ஏ பிராமணர்களே, பரம்பரை காரணமாக பிராமணர்களுக்கு கீழ் ஜாதியினரைவிட நன்றாகப் படிக்கின்ற திறமை இருக்கிறது என்றால்
பிராமணர்களின் படிப்பிற்கு எந்தப் பணமும் இனி செலவழிக்காதீர்கள்;
எல்லாவற்றையும் கீழ் ஜாதியினருக்காகச் செலவிடுங்கள்.
உதவியற்றவர்களுக்கு கொடுங்கள்,
ஏனெனில் அவர்களுக்குதான் எல்லா செல்வமும் தேவைப்படுகிறது.
பிராமணன் பிறவியிலேயே அறிவாளி
அறிவாளி அல்லாத பிறர் எல்லா போதனைகளையும் ஆசிரியர்களையும் பெறட்டும்.
இதுதான் நான் புரிந்து கொண்ட நீதியும் பகுத்தறிவுமாகும்.
