அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 64 பக்தி பெருக
வீணே பலி கவர் தெய்வங்கள்பாற் சென்று, மிக்க அன்பு பூணேன், உனக்கன்பு பூண்டு கொண்டேன் நின்புகழ்ச்சியன்றிப் பேணேன், ஒருபொழுதும் திரு மேனி ப்ர காசமின்றிக் காணேன், இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே. தாயே வீணாக உயிர் பலியை ஏற்றுக்கொள்ளும் சிறு தெய்வங்களிடம் பக்தி கொள்ளேன் உனக்கு மட்டுமே என் பக்தியென்று வைராக்கியம் கொண்டேன் உன்னை துதிப்பதை தவிர வேறு எதையும் செய்யமாட்டேன். நான் திசைகளிலும் ஆகாயத்திலும் பூமியிலும் நின் ஒளி வெள்ளத்தை தவிர வேறு ஒன்றையும்…
