமது முயற்சியினை மிக அதிகமாக அதிகரிக்க வேண்டும். நமது வாழ்க்கையில் தோல்விகளை தடுக்க தவிற்க சில முன்னேற்ப்பாடான நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் ஆக வேண்டும் எப்படி என்றால் எந்த விஷயத்திற்கும் இரண்டு விதமான ஆலோசனைகளும் அதற்கு தகுந்தாற்போல் தற்காப்பு நடவடிக்கைகளையும் வரையறுத்து கொள்ளவேண்டும் அதற்கு உண்டான சூழ்நிலைகளை உருவாக்கி நாம் நமது திறமையினை மெருகேற்றி கொள்ள வேண்டும். அப்போது…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 29

ஒவ்வொரு காலகட்டத்தில் மனிதன் ஒவ்வொரு விஷயத்திற்காக போராடுகிறான் பின் அவற்றை அடைகிறான். பின் அதை விட்டுவிடுகிறான் இது அவரவர் வாழ்வில் கண்டிப்பாய் நடந்திருக்கும் இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது நாம் போராட கூடிய விஷயம் என்றாவது ஒரு நாள் அல்லது ஜென்மத்தில் அடைந்தே தீருவோம் என்பதே இங்கு தேவை தொடர்ந்து போராடுவது அதுவும் இறை நம்பிக்கையோடு அதாவது தன் நம்பிக்கையோடு போராடும் விஷயத்திற்கேற்ப நம்மை எப்போதும் கைவிடாது.   பல சமயங்களில் சில பிரச்சனைகள் நாம்…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 28

வினைகளை செய்தது நாம் என்றால் 1. நாம் வினைகளை செய்யாமல் இருக்கவும் முடியும். 2. நாம் செய்ததை நமக்கு பிடித்ததை போல் மாற்றவும் முடியும். சாஸ்திரங்களும், வேதங்களும் அதை ஒற்றி பயணித்த மதங்களும் மனிதனின் நிலைக்கு அவன், அவன் செய்த வினையே காரணம் என்று அழுத்தம் திருத்தமாக அறுதியிட்டு உறுதியாக சொல்கின்றன இதை ஏற்கும் நாம் பின்வருமாறு சிந்தித்தால் நாம் விரும்பும் பயனை அடையலாம் எனும் முடிவுக்கு வரமுடியும்.

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 27

இப்படி போர் என்று  வந்த பின் நமக்கு துணை நம் தன்நம்பிக்கை எனும் இறை நம்பிக்கை தான் இந்த ஆயுதத்தை கொண்டே நாம் அந்த எதிரியை இல்லாதிருக்க செய்ய முடியும்.  இப்படி பட்ட போர் வந்த பின் எதன் மீதும் நாம் நமது பொறுப்பை சுமத்த முடியாது உதாரணமாக நான் ஏழை, அண்ணன் என்னை ஏமாற்றிவிட்டான், நான் படிக்கவில்லை இப்படி எந்த காரணங்களையும் சொல்ல முடியாது காரணம் இவையெல்லாம் மீறி போர் ஆரம்பித்தாகிவிட்டது, வெற்றி ஒன்றே லட்சியம்…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 26

ஒவ்வொருவரும் போரிட வேண்டியது சக மனிதரிடம் அல்ல அவரவரின் முன் வினையோடு ஆம் அந்த முன்வினைதானே நாம் விரும்பாத துக்கம், துயரம், தோல்வி, வாழ்வில் சிக்கல் அனைத்தும் தந்தது. அதனால், அதனுடன் போர் புரிந்து அதை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் அப்போது தான் நாம் ஆனந்தமாக இன்பமாக இருக்க முடியும் அதனால் நாம் நம் கண்ணுக்கு தெரியாத நம் முன்வினை எனும் எதிரியுடன் இறைவனின் துணை கொண்டு வியூகங்கள் அமைத்து சரியாக போர் செய்து வெற்றி…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 25

நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று அதாவது முன் பிறவியின் தொடர்ச்சியே இப்பிறவி என்பது இது புரிந்து கொண்டால் நாம் அனுபவிக்கும் அல்லது நாம் சந்திக்கும் சிக்கல்கள் துயரங்கள் தோல்விகள் அனைத்தும் நம்மாளேயே உருவாக்கப்பட்ட‍ தென்று,  தெரிய வரும் அப்படி தெரியவரும் போது நமக்குள் தெளிவு வரும் அந்த தெளிவு இறைவனைப் பற்றிய சிந்த‍னைக்கு அழைத்துச் செல்லும் அதில் பயணப்படும் நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் நமக்கு ஏற்பட்டிருக்கும் துயரங்கள் சிக்கல்கள், தோல்விகள் எதனால் ஏற்பட்டது…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 24

நாம் ஒன்றை எப்போதும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும் நாம் செய்யும் பணிகள் தொடர்ந்து உற்சாகத்துடன் செயல்பட நமக்கு உடல் பலம் முக்கியம் என்று கவனித்து பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு புரியவரும் உடல் பலம் குறைந்தவர்கள் தன் நம்பிக்கை குறைவாக இருப்பவர்களாக இருப்பார்கள் அதனால் உங்கள் பணிகளை எப்போதும் நீங்கள் உற்சாகமாக செய்ய நல்ல சத்துள்ள உணவுகளையும், நல்ல உடற்பயிற்ச்சியையும் செய்யுங்கள் அது உங்களுக்கு உங்களது பணிகளை தொடர்ந்து உற்சாகமாய் செய்ய உதவி செய்யும் இன்னுமொரு விஷயம்…

 சுகமாக வாழ சில ஆலோசனைகள் 23

ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு சூழ்நிலையில்  அவை வெளிப்பட்டு பிறர் நம்மை புகழும் படி செய்திருக்கலாம் என்பது நமக்கு தெரியும் ஒரு விஷயத்தில் தவறு நேர்ந்து விட்டால் அதை சரி செய்யவோ அல்லது அந்த தவறு மீண்டும் நடக்காமல் இருக்கவோ மேற் சொல்லிய விஷயங்கள் பயன்படும். தன்னுடைய குண நலன்களை ஆராய்ந்து பார்க்கும் வித்தையை அறியாதவர்களுக்கு தான் என்ன செய்கிறோம் தான் என்ன செய்ய வேண்டும் என்று அறியாமல் போகலாம்.  அப்படிப்பட்டவர்கள் மேற் சொன்ன முறைகளை கையாண்டு சுய…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 22

அந்த நல்ல குணங்களை மேலும், மேலும் வளர்த்துங்கள் அது உங்களுக்கு நீங்கள் செய்யும் செயலில் விருப்பையும் சந்தோஷத்தையும் தரும் அது மட்டுமல்ல உங்களுடைய தன்னம்பிக்கையின் அளவும் அதிகரிக்கும். அந்த நல்ல குணங்களை பட்டியல் இட்டால் நேரந்தவறாமை, பிறருக்கு உதவிசெய்தல், செய்யும் பணிகளில் நேர்த்தி, சுறுசுறுப்பு பல விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம், கற்றதை செயல்படுத்துவதில் உள்ள முனைப்பு இனிமையான பேச்சு இப்படி எத்தனையோ நல்ல குணங்கள் ஒளிந்திருப்பதை அறியலாம்

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 21

ஒவ்வொருவரும் தங்களைப் பற்றி அறிய தினமும் நாட்குறிப்பில் குறித்து பழகுதல் தன்னைப் பற்றிய மதிப்பீடுகள் குறிப்பிட்ட கால அளவுகளில் எந்த அளவு மாறியிருக்கிறது அல்லது மாறவே இல்லையா என்பது தெரியவரும் இது நம்மை நாம் விரும்பும் விதத்தில் தயார் செய்ய உபயோகப்படும்.  உதாரணமாக நம்மை யாரெல்லாம் புகழ்ந்துள்ளார்கள் எந்த சந்தர்ப்பத்தில் புகழ்ந்தார்கள், எந்த விஷயத்திற்காக புகழ்ந்தார்கள் என்பதை பட்டியல் இடுங்கள்  அப்போது உங்கள் மனதில் ஒரு விஷயம் நன்றாக பதியும் அதாவது நம்மிடம் இருக்கும் நல்ல குணங்களே…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 20

