*ஈஸ்வர கீதை* – கூர்மபுராணத்தில் விவரிக்கப்பட்டுள்ள சிவபெருமானின் போதனைகள்.
ஈஸ்வர கீதை என்பது சிவபெருமானை மையமாகக் கொண்ட ஒரு சைவ போதனை தத்துவமாகும்
. பகவத் கீதையைப் போலவே அத்வைத வேதாந்தம், பக்தி, ஒருமுகப்படுதல்
மற்றும் சிவபெருமானிடம் சரணடைதல் ஆகியவை
சம்ஸார கடலைக் கடந்து தெய்வீக பேரின்பத்தையும்
விடுதலையும் அடையச் செய்கிறது என்பதை விளக்குகிறது.
*கணேஷ கீதை* – அரசன் வாரேண்யனுக்கு ஸ்ரீ கணபதி உரையாற்றியது.
கணேஷ புராணத்தின் க்ரீட கண்டத்தில் இது விளக்கப்பட்டுள்ளது.
*தேவி கீதை* – தேவி பாகவதத்தில் ஒரு பாகமான இந்த கீதை,
இமாவானின் வேண்டுகோளின் பெயரில் தேவியே தன்னுடைய முக்கிய ரூபங்களைப் பற்றி அவருக்கு விளக்குவது.
*பராசர கீதை* – வியாஸரின் தந்தையான பராசர ரிஷிக்கும் மிதிலை அசரனான ஜனக மஹாராஜனுக்கும்
இடையிலான உரையாடல் இது. மஹாபாரத இதிகாசத்தில் சாந்தி பர்வத்தில் இது விவரிக்கப்பட்டுள்ளது.
