விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  93

ஏ பிராமணர்களே, பரம்பரை காரணமாக பிராமணர்களுக்கு கீழ் ஜாதியினரைவிட நன்றாகப் படிக்கின்ற திறமை இருக்கிறது என்றால் பிராமணர்களின் படிப்பிற்கு எந்தப் பணமும் இனி செலவழிக்காதீர்கள்; எல்லாவற்றையும் கீழ் ஜாதியினருக்காகச் செலவிடுங்கள். உதவியற்றவர்களுக்கு கொடுங்கள், ஏனெனில் அவர்களுக்குதான் எல்லா செல்வமும் தேவைப்படுகிறது. பிராமணன் பிறவியிலேயே அறிவாளி அறிவாளி அல்லாத பிறர் எல்லா போதனைகளையும் ஆசிரியர்களையும் பெறட்டும். இதுதான் நான் புரிந்து கொண்ட நீதியும் பகுத்தறிவுமாகும்.