கொள்ளேன், மனத்தில் நின் கோலம்அல்லாது, அன்பர்கூட்டந்தன்னை
விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத் தேவிளைந்த
கள்ளே, களிக்கும்களியே, அளியஎன் கண்மணியே.
என்னுடைய மனதில் நின் திருகோலத்தை தவிற வேறு எதையும் நினையேன்
நின் அன்பரை தவிர வேறு யாருடனும் இணையமாட்டேன்
.மூன்று உலகத்துள்ளும் அதையும் தாண்டியிருக்கின்ற பொருளாய் இருந்தாலும்
எதனுடனும் இல்லாதிருப்பவளே,
பக்தர்களின் உள்ளத்தே இன்பத்தை சுரக்க வைக்கும் ஆனந்த கள்ளே
என் கண்ணின் மணி போன்றவளே!
