உரையாடலின் ஒரு பகுதி  113

மனிதனின் விதி பிரபஞ்ச சக்தியால் நிர்ணயிக்கபடுகிறது. மனிதனோ உலக இயக்கத்தின், உலக நடப்புகளின் கட்டுபாட்டில் இருக்கிறான் உலக நடப்புகளே நம்மை மீறி நடக்கும் போது பிரபஞ்ச இயக்க நிகழ்வுகளை எப்படி நம்மாள் முழுவதும் புரிந்து கொள்ள முடியும்.

உரையாடலின் ஒரு பகுதி  112 

ஆசான் இல்லாத இடத்தில் ஒழுங்கு இல்லை. ஒழுங்கீனம் ஆளும் இடத்தில் ஆசான் இருப்பதில்லை. இரவு என்பது பகலின் பிரதிபலிப்பு பகலின் வெப்பம் இரவில் சுடும் பகலின் சூரிய ஒளி தான் இரவில் மதியொளியாக மனதை குழப்பும் மனிதனின் பகல் இளமை மனிதனின் இரவு முதுமை.

உரையாடலின் ஒரு பகுதி  111

கணவனே கண்கண்ட தெய்வம் என்பது பற்றி  போன தலைமுறையில் கணவன் என்ன செய்தாலும் அடங்கி ஒடுங்கி எதிர்த்து பேசாமல் அடங்கி இருந்த பெண்ணே மனைவி கணவனுக்கும் இப்படிபட்ட மனைவி தேவைப்பட்டது மனைவியும் கணவனே கண் கண்ட தெய்வம் என்றிருந்தார்கள் ஆனால் இப்போதைய மற்றும் வரும் தலை முறையில் கணவன்மார்களின் சிந்தனை எதிர்த்து பேசாமல் அடங்கி ஒடுங்கி மனைவியே கண் கண்ட தெய்வம் என்று மனைவியைப் பற்றி நினைத்துக் கொள்கிறான். அப்படி இல்லாவிட்டாலும்  மனைவி அவனை அப்படி நினைக்க…

உரையாடலின் ஒரு பகுதி   110

ஒரு விஷயத்தை நாம் யேசிப்பதே இல்லை காரணம் மிக எளிதாக நாம் அதை கடந்து விடுகிறோம் கடக்க முடியாதவர்களும் இருக்கிறார்கள் முதல் தடவை சொன்ன பொய் முதல் தடவை செய்த திருட்டுத்தனம் இன்னும் இதே போல் எத்தனையோ சரியாக கவனித்தால் நமக்குள் நடக்கும் உள் மன போராட்டத்தை விவரிக்க எத்தனை பக்கங்கள் இருந்தாலும் அத்தனை பக்கங்களும் போதாது. டைரி எழுத

உரையாடலின் ஒரு பகுதி  109

கோயிலுக்கு போகிறவர்களின் மனோபாவம் இப்படி இருக்குமோ வரிசையில் நிற்கும் வரையில் முன்னால் இருப்பவன் நகர வேண்டுமே என்ற எண்ணம் தன் முறை வந்ததும் சீக்கிரம் நகர சொல்வார்களோ என்ற பரிதவிப்பு இதில் இறைவனை எங்கே சிந்திப்பது புண்ணியத்தை எங்கே சேர்த்துக்கொள்வது

உரையாடலின் ஒரு பகுதி  108

யார் யாரை சீர்திருத்துவது பெற்றோர் பிள்ளைகளை ஆகட்டும், கணவன் மனைவியை ஆகட்டும் மனைவி கணவனை ஆகட்டும் சீர்திருத்த முடியுமா, ஒவ்வொருவரும் நேர்மையை கடைபிடித்தாலே சீர்படுதலும், சீர்படுத்துதலும் தானே நடந்துவிடும் ( சிறை படத்தின் கதை போல ) நேர்மையை கடை பிடிக்காமல் புண்ணியம் தியாகம் பண்பு என்று தங்களிடம் இல்லாத குணங்களை பேசி தங்களுக்குள் பெருமை கொள்வதில் என்ன பிரயோசனம் இருக்கப் போகிறது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  89

முட்டாள்தனமான சில பரம்பரைக் காரணங்கள், அவை போன்ற சில மேலை நாட்டு உளறல்கள் , இவற்றிலிருந்தே சில காட்டுமிராண்டிகள், மிருகத்தனமான, மிருகத்தனமான வாதங்கள் இவையெல்லாம் அந்த ஏழைகளை மேலும் அடங்கி ஒடுக்குவதற்காக முன்வைக்கப்படுகின்றன.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  88

