உரையாடலின் ஒரு பகுதி  118

ஆனாலும் நாம் ஒற்றுமையை பற்றி வாய் கிழிய தொண்டை வரள பேசிக் கொண்டும் கத்திக் கொண்டும் இருக்கிறோம் எத்தனை அபத்தம் இது எத்தனை ஏமாற்றுத்தனம் இது ஆனால் கொஞ்சம் கூட கூச்சமோ குற்ற உணர்வோ இல்லாமல் இதை செய்து கொண்டே இருக்கிறோம் நமக்கு பின் வருபவர்களுக்கு சொல்லிக்கொடுத்துக் கொண்டும் இருக்கிறோம்

உரையாடலின் ஒரு பகுதி  117

 ஒற்றுமை என்றால் என்ன? ஒன்றாய் இருத்தல் இணைந்திருத்தல்  கருத்தொருமித்து இருத்தல் என்று நிறைய  வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போகலாம் ஆனால் அதன் பொருளை அறிந்து அதனை நம்முள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறோமா  என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் எதையும் நம்மிள் இருந்தே தொடங்க வேண்டும் என்ற நியதியின் படி ஒற்றுமையை நம்மிடம் இருந்தே தொடங்க வேண்டும் நாம் எத்தனை விதமாய் பிளவுண்டு சிதறி போயிருக்கிறோம் என்பதே நமக்கு தெரிவதில்லை அதை தெரிந்து கொள்ளும் ஆவலும்…

உரையாடலின் ஒரு பகுதி  116

ஒற்றுமை எனும் வார்த்தையை கேட்டவுடனேயே நமக்கு தோன்றுவது அண்ணனிடம், அக்காவிடம், தம்பியிடம், தங்கையிடம், அம்மாவிடம், அப்பாவிடம், மனைவியிடம், குழந்தைகளிடம், நண்பர்களிடம் என்று தான் தோன்றுகிறதே தவிர தன்னிடம் தான் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்பதே தோன்றுவதில்லை என்னிடம் நான் ஒற்றுமையாய் இருப்பதா இது என்ன புது பைத்தியகாரதனமான பேச்சாய் இருக்கிறது என்றுதான் மனமும் அறிவும் சிந்திக்கிறதே அல்லாமல் இது என்ன? என்ன சொல்ல வருகிறது என்று கூட யோசிப்பதில்லை காரணம் நம் கல்வி, அறிவு, மற்றும் சூழ்நிலைகள்

உரையாடலின் ஒரு பகுதி  115

ஒன்றை கவனித்து மனதில் கொள்ளுங்கள் சிலரிடம் காணப்படும் பதற்றம் படபடப்பு ஆர்பாட்டம் உற்சாகம் அல்ல உண்மையான உற்சாகத்தில் படபடப்போ, ஆர்ப்பாட்டமோ, பதற்றமோ இருக்காது.

உரையாடலின் ஒரு பகுதி  114

நாம் ஒரு லட்சியத்தை குறிக்கோளை வைத்திருந்தால் அதற்கு தக்கபடி நாம் மாறியே ஆக வேண்டும். நாம் மாறும் விதம் அல்லது மாறிய விதம் உறவினர்களாலோ அல்லது நண்பர்களாலோ கேலி செய்யப்பட்டாலும் நாம் நம் குறிக்கோளை அடைய நாம் மாறிவிட்டோம் என்று அவர்களுக்கு காட்டியபடி இருக்க வேண்டும் அப்போது தான் இலக்கை அடைய முடியும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 163

முடிந்தவரையில் மலத்தைக் கழித்துக் கொள்ளவும் உட்டியாணா, நெளலி சில தடவைகள் செய்து வயிற்றுச் சதைகளைக் கட்டுக்குக் கொண்டு வரவும், சுமார் முக்கால் அல்லது ஓரடி உயரமுள்ள முக்காலி மேல் அகலப் பாத்திரத்தில் சுமார் அரைப்படி தண்ணீரை ஊற்றி அமர்த்தவும், மூங்கில் குழாயின்  மேல் சுமார் நான்கு அங்கலத்திற்கு வெண்ணெய், நெய் அல்லது விளக்கெண்ணெய் பூசவும். மலப்போக்குக் காலத்தில் முக்கி மலத்துவாரத்தைத் திறப்பது போலத் திறந்து, எண்ணெய் தடவிய மூங்கில் பாகத்தை ஆசனவாய் வழியாய்  மலக்குழாய்க்குள் சுமார் மூன்றங்குலம்…

