வித்யா கீதை* – இதில் திரிபுர ரஹஸ்யமானது அடங்கியுள்ளது. அதோடு தத்தாத்ரேயர் பரசுராமருக்கு விவரிக்கும் ஒரு கதையின் வடிவத்தில் இது உள்ளது. திரிபுரா அல்லது மூன்று புரங்களுக்கும் தலைமை தாங்கும், மிக உயர்ந்த ஞானமுடையவளான ஆதி சக்தியை வித்யா என்றும் அழைப்படுகிறாள். ஆகவே இந்த கீதையை, வித்யா கீதை என்றும் அழைப்பதுண்டு.
ப்ராமர கீதை* – ஒரு இடைத்தரகராக ‘தேனீ’ (ப்ராமரா) மூலம் கோபியர்களுக்கும் உதவருக்கும் இடையிலான உரையாடல். இது ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து வந்தது.
வேணு கீதை* – ஸ்ரீ கிருஷ்ணரின் புல்லாங்குழல் (வேணு) சத்தம் கேட்டதும் கோபியர்களின் ஆழ்ந்த உணர்ச்சி கொந்தளிப்பில் எழுந்த அந்தரங்கமான உரையாடல்கள் கொண்டது. இது ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து வந்தது.
சற்று கவனித்தீர்களானால் நிறைய கீதைகள் பாகவத்தில்தான் அடங்கியுள்ளது,
அடுத்து மஹாபாரதத்தில். ஆதலால்தான் பாகவதம் சற்றே விசேஷமாக பார்க்கப்படுகின்றது
. பாகவதத்தை படிக்க முடியாவிடினும், மஹாபாரதத்தை தவறாமல் படியுங்கள்.