தன் நம்பிக்கை என்பது தனது திறமைகளை பற்றி அதீதமான தவறான மதிப்பீடு செய்வதல்ல அல்லது போலியான தற்பெருமையோடு அலைவதல்ல, அவரவரின் உள்ளார்ந்த ஆற்றலின் மீது உள்ள மன திடம் தன்நம்பிக்கை ஆகும். இன்னுமொரு விஷயம் அவரவரின் திறமையில் கிடைக்கும் பயன் கூட தன் நம்பிக்கையை வளர்க்கும் அனால் அது நீண்ட காலம் அல்லது எல்லா சூழ்நிலைகளிலும் கைகொடுக்கும் என்று சொல்ல முடியாது ஏமாந்தால் இது தற்பெருமை உள்ளவராகவும், ஆணவகாரராகவும் மாற்றிவிட வாய்ப்பு உண்டு ஆனால் உள்ளார்ந்த ஆற்றலின்…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 19

ஒரு விதத்தில் பார்த்தால் மனிதன் மிக பலவீன மனம் படைத்தவனாகவே இருக்கிறான்.  காரணம் ஆழமாக சிந்தித்து அதன் மூலம் பணி செய்து கிடைக்கும் பயன்களை அவன் விரும்புவதில்லை எதையும் சுலபாக அடைய வேண்டும் என்பதே அவனது ஆசையாய் இருக்கிறது. உழைக்காமலும் உயர்ந்த சிந்தனை இல்லாமலும் மன உறுதியும், வைராக்கியத் தோடும் கூடிய காரியங்கள் இல்லாமலும் எப்படி நினைத்ததை அடைய முடியும்.  மனிதன் பொருளாதாரத்தில் லாபம் தரக்கூடிய, புலன்களால் அனுபவிக்க கூடிய விஷயங்களை மட்டுமே நம்புகிறான்.   அதனாலேயே…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 18

இந்த பூ உலகில் எந்த விஷயமானாலும் சரி எந்த செயலானாலும் சரி காரணம், காரியம், விளைவு இதனோடுதான் முழு சம்பந்தம் கொண்டுள்ளது.  விளைவு நம் விருப்ப படி அமைய வேண்டுமானால் காரியம் அந்த விளைவுக்கு தகுந்தாற்போல் இருக்க வேண்டும் அது மட்டுமல்ல காரியமும் அந்த காரணத்திற்கு தகுந்தாற் போல் இருக்க வேண்டும் இது மிக, மிக கடினமான நெடுங் கணக்கு இதை புரிந்து அறிந்து கொள்ளவே மனித இனம் தோன்றியதில் இருந்து இன்று வரை போராடுகிறது ஆனால்…

சுகமாக வாழ சில ஆலோசனைகள் 17

மறுபடியும், மறுபடியும் சொல்வது மனிதனுக்கு தன்னைப் பற்றிய அக்கறை, தெளிவு கண்டிப்பாய் வேண்டும் என்பது தான் எனக்கு எது சிறந்தது எனக்கு நான் எப்படிப்பட்டவனாக இருக்க விரும்புகிறேன் என்பது தான் இது தெரிந்து விட்டது என்றாலே நாம் செய்ய வேண்டிய பயண இலக்கு தெரிந்து விடும் இலக்கு தெரிந்த பின் பயணப்படுதல் சுலபமாகிவிடும் இலக்கில் தெளிவு இல்லாத போது துன்பத்தையும், சோகத்தையும் தவிற நாம் வேறு  எதையும் அடைய முடியாது.