சுந்தர யோக சிகிச்சை முறை 162

இதை செய்ய விரும்புவோர், சுமார் ஆறு மாதங்களாவது உட்டியாணா, நெளலியுடன் யோகாசனங்களைப் பழகி இருக்க வேண்டும்.  சிரமமின்றி நெளலி எந்நிலையிலும் செய்ய வேண்டும். இக்கிரியை நெளலி செய்யும் பொழுது, மலத்துவாரம் திறந்தே இருக்க வேண்டும். கருவியின்றி இது சாதாரணமாய் இயலாது.  இதற்காக ஒரு மூங்கிலை உபயோகிக்கலாம். இதை எட்டங்குல நீளமுள்ளதாயும், தடுப்பற்றதாயும் அமைத்துக் கொள்ளவும், காலையில் இதைச் செய்வதே உத்தமம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 161

உலக வாழ்க்கையில் ஈடுபட்டுப் பயிலும் சாதகர், மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை செய்தால் போதும். அன்று சிறிதளவு சத்துள்ள ஆகாரத்தை உட்ககொள்ள வேண்டும். மோரும், கீரையும் சேர்க்கவும், பருப்புகளை விலக்குவது உசிதம். பாசிப்பருப்பு கஞ்சி நன்மை தரும். அன்று உடலுழைப்பு அதிகம் வைத்துக் கொள்ளக்கூடாது.

சுந்தர யோக சிகிச்சை முறை 160

மந்திரத்தை நம்பாத நாகரீகரும், ஆங்கில வைத்தியர்களும் வேறு காரணமில்லாத காரணங்களைக் கற்பனை செய்து கொண்டார்கள். ஆன்ட்டி பெரிஸ்டால்டிக் ஆக்ஷன் ( ANTI-PERISTALTIC  ACTION ) என்பதால் முடிகிறதென்று பிதற்றினார்கள். ஏழைகளை ஏமாற்றினார்கள்.  ஏழைகளை ஏமாற்ற எண்ணிய பல பைராகிகள், இதை காசுக்குச் செய்து காண்பித்து வந்தார்கள். இதன் காரணம் உடல்சாதனை ஹடயோகியால் கண்டுபிடிக்கப் பட்டது. நிகரற்றது, பலன் பெற்றது, எவரும் பழகியாள முடியும். இதன் நுட்பத்தையறியுமுன் பழகும் வகையை கவனிப்போம்.

சுந்தர யோக சிகிச்சை முறை 159

பிரமிக்கச் செய்யும் பஸ்தி உட்கார்ந்த நெளலி வந்த பிறகே, விசித்திரமான ‘பஸ்தி’ என்ற கிரியை கைகூடும்.  மலச்சிக்களை ஒழிக்கவும், நெருங்கவிடாமல் தடுக்கவும் இதைக் கையாளலாம்.  முன்காலத்தில் சாதகர்கள் தண்ணீரின் மேல் உட்கார்ந்து மலத்துவாரம் வழியாய் நீரை உள்ளிழுத்துக் குடலைச் சுத்தம் செய்து கொள்வார்கள்.  இப்படிச் செய்ய மலக்குழாய் உள்சதைகளினாட்சி (  CONTROL OF THE SPHINCTER  MUSCLES ) வேண்டும். சாதாரணமாக இதைச் சுலபத்தில் பெறமுடியும். இதன்  இரகசியத்தை அறியாத மக்கள் இந்தக் கிரியையை ‘ஜால’ வித்தை…

பழ மொழிகள் 20

ஒளவை வாக்கு செவ்வை வாக்கு. புலி இல்லாத ஊரில் பூனை தான் ராஜா. பெண்ணுக்கு மௌனத்தைப் போன்ற அணிகலன் வேறில்லை. ஒருவர் அறிந்தால் ரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம். எறும்பு ஊறக் கல்லும் தேயும்.

