சுந்தர யோக சிகிச்சை முறை 161

உலக வாழ்க்கையில் ஈடுபட்டுப் பயிலும் சாதகர், மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை செய்தால் போதும். அன்று சிறிதளவு சத்துள்ள ஆகாரத்தை உட்ககொள்ள வேண்டும். மோரும், கீரையும் சேர்க்கவும், பருப்புகளை விலக்குவது உசிதம். பாசிப்பருப்பு கஞ்சி நன்மை தரும். அன்று உடலுழைப்பு அதிகம் வைத்துக் கொள்ளக்கூடாது.