மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள்,
வருணச் சங்கலை செங்கைச் சகல கலாமயில் தாவுகங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை, நீலி, செய்யாள்,வெளியாள், பசும் பெண்கொடியே.
நித்திய மங்களையாகிய அபிராமி அம்மை
சிவந்த கலசத்தை போன்ற தனங்களும் மலை மகள் நிறம் பெற்ற சங்காலாகிய
வளையல்கள் கொண்ட சிவந்த திருகரங்களை உடையவள்
எல்லா கலைக்கும் தலைவி
மயிலை போன்றவள் பாய்ந்து வரும் கங்கையினை தன் முடியில் தாங்கிய சிவபிரானின்
இடபுறத்தை கொண்டவள்
பொன் நிறம் படைத்த பிங்களை
நீல நிறம் கொண்ட காளி
செந்நிறம் கொண்ட லலிதை,
வெண்நிறம் கொண்ட சரஸ்வதி,
பச்சைநிறம் கொண்ட உமாதேவி
மெல்லிய கொடியே!