சுகமாக வாழ சில ஆலோசனைகள்.16

இங்கு யாரும் புத்தனோ, யேசுவோ இல்லை நாம் இருக்கும் சூழ்நிலைக்கு நம் அறிவுக்கு நம் புரிதல் இல்லாததிற்க்கு நாம் கண்டிப்பாக தவறு செய்வோம் நாம் தவறு செய்யும் போது நமக்கு அது தவறாக தெரிவதில்லை செய்து முடித்தபின் நாம் தவறு செய்துவிட்டோமே என்ற எண்ணம் நம்மை அழுத்துவதை காணமுடியும். அந்த நிலையில் நீங்கள் உங்களுக்குள் சபதமெடுங்கள், உங்களுக்குள் வைராக்கியம் கொள்ளுங்கள் மீண்டும் அந்த செயலை செய்வதில்லையென்ற அந்த நிலையை நீங்கள் கடைபிடிக்கும் போது உங்களுக்குள் ஒரு திருப்தியும்…

சுகமாக வாழ சில ஆலோசனைகள். 15

ஒவ்வொருத்தருக்கும் நாம் இயற்கையின் படைப்பு இறைவனின் அருளைப் பெற்றவர்கள் என்பதை திடமாகவும், தெளிவாகவும் நம்புவது அவசியம். அது மட்டுமல்ல குணங்களும், தீய குணங்களும் கலந்து இருப்பவனே மனிதன் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.  இந்த நிலையில் இருக்கும் மனிதன் அவனது வாழ்நாளில் பல நிறை, குறைகளை அனுபவிக்கிறான்.  அந்த அனுபவம் எதற்கென்றால் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்வதற்கே ஆகும். சோதனைகளும், வேதனைகளும் எல்லோருக்கும் அவரவர் நிலையில் கண்டிப்பாக உண்டு. அதில், பெறும் அனுபவத்தை பாடமாக கொண்டு…

சுகமாக வாழ சில ஆலோசனைகள்.14

மனிதன், மனித வாழ்க்கை நிறை குறைகளுடன் கூடியதே என்பதை முதலில் நன்கு புரிந்து மனதில் இருத்திக் கொண்டாலே தானாகவே மன்னிக்கும் சுபாவம் கைகூடி வரும் மன்னிக்கும் சுபாவம் கைகூடினால் மனதில் வன்மம் வளராது வன்மம் இல்லாத மனம் கோபமும், அழிக்கும் ஆவேசமும் இல்லாத மனம் ஆகும் அந்த மனம் வெகு இயல்பாகவே ஆனந்தத்தின் பிடியில் சிக்கும். 

சுகமாக வாழ சில ஆலோசனைகள்.13

நம் வாழ்க்கையை பிறர் வாழ முடியாது அதுபோல தான் பிறர் செயல்களும் வாழ்க்கையும் நாம் ஆசைப்படும்படி, நாம் நினைக்கும்படி இருக்க வேண்டியது இல்லை இதை புரிந்து கொண்டு வாழ்ந்தாலே நமக்கு சோகமோ, கோபமோ உண்டாகாது இவை இரண்டும் இல்லாவிட்டாலே வாழ்வு இனிமை தானே வாழ்க்கையில் ஆனந்தம் தானே!

சுகமாக வாழ சில ஆலோசனைகள்.12

நம்மிடையே எத்தனையோ வேறுபாடுகள் உண்டு.  உதாரணமாக நிறம், மொழி, வயது, அறிவு, புத்திசாலிதனம் அனுபவம் இன்னும் இப்படி எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம் இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொவரு விதத்தில் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொன்று முக்கியமானதே என்பதுதான் அதை, அதை அப்படியே ஏற்றுக் கொள்ள முயல வேண்டும்.   நம்மையும் சேர்த்துதான் எப்போது நாம் உள்ளதை உள்ளபடி மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள பழகுகிறோமோ, அப்படியே ஏற்றுக் கொள்கிறோமோ அப்போதே நாம் இறைவன் அருகில்…