பல நாற்றாண்டுகளாக அவர்கள் வெறும் விறகுவெட்டிகளாகவும் தண்ணீர் இறைப்பவர்களாகவுமே வாழ்வதற்குக் கட்டாயபடுத்தப்பட்டார்கள். விளைவு அவர்களை தங்களை பிறவி அடிமைகள் என்றும் விறகு வெட்டவும் தண்ணீர் இறைக்கவும் மட்டுமே பிறந்தவர்கள் என்றும் நம்பவே தொடங்கி விட்டார்கள். பெருமையடித்துக் கொள்கிறோம். ஆனால் யாராவது அவர்களுக்குப் பரிந்து ஒரு வார்த்தை சொன்னாலும், தாழ்த்தப்பட்ட அந்த அப்பாவிகளைக் கைதூக்கி விடுவதான கடமையை விட்டுவிட்டு, நம் மக்கள் பின்வாங்குவதையே நான் காண்கிறேன்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  87

பிரபுத்துவ வெறி பிடித்த நமது முன்னோர்கள் இந்த நாட்டுப் பாமர மக்களைத் தங்கள் காலின் கீழிட்டு மிதித்துக் கொடுமைப்படுத்தினார்கள். பாவம் அவர்களுக்கு எந்த உதவியும் இல்லை. காலப்போக்கில் அந்த ஏழைகள் தாங்கள் மனிதர்கள் என்பதையே மறந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  86

ஒரு வேதாந்தி என்ற முறையில் எனக்குள்ளே இந்தக் கேள்வியைக் கேட்காமல் இருக்க என்னால் முடியாது. இந்து தனக்குள் மூழ்குபவன். அவன் தனக்குள்ளும் தன் மூலமும், தன்னை அடிப்படையாகக் கொண்டும் எதையும் பார்க்க விரும்புகிறேன். எனவே என்னையே நான் கேட்டுக்கொள்கிறேன் இதற்கு யார் பொறுப்பு? எனக்கு ஒவ்வொரு முறையும் கிடைக்கின்ற பதில் இதுதான்; ஆங்கிலேயர்கள் அல்ல, அவர்கள் பொறுப்பல்ல; நமது எல்லா துன்பங்களுக்கும் எல்லா இழிவுகளுக்கும் நாம், நாம் மட்டுமே பொறுப்பாளிகள்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  85

நண்பர்களே, வருத்தம் தரக்கூடிய சில உண்மைகளை உங்களுக்கு சொல்லியே ஆக வேண்டும். நம் இந்தியன் ஒருவன் ஓர் ஆங்கிலேயனால் கொலை செய்யப்பட்டான் என்றோ கேவலமாக நடத்தப்பட்டான் என்றோ பத்திரிக்கையில் வருகிறது. உடனே நம் நாடு முழுதும் கூக்குரல்கள் எழுகின்றன . நானும் படிக்கிறேன், அழுகிறேன். அடுத்த வினாடியே இதற்கெல்லாம் யார் பொறுப்பு என்ற கேள்வி என் மனத்தில் எழுகிறது

அறு சுவைகளைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம் 5

வள்ளுவப் பெருந்தகை சொல்லும் போது.. ”யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”, என்பார். நாம் பொதுவாக நாவடக்கம் என்றால் பேசுவதைக் குறித்து பொருள் கொள்வோம். ஆனால், நாவடக்கம் என்பதை உணவில் சுவை ஆர்வத்தைக் குறைத்துக் கொள்வதையோ அல்லது சுவைகளைக் கைவிடுவதையோ கூட பொருளாகக் கொள்ளலாம். நம் முன்னோர்கள் பண்டைய காலங்களில் துறவறம் மேற் கொள்ளும் போது உணவு வகைகளில் சுவைகளை கைவிட்டு விடுவார்கள். ஆசைகள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருக்கின்றன ஐம்பொறிகள் வாயிலாகவும் ஆசைகள் உருவெடுக்கின்றன.…

அறு சுவைகளைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம் 4

துவர்ப்பு – மண் வளி இணைந்தது. செரிமானத்தைக் குறைக்கும். மிகுந்தால் வயிறு பொருமும். மலம் சிக்கும். சிறுநீர் தடைப்படும். ஆண்மை, பெண்மை குறையும். உறுப்புகளின் உந்தும் ஆற்றல் குறையும் .குறைந்தால் குருதி கெடும். கசியும். அறுசுவைகள் இந்த அளவிற்கு நம் உடலில் முக்கியமான கிரியா ஊக்கிகளாக விளங்குகின்றன. உப்பு, காரம், புளிப்பு போன்ற சுவைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளும் போது நம் உணர்வுகள் தறிகெட்டு ஓடுகின்றன.

