முடிந்தவரையில் மலத்தைக் கழித்துக் கொள்ளவும்
உட்டியாணா, நெளலி சில தடவைகள் செய்து வயிற்றுச் சதைகளைக் கட்டுக்குக் கொண்டு வரவும்,
சுமார் முக்கால் அல்லது ஓரடி உயரமுள்ள முக்காலி மேல் அகலப் பாத்திரத்தில்
சுமார் அரைப்படி தண்ணீரை ஊற்றி அமர்த்தவும்,
மூங்கில் குழாயின் மேல் சுமார் நான்கு அங்கலத்திற்கு வெண்ணெய், நெய் அல்லது விளக்கெண்ணெய் பூசவும்.
மலப்போக்குக் காலத்தில் முக்கி மலத்துவாரத்தைத் திறப்பது போலத் திறந்து,
எண்ணெய் தடவிய மூங்கில் பாகத்தை ஆசனவாய் வழியாய் மலக்குழாய்க்குள் சுமார் மூன்றங்குலம் தள்ளிவிடவும்.
பின் நீர் வைத்த பாத்திரத்திற்குச் சரியாக மண்டி போட்டு உட்கார்ந்து பிருஷ்டம் வரையில்
குழாய் நீரினுள் செல்லும்படியாக அமர்ந்து பலமாய் நெளலி செய்து நிறுத்தவும்.
நீர் குடலுக்குள் வேகமாய் பாயும்.
சுவாசம் முடியும் காலத்தில் மூங்கிலின் அடித்துவாரத்தை விரலால் மூடி
நெளலியைச் சுழற்றி, குழயை வெளியில் உருவி நின்று விடவும்.
