உரையாடலின் ஒரு பகுதி  124

நான் ஒரூ மனிதன் எனும் நிலையில் இருந்து இயந்திரம் எனும் நிலைக்க மாறிவிட்டோம் ஆமாம் நீங்கள் செய்வது எல்லாம்  உங்கள் திறமை, தேர்ச்சி காரணமாக தானியங்கி மயமாகியிருப்பதை அறிவீர்கள் அப்படி தானியங்கிமயமாவதே வாழ்க்கையின் வெற்றி நிலை என்ற சிந்தனை எப்படியோ எந்த காலத்திலோ ஏதோ ஒரு ரூபத்தில் உங்கள் கல்வி மூலமாகவோ, உங்களின் சூழ்நிலை மூலமாகவோ அறிந்து அதை பிடித்தே உயிரற்ற இயந்திரமாய் இருந்து கொண்டு உங்கள் குழந்தைகள் முதற்கொண்டு மற்றவர்களையும் இயந்திரமாக்க எல்லா முயற்சிகளை எடுத்துக்கொண்டு…

உரையாடலின் ஒரு பகுதி  123

கார் ஒட்ட கற்றுக்கொள்ளும் போது இருந்த கவனம் நீங்கள் ஒட்டுவதில் தேர்ச்சி அடைந்ததும் உங்களிடம் இருக்கிறதா என்று உங்களை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள் அப்போது உங்களுக்கு தெரியும் நீங்கள் இது போல் எத்தனை விஷயங்களில் பிளவு பட்டு சிதறுண்டு இருக்கின்றீர்கள் என்று இன்னும் சரியாய் உங்களை நீங்கள் பரிசோதித்து பார்த்தீர்களானால் கலவியில் கூட நீங்கள் செயலில் இருப்பீர்கள் கவனத்தில் இருந்திருக்க மாட்டீர்கள் என்ற அதிர்ச்சிகரமான உண்மையை கண்டு கொள்வீர்கள் அப்போது உங்களுக்கு புரியும்

உரையாடலின் ஒரு பகுதி  122

நாம் எல்லா வேலைகளையும் சரியாக செய்கிறோம் இன்னும் சொன்னால் திறமையோடும் செய்கிறோம் ஆனால் கவனமோடு செய்கிறோமா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் சைக்கிள் ஒட்டுகிறீர்கள் பைக் ஒட்டுகிறீர்கள், கார் ஒட்டுகிறீர்கள் உண்மையாய்  சொன்னால் சரியாய் ஒட்டுகிறீர்கள் திறமையுடனும் ஒட்டுகிறீர்கள் ஆனால் கவனமாய் ஒட்டுகிறீர்களா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்

உரையாடலின் ஒரு பகுதி  121

உண்மையில் நாம் நமக்குள் என்ன நடக்கிறது என்றும் சிந்திப்பதில்லை நம்மை சுற்றியும் என்ன நடக்கிறது என்றும் சிந்திப்பதில்லை உண்மையை சொல்லப் போனால் நமக்கு நம்மிடமும் கவனம் இல்லை நம்மை சுற்றி நடப்பவற்றிலும் கவனம் இல்லை

உரையாடலின் ஒரு பகுதி  120

இதில் ஒற்றுமையை யார் செய்வார்கள் அடுத்தவர்களா அடுத்தவர்களால் செய்ய முடியுமா? அப்படி அடுத்தவர் செய்தால் அசிங்கமில்லையா அந்த அசிங்கம் நமக்கு தேவையா அதனால் நாம் அசிங்கப்டாமல் இருக்க நமக்குள் ஒற்றுமையை நாமே உருவாக்குவோம் நமது சிந்தனை உணர்வு செயல் இந்த மூன்றையும் ஒவ்வொரு வினாடியும் ஒற்றுமையாய் இருக்கும்படி செய்வோம் அப்படி செய்ய முயற்சியையும் பயிற்சியையும் மேற்கொண்டு அதில் நிற்போம் அப்படி நின்ற பின் நாம் அடுத்தவரிடம் ஒற்றுமையாய் இருப்பது பற்றியும் அடுத்தவருக்கு ஒற்றுமையை பற்றியும் உபதேசிப்பதையும் செய்வோம்.