அறு சுவைகளைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம் 3

கைப்பு(கசப்பு) – நீர் வளி . இந்த சுவையை யாரும் விரும்புவதில்லை. ஆனால் இதுதான் உடலுக்கு உறுதுணையாகிறது. பூச்சிகளைக் கொல்கிறது. விஷத்தை முறிக்கிறது. குறைந்தால் குருதி தூய்மை கெடுகின்றது. கார்ப்பு(காரம்) – தீ வளி இணைந்தது. உணவின்பால் நாட்டத்தை உண்டாக்கும் செரிப்பாற்றலை மிகுவிக்கும்.விந்து நீற்றுப் போகும். உடல் ஆற்றல் குறையும். உடலில் நடுக்கம் ஏற்படும். வலிப்பு நோய் ஏற்படக் கூடும்.

அறு சுவைகளைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம் 2

புளிப்பு – மண் தீ இணைந்தது. பசியைத் தூண்டும். ஜீரணத்தை மிகைப் படுத்தும். உணவின்பால் வேட்கையும் சுவை உணர்வையும் ஏற்படுத்தும். வெப்பத்தை கூட்டும். உவர்ப்பு – நீர் தீ இணைந்தது. உப்பு சுவை என்றழைப்பர். உப்பு உடல் உறுப்புகளுக்குள் கசிவையும் இசைவையும் ஏற்படுத்தும். வியர்வையை மிகுதிப்படுத்தி வெளியேற்றும்.

அறு சுவைகளைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். 1

அறு சுவைகளும் நம் ஆரோக்யத்திற்கு மட்டுமல்ல, நம் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் கூட காரணமாக இருக்கின்றன. எனவேதான் ஆன்மிக சாதகர்களுக்கு நாவடக்கம் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது இனிப்பு – மண் நீர் இணைந்தது. நெருப்புத் தன்மை பொருந்தியது. இளக்கமானது. செரிமானக் காலம் மிகுவது. எலும்பு, சதை, குருதி, கொழுப்பு,சாறு, சுக்கிலம் ஆகிய உடல் தாதுக்களுக்கு ஊட்டமளிக்கிறது உடலைப் பெருக்க வைப்பது. குரலுக்கு நல்லது.

முழுவதுமாய் தொலைக்கவும் மனமில்லை

முழுவதுமாய் தொலைக்கவும் மனமில்லை முழுமையாய் ஏற்றிடவும் முடியாமல் நீ தத்தளிக்கிக்கிறாய் ஆனால் இரண்டிற்கும் இடையில் எந்த தெளிவுமில்லாமல் முழுமையாய் நேசிக்கும் நான் தவிக்கிறேன் புரியாத புதிராய் நமது அன்பு

என்னுள் ஏன் வந்தாய்?

என்னுள் ஏன் வந்தாய்? உன்னைப் பற்றியே சிந்திக்கச் செய்து விழுங்கிக் கொள்கிறாய் என் பகல்களை.. என் இரவுகளையும் களவாடிக் கொண்டாய்.. உற்சாக வார்த்தைகளோடு கிறங்கும் வார்தைகளையும் தேடுகிறேன் உனக்காக..   கருவாக என்னுள் உருவான உன்னை அழகாய்ச் சீராட்டிப் பிரசவிப்பது எக்கணமென உன்னையே ஏந்துகிறேன்..   சுகப்பிரசவமாய்ப் பெற்றெடுக்கிறேன் என் பார்வையில்.. குறைப்பிரசவமாய் சில கண்களுக்குத் தெரிவதைப் பற்றிக் கவலையில்லை.. நான் பிரசவித்த நீ.. என் சொந்தம்.. நீ தரும் ஆத்ம திருப்தியின் போதை வேறில்லை.. என்ன…

உங்களின் அத்தனை வார்த்தைக்கும்

உங்களின் அத்தனை வார்த்தைக்கும் சரி  என்று கடந்து செல்வதற்கு அர்த்தம் உங்களின் அத்தனையும் சரியானது என்பதல்ல… உங்களிடம் விளக்க முயல்வது வீண் என்பதாகவும் இருக்கலாம்.

எப்போதும் தயாராய் இரு

அன்பெல்லாம்  வெறுப்பாகவும் அக்கறையெல்லாம் உதாசீனமாகவும்… உறவெல்லாம்  துரோகமாகவும்  மரியாதையெல்லாம் அவமானமாகவும்.. இருப்பேனென்ற வார்த்தையெல்லாம் ஏனிருக்க வேண்டும் என்று மாறும்.. மாறாது என்று நினைத்ததெல்லாம்  கண்டிப்பாக ஒரு நாள் மாறும் எப்போது என்றும் தெரியாது ஏன் என்றும் தெரியாது அதனால் எப்போதும் தயாராய் இரு எதற்கும் தயாராய் இரு.

