ஏத்தும் அடியவர், ஈரேழுலகினையும் படைத்தும்,
காத்தும், அழித்தும் திரிபவராம்,கமழ்பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே, மணம் நாறும் நின் தாளிணைக்கென்
நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு, நகையுடத்தே.
பூங்கடம்பின் மணம் வீசும் மலரை அணிகின்ற கூந்தலை உடைய தேவி
உன்னை துதிக்கும் அடியவர்களால் 7 உலகங்களையும்
படைத்தும், காத்தும், அழித்தும் செய்தும் தம் தொழிலை நடத்தி திரிகின்ற மும் மூர்த்திகளாவர்
நான் உன் மனம் பொருந்திய இரண்டு திருவடிகளுக்கு
ஒன்றுக்கும் பற்றாத என்னுடைய நாவிலிருந்து வார்த்தைகளக்கு பொருள் தந்து
துதிகளாக்கி ஏற்றுக்கொண்டது சிரிப்பிற்குரிய செயலாகும்.
