செயலின் நோக்கம்

 ஒரு வீட்டுக்குப் பிச்சைக்காரன் ஒருவன் வந்தான். அந்த வீட்டுக்காரி உள்ளேயிருந்து அவனுக்கு அரிசியைக் கொண்டு வந்தாள். அதைத் தன் குழந்தையிடம் கொடுத்து பிச்சை இடச் செய்தாள். அடுத்த வீட்டுக்காரியும் அவள் செய்ததைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தப் பிச்சைக்காரன் தன் வீட்டு வாயிலுக்கு வந்ததும் அவளும் பக்கத்து வீட்டுக்காரி செய்ததுபோல் தன் குழந்தையின் கைகளில் அரிசியைக் கொடுத்துப் பிச்சையிட்டாள். சில ஆண்டுகள் கழித்து இருவரும் இறந்தனர். மேல் உலகத்தில் தீர்ப்பு, முந்தைய வீட்டுக்காரி சொர்க்கத்துக்கும், அவளைப் பார்த்துப் பிச்சையிட்ட…

ஜூடோ  பயிற்சி

 சிறுவன் ஒருவன் ஜூடோ பயில விரும்பினான். அவனுக்கோ ஒரு விபத்தினால் இடது கை போய்விட்டது. எனினும் இந்தக் குறையைப் பொருட்படுத்தாமல், குரு ஒருவர் அவனுக்குப் பயிற்சி அளிக்க ஒப்புக் கொண்டார்.   தினமும் பயிற்சி அளித்தார் குரு. ஆனால் ஒரே ஒரு குத்து வித்தை தான் சொல்லிக் கொடுத்தார். நான்கைந்து மாதங்கள் சென்றன. அப்போதும் அதே பயிற்சிதான். சிறுவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டான்.  ஒரு நாள் சிறுவன் குருவைக் கேட்டே விட்டான். “இந்த ஒரு…

இணைக்கும் செயல் 

 தையற்காரர் ஒருவர், தனது கடையில் துணிகள் தைத்துக்கொண்டிருந்தார். அவருடைய மகன் அருகில் இருந்து, அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். தையற்காரர் ஒரு புதுத் துணியை எடுத்தார். அதை அழகிய பளபளக்கும் கத்திரிக்கோலால் துண்டுகளாக வெட்டினார். பின்னர் கத்திரிக்கோலைக் கால் அருகே போட்டுவிட்டு துணியைத் தைக்கலானார். துணியை தைத்து முடிந்ததும் சிறிய ஊசியை எடுத்துத் தனது தலையில் இருந்த தொப்பியில் குத்திப் பத்திரப்படுத்தினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மகன் அவரிடம், “அப்பா! கத்திரிகோல் விலை உயர்ந்தது, அழகானது.…

எடை அளவு

ஒருமுறை, ஒரு விவசாயி ஒரு பேக்கருக்கு வெண்ணெய் விற்றுக்கொண்டிருந்தார். ஒரு நாள், ரொட்டி செய்பவர் தான் கேட்ட அளவு சரியாக கிடைக்கிறதா என்று பார்க்க வெண்ணெயை எடைபோட முடிவு செய்தார். அவர் அளவு சரியாக இல்லை என்று கண்டுபிடித்தார் எனவே அவர் விவசாயியை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார்.  வெண்ணெயை எடைபோட ஏதாவது அளவைப் பயன்படுத்துகிறீர்களா என்று விவசாயியிடம் நீதிபதி கேட்டார். அதற்கு விவசாயி, “யுவர் ஹானர், நான் பழமையானவன். என்னிடம் சரியான அளவு இல்லை, ஆனால் என்னிடம்…

நஞ்சு

அந்த பெண்ணுக்குத் திருமணமாகி, தன் கணவன் வீட்டிற்குச் சென்று வாழத் துவங்குகிறாள். அங்கு புது மணப்பெண்ணுக்கும் அவள் மாமியாருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப் போகவில்லை. எதற்கெடுத்தாலும் வாக்குவாதம், சண்டை, சச்சரவு. நாள்தோறும் இருவர்க்கிடையே வேற்றுமை வளர்ந்து கொண்டே இருந்தது.  கணவனோ இருதலைக் கொள்ளி எறும்பு போல திண்டாடினான்.  ஒரு நாள் புது மருமகள் அவள் தகப்பனாரின் நண்பரைப் பார்க்கச் சென்றாள். அவர் பச்சிலை, மூலிகை மருத்துவத்தில் கைதேர்ந்த மருத்துவர். அவரிடம் மருமகள், தனக்கும் தன் மாமியாருக்கும் உள்ள…