சுகமாக வாழ சில ஆலோசனைகள்.11

ஒவ்வொருவரும்  தற்கால  சூழ்நிலையில் முக்கியமான இரண்டு வினாக்களை  தம்முள் வைக்க கடமைப்பட்டுள்ளோம். முதல் வினா எதுவாக ஆக வேண்டும்? இரண்டாவது வினா அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதே உப வினாவாக இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.  அது எப்படி இருக்க வேண்டும் என்பது தான் இந்த வினாக்களை ஆராயும் நமக்கு தெரிந்து விடும் நம்முடைய இலட்சியம் என்ன நம்முடைய குறிக்கோள் என்னவென்று பின் என்ன எதைப் பற்றியும் கவலைப்படாமல் மன உறுதியோடு முழு நம்பிக்கையோடு நீங்கள் அதை நோக்கி…

சுகமாக வாழ சில ஆலோசனைகள்.10

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு அவர் அவர் திறமையை கண்டு உணர்வது அவரவர் கையில் அதை கண்டு கொண்ட பின் நீங்கள் முழு மனதுடன் ஈடுபடுங்கள் நிச்சையமாய் ஈடுபடுவீர்கள் ஏனென்றால் நீங்கள் உங்களுக்கு பிடித்ததை உங்களுக்கு தெரிந்ததை செய்கிறீர்கள் அப்படி செய்யும் போது உங்கள் வாழ்வு முழுமையாய் இருக்கிறது என்பதை அறிவீர்கள் இங்கு நீங்கள் எதனுடனும், எவருடனும் ஒப்பீடு செய்வதில்லை. அதனால் உங்களின் ஆனந்தம் உங்களிடமே சுழலும்.

சுகமாக வாழ சில ஆலோசனைகள்.9

எப்போதும் நீங்கள் உங்களையும், உங்கள் சுற்றுப்புறத்தையும் உங்கள் சுற்றுபுறத்தில் உள்ளவர்களையும் கவனிக்க கற்றுக் கொள்ளுங்கள்.  ‍ஏனென்றால் இவை அனைத்தும் உங்களின் ஆசிரியர்கள் உங்களுக்கு பாடம் எடுப்பவர்கள் அப்படி உங்களுக்கு எடுக்கப்படும் பாடத்தை கவனமோடு படித்து தேர்ந்தீர்கள் என்றால் அது தான் அனுபவம் அந்த அனுபவமே உங்கள் சொத்து அதைக் கொண்டு நீங்கள் உங்கள் உறவுகளிடம் மற்றும் சமுதாயத்தில், மனநிறைவோடு வாழலாம்.

சுகமாக வாழ சில ஆலோசனைகள்.8

இறை நம்பிக்கையின் அடித்தளமே சுய நம்பிக்கை தான் நான் கடவுளை நம்புகிறேன் என்பது முழுக்க, முழுக்க என்னுடைய சிந்தனை தான் இதில் பிறறின் தலையீடு இருக்காது, இருக்கக் கூடாது அப்படி பிறறின் தலையீடு இருந்தால் அது கடவுள் நம்பிக்கையாய் இருக்காது அதாவது முழுமையான என்னுடைய கடவுள் நம்பிக்கையாக இருக்காது.  இதை, நன்கு யோசித்து புரிந்து கொள்ளுங்கள்.

சுகமாக வாழ சில ஆலோசனைகள்.7

நாம் அசைக்கமுடியாத மன உறுதியை, பெற வேண்டுமானால் நாம் உண்மையிலேயே உறுதியான மனம் உடையவரென்றால் நாம் கடவுளின் குழந்தை என்பதை அறிந்து உணரவேண்டும் ஏனென்றால் இந்த உலக இயக்கங்களின் மூல காரண உயிர் தத்துவ அல்லது சக்தி தத்துவ புரிதல் இல்லாமல் ஒருவருக்கு அசைக்க முடியாத மன உறுதியோ அல்லது உறுதியான மனமோ அமைய வாய்ப்பில்லை நம்முடைய ஆழ் மனதில் நாம் கடவுளுடன் இணைந்தவர்கள், கடவுளால் நேசிக்கப்பட்டு அன்பு செலுத்தப்படுபவர்கள் என்ற புரிதல் மட்டும் இருந்து விட்டால்…