உரையாடலின் ஒரு பகுதி  119

நமக்குள் நாம் எத்தனை முரண்பட்டு இருக்கிறோம் ஒவ்வொரு வினாடியிலும் இதை என்றாவது நீங்கள் சிந்தித்தது உண்டா, கவனித்தது உண்டா நாம் ஒரு செயல் செய்து கொண்டிருப்போம் எண்ணம் வேறு ஒன்றில் பிரயாணபட்டு கொண்டு செல்கிறது எண்ணம், செயல் இப்படி ஒற்றுமையில்லாமல் இருக்கிறது என்றால் நமது உணர்வுகள் வேறு பக்கம் ஒடுகிறது.   இப்படி பிரிந்து பிளவுபட்டு இருப்பதை ஒன்றாக்க வேண்டாமா இதில் நாம் ஒற்றுமையை உண்டாக்க வேண்டாமா

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  94

நமது ஏழைகளும் தாழ்த்தப்பட்ட இந்தப் பாமர ஜனங்களும்தான் உண்மையில் தாங்கள் யார் என்பதைக் கேட்கவும் அறிந்து கொள்ளவும் வேண்டியிருக்கின்றது ஜாதி குலம் பலம் பலவீனம் போன்ற எவ்வித பாகுபாடுமின்றி ஒவ்வோர் ஆணும் பெண்ணும் குழந்தையும் இதைக் கேட்கட்டும்; வலிமையானவர் வலிமையற்றவர், உயர்ந்தவர் தாழ்ந்தவர்  அனைவரிடமும்  ஆன்மா உள்ளது   

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  93

ஏ பிராமணர்களே, பரம்பரை காரணமாக பிராமணர்களுக்கு கீழ் ஜாதியினரைவிட நன்றாகப் படிக்கின்ற திறமை இருக்கிறது என்றால் பிராமணர்களின் படிப்பிற்கு எந்தப் பணமும் இனி செலவழிக்காதீர்கள்; எல்லாவற்றையும் கீழ் ஜாதியினருக்காகச் செலவிடுங்கள். உதவியற்றவர்களுக்கு கொடுங்கள், ஏனெனில் அவர்களுக்குதான் எல்லா செல்வமும் தேவைப்படுகிறது. பிராமணன் பிறவியிலேயே அறிவாளி அறிவாளி அல்லாத பிறர் எல்லா போதனைகளையும் ஆசிரியர்களையும் பெறட்டும். இதுதான் நான் புரிந்து கொண்ட நீதியும் பகுத்தறிவுமாகும்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  92

குழந்தையையும் கொன்று சமைக்கக் கட்டளையிட்டான் அவன். ஆனால் சிறுவன் தப்பிவிட்டான் பல பயங்கரமாக இன்னல்களை அனுபவித்து, பல நூறு மைல்கள் பயணம் செய்து கடற்கரையை அடைந்தான். பின்னர் அமெரிக்காக் கப்பல் ஒன்றில் அமெரிக்கா கொண்டு வரப்பட்டான். அந்தப் பையன் தான் அவ்வளவு சிறப்பாக உரையாற்றினான் . அதை கேட்ட பிறகு உங்கள் பரம்பரை வாதத்தைப் பற்றி எண்ண என்னதான்  இருக்கிறது?

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  91

ஒரு முறை இங்கிலாந்தில் இருந்தபோது சில அமெரிக்கர்களைச் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் அவனைப்பற்றிக் கீழ்வரும் செய்திகளைச் சொன்னார்கள். அந்த இளைஞன் மத்திய ஆப்ரிக்காவில் வாழ்ந்த ஒரு நீக்ரோ இனத்தலைவனின் மகன். ஒருநாள் மற்றோர் இனத்தின் தலைவன் அந்த இளைஞனின் தந்தை மீது கோபம் கொண்டு அவனது தந்தையையும் தாயையும் கொன்று விட்டான் . கொன்றதுடன் தின்றும் விட்டான்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   90

