சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போதிருப்பார், பின்னும் எய்துவரோ
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.
பிரகாசிக்கும் கலைகளை உடைய மேருமலை போன்ற
சடையோடு கூடிய திருமுடி உடைய சிவ பெருமானோடு இணைந்து
படருகின்ற பசுங்கொடியாகிய அபிராமவல்லியை
நெஞ்சில் தியானித்து அதனால் துன்பம் நீங்கி
இமைக்கும் ஒரு கணப்போதாவது, பரமனாந்த நிலையில் இருப்பவர்கள்
மீண்டும் நினமும், இரத்தமும் கூடிய
இந்த தேகத்தை அடைவார்களோ – அடையார் !