சுகமாக வாழ சில ஆலோசனைகள்.6

உங்களிடம் நீங்கள் போராடுங்கள் அதில் வெற்றி பெறுங்கள் அந்த வெற்றி நீடித்த வெற்றி நிலைத்த வெற்றி பிறருடன் போராடி கிடைக்கும் வெற்றி நிலைத்த வெற்றி அல்ல கால மாற்றத்தால் அந்த வெற்றி இடம் மாறிக் கொண்டே இருக்கும். அப்படி வெற்றி இடம் மாறும் போது நீங்கள் உங்களையும் அறியாமல் எல்லாவற்றையும் இழந்ததாக நினைத்து துன்பப்படுவீர்கள் அதனால் போராட்டம் என்பது உங்களிடம் இருக்கட்டும் அப்போது கிடைக்கும் வெற்றியும் எப்போதும் உங்களிடம் இருக்கும்.

சுகமாக வாழ சில ஆலோசனைகள்.5

நம் கடந்த கால நிலைக்கும் நம் தற்கால நிலைக்கும் உள்ள வளர்ச்சியை அல்லது வீழ்ச்சியை ஒப்பிட்டு உங்களை சுய மதிப்பீடு செய்து கொள்ளுங்கள் அந்த சுய மதிப்பீடு உங்களை மேலும் சரி செய்ய பயன்படும்.  உங்களுக்குள்ள பிரச்சனைகளை முதலில் கண்டுணர பழகுங்கள் அந்த பிரச்சனைகள் முழுவதும் உங்களுடையது அதாவது நீங்கள் மட்டுமே சம்பந்தப்பட்டது தான் என்று அறியுங்கள். அறிந்த பின் உங்கள் திறமைகளை மதிப்பீடு செய்யுங்கள் அந்த திறமையை கொண்டு உங்களின் உள்ளார்ந்த பிரச்சனைகளை சரி செய்து…

சுகமாக வாழ சில ஆலோசனைகள். 4

அனுபவங்களை துணை கொண்டு எளிமையான திருப்தியான வாழ்க்கையை வாழுங்கள் அறவே அச்சத்தை விடுங்கள் இதன் கருத்து எதிர்கால பயத்தை விட்டொழிங்கள் என்பதே பிறருடன் உங்களை ஒப்பிடும் போது அது அழகோ, அறிவோ, பணமோ பதவியோ இது போன்ற எதாக இருந்தாலும் நீங்கள் தாழ்வு மனப்பான்மையையோ, அல்லது அகங்காரத்தையோ அடைவதை தடுக்க முடியாது. அது உங்கள் வாழ்வில் சந்தோஷத்தை கெடுக்கும் கோடாலி எனவே எதோடும் எவற்றோடும் உங்களை ஒப்பிடாதீர்கள் உங்கள் திறன் உங்களுடையது அதில் சந்தோஷம் கொள்ளுங்கள் திருப்தி…

சுகமாக வாழ சில ஆலோசனைகள். 3

எல்லோருக்குமே ஏதாவது ஒரு விதத்தில் வாழ்க்கையில் பிரச்சனைகள், சிக்கல்கள் இருக்கும் அதை நினைத்துக்கொண்டே இருப்பதால் நாம் கவலையும் வருத்தமும், மனசோர்வும் அடைவதை தவிற வேறு பயன் எதுவும் இல்லையென்று நன்றாக புரிந்து கொள்ளுங்கள் சிக்கல்களை பிரச்சனைகளை தாண்டி பழகுங்கள், மன மாற்றம் செய்து பழகுங்கள் அது உங்களுக்கு உற்சாகத்தையும், ஆனந்தத்தையும் தரும் மனித மனம் அளவிறந்த ஆற்றலை உடையது என்பதை மனப்பூர்வமாக நம்புங்கள். உடலுக்குத்தான் வயது மனதிற்க்கு இல்லை நாம் நம்முடைய வாழ்க்கை பயணத்தில் வெவ்வேறு காலகட்டங்களில்…