அமெரிக்காவில் சர்வசமயப் பேரவையில் நீக்ரோ இளைஞன் ஒருவன் கலந்து கொண்டான். உண்மையான ஆப்ரிக்க நீக்ரோ அவன். அழகாகப் பேசினான். எனவே அவனிடம் பேச வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அவனிடம் அவ்வப்போது பேசினேன். ஆயினும் அவனைப் பற்றி எதையும் தெரிந்துகொள்ள முடியவில்லை

கீதைகள் மொத்தம்\ – 60 – 47 to 50

*விபீஷன கீதை* – இந்து இதிகாசமான இராமாயணத்தின் யுத்தகாண்டத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஸ்ரீராமருக்கும் விபீஷணனுக்கும் இடையிலான உரையாடல் இது. விபீஷணனுக்கு இராமர் ஆன்மீக ரீதியில் ஊக்கமளிக்கும் வார்த்தைகளை மனதில் வைத்து வாழ்க்கையின் சோதனைகள் மற்றும் துன்பங்களை கடந்து செல்ல, விபீஷண கீதை நமக்கு உதவுகிறது. *ஹனுமத் கீதை* – இராவண வதத்திற்குப் பின்னர் அயோத்தி திரும்பி, ஸ்ரீராமரும் தேவி சீதையும் ஹனுமனுக்கு அளித்த உரை. *அகஸ்திய கீதை* – அகஸ்திய முனிவர் மோக்ஷ தர்மத்தின் கருத்துகளையும், ஜீவத்மா பக்தி,…

கீதைகள் மொத்தம்\ – 60 – 43 – 46

*சம்பக கீதை* – ஒரு கற்றறிந்த பக்திமானான ப்ராமணன், சம்பகன் துறவறத்தினால் மட்டுமே ஒருவர் நித்ய மகிழ்ச்சியை அடைய முடியும் என்ற செய்தியை அளிக்கிறார். இது மஹாபாரதத்தின் சாந்தி பர்வத்தில் பீஷ்மருக்கும் யுதிஷ்டிரருக்கும் இடையிலான உரையாடலின் வடிவத்தில் விவரிக்கப்படுகிறது. *சூத கீதை* – ஸ்கந்தபுராணத்தின் யாக வைபவ கண்டத்தில் உள்ளது. இது ஒற்றுமையை ஆதரித்து இரட்டை வாதத்தை மறுக்கிறது. *சூர்ய கீதை* – இது பிரம்மனுக்கும் தக்ஷிணாமூர்த்திக்கும் இடையிலான உரையாடல். இதில் சூர்யன் தனது சாரதியான அருணனிடம்…

கீதைகள் மொத்தம்\ – 60 – 38 to 41

*மன்கி கீதை* – மஹாபாரதத்தின் சாந்தி பர்வத்தில், மன்கி எனும் முனிவரின் கதையை பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு கூறுவது. *வியாஸ கீதை* – பிரம்ம புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ள ரிஷிகளுக்காக வியாஸ மஹரிஷியின் சொற்பொழிவு. வியாஸ கீதை மிகவும் கருத்தியல் வாய்ந்தது. ஆகவே, யோகிகளுக்கும் மேம்பட்ட தேடுதலில் ஈடுபடும் ஆர்வலருக்கு ம் ஏற்றவாறு அமைந்தது. இருப்பினும் பிரம்மத்தை அடைய விரும்புவோருக்கும் சிரத்தையுடன் யோக அனுஷ்டானங்களை உறுதியாகவும் விடாமுயற்சியுடன் செபவருக்கும், வேதங்களை விடாமுயற்சியுடன் கற்று பாகுபாடு அறிபவர்களுக்கும் இந்த கீதை பொருந்துகிறது.…

