ஒற்றுமை என்றால் என்ன?
ஒன்றாய் இருத்தல் இணைந்திருத்தல் கருத்தொருமித்து இருத்தல் என்று
நிறைய வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்
ஆனால் அதன் பொருளை அறிந்து அதனை
நம்முள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறோமா என்றால்
இல்லை என்று தான் சொல்ல வேண்டும்
எதையும் நம்மிள் இருந்தே தொடங்க வேண்டும் என்ற நியதியின் படி
ஒற்றுமையை நம்மிடம் இருந்தே தொடங்க வேண்டும்
நாம் எத்தனை விதமாய் பிளவுண்டு சிதறி போயிருக்கிறோம் என்பதே நமக்கு தெரிவதில்லை
அதை தெரிந்து கொள்ளும் ஆவலும் இல்லை.
