அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 55. விருப்பு வெறுப்பற்ற மோனநிலை எய்த

மின்ஆயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்ற அன்னாள், அகமகிழ் ஆனந்தவல்லி, அருமறைக்கு முன்னாய், நடு எங்குமாய், முடிவாய முதல்வி தன்னை உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்றில்லையே. பல ஆயிரம் மின்னல்கள் உருவெடுத்து வந்தது போல் விளங்கும் கோலத்தை உடைய அபிராமவல்லி அடியவர்களின் நெஞ்சத்தில் இருக்கும் ஆனந்தமயமாக கொடி போன்றவள் அரிய வேதத்தின் முன் நடு கடையாகி முழுவதுமாய் இருப்பவன் இவளை உலகத்து உயிர்கள் போற்றி தொண்டு செய்தாலும் செய்யாவிட்டாலும் அவளுக்கு அதனால் எந்த பயனும் இல்லை.

அபிராமி அந்தாதி எனும் அருள் நூல் 54. கடன் தொல்லைகள் தீர

இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பாற் சென்று, இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில், நினைகுவிரேல், நித்தம் நீடு தவம் கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே. எவரிடமும் சென்று தன் இல்லாமையை சொல்லி இழிவு படும் நிலை எக்காலத்திலும் வராது. யாருக்கு என்றால் தாயை தியானிப்பவர்களுக்கு அது மட்டுமல்ல நித்தமும் தவம் செய்யாத இழி குணத்தோரிடம் செல்லாத நிலை வைத்த திரிபுர சுந்தரியின் திருவடிகளுக்கு சரணம்.