கீதைகள் மொத்தம்\ – 60 – 35 to 38

*பிங்கல கீதை* – மீண்டும் மஹாரதத்தின் சாந்தி பர்வத்தில் இடம் பெற்ற ஒன்று இது. பிங்கலை எனும் ஆடல் பரத்தைக்கு கிட்டிய ஞானத்தையும் அறிவொளியையும் இக்கீதை கொண்டுள்ளது. *போத்ய கீதை* – யயாதி மன்னனுக்கு ரிஷி போத்யருக்கும் இடையிலான உரையாடல். மஹாபாரத்ததில் சாந்தி பர்வத்தில் ஒரு பகுதியான மோக்ஷ பர்வத்திலிருந்து எடுக்கப்பட்டது. *யம கீதை* – ஒரு விஷ்ணு பக்தனின் குணங்கள், சுயத்தின் தன்மை, பிரம்மத்தின் கருத்தாக்கம், பிறப்பு – இறப்பு சுழற்சியிலிருந்து தன்னை விடுவித்து மோட்சம்…

கீதைகள் மொத்தம்\ – 60 -31 to 34

*ஈஸ்வர கீதை* – கூர்மபுராணத்தில் விவரிக்கப்பட்டுள்ள சிவபெருமானின் போதனைகள். ஈஸ்வர கீதை என்பது சிவபெருமானை மையமாகக் கொண்ட ஒரு சைவ போதனை தத்துவமாகும் . பகவத் கீதையைப் போலவே அத்வைத வேதாந்தம், பக்தி, ஒருமுகப்படுதல் மற்றும் சிவபெருமானிடம் சரணடைதல் ஆகியவை சம்ஸார கடலைக் கடந்து தெய்வீக பேரின்பத்தையும் விடுதலையும் அடையச் செய்கிறது என்பதை விளக்குகிறது. *கணேஷ கீதை* – அரசன் வாரேண்யனுக்கு ஸ்ரீ கணபதி உரையாற்றியது. கணேஷ புராணத்தின் க்ரீட கண்டத்தில் இது விளக்கப்பட்டுள்ளது. *தேவி கீதை*…

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 11

லக்கினாதிபதி சந்திரன் ஆக இருந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில். குரு இருந்தால்:-எதிரிகளால் அபாயம், மறைமுக நோய், பாக்கியம் இல்லாததிருத்தல், கைக்கெட்டியது வாய்க்கு எட்டாத நிலை, கடன் தொல்லை பிதா ஆதரவு இல்லாதிருத்தல், மேலோர் சாபம்.

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 10

லக்கினாதிபதி சந்திரன் ஆக இருந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில். புதன்இருந்தால்:-அம்மான்வர்க்கத்தாருக்கு பிரயோசனம் இல்லாமை சகோதரர்கள் பிரிந்திருத்தல் நாடோடி தன் ஊரைவிட்டு வெளியேறுதல், சுயஸ்தானத்தில் தங்காமை, வித்தை பங்கம், இரகசிய மனவருத்தல், நிலையான புத்தி இல்லாமை, எப்போதும் சுயநலக்காரர்களால் சூழ்ந்திருத்தல்.

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 9

லக்கினாதிபதி சந்திரன் ஆக இருந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில். செவ்வாய் இருந்தால்:-புத்திரர் அற்பம், புத்தி சுவாதினம் அற்ற குழந்தைகள், பாக்கியம் பிரயோசனப்படாமல் போகுதல், இரத்த காயம், விபத்து, தொழிலில் மறைமுக எதிரிகளால் இழப்பு, அவமானம், நஷ்டம், சகோதர பலம் குறைதல்.

நட்சத்திர எதிரிடையில் நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 8

கடக  லக்னம். லக்கினாதிபதி சந்திரன் ஆக இருந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில். சூரியன் இருந்தால்:- பிதா தனகுறைவு, கண் கோளாறுகளால் பாதிப்பு, தந்தை வழி குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, கடும் சொல்லால் அவமானம், குழந்தைகளால் ஈமக்கிரிகை செய்ய முடியாத நிலை, தாய் சுகம் கெடுதல், மனைவிக்கு இரகசிய நோய்.

நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 7

லக்கினாதிபதி சூரியன் ஆக வந்து இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில். ராகு நின்றால்:-  பொருளாதார பாதிப்பு, பிற மதத்தினரால் வரும் கெடுதல் விஷபயம், மாந்திரீக தொல்லை அறுவறுக்கத் தக்க நோய்கள் மன பேதம், செயற்கை மரணம். கேது நின்றால்:- நாஸ்தீக தன்மை.  பிற மதத்தினால் வரும் பயம் தொல்லைகள், விஷ ஜந்துக்களால் வரும் ஆபத்து, துர்தேவதா சேஷ்டைகளால் வரும் பாதிப்பு கெட்ட ஆவிகளின் தொல்லை.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 27. மனநோய் அகல

உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை, சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே. பேரழகியே என் கர்மத்தால் வந்த பிறவியை தகர்த்து என் உள்ளம் உருகும்படியான அன்பை உண்டாக்கி தாமரை போன்ற நின் பாதங்களில் வீழ்ந்து வணங்கும் தொண்டினை தந்தாய் என் கர்மத்தால் விளைந்த என் நெஞ்சில் இருந்த ஆணவம், கன்மம், மாயை போன்ற அழுக்கையெல்லாம் நின்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 26. சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக

ஏத்தும் அடியவர், ஈரேழுலகினையும் படைத்தும், காத்தும், அழித்தும் திரிபவராம்,கமழ்பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே, மணம் நாறும் நின் தாளிணைக்கென் நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு, நகையுடத்தே. பூங்கடம்பின் மணம் வீசும் மலரை அணிகின்ற கூந்தலை உடைய தேவி உன்னை துதிக்கும் அடியவர்களால் 7 உலகங்களையும் படைத்தும், காத்தும், அழித்தும் செய்தும் தம் தொழிலை நடத்தி திரிகின்ற மும் மூர்த்திகளாவர் நான் உன் மனம் பொருந்திய இரண்டு திருவடிகளுக்கு ஒன்றுக்கும் பற்றாத என்னுடைய நாவிலிருந்து வார்த்தைகளக்கு பொருள் தந்து…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 25. நினைத்த காரியம் நிறைவேற

பின்னே திரிந்து, உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன், முதல் மூவருக்கும் அன்னே, உலகுக் கபிராமி என்னும் அருமருந்தே, என்னே? இனி உன்னை யான் மறவாமல் நின் றேத்துவனே. மும் மூர்த்திகளின் தாயே உலகின் உயிர்கள் அனைத்திற்கும் பிறவி பிணியை போக்குவிக்கும் அருமருந்தே முற்பிறப்பின் நின் அடியார்களின் பின் சென்று அவர்களுக்கு வேண்டிய கைங்கரியங்கள் செய்து பிறவி பிணியை நீக்கும் தவங்களை செய்து வைத்த நான் உன்னை என்றும் மறவாமல் நிலையாக நின்று…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 24. நோய்கள் விலக

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணிபுனைந்த அணியே, அணியும் அணிக்கழகே, அணுகாதவர்க்குப் பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே, பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே மாணிக்கமே – மாணிக்கத்தின் ஒளியே அப்படி ஒளிரும் மாணிக்க கற்களால் செய்த ஆபரணத்தை அணிந்தவளே நீ அந்த ஆபரணம் அணிந்ததால் அந்த ஆபரணத்திற்கு அழகை உண்டாக்கியவளே உன்னை அணுகி இருப்பவர்களுக்கு அழகை உண்டாக்கியவளே உன்னை அணுகாமல் இருப்பவர்களுக்கு நோய் போன்றவளே உன்னை அணுகிய பக்தர்களுக்கு பிறவியெனும் நோயை போக்குபவளே,…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 23. எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க

கொள்ளேன், மனத்தில் நின் கோலம்அல்லாது, அன்பர்கூட்டந்தன்னை விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத் தேவிளைந்த கள்ளே, களிக்கும்களியே, அளியஎன் கண்மணியே. என்னுடைய மனதில் நின் திருகோலத்தை தவிற வேறு எதையும் நினையேன் நின் அன்பரை தவிர வேறு யாருடனும் இணையமாட்டேன் .மூன்று உலகத்துள்ளும் அதையும் தாண்டியிருக்கின்ற பொருளாய் இருந்தாலும் எதனுடனும் இல்லாதிருப்பவளே, பக்தர்களின் உள்ளத்தே இன்பத்தை சுரக்க வைக்கும் ஆனந்த கள்ளே என் கண்ணின் மணி போன்றவளே!