வாழ்க்கையின் ஒரு சில நிகழ்வுகளே.

ஒரு சில வார்த்தைகள் ஒரு சில மௌனங்கள்.. ஒரு சில நிகழ்வுகள் ஒரு சில அனுபவங்கள்.. ஒரு சில ஞாபகங்கள் ஒரு சில மனிதர்கள்.. ஒரு சில பாடங்கள் ஒரு சில ஏமாற்றங்கள்.. ஒரு சில நேரங்களின் கண்ணீர் ஒரு சில நேரங்களின் புன்னகை.. இவை அனைத்தும் வாழ்க்கையின் ஒரு சில நிகழ்வுகளே.  

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 7. மலையென வரும் துன்பம் பனியென நீங்க

ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி, தளர்விலதோர் கதியுறு வண்ணம் கருதுகண்டாய் கமலாலயனும், மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கி, என்றும் துதியுறு சேவடியாய், சிந்து ரானன சுந்தரியே. தயிரை கடைதற்க்காக உள்ள மத்து சுழல்வது போல் எண்ணற்ற பிறவிகள் கடந்து அலைந்து திரிந்து சுழன்று உள்ள எனக்கு தாமரை மலரை இருக்கையாய் கொண்ட பிரம்மதேவனும் சந்திரனை தன் திருமுடியில் தாங்கிய சிவபெருமானும் பாம்பனை மேல் துயிலும் திருமாலும் தோத்திரம் செய்யும் அம்பிகையே வீடு பேற்றை தந்து…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 6. மந்திர சித்தி பெற

சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை, சிந்தையுள்ளே மன்னியது, உன் திரு மந்திரம், சிந்துர வண்ணப்பெண்ணே, முன்னிய நின்அடியாருடன் கூடி, முறைமுறையே பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே. செந்நிறம் கொண்ட சிந்தூரத்தின் வண்ண  மேனியை கொண்ட அம்பிகையின் பொற்பாதங்கள் என் சிரத்தின் மேல் இருக்க என் மனதில் நிலை பெற்று இருப்பது அம்பிகையே உன் திருமந்திரம் உன்னையே  தியானிக்கும் அடியார்களுடன் கூடி முறைபடி நான் உன் ஆகம பத்ததியை பாராயணம் செய்கிறேன்.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 5. மனக்கவலை தீர

பொருந்திய முப்புரை, செப்புரை செய்யும் புணர்முலையால், வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார்சடையோன் அருந்திய நஞ்சமு தாக்கிய அம்பிகை, அம்புயமேல் திருந்திய சுந்தரி அந்தரி, பாதம் என் சென்னியதே. மனதை ஞான நிலைக்கு எழுப்பும் மனோன்மணி தாயின் செப்பிற்கு உவமை சொல்லும்படியான இரு தனங்களும் அதன்பாரத்தால் வளைந்த இடையும் நீண்ட சடை உடைய ஈசன் உண்ட நஞ்சை தன் கைகளினால் தடுத்து நஞ்சை அமுதாக்கிய அம்பிகையின் மென் பாதங்களில் என் தலை இருக்கிறது.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 4. உயர் பதவிகளை அடைய

மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி குனிதரும் சேவடிக் கோமளமே, கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும் பாம்பும், பகீரதியும் படைத்த புனிதரும் நீயும் என் புந்திஎந் நாளும் பொருந்துகவே. யோகத்தாலும், தவத்தாலும் பூமியில் உள்ள மனிதரை காட்டிலும் மேம்பட்ட முனிவர்களும், வானுலகில் உள்ள தேவர்களும் வணங்கும் மெல்லிய செவ்வண்ணமுடைய தேவியே நீண்ட சடாபாரமும் அதில் கங்கையையும் குளிந்த நிலவினையும் கண்டத்தில் பாம்பை அணிந்தவருமாகிய சிவ பெருமானும் நீயும் என் அறிவிடத்தே எந்நாளும் இணைந்து இருப்பீர்களாக

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 3 குடும்பக் கவலையிலிருந்து விடுபட

அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு செறிந்தேன், உனது திருவடிக்கே திருவே வெருவிப் பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால், மறிந்தே விழுநர குக்குற வாய மனிதரையே. வேறு யாரும் அறியாத மறையின் இரகசியத்தை நான் அறிந்தேன்; அங்ஙனம் அறிந்தமையால் அதுகொண்டு நின் திருவடியிடத்தே அடைந்தேன்; நின் அடியார்கள் பெருமையை எண்ணாத பாவம் மிக்க மனம் காரணமாகக் குப்புற விழும் நரக லோகத்தின் தொடர்புடைய மனிதரை அஞ்சி விலகினேன் நின் திருவடிக்கண் அடைக்கலம் புகுதல் எல்லா…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 2 பிரிந்தவர் ஒன்று சேர

துணையும், தொழும் தெய்வமும் பெற்றதாயும், சுருதிகளின் பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனிமலர்ப்பூங் கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங் குசமும், கையில் அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே. தனக்கு துணை என்று சொல்லும் அபிராமி பட்டர் சூட்சமாய் உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் அபிராமியே துணை என்றும் கூறுகிறார். தன்னை பெற்ற தாயும் வேதம் எனும் மரத்தின் கிளையும் கிளையின் நுனியில் உள்ள கொழுந்தும் அம்மரத்தின் வேராகவும், அபிராமியே உள்ளாள் என்று சொல்கிறார், குளிர்ச்சியுடைய மலரம்புகளையும் கரும்பு…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 1 ஞானமும் நல்வித்தையும் பெற

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயம்-என்ன விதிக்கின்ற மேனி, அபிராமி என்றன் விழுத்துணையே. உதய கால சூரியனின் கிரகணங்களின் நிறத்தை ஒத்த உச்சித் திலகம் போன்று யோகியரின் ஞானியரின் நெற்றியின் நடுவே மாணிக்கம் போன்று ஒளிர்பவளே! அதுமட்டுமல்லாது மாதுளம் பூவின் நிறத்தையும் ஒத்தவளே தாமரை மலரில் அமர்ந்த தேவியால் துதிக்கப்படும் அபிராமியே மின்னலை போன்ற தோற்றம் அழகிய குங்கும வர்ணம் கொண்ட உடலை உடைய…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல்

அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி 100 பாடல்களை கொண்டது காப்பு, செய்யுளும் சேர்த்தால் 102 செய்யுள்கள் வரும் இதை நாம் தெளிந்த மனதுடன் பாராயணம் செய்ய நம் மனம் சந்தோஷமடையும் நம் சங்கடங்கள் யாவும் நீங்கும் அழகு தமிழும் அழகுக்கு அழகான அம்பிகையின் உடல் செய்கை தீரம் போன்றவற்றை விவரிக்கும் போது தமிழும் அழகுக்கு அழகாகிறது அந்த அழகில் நாம் மனதை பறிகொடுத்த வண்ணம் அந்தாதியின் காப்பு செய்யுளுக்கு செல்வோம். காப்பு தாரமர் கொன்றையும், சண்பகமாலையும் சாத்தும்…

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல்

அபிராமி அம்மையை பார்க்கும் இடந்தோரும் பார்க்கும் திசை தோறும் கண்டு ஆராதித்து அகம் மலர்ந்தவர் எண்ணும் எண்ணத்திலும் சிந்திக்கும் சிந்தையிலும் செய்யும் செயல் யாவையிலும் அபிராமியை கண்டு பூரித்து புளங்காகிதம் அடைந்தவர் அவர் அந்த அனுபவத்தை வார்த்தைகளால் இப்படி நமக்கு சொல்லுகின்றார். பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறை வண்டார்க்கும் புது மலர் ஐந்தும் கரும்பும் என் அல்லெல்லாய் தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும் சிற்றிடையும் – வார்க்குங்கும முலையும் மேல் முத்து மாலையுமே என்று நமக்கு சொல்கிறார்.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல்.

சக்தியின் வடிவங்கள் பல பல அதில் அவரவர்களுக்கு பிடித்த சக்தியில் தோய்ந்து அதனுள் மூழ்கி திளைத்து அந்த அனுபவத்தையும் அந்த சக்தியின் நிலைகளையும் உலகுக்கு கொடுத்த புண்ணியர்கள் பலர் அந்த பலரில் சுப்பிரமணி எனும் நாமம் பெற்றோரால் இடப்பட்டு உலகிற்கு அபிராமி பட்டராய் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட புண்ணியரை ஆட்கொண்ட சக்தி திருக்கடவூர் வாழ் அபிராமி அம்மையேயாகும். சக்தியின் பல வடிவங்களில் ஒன்றாகிய அபிராமியின் அருளால் ஆட்கொண்டு நமக்கு தந்ததே அபிராமி அந்தாதி.  தெய்வ அருள் பெற்ற அபிராமி…