விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் 94
நமது ஏழைகளும் தாழ்த்தப்பட்ட இந்தப் பாமர ஜனங்களும்தான் உண்மையில் தாங்கள் யார் என்பதைக் கேட்கவும் அறிந்து கொள்ளவும் வேண்டியிருக்கின்றது ஜாதி குலம் பலம் பலவீனம் போன்ற எவ்வித பாகுபாடுமின்றி ஒவ்வோர் ஆணும் பெண்ணும் குழந்தையும் இதைக் கேட்கட்டும்; வலிமையானவர் வலிமையற்றவர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் அனைவரிடமும் ஆன்மா உள்ளது
