கொடியே, இளவஞ்சிக் கொம்பே, என க்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே,பனி மால் இமயப் பிடியே,
பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே, அடியேன்
இறந்திங் கினிப்பிற வாமல்வந் தாண்டுகொள்ளே.
கொடி போன்றவளே இளைய வஞ்சி கொம்புக்கு இணையானவளே
எனக்கு பக்குவமில்லா நிலையிலும் அருள் புரிந்த தேவி
வேதமாகிய மலரின் மணத்தை உடையவளே
இமயத்தில் இங்கும் அங்கும் விளையாடும் யானையே
பிரமன் முதலான தேவர்களை பெற்ற தாயே
நான் இவ்வுலகில் இறந்த பின்
மீண்டும் பிறவாமல் இருக்க அருள் புரி தாயே!
