ஒற்றுமை எனும் வார்த்தையை கேட்டவுடனேயே நமக்கு தோன்றுவது
அண்ணனிடம், அக்காவிடம், தம்பியிடம், தங்கையிடம், அம்மாவிடம், அப்பாவிடம்,
மனைவியிடம், குழந்தைகளிடம், நண்பர்களிடம் என்று தான் தோன்றுகிறதே தவிர
தன்னிடம் தான் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்பதே தோன்றுவதில்லை
என்னிடம் நான் ஒற்றுமையாய் இருப்பதா
இது என்ன புது பைத்தியகாரதனமான பேச்சாய் இருக்கிறது
என்றுதான் மனமும் அறிவும் சிந்திக்கிறதே அல்லாமல்
இது என்ன? என்ன சொல்ல வருகிறது என்று கூட யோசிப்பதில்லை
காரணம் நம் கல்வி, அறிவு, மற்றும் சூழ்நிலைகள்
