அபிராமி அந்தாதி எனும் அருள் நூல்      45. உலகோர் பழியிலிருந்து விடுபட

தொண்டு செய்யாதுநின் பாதம்தொழாது, துணிந்திச்சையே பண்டு செய்தார்உளரோ, இலரோ? அப் பரிசடியேன் கண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச் செய்தவமோ? மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே, பின்வெறுக்கை அன்றே. தாய் நின் திருவடியை தொழுது செய்யாது உண்மை பொருளை இதுவென்று கண்டு கொண்டு இருந்தவர் பழங்காலத்தில் இருந்தனரோ இல்லையோ இருந்தினர் என்றால் அவர்களை போல் நான் ஆசை கொண்டு செய்தால் அது தவறாய் இருந்தாலும் நீ எனை பொறுத்து, வெறுத்து ஒதுக்காமல் இருக்க வேண்டும்.