பழ மொழிகள் 19

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான். உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா ? அரைக்கிணறு தாண்டுவது ஆபத்தானது. ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள். உனக்கு நேரமிருந்தால் காலத்திற்காகக் காத்திருக்காதே

பழ மொழிகள் 18

பேராசையின் இருப்பிடம் நிம்மதியின் இறப்பிடம். வேலை செய்தால் கூலி, வேஷம் போட்டால் காசு. வில்லம்பை விடச் சொல்லம்பு வேதனை தரும். அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான். அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

பழ மொழிகள் 17

இதயத்தின் மொழி பெயர்ப்பு தான் வாய். இனிய முகம் உறவை வளர்க்கும். பணமில்லாத வியாபாரி நிலமில்லாத விவசாயியைப் போன்றவன் ஆத்திரம் அறிவுக்கு எதிரி. பெண்கள் இருக்குமிடம் சண்டைகள் பெருகுமிடம்.

பழ மொழிகள் 16

அகம் குளிர முகம் மலரும். அகப்பை அறுசுவை அறியுமா? அச்சம் ஆண்மையைக் குறைக்கும். அயல் வீட்டுப் பிள்ளை ஆபத்தில் உதவுமா? அன்புக்கு ஈடு அகிலத்தில் இல்லை.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 16

கொல்லிமலை அறப்பளீஸ்வரர் ஆலய நந்திக்கு வலது பின்னங்கால் கிடையாது. இவர் இக்கோவிலுக்கு அருகில் உள்ள புளியஞ்சோலையில் பயிரிடப்பட்டிருந்த கடலைச்செடியின் பூக்களின் மணம் கவரவே, கடலைக் காய்களைத் தின்பதற்கு இரவில் அங்குசென்றது. இதனை அறிந்த காவலர்கள் நந்தியை பயங்கர ஆயுதத்தால் தாக்க, நந்தியின் ஒரு கால் வெட்டுப்பட்டது. அந்த நிலையில் அப்படியே கோவிலுக்கு வந்து அமர்ந்தது. அந்தத் தோற்றத்துடன் இன்றும் காட்சி தருகிறது நந்தி.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 15

தேப்பெருமாநல்லூர் குடந்தை நாகேஸ்வரம் கோவிலுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தேப்பெருமாநல்லூர் விஸ்வநாதசுவாமி கோவிலில் உள்ள நந்திக்கு வலது காது இருக்காது. காரணம், பிரளய காலத்தில் சிவபெருமான் எழுந்தருளிய தலத்தைத் தேடி ஓடிவந்ததில், ஒரு பக்கமாக வழுக்கி விழுந்து வலது காது பழுதடைந்து போனது. எனவே இவர் வலது காது இல்லாமல் காட்சி தருகிறார்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 14

நஞ்சன்கூடு கர்நாடக மாநிலத்தில் உள்ள நஞ்சன்கூடு என்ற தலத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் நந்தியானவர் வாயிலை நோக்கி உள்ளார். இறைவனை வழிபட வருபவர்களை மனசுத்தி உள்ளவர்களாக மாற்றி, முகர்ந்து அனுப்புவதாக ஐதீகம்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 13

சுருட்டப்பள்ளி ஆந்திர மாநிலத்தில் உள்ள சுருட்டப்பள்ளி சிவராத்திரித் தலம் என்று போற்றப்படுகிறது. இங்கு அருள்புரியும் சிவபெருமான் ஆலகால விஷம் உண்டதால் மயங்கிய நிலையில் அம்பாளின் மடியில் பள்ளி கொண்டுள்ளார். இங்கு நந்தியெம்பெருமான் எதிரில் இல்லாமல் தலைப்பக்கம் உள்ளார்.

