அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 79 கட்டுகளில் இருந்து விடுபட

விழிக்கே அருளுண்டு, அபிராம வல்லிக்கு. வேதம்சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு, அவ்வழிகிடக்கப் பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ்நரகக் குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே.  வேதங்கள் கூறும் வழிபடி அபிராமி தாயே உன்னை வழிபட வைராக்கியத்துடனும், அன்புடனும் கூடிய மனம் இருக்கிறது இதனால் நின் கடை கண்களின் அருளினை பெரும் பாக்கியமும் இருக்கிறது இவையெல்லாம் என்னிடம் இருக்கும் போது வேத நெறி படி இல்லாமல் வீணாண காரியங்களை செய்து பாழ் நரகில் வீழும்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 78 சகல செல்வங்களையும் அடைய

செப்பும், கனக கலசமும் போலும் திருமுலைமேல், அப்பும் களப அபிராம வல்லி, அணிதரளக் கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும், துப்பும், நிலவும் எழுதிவைத்தேன்,என் துணைவிழிக்கே. தந்தத்தால் கலந்த செப்பும் பொற்கலசமும் போன்ற உன் தனங்களின் மேல் அப்பிய சந்தனத்தையுடைய அபிராமிவல்லி உன் காதில் உள்ள முத்து ஆபரணமும் வயிரக்குழையும் உன் விழியின் ஒரப்பார்வையும் அதனில் மலர்ந்த புன்னகை நிலவை போல் இருப்பதையும் என் இரண்டு கண்களிலும் எழுதி வைத்தேன்.