உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒருபக்கமோ,
அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ, கஞ்சமோ, என்றன் நெஞ்சகமோ,
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே.
பூரண அருளால் நிறைவான நித்திய மங்கலையே
நீ வாசம் செய்யும் ஆலயம் நின் பதியாகிய சிவனின் ஒரு பக்கமோ
அல்லது நின் புகழை எப்பொழுதும் பாடும் வேதங்களின் மூலமோ
அல்லது அவற்றின் முடியாய் விளங்குகின்ற உபநிடதங்களோ
அமுதம் நிறைந்த வெள்ளிய சந்திரனோ
வெண் தாமரையோ அல்லது அடியேனின் உள்ளமோ
தன்னில் விழும் பொருள்களை மறைக்கும் கடலோ
இதில்யாதோ!
