அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 9. அனைத்தும் வசமாக

கருத்தன எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பிற் பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர் திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும் முருத்தன மூரலும், நீயும், அம்மே, வந்தென் முன்னிற்கவே. தாயே, எம் தந்தையாராகிய சிவபிரானது திருவுள்ளத்தில் இருப்பனவும், திருவிழிகளில் உள்ளனவும், அழகு பெற்ற பொன் மலையாகிய மேருவைப் போலப் பருத்திருப்பனவும், அழுத திருஞானசம்பந்தப் பிள்ளையாருக்குப் பாலை வழங்கினவும் ஆகிய பெரிய திருவருள் மிகுந்த அழகிய திருத்தனபாரமும், அவற்றின்மேல் உள்ள முத்துமாலையும், சிவந்த திருக்கரத்தில் உள்ள…