இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பாற் சென்று, இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில், நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.
எவரிடமும் சென்று தன் இல்லாமையை சொல்லி இழிவு படும் நிலை எக்காலத்திலும் வராது.
யாருக்கு என்றால் தாயை தியானிப்பவர்களுக்கு அது மட்டுமல்ல
நித்தமும் தவம் செய்யாத இழி குணத்தோரிடம்
செல்லாத நிலை வைத்த திரிபுர சுந்தரியின் திருவடிகளுக்கு சரணம்.