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 22. இனிப் பிறவா நெறி அடைய

கொடியே, இளவஞ்சிக் கொம்பே, என க்கு வம்பே பழுத்த படியே மறையின் பரிமளமே,பனி மால் இமயப் பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே, அடியேன் இறந்திங் கினிப்பிற வாமல்வந் தாண்டுகொள்ளே. கொடி போன்றவளே இளைய வஞ்சி கொம்புக்கு இணையானவளே எனக்கு பக்குவமில்லா நிலையிலும் அருள் புரிந்த தேவி வேதமாகிய மலரின் மணத்தை உடையவளே இமயத்தில் இங்கும் அங்கும் விளையாடும் யானையே பிரமன் முதலான தேவர்களை  பெற்ற தாயே நான் இவ்வுலகில் இறந்த பின் மீண்டும் பிறவாமல்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய

மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச் சங்கலை செங்கைச் சகல கலாமயில் தாவுகங்கை பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள் பிங்கலை, நீலி, செய்யாள்,வெளியாள், பசும் பெண்கொடியே. நித்திய மங்களையாகிய அபிராமி அம்மை சிவந்த கலசத்தை போன்ற தனங்களும் மலை மகள் நிறம் பெற்ற சங்காலாகிய வளையல்கள் கொண்ட சிவந்த திருகரங்களை உடையவள் எல்லா கலைக்கும் தலைவி மயிலை போன்றவள் பாய்ந்து வரும் கங்கையினை தன் முடியில் தாங்கிய சிவபிரானின் இடபுறத்தை கொண்டவள் பொன் நிறம் படைத்த…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக

உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒருபக்கமோ, அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம் நிறைகின்ற வெண் திங்களோ, கஞ்சமோ, என்றன் நெஞ்சகமோ, மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே. பூரண அருளால் நிறைவான நித்திய மங்கலையே நீ வாசம் செய்யும் ஆலயம் நின் பதியாகிய சிவனின் ஒரு பக்கமோ அல்லது நின் புகழை எப்பொழுதும் பாடும் வேதங்களின் மூலமோ அல்லது அவற்றின் முடியாய் விளங்குகின்ற உபநிடதங்களோ அமுதம் நிறைந்த வெள்ளிய சந்திரனோ வெண் தாமரையோ அல்லது…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 19. பேரின்ப நிலையடைய

வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்தென் விழியும் நெஞ்சும், களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை கருத்தினுள்ளே தெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன, திருவுளமோ? ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே. ஸ்ரீ சக்கரத்தில் உள்ள 9 கோணங்கள் ஒளி வீச காரணமாய் உள்ள தாயே நின் திருவடிவை புறக்கண்ணிலும் அந்த தேஜஸ்யை அகக்கண்ணிலும் கண்ட எனக்கு ஏற்பட்ட ஆனந்த வெள்ளத்திற்கு கரைகளே இல்லை இந்த காட்சியின் அருளுள் என் உள்ளத்து உள்ளே மெய்ஞானம் விளங்குகின்றது. இவ்வளவு பேரருளை செய்வதற்கு காரணம்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 18. மரண பயம் நீங்க

வவ்விய பாகத் திறைவரும், நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து வெவ்விய காலன் என் மேல்வரும் போது வெளிநிற்கவே. அம்மையே உன்னால் அடையப்பெற்ற வாம பாகத்தை உடைய சிவனும் நீயும் இணைந்து மகிழ்ந்து ஒன்றியிருக்கும் கோலமும் உங்கள் திருமண கோலமும் என் உள்ளத்து உள்ளே இருந்த ஆணவத்தை போக்கி தெளிவு பொலிவு பெற்ற திருவடிகள் என் உயிரை பறிக்க பாசக் கயிறுடன் காலன் என் முன் வரும்…