நான் ஒரூ மனிதன் எனும் நிலையில் இருந்து இயந்திரம் எனும் நிலைக்க மாறிவிட்டோம்
ஆமாம் நீங்கள் செய்வது எல்லாம் உங்கள் திறமை, தேர்ச்சி காரணமாக தானியங்கி மயமாகியிருப்பதை அறிவீர்கள்
அப்படி தானியங்கிமயமாவதே வாழ்க்கையின் வெற்றி நிலை என்ற சிந்தனை
எப்படியோ எந்த காலத்திலோ ஏதோ ஒரு ரூபத்தில் உங்கள் கல்வி மூலமாகவோ,
உங்களின் சூழ்நிலை மூலமாகவோ அறிந்து அதை பிடித்தே
உயிரற்ற இயந்திரமாய் இருந்து கொண்டு
உங்கள் குழந்தைகள் முதற்கொண்டு மற்றவர்களையும் இயந்திரமாக்க
எல்லா முயற்சிகளை எடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள்
என்று நீங்கள் அறிந்து கொள்ளவேயில்லை