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள் 12

திருவோத்தூர் காஞ்சியிலிருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் செய்யாறு அருகில் திருவோத்தூர் திருத்தலம் உள்ளது. இத்தலத்து இறைவன், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசிக்கும் வேளையில் இவர்கள் கவனம் சிதறாமல் இருப்பதற்கும் மற்றவர்கள் உள்ளே நுழையாமலிருக்கவும் வாயிலை நோக்கித் திரும்பிய நிலையில் உள்ளார் நந்தி

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 17. கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய

அதிசய மான வடிவுடை யாள், அர விந்தமெல்லாம் துதிசய ஆனன சுந்தர வல்லி, துணை இரதி பதிசய மான தபசய மாகமுன் பார்த்தவர்தம் மதிசய மாக அன் றோவாம பாகத்தை வவ்வியதே? யாவரும் வியக்கும் வண்ணம் உள்ள திருவுருவம் கொண்டவளே தாமரை மலர்கள் யாவும் துதிப்பதற்கு காரணமாயுள்ள பேரழகு கொண்டவளே அழகிய திருமுகத்தை கொண்ட அழகிய கொடிபோல் இருப்பவளே ரதிக்கு நாயகனாகிய மன்மதன் பெற்ற வெற்றியெல்லாம் யார் முன் தோல்வியுற்றதோ அவரை வெல்லவே அவரின் இடபாகத்தை கவர்ந்து…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 16. முக்காலமும் உணரும் திறன் உண்டாக

கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்தொளிரும் ஒளியே, ஒளிரும் ஒளிக்கிடமே, எண்ணில் ஒன்றும் இல்லா வெளியே, வெளிமுதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே, அளியேன் அறிவளவிற்கள வானத திசயமே. உன் பக்தர்கள் மனதில் நிலைபெற்று விளங்கும் ஞான ஒளிக்கெல்லாம் ஆதாரமாய் உள்ள அருள் ஒளியே கிளியின் பச்சை வண்ண திருமேனி உடையவளே எண்ணிப் பார்த்து உணர முடியாததுவும் கடந்த பரவெளியே ஆகாசம் முதலான ஐந்து பூதங்களாக விரிந்த அம்மையே இந்த அளவிற்கு பெரியவளான நீ இரங்கத்தக்க எளியேனின்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற

தண்ணளிக் கென்று, முன்னே பலகோடி தவங்கள் செய்வார், மண்ணளிக் கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம் விண்ண ளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ? பண் ணளிக்கும் சொற் பரிமள யாமளைப் பைங்கிளியே. இனிய இசையின் ராகங்களை ஒத்த மொழிகளை பேசும் நல்ல வாசனையுடைய மேனியை உடைய யாமளை யாகிய பச்சை கிளியே முன் பிறவிகளில் நின் திருவருளை பெற பலகோடி தவங்களை செய்தவர்கள் இப்பூமியின் உள்ளசெல்வமாகிய அரசு செல்வம் போன்ற இவற்றை மட்டுமா பெறுபவர்கள்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 14. தலைமை பெற

வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள், சிந்திப்பவர், நற்றிசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச் சந்திப்பவர்க்கெளிதாம் எம்பிராட்டி, நின் தண்ணளியே. தேவர்களும் அசுரர்களும் ஆகிய இரு இனத்தினரும் அபிராமி தாயே நின்னை வழிபடுகின்றனர். பிரம்ம தேவரும் திருமாலும் உன்னை தியானம் செய்பவர் தம் உள்ளத்தின் உள்ளே அன்பினால் பூட்டி வைப்பவர் ஆனந்த உருவினரான சிவபெருமான் இத்தனை இருந்தாலும் பூவுலகில் உன்னை தரிசிப்பவர்க்கு உன் திருவருள் எளிதாக கிட்டுகிறது.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 13. வைராக்கிய நிலை எய்த

பூத்தவளே, புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே பின்கரந்தவளே, கறைக் கண்டனுக்கு மூத்தவளே, என்றும்மூவா முகுந்தற் கிளையவளே, மாத்தவளே, உன்னை அன்றிமற் றோர்தெய்வம் வந்திப்பதே? அபிராமி தாயே உன் திருவருளால் உலகம் பதினான்கையும் ஈன்றாய் அந்த திருவருளோட அதை காத்துக்கொண்டும் இருக்கின்றாய் பின்  சிந்தனைக்கேற்ப அழிக்கவும் செய்கின்றாய். திரு நீல கண்டருக்கு முன் பிறந்தவளே என்றும் இளமையாய் இருக்கும் திருமாலுக்கு தங்கையே மிக பெரும் தவத்தை உடையவளே உன்னை தவிர என்னால் வேறு தெய்வத்தை வழிபட இயலுமோ.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 12. நெஞ்சம் தியானத்தில் நிலைபெற

