சுந்தர யோக சிகிச்சை முறை 162

இதை செய்ய விரும்புவோர், சுமார் ஆறு மாதங்களாவது உட்டியாணா, நெளலியுடன் யோகாசனங்களைப் பழகி இருக்க வேண்டும்.  சிரமமின்றி நெளலி எந்நிலையிலும் செய்ய வேண்டும். இக்கிரியை நெளலி செய்யும் பொழுது, மலத்துவாரம் திறந்தே இருக்க வேண்டும். கருவியின்றி இது சாதாரணமாய் இயலாது.  இதற்காக ஒரு மூங்கிலை உபயோகிக்கலாம். இதை எட்டங்குல நீளமுள்ளதாயும், தடுப்பற்றதாயும் அமைத்துக் கொள்ளவும், காலையில் இதைச் செய்வதே உத்தமம்.