கண்ணியது உன்புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பத்தி பண்ணியது உன் இருபாதாம் புயத்தில், பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன்செய்த புண்ணியம் ஏது? என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே. நான் முன் ஜென்மத்தில் எத்தனை புண்ணியங்கள் செய்திருந்தால் உன் அடியார் கூட்டத்தோடு மட்டும் கலக்கும் பேறு பெற்று இருப்பேன் இது மட்டுமல்லாது ஏழுலகங்களையும் பெற்ற தேவியே நான் கருதுவது உன் புகழ் கற்பது உன் பெயர் மனமுருகி பக்தி செய்வது…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 11. இல்வாழ்க்கையில் இன்பம் பெற

ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய், வான் அந்தமான வடிவுடையாள், மறை நான் கினுக்கும் தானந்தமான சரணார விந்தம் தவளநிறக் கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே. ஆனந்தமாயும் அறிவாயும் அமுதமாயும் இருக்கின்ற அபிராமி தேவியே நான்கு வேதங்களுக்கும் முடிவாய் நிற்கும் நின் திருவடி தாமரை வெண்ணிறத்தையுடைய  சிவபெருமான் தன் ஆடும் இடமாக கொண்ட மயான பூமியில் ஆடும் போது அவரின் திருமுடி மாலையாக உள்ளது.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 10. மோட்ச சாதனம் பெற

நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்ப துன்னை, என்றும் வணங்குவ துன்மலர்த் தாள், எழு தாமறையின் ஒன்றும் அரும்பொருளே, அருளே உமையே இமயத் தன்றும் பிறந்தவளே, அழியாமுத்தி ஆனந்தமே. இமய மலையில் அவதரித்த தாயே எழுதாமல் கேட்கப்படுகின்ற வேதங்களின் பொருளாய் இருப்பவளே சிவபெருமானுக்கு அருளாய் இருப்பவளே உமாதேவியே என்றும் அழியாத முக்தியின் உறைவிடமாய் இருப்பவளே உன்னை நான், நின்ற போதும் நடக்கும் போதும் படுத்து இருக்கும் போதும் உன் திருவடி தாமரையை தியானம் செய்து கொண்டிருக்கிறேன்.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 9. அனைத்தும் வசமாக

கருத்தன எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பிற் பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர் திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும் முருத்தன மூரலும், நீயும், அம்மே, வந்தென் முன்னிற்கவே. தாயே, எம் தந்தையாராகிய சிவபிரானது திருவுள்ளத்தில் இருப்பனவும், திருவிழிகளில் உள்ளனவும், அழகு பெற்ற பொன் மலையாகிய மேருவைப் போலப் பருத்திருப்பனவும், அழுத திருஞானசம்பந்தப் பிள்ளையாருக்குப் பாலை வழங்கினவும் ஆகிய பெரிய திருவருள் மிகுந்த அழகிய திருத்தனபாரமும், அவற்றின்மேல் உள்ள முத்துமாலையும், சிவந்த திருக்கரத்தில் உள்ள…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 8 பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட

சுந்தரி எந்தை துணைவி, என் பாசத் தொடரைஎல்லாம் வந்தரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல் அந்தரி நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன் கந்தரி கைத்தலத் தாள் மலர்த்தாள் என் கருத்தனவே. என் தந்தையாகிய சிவபெருமானின் தேவி சுந்தரி என் பாச தளைகளையல்லாம் அழிக்கும் சிந்தூர வண்ண தேவி மகிஷனின் தலை மேல் பாதம் வைத்து அழுத்தும் அந்தரி நீல நிறம் கொண்டவள் என்றும் அழிவில்லாத கன்னி பிரம்மனது கபாலத்தை திருக்கரத்தில் தாங்குபவள் தாமரை மலரைப் போல் திருப்…